சனி, 14 மார்ச், 2020

புலிகள் தமிழ் தேசிய இராணுவத்தை வேட்டையாடிய போது பயிற்சி முகாம்களில் பிடிபட்டுக் கிடந்த அப்பாவிகளையும் கருணை காட்டாது கொன்று வீசினார்கள்.

Thilipkumaar Ganeshan : இன்று நண்பரொருவரின் தந்தையைச் சந்தித்து உரையாடக் கிடைத்தது.
உரையாடலின்போது ஒரு முக்கியமான விடயத்தைப் பேசினார்.
வட கிழக்கு மாகாண சபை காலத்தில்
இந்திய இராணுவ அனுசரணையுடன் இயங்கிய தமிழ்த் தேசிய இராணுவத்தில் மட்டக்களப்பு இளைஞர்கள் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட விடயம்.
மட்டக்களப்பிலிருந்த பல முகாம்களில் கட்டாயப் பயிற்சிக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இழுத்துச் செல்லப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டனர். தப்பி ஓட நினைத்தோர் கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டதுடன் கொலையும் செய்யப்பட்டனர். இவர்களில் பலர் அப்பாவிகள்.
பின்னர்
புலிகள் தமிழ் தேசிய இராணுவத்தை வேட்டையாடிய போது பயிற்சி முகாம்களில் பிடிபட்டுக் கிடந்த அப்பாவிகளையும் கருணை காட்டாது கொன்று வீசினார்கள்.
மட்டக்களப்பின் காடுகள், கரைகள், குளங்கள் தோறும் தமிழ் இளைஞர்களின் உடலங்கள் அழுகியும், புழுத்தும் கிடந்த வரலாற்றை நினைவு கூர்ந்தார்.
மந்தைகள் போன்று பிடித்து பயிற்சி கொடுக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பவும் முடியாது, செயற்படவும் முடியாது நின்ற மட்டக்களப்பு இளைஞர்கள் புலிகளாலும் கேள்வி கணக்கின்றி கொல்லப்பட்ட கதைகள் ஏராளம்.
நண்பரின் தந்தையும் இவ்வாறு வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்லப்பட்டு அங்கிருந்து தப்பி வந்த ஒருவர்.
அவரிடம் இறுதியாக ஒரு கேள்வி கேட்டேன்.
மட்டக்களப்பில் வலுக்கட்டாயமாக துரத்திப் பிடிக்கப்பட்டு ஆயுதங்களைத் திணித்து படையினைக் கட்டி நமது இளைஞர்களைப் புலிகளிடம் பலி கொடுத்திருக்கிறார்கள் தானே?
மட்டக்களப்பில் செய்தது போல் தீவிரமாக,
வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இத்தகைய கட்டாய ஆட்சேர்ப்பினை தமிழ்த் தேசிய இராணுவதினர் செய்தார்களா?
இதே போன்ற அழிவுகள் அங்கேயும் பெருமளவு பதிவாகி உள்ளனவா?
இந்தக் கேள்விக்கு அவரிடம் பதிலில்லை.
பதிலிருக்கும் நண்பர்கள் பகிர்ந்துகொள்ளுங்கள் .

வி. சபேசன்  :  யாழ்ப்பாணத்திலும் தமிழ்த் தேசி இராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பு நடந்தது....

அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் அன்பழகன் படத்தை வீரமணி தலைமையில் ஸ்டாலின் திறந்து வைத்தார்


மாலைமலர் : அண்ணா அறிவாலயத்தில் மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் படத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அண்ணா அறிவாலயத்தில் க.அன்பழகன் படத்தை முக ஸ்டாலின் திறந்து வைத்தார் க.அன்பழகன் படத்தை திறந்துவைத்த மு.க.ஸ்டாலின்
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சி 14-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தி.க. தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அன்பழகன் திருவுருவப் படத்தை திறந்து வைத்தார். பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

காவல்நிலையத்தில் இளமதி: கணவன் மீது வழக்கு

காவல்நிலையத்தில் இளமதி: கணவன் மீது வழக்குமின்னம்பலம் : சேலம் மாவட்டம் மேட்டூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டதைத் தொடர்ந்து கடத்தப்பட்ட இளமதி மேட்டூர் காவல் நிலையத்தில் ஆஜரானார்.
சேலம் மாவட்டம் கொளத்தூரில் கடந்த மார்ச் 9ஆம் தேதி, திராவிட விடுதலைக் கழகத்தின் சார்பில் செல்வன்-இளமதி காதல் ஜோடிக்கு சாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதுமண தம்பதியரையும், திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்களையும் கும்பல் ஒன்று கடுமையாகத் தாக்கியதோடு இளமதியையும் கடத்திச் சென்றது.

ராஜ்யசபா சீட்டிற்கு பதிலாக தேமுதிகவுக்கு எடப்பாடி கொடுத்த (பணம் ) பரிசு...

நக்கீரன் :சமீபத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை அறிவித்தது. அதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி.கே வாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேமுதிகவின் சுதீஷ் மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாக முதல்வர், துணை முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுத்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் வாசனுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேமுதிக அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த அதிருப்தியால் கூட்டணியில் ஏதேனும் மாற்றம் வருமா, தேமுதிக கூட்டணியை விட்டு வெளியேறுமா அல்லது வெளியேற்றப்படுமா என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ராஜ்யசபா சீட் கொடுக்காத கோபத்தில் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்த தே.மு.தி.க.வின் நிலை என்ன என்று விசாரித்த போது, தே.மு.தி.க. இளைஞரணிப் பொறுப்பாளரான சுதீஷ் வெளிப்படையாகவே கோபத்தைக் காட்டிருக்கிறார். உள்ளாட்சித் தேர்தல் வரப்போகும் நிலையில் தே.மு.தி.க.வின் கோபத்தை எதுக்கு சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்த எடப்பாடி, தே.மு.தி.க. பொருளாளரும் விஜயகாந்தின் திருமதியுமான பிரேமலதாவிடம் சமாதானம் பேச, தன் சீனியர் அமைச்சர்கள் சிலரை அனுப்பி வைத்துள்ளார். அப்போது ராஜ்யசபா பதவி கொடுக்காததற்கு ஈடாக ’"சமாதான மொய்யை'’ கணிசமாக எழுதிவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். இது ராஜ்யசபா பதவியால் லாபமடைந்த ஒருவரிடமிருந்து பெறப்பட்டதாக சொல்லப்படுகிறது

மோடியின் பிரச்சனைகளை தீர்க்க வந்த கரோனா வைரஸ்?

Corona virus to solve Modi's problems?நக்கீரன் - ஆதனூர் சோழன் : கரோனா
வைரஸுக்கு கோவிட் – 19 என்று பெயரிட்டதற்கு காரணம், CO என்றால் கரோனாவின் முதல் இரண்டு எழுத்துகளாம். VI என்றால் வைரஸ் என்பதன் முதல் இரண்டு எழுத்துக்களாம். D என்றால் டிசீஸ் என்ற வார்த்தையை குறிக்குமாம். 19 என்றால் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட 2019 டிசம்பர் 31 ஆம் தேதியை குறிக்குமாம். சரி, இந்த வைரஸ் சீனாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலகமே பெரிய அளவில் பதறியது. ஆனால், சீனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட வூஹான் மாநிலத்தையே வெளியுலகத்தின் பார்வையில் படாமல் தடைசெய்துவிட்டது. அதன்பிறகு போர்க்கால அடிப்படையில் அந்த நோயாளிகளை தனிமைப்படுத்தி உடனடியாக சிகிச்சை அளிக்க மிகப்பெரிய மருத்துவமனையை கட்டி நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்தியாவில் கொரோனா தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக அறிவித்தது மத்திய அரசு

மாலைமலர் :இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக இன்று அறிவித்துள்ள மத்திய அரசு, உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ரூ.4 லட்சம் வரை வழங்கவும் அனுமதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கத்தை தேசியப் பேரிடர் ஆக அறிவித்தது மத்திய அரசு இந்தியாவில் கொரோனா பீதி
 புதுடெல்லி: இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடக மாநிலத்தின் கலபருகி பகுதியில் ஒரு முதியவர். டெல்லியை சேர்ந்த ஒரு மூதாட்டி என இதுவரை இந்தியாவில் இருவர் கொரோனா தாக்கத்துக்கு பலியாகியுள்ளனர்.

பாம்பன் விவேகானந்தர் நினைவிடம்- கடல் அரிப்பினால் மூழ்கும் அபாயத்தில்


vivekanada-memorial-at-the-verge-of-sea-corrosionhindutamil.in :ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகாலில் உள்ள விவேகானந்தர் நினைவிடம்> கடல் அரிப்பால் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரில் தனது சொற்பொழிவு மூலம் இந்து மதத்தின் புகழை நிலைநிறுத்திவிட்டு சுவாமி விவேகானந்தர் இலங்கை வழியாக 26.1.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார். அவருக்கு அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி சிறப்பான வரவேற்பு அளித்தார்.
இச்சம்பவம் நடந்து நூற்றாண்டு கழித்து விவேகானந்தர் இந்தியா வந்திறங்கிய குந்துகால் பகுதியில் 2009-ம் ஆண்டு விவேகானந்தர் இல்லம் திறக்கப்பட்டது. இந்த இடத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 26-ம் தேதி விவேகானந்தர் இந்தியா வந்திறங்கிய நாளை நினைவுகூரும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

திண்டுக்கல் விழா:.. கொரோனாவை பரப்ப ஒரு விழா எடுக்கும் எடப்பாடி பன்னீர் கேங்கின் அறியாமை

திண்டுக்கல் விழா: கொரானோ பரவ தமிழக அரசே வாய்ப்பு தரலாமா?மின்னம்பலம் :தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசே கொரோனா பரவலுக்கு பிளாட்ஃபார்ம் போட்டுக் கொடுக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்துக்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்ட மத்திய
அரசு அனுமதியளித்திருப்பதை ஒட்டி தமிழக முதல்வர் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரில் சென்று மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் நாளை (மார்ச் 14) திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்க இருக்கிறது. இந்த விழா, திண்டுக்கல் மாவட்டம் அடியனூத்து ஊராட்சி கிராமத்தில் நடக்கிறது.

பாலியல் பலாத்காரம் .+ பெண்ணின் தந்தையை கொன்ற பாஜக எம்.எல்.ஏக்கு செங்காருக்கு 10 ஆண்டு சிறை


தினத்தந்தி : கற்பழிக்கப்பட்ட பெண்ணின் தந்தை மரணம் அடைந்த வழக்கில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்காருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. ,
 கடந்த 2017-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், பா.ஜனதா சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், குல்தீப்சிங் செங்கார். இவர், கடந்த 2017-ம் ஆண்டு, உன்னாவ் நகரை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை கற்பழித்ததாக வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கில், அவருக்கு சாகும்வரை சிறைத்தண்டனை விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் 20-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவர் பா.ஜனதாவில் இருந்து நீக்கப்பட்டார். எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கிடையே, கற்பழிக்கப்பட்ட அந்த பெண்ணின் தந்தை கடந்த 2018-ம் ஆண்டு இறந்த வழக்கிலும் குல்தீப்சிங் செங்கார் குற்றம் சாட்டப்பட்டார். அந்த ஆண்டு ஏப்ரல் 3-ந்தேதி, பெண்ணின் தந்தை தனது கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சசிபிரதாப் சிங் என்பவரிடம் ‘லிப்ட்’ கேட்டார்.

வெள்ளி, 13 மார்ச், 2020

ஸ்டார்ட்-அப் ஐடியாக்கள் இருந்தால் தொழில்நுட்பத்தைப் பற்றிய கவலை தேவையில்லை!

Karthikeyan Fastura : உங்களிடம் ஒரு புதுமையான ஸ்டார்ட்-அப் ஐடியா இருக்கிறது. முதலில் நீங்கள் சில pre-production வேலைகளை செய்ய
வேண்டும்.
1. மார்க்கெட்டில் ஏற்கனவே அந்த ஐடியா இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். 90% உங்கள் ஐடியா ஏதோ ஒரு வடிவத்தில் சந்தையில் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால் அதற்காக தளர்ந்து விட வேண்டியதில்லை. அதைவிட எப்படி சிறப்பாக, விரைவாக, எளிதாக, விலை குறைவாக கொடுக்க முடியும் என்று யோசித்தால் போதும்
2. இப்பொழுது உங்கள் ஐடியாவின் மார்க்கெட் சைஸ் என்ன என்பதை பார்க்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு எல்லோருக்கும் தேவைப்படும் ஒரு பொருளாகவோ சேவையாகவோ இருக்கும்போதுதான் மார்க்கெட் சைஸ் மிகப்பெரிதாக இருக்கும்
3. உங்கள் ஐடியாவில் நிறைகுறைகளை எந்த சமரசமும் இல்லாமல் பட்டியலிட வேண்டும். உங்கள் ஐடியாவுடன் ஏமோஷனல் அட்டச்மெண்ட் இருக்கக்கூடாது.
4. உங்கள் ஐடியாவை சோதிக்க ஒரு பெர்ஷனா-வை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது அவர்தான் பயனாளி. அவரிடம் உங்கள் ஐடியாவை சொல்லி, அல்லது வரைபடத்தை வைத்து விலக்கி இப்படி ஒரு பொருள் இருந்தால் உங்களுக்கு எளிதாக இருக்குமா நீங்கள் அதை வாங்குவீர்களா என்று திரும்பத் திரும்ப கேட்க வேண்டும் . ஒவ்வொரு கட்டத்திலும் அவரிடம் சென்று உங்கள் ஐடியாவை கொடுத்து சோதித்து அதில் அவர் சந்திக்கும் நிறை குறைகளை கேட்டு அறிய வேண்டும்

கொரானா கொஞ்சம் அசட்டையாக இருந்தாலும் மனித குலம் பூண்டோடு அழிய வாய்ப்புண்டு.

https://experience.arcgis.com/experience/685d0ace521648f8a5beeeee1b9125cd?fbclid=IwAR3DcLpgFq7P_9QAQFZ6JyyAa_Ja-SWW7bbY1cXSC3R0Jsl1Su0EX4U7UqU 

Karthikeyan Fastura : கொரானா வைரஸ் பற்றி மருந்து கண்டுபிடிக்காத வரை நாம் பயந்து தான் ஆக வேண்டும். நேற்று ஒரு முட்டாள்தனமான பதிவை படித்தேன். சார்ஸ், ப்ளேக் நோய் வந்த போதெல்லாம் இந்தளவிற்கு பீதி இல்லையாம். ஆனால் இதைவிட இழப்பு இருந்ததாம். இந்த பீதிக்கு காரணம் முகநூல், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தான் காரணமாம். முட்டாளிலும் கேடு கெட்ட முட்டாள்தனமானது
கொரோனா வைரஸ் முன்பிருந்த வைரஸை காட்டிலும் மோசமானது. அடையாளம் காணவே மூன்று வாரம் ஆகும். இப்படித்தான் வைரஸ் இருக்கும் என்று ஒரு வடிவத்தில் சொல்லமுடியவில்லை. ஒவ்வொரு முறையும் ஒரு புது வடிவம் எடுக்கிறது. அதனால் அதை ஆண்ட்டிடோட் மருந்துகளால் அவற்றை சிறை வைக்க முடியவில்லை. இருந்தபோதும் முன்பை விட வேகமாக பரவாமல் இருக்க காரணம் சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்திய அச்சமும், மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் ஏற்கனவே நடந்த உயிர்கொல்லிகளினால் கிடைத்த பாடமும் தான். கொஞ்சம் அசட்டையாக இருந்தாலும் மனித குலம் பூண்டோடு அழிய வாய்ப்புண்டு. 
காரணம் மருந்துகள் இல்லை. வைரஸ் பரவுவது மிக எளிதாக இருக்கிறது.
வைரஸில் மட்டும் தான் Compound Effect என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
இன்று மெதுவாக வளரும்போதே தடுத்துவிட வேண்டும்.

கடத்தப்பட்ட இளமதி எங்கே? ..3 நாட்கள் .. வெடித்து கிளம்பும் சேலம் சாதி மறுப்பு திருமண விவகாரம்!


 இளமதி எங்கே திருமணம்tamil.oneindia.com : ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள கிராமம் தர்மாபுரி.. இங்கு வசித்து வருபவர் செல்வன்.. 26 வயதாகிறது.. திராவிடர் விடுதலைக் கழகத்தில் உறுப்பினர் ஆவார். அதே பகுதியை சேர்ந்த இளமதி என்ற 23 வயது பெண்ணை காதலித்தார்.. இருவரும் ஒரே கம்பெனியில் வேலை பார்க்கும்போது காதல் ஏற்பட்டுள்ளது! இவர்கள் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவந்தது.. ஆனால் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் கல்யாணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை.. அதனால் திராவிடர் விடுதலைக் கழக அமைப்பின் தலைமைக் குழு உறுப்பினரான ஈஸ்வரன் என்பவரை அணுகி தனக்கு கல்யாணம் செய்து வைக்க கோரியுள்ளார். இதையடுத்து சேலத்திலுள்ள கொளத்தூர் அருகே உள்ள காவலாண்டியூர் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் 3 நாளைக்கு முன்பு கல்யாணத்தை நடத்தி வைத்துள்ளனர்

ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப் பதிவு!

ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப் பதிவு!மின்னம்பலம் : திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அன்பகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "இந்தியாவிலேயே தமிழகம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு காரணம் திராவிட இயக்கம்தான். ஒரு தாழ்த்தப்பட்டோர் கூட மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிடையாது. தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை உட்கார வைத்தார். ஏழெட்டு தாழ்த்தப்பட்டவர்கள் வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருந்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று பேசியிருந்தார்.

காஷ்மீர் தலைவர் ஃபரூக் அப்துல்லா: 7 மாதங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்


BBC : தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா, ஸ்ரீநகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தடுப்புக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இவர் மீது போடப்பட்டிருந்த பொது பாதுகாப்புச் சட்டம் விலகப்பட்டு ஏழு மாதங்களுக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்டு ஐந்தாம் தேதி காஷ்மீருக்கு சிறப்பு அஸ்தஸ்து வழங்கு சட்டப்பிரிவு 370ஐ இந்திய அரசு ரத்து செய்தது. அதன்பின் காஷ்மீரின் பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிலர் வீட்டுகாவலில் வைக்கப்பட்டனர்.
ஆகஸ்டு ஐந்தாம் தேதி பொது பாதுகாப்பு சட்டத்தின்படி ஃபரூக் அப்துல்லா தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
"இன்று என்னிடம் பேச வார்த்தையில்லை. நான் இன்று சுதந்திரம் பெற்றேன். எனவே நான் டெல்லிக்கு செல்வேன். நாடாளுமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று உங்களிடம் பேசுவேன்,"என விடுதலை செய்யப்பட்ட ஃபரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"அனைத்து தலைவர்களும் விடுதலையாகும் வரை நான் அரசியல் தொடர்பாக எதையும் பேச மாட்டேன்,"
"எனது விடுதலைக்காக பேசிய மாநில மக்களுக்கும், அனைத்து தலைவர்களுக்கும், மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ளவர்களுக்கும் கடமைப்பட்டுள்ளேன். எனது இந்த சுதந்திரம் அனைத்து தலைவர்களுக்கு விடுதலையான பிறகு முழுமையடையும். அனைவரையும் விடுதலை செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்," என்றும் அவர் பேசினார்.

கவுண்டமணி கேட்பது போன்று, அந்த வார்த்தையை அவர் எப்படி சொல்லலாம்!!!???

Kalai Selvi : கவுண்டமணி கேட்பது போன்று,
அந்த வார்த்தையை அவர் எப்படி சொல்லலாம்!!!???
அரசியல்னா என்னான்னு தெரியுமா!!!???
வட ஆற்காடு மாவட்டத்தில நிலச்சுவான்தார் மகனா பிறந்த நடேசன் முதலியார் டாக்டருக்கு படிச்சிட்டு, சென்னைக்கு வந்தா.....
கல்லூரி, மருத்துவமனை, நீதிமன்றம், அரசியல்னு எல்லா இடத்திலையும் ஒரு குறிப்பிட்ட இனம் மட்டுமே ஒக்காந்துக்கிட்டு ஆதிக்கம் பன்றதை சகிச்சுக்க முடியாம,
நம்ம பசங்களயும் படிக்க வப்போன்னு, எல்லாரும் வாங்க, படிங்கன்னு விடுதிய கட்டி... பொறவு பார்ப்பனர்கள் இல்லாதவிங்க சங்கம்னு உருவாக்கி, அதை தென்னிந்திய நல உரிமை சங்கம்னு மாத்தி...
டாக்டர் மாதவன் நாயரையும், கபாலீசுவரர் கோவிலில் அவமானப்பட்ட பணக்காரர் தியாகராயரையும் சேத்துக்குட்டு Justice partyன்னு தொடங்கி அதை நீதிக்கட்சியா மாத்தி, சாதிவாரி பிரநிதித்துவம் (Proportionate Representation) வேணும்னு கேட்டு,
உடம்பு சரியில்லாம இருந்தப்பவும் நம்ம பயலுவலோட எதிர்காலம் முக்கியமுன்னு, இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கே போயி சாதிவாரி பிரநிதித்துவம் (Proportionate Representation) வேணும்னு கேட்டு, அங்கேயே டாக்டர் மாதவன் நாயர் தன் உயிரை விட்டு...
மான்டேக் - செம்ஸ்ஃபோர்ட் கொடுத்த Quashi Federalஐ பயன்படுத்தி தேர்தல்ல நின்னு ஆட்சியை புடிச்சு...
19,000 ஆரம்ப பள்ளிகளை திறந்து, மதிய உணவு போட்டு, எல்லாரையும் படிக்க வச்சு, அரசு வேலை வாங்கி கொடுத்து..
சமஸ்கிருதத்தை நீக்கி, நிறைய பேர மருத்துவம் படிக்க வச்சு...
கோயில்ல நடந்த அக்கிரமங்களயும், கோயில் சொத்துகளை திருடனதையும் அடக்க இந்து அறநிலையத் துறைய ஆரம்பிச்சு...
மக்கள திருத்த சுயமரியாதை இயக்கம் ஆரம்பிச்சு, ஊர் ஊரா போயி செருப்பு, சாணி, மலத்தால அடி வாங்கி....

72 மணிநேரத்தில் முதலீட்டாளர்களுக்கு ரூ.18 லட்சம் கோடி இழப்பு:... கொரோனா எதிர்வினை

economy-suffering-from-coronavirus-pm-must-give-statement-in-parliament-cong.hindutamil.in/ : உலக அளவில் கரோனா வைரஸ் தொடர்பான பீதியாலும், அச்சத்தாலும் கடந்த 72 மணிநேரத்தில் சிறு, குறு முதலீட்டாளர்கள் ரூ.18 லட்சம் கோடியை இழந்துள்ளார்கள். பிரதமர் மோடி நாட்டின் பொருளாதாரம் குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
உலகின் பல நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருப்பதால் அதன் எதிரொலி இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை 1900 புள்ளிகளுக்கும் சரிவு கண்ட பங்குச் சந்தையில் இன்று 2300 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

என்பிஆருக்கு ஆவணங்கள் வேண்டாம்: அமித் ஷா

என்பிஆருக்கு ஆவணங்கள் வேண்டாம்: அமித் ஷாமின்னம்பலம் : என்பிஆர் தொடர்பாக எந்த ஆவணங்களையும் காட்டத் தேவையில்லை என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராக இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கிழக்கு டெல்லியில் பிப்ரவரி 24ஆம் தேதி சிஏஏ போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் 52 பேர் வரை உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லி வன்முறை தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று (மார்ச் 12) விளக்கம் அளித்த உள் துறை அமைச்சர் அமித்ஷா, “டெல்லி வன்முறையில் ஈடுபட்டவர்களின் அடையாளங்களைக் கண்டுபிடிப்பதற்காக வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவை மட்டுமே பயன்படுத்தப்படும். ஆதார் விவரங்கள் பயன்படுத்தப்படும் என்ற தவறான தகவல் ஊடகங்களில் பரப்பப்படுகிறது. குற்றவாளிகள் எந்த மதமாக, சாதியாக, அரசியல் கட்சியாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர்.

கொரோனா ... டைனாசோரும் மனிதனும் .. இத்தாலியில் பேசுகிறார்கள் ....

https://www.theatlantic.com/ideas/archive/2020/03/who-gets-hospital-bed/607807/?fbclid=IwAR0SKxSziHhD0y6djlqosmII3h0K17M8LFJV9M5XknReqfdcWVjbqvhkdrs

A Prabhakar TheKa : டைனோசாரும்_மனிதனும்
இத்தாலில இதோ ஆரம்பிச்சிட்டாங்க. கொள்ளைநோய் பெருகும் போது வகை தொகை இல்லாம மிகக் குறைந்த கால கட்டத்திற்குள் பெரும் பகுதியை ஆட்கொள்ளும்.
அதற்கான சிகிச்சையோ அதி நவீன கருவிகளையும், திறமையானவர்களையும் கோரி நிற்கும் போது, யாருக்கு சிகிச்சை கொடுப்பது யாரை விடுவது.
இப்போ அந்த நாட்டில் அந்த சூழ்நிலைக்கு நகர்ந்திருக்காங்க. அப்படி ஒரு நாள் வரும் பொழுது நம் வாழும் இந்த வாழ்க்கையில் நீ பெருசு, நான் சிறுசு, நான் மேல கீழ எல்லாம் உடைந்து நொறுங்கி ஒன்னுமில்லாம போகும். இந்த கோவிட்-19 மனித குலத்தை பரிணாமத்தின் அடுத்தக் கட்டத்திற்கு நகருங்கடான்னு பிடிச்சு தள்ளி விட்டிருக்கு.
பயமுறுத்துவதற்காக சொல்ல வில்லை. ஆனா, இன்னும் நாம கேள்விபடப் போற விசயங்கள் டைனோசார்கள் தங்களுக்கு இந்தப் பகுத்தறியும் ஆறாம் அறிவும், அதற்கான மொழியும் இருந்திருந்தா எப்படி அந்த கடைசி நாட்களை பேசி, எழுதி வைச்சிட்டுப் போயிருக்குமோ அந்த சூழலில் மனிதகுலம் இன்று இருப்பதாக செய்திகள் வெளிவர ஆரம்பித்து வரலாற்றில் பதிய வைக்கப்படும்.
theatlantic.com Two weeks ago, Italy had 322 confirmed cases of the coronavirus. At that point, doctors in the country’s hospitals could lavish significant attention on each stricken patient.
One week ago, Italy had 2,502 cases of the virus, which causes the disease known as COVID-19. At that point, doctors in the country’s hospitals could still perform the most lifesaving functions by artificially ventilating patients who experienced acute breathing difficulties

சாம்பார் பொடி வீட்டில் செய்வீர் .. கலப்படம் தவிர்ப்பீர் ..

Subashini Thf : மணக்க மணக்க சாம்பார் சுவையாக இருக்க வேண்டுமென்றால் சாம்பார் பொடி வீட்டிலே தயாரித்து பயன்படுத்தினால் தான் எனக்கு நன்றாக இருக்கும்.
 இத்தனை ஆண்டுகளில் நான் சாம்பார் வைப்பதற்கு மட்டும் வீட்டில் சொந்தமாக நானே தயாரிக்கும் சாம்பார் பொடியைத் தான் பயன்படுத்துவதை விரும்புகிறேன். ஒரு வகையில் அம்மாவின் ரெசிப்பி.. அப்படியே மனதில் இருப்பதால் இன்றும் தொடர்கின்றது.. இன்றைக்கு மீண்டும் சாம்பார் பொடி தயாரிப்பு.. அடுத்த சில மாத பயன்பாட்டிற்குத் தயார்..
செய்முறை:
1 கப் கடலைப்பருப்பு
1/4 கப் உளுந்து
1/4 கப் துவரம் பருப்பு
1 கப் மல்லி
1/2 கப் சீரகம்
2 தேக்கரண்டி வெந்தயம்
15 காய்ந்த மிளகாய்
2 சிறிய கரண்டி மஞ்சள் பொடி / உலர்ந்த மஞ்சள்

ரஜினி .... தன்னுடைய வெற்றிக்கும்,வளர்ச்சிக்கும் மட்டுமே சமூகத்தை பயன் படுத்திய ஒரு நடிகன்

சாவித்திரி கண்ணன் : எல்லோருக்குமே ’பெப்பே’ காட்டிட்டார்! – என்னை
மாதிரியான ஒரு சில ஆட்களைத் தவிர்த்து! அரசியலுக்கு அவர் ஒரு போதும் வரப் போவதில்லை என்பதை இருதாண்டுகளுக்கும் மேலாக இடையறாது சொல்லிவந்தேன்!
எனவே,அவர் அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தி இருந்தால் தான் அது எனக்கு நம்ப முடியாத வியப்பாக இருந்திருக்கும்!
அவரது அறியாமை இன்றாவது வெளிச்சத்திற்கு வந்தது குறித்து ஒரளவுக்கு நிம்மதியடைகிறேன்!
’’அவர் அரசியலுக்கான மன நிலை கொண்டவரல்ல….’’ என்பதை புரிந்து கொள்வதற்கு இந்த சமூகத்திற்கு மிக நீண்ட காலகட்டம் தேவைப்பட்டதற்கு மீடியாக்களின் வர்த்தக சூதாட்டமும் ஒரு முக்கிய காரணம்!
’ரஜினியின் அரசியல் வருகை’ என்ற ஒற்றைச் சொல்லாடலில் கால் நூற்றாண்டுகாலம் தமிழகத்தை ஒரு மீளமுடியாத மாயையில் ஆழ்த்தி, நன்றாக காசு பார்த்துவிட்டனர்!
ரஜினியுமே கூட,மீடியாக்கள் தொடர்ந்து தன்னைப்பற்றிய மாயைகளை கட்டமைத்து பேசுவதில்,எழுதுவதில் ஒரு அற்பமான ரகசிய சந்தோசத்தை மனதிற்குள் அனுபவித்து வந்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்! அது அவரது பட வெற்றிகளுக்கும்,ரசிகர்களை தக்க வைப்பதற்கும் கூட ஒரு துருப்புச் சீட்டாகவும் இருந்தது என்பது உண்மை தானே!

கனடா பிரதமர் ஜஸ்டின் மனைவி கொரோனா வைரஸ் சந்தேகம் ... கண்காணிப்பு வளையத்தில் ஜஸ்டின் க்டும்பம் .. வீடியோ

   ஜேவிபி நியுஸ் : மனைவி கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமைக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து தன்னை தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்
தனது மனைவி சோபி பிரிட்டனில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்தே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
கனடா பிரதமர் தனது மனைவி மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை வீட்டிற்குள்ளேயே இருக்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்
 தனது உடல்நிலை பாதிக்கப்படவில்லை அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்களின் அறிவுரை காரணமாக பிரதமர் தனது உடல்நிலையை அவதானித்தவாறு நாளாந்த நடவடிக்கைளில் ஈடுபடுகின்றார்,அவர் வீட்டிலிருந்து பணிபுரிகின்றார் என அறிக்கையொன்றில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் என் பி ஆர் கணக்கெடுப்பை துவங்க மாட்டோம் - தமிழக அரசு சொல்லும் காரணம் என்ன?


BBC : என்பிஆர் கணக்கெடுப்பு தொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு சில விளக்கங்களைக் கேட்டிருப்பதாகவும் அவை வரும்வரை தமிழ்நாட்டில் அந்தக் கணக்கெடுப்பு துவங்காது என்றும் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்திருக்கிறார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், என்.பி.ஆரில் உள்ள மூன்று கேள்விகளில்தான் சிறுபான்மையினருக்கு அச்சம் ஏற்பட்டிருப்பதாகவும், அது குறித்து மத்திய அரசிடம் மாநில அரசு விளக்கம் கேட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
"இதற்கு முன்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தபோது என்.பி.ஆர். என்பது கிடையாது. முதன் முதலாக தி.மு.க. ஆட்சியின் போதுதான் என்.பி.ஆர். எடுக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு என்.பி.ஆரோடு ஒப்பிட்டால், 2020ல் எடுக்கக்கூடிய என்.பி.ஆரில் மூன்று புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா? வீடியோ


மாலைமலர்  :    இங்கிலாந்தில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என அந்நாட்டு தலைமை அறிவியல் ஆலோசகர் கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா? தலைமை அறிவியல் ஆலோசகர் அதிர்ச்சி தகவல் கோப்பு படம் லண்டன்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 120-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்த வைரஸ்
இதற்கிடையில், ஐரோப்பிய நாடான இங்கிலாந்திலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இங்கிலாந்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 590 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்தில் உண்மையாக ஏற்கெனவே 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என அந்நாட்டு அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் போட்ரிக் வெலன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். தலைமை அறிவியல் ஆலோசகரின் இந்த கருத்து அந்நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

வியாழன், 12 மார்ச், 2020

பஞ்சாபில் இந்திக்கு மரண அடி! இனி பஞ்சாபியே பயிற்று மொழி .. இந்திக்கு இடமில்லை.. பஞ்சாம் அரசு சட்டம் .. வீடியோ


வளன்பிச்சைவளன் : · திராவிடர் இயக்க வழிகாட்டுதலில் இந்திய மாநிலங்கள்  பஞ்சாபியே இனி பயிற்று மொழி இந்திக்கு இடமில்லை  தேசியினங்களின் எழுச்சி இனி வரலாற்று கட்டாயம்
தமிழகம் இந்தி திணிப்பை எதிர்த்து இந்தி இங்கு கட்டாய பயிற்று மொழி இல்லை என அறிவித்து ஏறத்தாழ 50 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று இந்திய மாநிலங்கள் இந்தி மொழி திணிப்பினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை உணர துவங்கி உள்ளன. தங்கள் தாய் மொழி அழிவிற்கு இந்தி திணிப்பு தான் காரணம் என உணர துவங்கிய மாநிலங்கள் தங்கள் மாநிலம், தங்கள் தேசிய இனத்தின் பாரம்பரிய மொழிகளை காக்க முனைப்பு காட்டுகின்றன.
கர்நாடகம் தனது மொழியான கன்னடத்தை மீட்க பள்ளிகளில் கன்னடம் கட்டாய படமாக்கப் பட்டது அதைத் தொடர்ந்து அண்மையில் சிவசேனா ஆளும் மராட்டியத்தில் மராட்டிய மொழி கட்டாய பயிற்று மொழி ஆக்கப் பட்டது. அதன் ராஜ்தாக்கரே இனி மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து பாடுபடப் போவதாக வும் அரசியலில் மதத்தை கலந்தது தவறு என்றும் வெளிப் படையாகப் பேசினார்.

அடுத்த பத்தாண்டுகளுக்கு நாடு ஒரு சதவீதம் கூட வளர்வதற்கான வாய்ப்புகளே இல்லை.. Karthikeyan Fastura

Karthikeyan Fastura : Banknifty 2000 புள்ளிகள் வீழ்ச்சி. Nifty 900 புள்ளிகள் வீழ்ந்து
10,000 என்ற ஐந்து இலக்கத்தை உடைத்து 9500க்கு கீழே விழுந்துள்ளது.
அம்பானியின் சொத்து மதிப்பில் இந்த மூன்று மாதத்தில் மூன்றில் ஒரு பங்கு காலி. அண்ணன் இப்போது ஆசியாவின் நம்பர் ஒன் என்ற பெயரை எல்லாம் இழந்துவிட்டார். இன்னும் கொஞ்சம் விழுந்தால் வாங்கின கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் போகும்.
அதானிக்கும் இதே நிலை தான் இன்று ஒருநாள் மட்டும் 12% வீழ்ச்சி. இந்த வருடத்தில் வீழ்ந்தது மட்டும் 31%. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு சொத்து.
எல்லா பங்குகளும் பொதுவாக விழுந்து கொண்டு தான் வருகிறது. ஆனால் எந்த நிறுவனம் நியாயமாக நடந்து கொள்கிறதோ அவை தாக்குபிடிக்கின்றன. இதுவரையான வீழ்ச்சி 15%க்குள் இருக்கிறது. எவையெல்லாம் லாபி செய்து வளர்ந்தனவோ அவையெல்லாம் 30% தாண்டி விழுந்து கொண்டு வருகிறது.
என் கவலையெல்லாம் இவனுங்க வாங்கின கடனை திருப்பி தரலேனா வங்கிகள் தான் மீண்டும் உதை வாங்கும். அதனால் தான் பேங்க்நிப்டி இவ்வளவு மோசமாக விழுந்துள்ளது. ஏற்கனவே பொதுத் துறை வங்கிகள் அனைத்தும் சல்லி சல்லியா உடைச்சு வைத்திருக்கிறது அரசு.
இந்திய பொருளாதாரம், தொழில்துறை, நிர்வாகம் அனைத்தும் மிக மோசமான காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

BBC :கொரோனா வைரஸ்: சர்வதேச நிலை என்ன? மரணங்கள் எவ்வளவு? தற்காப்பது எப்படி? -


BBC : சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது 110 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை 4200 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 24,000 பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த கொரோனா தொற்றுக்கு முதலில் சீனாவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிற நாடுகளில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது.
இத்தாலி, இரான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் சீனாவிற்கு அடுத்து அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று எந்தளவு பரவி வருகிறது என்பதை வரைப்படங்கள் மூலம் இங்கே உங்களுக்கு விளக்குகிறோம்.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகள், வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.
  • சீனா - 80,980 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 3,136 பேர் உயிரிழப்பு
  • இத்தாலி - 12, 262 பேருக்கு பாதிப்பு, 827 பேர் உயிரிழப்பு
  • இரான் - 9000 பேருக்கு பாதிப்பு, 354 பேர் உயிரிழப்பு
  • தென் கொரியா - 7869 பேருக்கு பாதிப்பு, 66 பேர் உயிரிழப்பு
  • பிரான்ஸ் - 2269 பேருக்கு பாதிப்பு, 48 பேர் உயிரிழப்பு
  • ஸ்பெயின் - 2140 பேருக்கு பாதிப்பு, 49 பேர் உயிரிழப்பு
சீனாவிற்கு வெளியே கொரோனா தொற்று அதிகரிகரித்து வருகிறது<> சீனாவில் ஹூபே மாகணத்தில், வுவான் நகரில் இந்த தொற்று பரவத் தொடங்கிய சமயத்திலிருந்து தற்போது வரை சுமார் 80,908 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5,8 பொதுத் தேர்வை நடத்தினால் என்ன தவறு?: முதல்வர்! எடப்பாடியின் ஆர் எஸ் எஸ் விசுவாசம்?

5,8 பொதுத் தேர்வை நடத்தினால் என்ன தவறு?: முதல்வர்!மின்னம்பலம : 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தினால் என்ன தவறு என்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் 2020ஆம் கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு
வெளியிட்டது. பின்னர் எதிர்க்கட்சியினர், கல்வியாளர்கள் ஆகியோரின் எதிர்ப்பைத் தொடர்ந்து 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில் சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 12) மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற போது 5,8ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

ம.பி. .. சிந்தியா ஆதரவு 12 எம்எல்ஏக்கள் மீண்டும் காங்கிரசுக்கு ஆதரவு ..?


.hindutamil.in : மத்திய பிரதேசதத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்ததாக கூறி விட்டதாலேயே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறினார்.
மத்தியப் பிரதேச அரசியலில் பெரும் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் கமல்நாத்துக்கும், மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட உட்கட்சி மோதலால் அவர் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து சிந்தியாவின் ஆதரவாளர்கள் 22 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தார்கள்.
இதனால், 228 உறுப்பினர்கள் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 206 ஆகக் குறைந்தது. பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 95 உறுப்பினர்களும் உள்ளனர்.
பெரும்பான்மைக்கு 104 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 95 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். காங்கிரஸ் கட்சி தன்னிடம் இருக்கும் 95 எம்எல்ஏக்களையும் பாஜகவின் குதிரை பேரத்துக்குப் பயந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த சூழலில் சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கும் சூழல் ஏற்பட்டால் கமல்நாத் அரசு தப்பிக்குமா அல்லது கவிழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரில் தங்களுக்கு 12 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள், வாக்கெடுப்பு நடக்கும்போது அதிசயம் நிகழும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

எனக்கு முதல்வர் பதவி வேண்டாம்- ரஜினிகாந்த் பேட்டி முழு விபரம்

ரஜினிகாந்த்மாலைமலர் : அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்களை வைத்திருந்தேன்- ரஜினிகாந்த் 54 ஆண்டு ஆட்சிகளை தூக்கி எறிய வேண்டிய கால கட்டம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. மக்கள், இளைஞர்களிடம் எழுச்சி உண்டாக வேண்டும். வருங்கால முதல்வர் என்று சொல்வதை ரசிகர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்- 
ரஜினிகாந்த் சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கடந்த 2017-ம் ஆண்டு அறிவித்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக அவரது ரஜினி ரசிகர் மன்றத்துக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. சுமார் 1 கோடி தொண்டர்களை இலக்கு வைத்து உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடந்தது.

இதற்கிடையே அரசியலுக்கு வருவதாக அறிவித்த ரஜினி புதிய கட்சி தொடங்காமல் இருப்பது அவரது ரசிகர்களிடமும், தொண்டர்களிடமும் சற்று சோர்வை ஏற்படுத்தியது. ரஜினி தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தியதால் அவர் எப்போது கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அவர் தனது கட்சி மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியானது.

புதிய கட்சி தொடர்பாக யூகத்தின் அடிப்படையில் தகவல்கள் வெளியானதால் தனது அரசியல் நிலைப்பாடு பற்றி தெளிவாக மக்களுக்கு அறிவிக்க ரஜினி முடிவு செய்தார்.

போலி கால் சென்டர்... மெகா மோசடி விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி செல்வகுமார் கைது .. வீடியோ


பாலிமார் செய்திகள்  : போலி கால் சென்டர் மோசடி விவகாரத்தில் பென்ஸ் கிளப் சரவணன் கைது செய்யப்பட்டதன் பின்னணி குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
இந்த மெகா மோசடிக்கு மூளையாக செயல்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி செல்வா என்கிற செல்வகுமார், தனது இரு கூட்டாளிகளுடன் போலீசில் பிடிபட்டுள்ளார்.
தூண்டிலில் புழுவை மாட்டி, மீனை பிடிப்பது போல, அவசர பணத்தேவைக்காக அலைபாயும் மக்களை கண்டறிந்து, ஆசை வலை வீசி, மோசடியை அரங்கேற்றும் போலி கால் சென்டர்கள், தமிழகத்தில் புற்றீசல் போல இயங்கி வருகின்றன.
செல்போனில் பொதுமக்களை தொடர்பு கொண்டு குறைந்த வட்டியில் குறிப்பிட்ட வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூற, அதை நம்பி தங்கள் வங்கி விவரங்களை பகிர்ந்து கொள்ளும் வாடிக்கையாளர் பணம் அடுத்த சில நிமிடங்களில் சுருட்டப்படும். போலி நிறுவனங்களின் பெயரில் பல வங்கி கணக்குகள் வைத்திருப்பதால் எளிதில் அவர்களை கண்டுபிடிக்கவும் முடியாது.
ஒரு டீம் லீடர், மேனேஜர், ஹெச்.ஆர் என கார்ப்பரேட் அலுவலகம் போன்று இயங்கும் இந்த போலி கால் சென்டர்களில், பட்டதாரி இளம் பெண்கள், டெலி காலர்களாக பணி அமர்த்தப்படுகிறார்கள். முதலில், என்ன வேலை செய்கிறோம் என தெரியாமல் பணி செய்யும் இவர்களில் பலர், உண்மை தெரிந்த பிறகும் வேறு வழியில்லாமல், தொடர்ந்து, இந்த மோசடிக்கு துணை போகிறார்கள்.

பேரவையில் எம் எல் ஏக்கள் வெளிநடப்பு .. குடியுரிமை பதிவுக்கு எதிராக தீரமானம் நிறைவேற்ற மறுப்பு ... வீடியோ

tamil.oneindia.com/- emavandhana - சென்னை: இன்று மிக முக்கியமான நிகழ்வு ஒன்று சட்டப்பேரவையில் நடந்துள்ளது... என்பிஆருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற பேரவை மறுத்ததால் எதிர்க்கட்சிகள் திரண்டு வந்து வெளிநடப்பு செய்துள்ளன! சட்டசபை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா.. எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கைது உள்துறை அமைச்சர் அமித்ஷா அன்று என்ன சொன்னாரோ அதுதான் இப்போது நடந்துள்ளது.. தமிழகத்தை பொறுத்தவரை குறிப்பாக அதிமுக அரசுக்கு பெரும் தலைவலியாக இருப்பது திமுகதான்! உச்சக்கட்ட அதிருப்தி எதுவும் இல்லாததால்தான் இடைத்தேர்தல்களில் சுபலமாக வெற்றியை தக்க வைத்தது அதிமுக. ஆனால் எப்போது சிஏஏ, என்ஆர்சி விவகாரம் வந்ததோ அப்போதிருந்தே இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.. இதை திமுகவும் தனக்கு சாதகமாகவே கையெழுத்து இயக்கம் முதல் அனைத்தையும் சிறப்பாக கையாண்டும் வருகிறது.
இந்த காலகட்டத்தில்தான் சிஏஏ விவகாரம் பற்றியும், திமுக இதை வைத்து பெரிய அளவில் அரசியல் செய்து வருவதால், என்ஆர்சி வேண்டாம் என சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும் அமித்ஷாவிடம் தமிழக அமைச்சர்கள் டெல்லிக்கே சென்று விளக்கமாக சொன்னார்கள்.. "அப்படி ஒரு தீர்மானத்தை எல்லாம் சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டாம், நீங்கள் இப்படி செய்தால், நாளைக்கு இன்னொருத்தர் வந்து கேட்பாங்க.. முதல்ல போய் உங்க மாநிலத்தில சட்டம் ஒழுங்கை சரி பண்ணுங்க" என்று தெரிவித்தாராம்

சிஏஏவுக்கு எதிராக போராட்டம்- மு.க.ஸ்டாலின் நேரில் ஆதரவு!.. வீடியோ


nakkheeran.in - பா. சந்தோஷ் : சிஏஏவுக்கு எதிரான இஸ்லாமியர்களின் போராட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.  சிஏஏவுக்கு எதிராக சென்னை மண்ணடியில் 27- வது நாளாக இஸ்லாமியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய ஸ்டாலின், "திமுக தூண்டிவிட்டு தான் போராட்டம் நடைபெறுவதாக கூறுவார்கள் என்பதால் முதலில் வரவில்லை. சிஏஏவினால் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் பாதிப்புதான்; தொடர்ந்து நடத்தும் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது யாரும் அதற்க்கு துணை நிற்க கூடாது. மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு துணை நிற்காமல் இருந்தால் திமுக இஸ்லாமியர்களுக்கு துணை நிற்கும்" என்றார். 

வடமாநிலங்களில் ஓங்கி ஒலிக்கும் பெரியார் .. ... வீடியோ


வளன்பிச்சைவளன் வட மாநிலங்களில் பெரியாரிய கருத்துக்கள் எதிரொலிக்கிறது  நம்மை சூத்திரர்களாக பஞ்சமர்களாகமாற்றிய பார்பனர்கள்  முஸ்லீம்களை எதிர்க்கும் போது  நீ இந்து உன் உரிமைககளை கேட்டால் நீ இந்நு இல்லை பார்பனர்கள் வாழ முஸ்லீம்களயும் நம்மையும் சண்டையிட வைக்கிறார்கள  முஸ்லீம்களும் நாமும் சகோதர்கள்

இந்த காணொளி ஒரு OBC தலைவர் பேசியது எவ்வளவு தெளிவாக பார்பணீய தத்தின் சூழ்ச்சியை விளக்குகிறார்.
பார்பனர்கள் 1000 ஆண்டுகளாக நம்மை உரிமை அற்றவர்களாக சூத்திரர், பஞ்சம் என்றும் நீசர்கள் என்றும் நம்மை அடிமைபடுத்தினார்கள்.
மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்காக நாம் போராடிய போது பாபர் மசூதி என்று நம்மை திசை திரும்பினார்கள் இதனால் நாம் 12 கோடி வேலை வாய்ப்புகளை இழந்தோம். அந்த வேலை வாய்ப்புகளில் பார்பனர்கள் கைப்பற்றி கொண்டனர்.
அவர்கள் வசதியாக வாழ முஸ்லிம்களுக்கு எதிராக நம்மை தூண்டி விடுகின்றனர் சண்டையிடும் முஸ்லீமோ நாமோ இறந்தால் பார்ப்பனர்களுக்கு கவலை இல்லை ஏனெனில் இழப்பு அவர்களுக்கு இல்லை.
இங்கு கணக்கெடுப்பு நடத்தினார்கள். மிருகங்களை கூட கணக்கெடுத்தார்கள், நாய்களை கணக்கெடுத்தார்கள் ஆனால் OBC யை கணக்கெடுக்க வில்லை ஏன்?
OBC கணக்கெடுக்கப் பட்டால்
52% என புள்ளி விவரம் கிடைக்கும் இது OBC மக்களின் பலத்தை அவர்களுக்கு புரிய வைக்கும்.

குண்டர் சட்டத்தில் கைதானவர்களை இப்போது பிணையில்...

Muralidharan Pb : நவம்பர் 1996ல் பொன் நாவரசு என்ற அண்ணாமலை
பல்கலைக்கழக மாணவன் தனது மூத்த மாணவனான ஜான் டேவிட் என்ற மாணவனால் ராக்கிங் செய்யப்பட்டான். அதை ஒப்புக்கொள்ளாத நாவரசு, மறுநாள், பல பாகங்களாக வெட்டப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் வீசி எறியப்பட்டான். ஜான் டேவிட் சரணடைந்தான். அதன் பிறகு உருவானதே ராக்கிங் சட்டம் 1997.
1998 கால கட்டத்தில் சென்னையில் சரிகா ஷா என்ற ஒரு கல்லூரி மாணவி, கல்லூரி விட்டு வெளியே வந்த அப்பெண்ணின் மீது அன்றைய சில முட்டாள் இளைஞர் காங்கிரஸ் கட்சியினரால் கையில் வைத்திருந்த தண்ணீர் பொட்டலத்தை தூக்கி வீசி எரிய, பயந்து போய் அந்த மாணவி, கீழே விழுந்து, பின் மண்டையில் பலத்த காயம் பட்டு, இறந்து போகிறார்.
உள்துறையை தனது கையில் வைத்திருந்த முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். பின்னர் உருவானது Eve Teasing சட்டம் கொண்டு வரப்பட்டது.
எந்த ஒரு செயலுக்குமே உடனடியாக அரசு தகுந்தாற்போல் சட்டங்களை இயற்றினால், மேற்சொன்னது போல குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு. குற்றங்கள் பெருமளவு குறைந்ததும் உண்மையே.

புதன், 11 மார்ச், 2020

இலங்கை சிவசேனா : மன்னார் மாவட்ட சைவ மக்கள் சைவ வேட்பாளருக்கே வாக்களிக்கவேண்டும் .

   எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக்
கூட்டமைப்பு சைவ வேட்பாளர் ஒருவரை மன்னார் மாவட்டத்தில் நிறுத்தவேண்டும் என தமிழ் தேசியக கூட்டமைப்பை கேட்கின்றார் சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம். >
அவ்வாறு சைவ வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படவேண்டும் என்பதற்கு அவர் 19 காரணங்களை பட்டியலிட்டுள்ளார். அவை வருமாறு.. 1. நானாட்டான் பிரிவில் அருவி ஆற்றங்கரையில் பாழடைந்த சைவக் கோயிலுக்கு அருகில் சட்டத்தை மீறித் தூண் அமைத்து மரியாளுக்கு உருவச்சிலையை திடீரெனச் சாலையோரத்தில் உருவாக்கியுள்ளார்கள். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.
2. திருக்கேதீச்சரக் கற் கோயிலை உடைத்து மன்னார்க் கோட்டையையும் ஊர்காவற்துறைக் கடல் கோட்டையையும் கட்டிய போர்த்துக்கேயர் காலம் தொடக்கம் நேற்று அருவி ஆற்றங் கரையில் மரியாள் சிலையை வைத்த காலம் வரை மன்னார் மாவட்டம் முழுவதையும் கத்தோலிக்க மயமாக்கும் முயற்சியில் வெற்றிபெற்றே வருகின்றனர். சைவ மக்கள் வாக்குகளைப் பெற்ற ததேகூ நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் தலையிடவில்லை.

திமுக பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்

திமுக பொதுச்செயலாளர் ஆகிறார் துரைமுருகன்நக்கீரன் : திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் மறைவை தொடர்ந்து, கட்சியில் மூத்த நிர்வாகியான துரைமுருகன் பொதுச்செயலாளர் ஆவது உறுதி என்று கட்சி நிர்வாகிகள் தரப்பில் பேசப்படுகிறது. சென்னை: தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகன் மறைவை தொடர்ந்து அவரது படத்திறப்பு விழா அறிவாலயத்தில் வருகிற 14-ந்தேதி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் தி.மு.க.வினர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை மறுநாளில் இருந்து மீண்டும் கொண்டாட தொடங்குகின்றனர். பல இடங்களில் பொதுக்கூட்டங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
தி.மு.க.வில் கட்சி தலைவருக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பதவி பொதுச் செயலாளர் பதவியாகும். தற்போது இந்த பதவியை மு.க.ஸ்டாலின் கூடுதல் பொறுப்பாக நிர்வகித்து வருகிறார்கட்சியில் மூத்த நிர்வாகியாக அனுபவம் வாய்ந்தவராக துரைமுருகன் உள்ளதால் அவர் பொதுச்செயலாளர் ஆவது உறுதி என்று கட்சி நிர்வாகிகள் தரப்பில் பேசப்படுகிறது.

உளவுத்துறை ரிப்போர்ட்... எல்.முருகனை டிக் செய்த ஜெ.பி. நட்டா!

bjp party tamilnadu new president appointment jp natta bjp party tamilnadu new president appointment jp natta nakkheeran.in - இரா. இளையசெல்வன் : தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 1- ஆம் தேதி முதல் கடந்த 6 மாதங்களாக தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக இருந்தது.
பொன். ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், ஏ.பி.முருகானந்தம், கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன், கே.டி.ராகவன் உள்ளிட்ட பலர் தலைவர் பதவியை கைப்பற்ற பகீரத முயற்சி எடுத்து வந்தனர். 
பாஜகவில் முன்பெல்லாம் தலைவர் பதவிக்கு அவ்வளவாக போட்டி இருக்காது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. அதேபோல் தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் செயல்படும் அதிமுக அரசும் இருந்ததால், பாஜக மாநில தலைவர் பதவிக்கு முக்கியத்துவம் ஏற்பட்டது. இதனால், காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியை போன்று பாஜகவிலும் பலர் டெல்லியில் அமர்ந்து தங்களுக்கு தலைவர் பதவி வேண்டும் என்கிற முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.

சிஏஏ: டெபாசிட்டை திரும்பப் பெறும் போராட்டம்-.. புதுக்கோட்டை கரம்பங்குடியில் .. வீடியோ


சிஏஏ:  டெபாசிட்டை திரும்பப் பெறும் போராட்டம்-அதிர்ச்சியில் வங்கிகள்!மின்னம்ப்லம் : தமிழகம் முழுதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை எல்லாம் திரும்பப் பெற்றிருக்கிறார்கள் போராட்டக்காரர்கள். இந்த வகையில் இன்று மட்டும் கறம்பக்குடியில் இருக்கும் வங்கிகளில் இருந்து ஒரு கோடி ரூபாய் பணம் திரும்பப் பெறப்பட்டுவிட்டது. இந்தப் போராட்டம் வங்கிகளிடையே அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுபற்றி கறம்பக்குடி குடியுரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பின் உறுப்பினரான அபுபக்கர் சித்திக் கிடம் பேசினோம்.
“புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியின் ஷாயின் பாக் போராட்டம் (குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டம்) இன்று மார்ச் 11 ஆம் தேதி 22 ஆவது நாளாக நடந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான நூதனப் போராட்டங்களை நடத்தி வருகிறோம். கறுப்பு பலூன் பறக்க விடுதல், வாயில் கறுப்புத் துணி கட்டிக் கொள்ளுதல் என்று நடந்துவரும் போராட்டங்களில் இன்று (மார்ச் 11) முக்கியமான ஒரு போராட்ட வடிவத்தைக் கையிலெடுத்தோம்.

மத்திய பிரதேசத்தில் எம் எல் ஏக்கள் விற்பனை அமோகம்


மாலைமலர் : போபால்: மத்தியப் பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்  92 பேரையும் ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்கிறது.
ம.பி., காங்., கட்சியின் முக்கிய தலைவரான ஜோதிராதித்யா சிந்தியா, கட்சி மீது சமீப காலமாக அதிருப்தியில் இருந்து வந்தார். அதன் தொடர்ச்சியாக காங்கிரஸில் இருந்து சிந்தியா விலகி, கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்த சிந்தியா , பாஜ.,வில் இணைய உள்ளார். ஜோதிராதித்யா சிந்தியாவின் 22 ஆதரவு காங்., எம்.எல்.ஏ.,க்களும் பாஜ.,விற்கு தாவ உள்ளனர். இவர்கள் அனைவரும் பெங்களூரில் தங்கியுள்ளனர். இதற்கிடையே ம.பி., அரசுக்கு ஆதரவான மீதமிருக்கும் 92 காங்., எம்.எல்.ஏ.க்களை தக்க வைப்பதற்காக ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட உள்ளனர்.

தமிழக பாஜக தலைவராக எல் முருகன் நியமனம்- ஜெ.பி நட்டா அறிவிப்பு

மாலைமலர் : தமிழக புதிய பாஜக தலைவராக எல் முருகனை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அறிவித்துள்ளார். சென்னை: தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் செலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் பாஜக மாநில தலைவர் பதவி காலியாக இருந்தது.
இந்நிலையில், புதிய பாஜக தலைவர் எல்.முருகனை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, எல்.முருகன் கூறுகையில், என் மீது நம்பிக்கை வைத்து பதவி கொடுத்திருக்கிறார்கள்.  அதற்கேற்ப செயல்படுவேன். பாஜக தலைவர் ஜெ.பி நட்டா, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோருக்கு நன்றி என தெரிவித்தார். டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில் பி.எல். படிப்பும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.எல். படிப்பும் படித்தவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். 15 வருடம் வழக்கறிஞர் அனுபவம் உள்ளவர்

ஈரானில் இருந்து 58 இந்தியர்கள் தனி விமானத்தில் ..: உ.பி. முகாமில் கண்காணிப்பு

தினத்தந்தி :கொரோனா வைரஸ் பாதிப்பு நிறைந்த ஈரானில் இருந்து 58 இந்தியர்கள் தனி விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் உத்தரபிரதேசத்தில் உள்ள தனி முகாமில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். புதுடெல்லி, சீனாவைத் தொடர்ந்து, தென்கொரியா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.
ஈரானில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டி விட்டது. பலியானோர் எண்ணிக்கை 237 ஆக உயர்ந்துள்ளது. ஈரானில் சுமார் 2 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். ஈரான் அரசு அதிகாரிகள் ஒத்துழைப்புடன் அவர்களை இந்தியாவுக்கு அனுப்பிவைக்க அங்குள்ள இந்திய தூதரகம் முயற்சி மேற்கொண்டது.
அதன் விளைவாக, முதல்கட்டமாக சில இந்தியர்களை அழைத்து வருவதற்காக, இந்திய விமானப்படையின் ராணுவ விமானம் புறப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள ஹிண்டன் விமான தளத்தில் இருந்து சி-17 குளோப்மாஸ்டர் என்ற மிகப்பெரிய ராணுவ விமானம் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது.

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்கள் அழிப்பு

DSP Vishnupriya case issue  - police investigation into Vishnupriya father !நக்கீரன் : திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில், செல்போன், லேப்டாப்பில் இருந்த முக்கிய ஆதாரங்களை காவல்துறையினர் அழித்து விட்டதாக அவருடைய தந்தை அளித்த புகாரின்பேரில், நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் அவரிடம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) நேரில் விசாரணை நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுபிரியா. கடந்த 2015ம் ஆண்டு, அவருடைய முகாம் அலுவலகத்தில் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து, நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரித்த சிபிஐ காவல்துறையினர், போதிய ஆதாரம் இல்லை என்று கூறி கடந்த ஓராண்டுக்கு முன்பு, கோவை நீதிமன்றத்தில் வழக்கை வைத்தனர்.

பறவைக் காய்ச்சல் வதந்தியால் 2.5 கோடி கோழிகள் தேக்கம்; தமிழக அரசுக்கு நெருக்கடி!

birdflu,TamilNadu,chicken,பறவைக்காய்ச்சல்,வதந்தி,கோழிகள்,தேக்கம்,தமிழகஅரசு,நெருக்கடிதினமலர் : சென்னை : பறவைக் காய்ச்சல் வதந்தியால் தமிழகத்தில் 2.5 கோடி கோழிகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. கிலோ கோழி இறைச்சி 50 ரூபாய்க்கு சரிந்துள்ளதால் வியாபாரிகளும், பண்ணை அதிபர்களும் கலக்கம் அடைந்துள்ளனர். வதந்தியை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நெருக்கடியில் தமிழக அரசு உள்ளது.
சீனாவில் உருவெடுத்துள்ள 'கொரோனா வைரஸ்' தொற்று பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் காய்ச்சல் 'பிராய்லர்' கோழி வாயிலாக பரவியதாக வதந்திகள் பரவின. இதற்கிடையில் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் சில பண்ணையில் வளர்க்கப்பட்ட கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டு 200க்கும் மேற்பட்ட கோழிகள் அழிக்கப்பட்டன. இதுபோன்ற தொடர் சம்பவங்களால் நாடு முழுவதும் கோழி இறைச்சி விற்பனை பெரிதும் சரிந்துள்ளது. இதனால் கோழி உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்த பாதிப்பை சரி செய்வது குறித்து உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் சென்னையில் நேற்று முன்தினம் அவசர ஆலோசனை நடத்தினர்.

வடமொழிமயமான தமிழ்நாட்டு ஆறுகளின் பெயர்கள்

கவிஞர் மகுடேசுவரன் : வடமொழிமயமான தமிழ்நாட்டு ஆறுகளின் பெயர்கள்
பண்டைத் தமிழகம் இன்றைய ஆந்திரத்தின் கிருட்டிணை ஆறு வரைக்கும் பரவியிருந்தது.
அக்காலத்தில் தமிழறிந்த பகுதிக்குள் பாய்ந்த ஆறுகள் அனைத்திற்கும் தமிழ்ப் பெயர்களே இருந்தன. பிற்காலத்தில் வடமொழிப் பெயர்கள் நிலைத்துவிட்டன.
ஆந்திரத்தின் கிருட்டிணை (கிருஷ்ணா) ஆற்று நீர் கரிசல் நிலத்தில் பாய்ந்து வருவதால் கரிய நிறத்தோடு இருக்கும். நீரின் அந்தக் கறுப்பு நிறத்தை உணர்த்தும் விதமாகவே கண்ணனின் நிறத்தோடு தொடர்புபடுத்தி 'கிருட்டிணை' என்ற வடமொழிப்பெயர் நிலைத்தது.
கிருட்டிணை ஆற்றின் முந்தய தமிழ்ப்பெயர் 'கரும்பெண்ணை' என்பதாகும்.
பெண்ணை என்றால் நல்ல நீர்ப்பெருக்குடைய ஆறு என்று பொருள்.
காவிரி ஆற்றைக் 'காவேரி' என்று வழங்குவதும் உண்டு. இகரம் எகரம் ஆகும் இசைத்தன்மையால் 'வி' என்பது 'வே' ஆகி 'காவேரி' என்று ஆகிவிட்டது.
வடமொழியிலும் காவிரி என்று வழங்காமல் காவேரி என்றே வழங்குவர்.
கா என்றா சோலை. செல்லுமிடமெல்லாம் 'சோலைகளை விரித்துச் செல்பவள்' என்ற பொருளில் அமைந்த பெயர்தான் காவிரி.
காவிரிக்கு வழங்கப்படும் இன்னொரு பெயர் 'பொன்னி.'

செவ்வாய், 10 மார்ச், 2020

பேராசிரியரின் மறைவு உண்மையில் கல்வியின் அவசியத்தை உணர்ந்த ஒரு தலைவரின் இழப்பு

Karthikeyan Fastura : திமுக தலைவர் ஸ்டாலினின் பேராசிரியர் மைக்கு எழுதப்பட்ட வார்த்தைகள் இல்லை, இரங்கல் கடிதத்திற்கே உரிய மொழி அலங்காரம் இல்லை ரெம்பவும் யதார்த்தமாக நிஜமான அன்பை, அதன் இழப்பை காட்டுவதாக இருந்தது. ஒரு இயக்கத்தினை கட்டமைத்த மூத்த தலைவர்களுக்கு இளம் தலைவர்கள் இப்படியான மரியாதையை, பேரன்பை காட்டுவது அந்த இயக்கம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது சரியான தலைவர்களின் கையில் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது.
க.அன்பழகனுக்கு எழுதிய அஞ்சலி மடல் படித்தேன். உண்மையிலேயே மனதை தொட்ட மடல். அவரை பேராசிரியர், கழக பொதுச் செயலாளர் என்று மட்டும் விளித்திருந்தால் ஒரு தலைவருக்கு எழுதிய வழக்கமான அஞ்சலி மாடலாக இருந்திருக்கும். பெரியப்பா பெரியப்பா வரிக்கு வரி எழுதிய அந்த அன்பில் தான் ஸ்டாலின் அவர்களின் கனிந்த மனம் தெரிந்தது. அந்த கடிதத்தை இரண்டு மூன்று முறை படித்தேன்.பேராசிரியர் இறந்த அன்று இரவு ஒரு மணிக்கு ஸ்டாலின் அவர்கள் தன் கைப்பட எழுதிய கடிதம் அது.

Karthikeyan Fastura : 19நாளில் கிட்டத்தட்ட 22%க்கு அனைத்து உலக பங்குசந்தைகளும் விழுந்திருக்கிறது.

சர்வதேச மார்க்கெட் நேற்று ஒரே நாளில் மட்டும் மிக மோசமான சரிவை
கண்டுள்ளது. இதுவரை 3% என்று விழுந்து கொண்டிருந்த பங்குச் சந்தைகள்
நேற்று ஒரேநாளில் 6 சதவீதம் என்று மிகப்பெரிய சரிவை கண்டு வருகிறது. காரணம் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இத்தாலியில் மட்டும் ஒரே நாளில் 125 பேர் இறந்திருக்கிறார்கள். கமாடிட்டி சந்தையும் மிக மோசமான சரிவை ஒரேநாளில் தொட்டதால் மார்க்கெட்டில் டெய்லி டிரேடிங் பல மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளது. குருடாயில் சந்தையில் ஒரேநாளில் 25% விழுந்துவிட்டது. இதுபோன்ற இதற்கு முன்பு நடந்ததில்லை. குருடாயில் இந்திய ரூபாய் மதிப்பில் ஆயிரம் ரூபாய்க்கும் மேலே குறைந்து 2450 என்ற நிலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு ஈடாக நாளை பெட்ரோல் விலை குறையுமானால் 52 ரூபாய்க்கு வரவேண்டும்.
Feb19க்கு பிறகு 19நாளில் கிட்டத்தட்ட 22%க்கு உலகில் உள்ள அனைத்து பங்குசந்தைகளும் விழுந்திருக்கிறது. பல ட்ரில்லியன் டாலர்கள் காலி. இது போன்ற நிலை இதற்கு முன்பு உலகப் போரின் போது தான் நடந்தது. அமெரிக்க ரஷ்ய பனிப்போர் கூட இந்த அளவிற்கு சேதாரத்தை கொண்டுவரவில்லை. இதோடு முடிந்தால் பரவாயில்லை. இனிமேல் தான் பெரிய பெரிய சரிவுகள் இருக்கும் போல தெரிகிறது.

ரஜினி மீது வழக்கு கோரிய மனு தள்ளுபடி... மேல் முறையீடு செய்ய தீர்மானம்

வெப்துனியா :ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த துக்ளக் 150 வது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
;இதனை அடுத்து திராவிடர் விடுதலை கழகத்தினர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ரஜினி மீது புகார் அளித்தனர். புகார் அளித்த ஒரு சில நாட்களிலேயே அந்த புகார் குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இதுகுறித்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த வழக்கு விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்றது.
 ரஜினிகாந்த் அவர்கள் பெரியார் குறித்து பேசியதற்கு தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகவும் எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என்றும் ரஜினி தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
ஆனால் ரஜினிகாந்த் பேசியது உண்மைக்கு புறம்பானது என்றும் எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் திராவிடர் விடுதலை கழக வழக்கறிஞர் வாதாடினார்.

பட்டதாரிகள் துப்புரவு பணியாளராக ... எப்படி கருதுகிறார்கள்?

துப்புரவு பணியாளர் பணிதுப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் பட்டதாரிகள்மாலைமலர் : கோவை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் பட்டதாரிகள், வேலை நேரம் குறைவு என்பதாலும் சம்பளம் அதிகம் கிடைப்பதாலும் பணியை சிறப்பாக செய்வதாக தெரிவித்தனர். கோவை: கோவையை குனியமுத்தூரை சேர்ந்தவர் சங்கீதா (வயது 23). மைக்ரோ பயாலஜி பட்டதாரி. இவர் கோவை மாநகராட்சியில் துப்புரவு பணியாளர் பணிக்கு சேர்ந்துள்ளார். இவர் நேற்று முதல் துப்புரவு பணியில் ஈடுபட்டார்.
அரசு வேலையில் சேர வேண்டும் என்பது எனது சிறுவயது கனவு. தற்போது அது நிறைவேறி உள்ளது. அரசு வேலை என்பதால் நான் இந்த பணியில் சேர்ந்தேன். எனக்கு முதன் முதலாக ராஜவீதியில் ரோட்டை சுத்தம் செய்யும் பணி வழங்கப்பட்டது.
இந்த பணி ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. ரோட்டில் செல்பவர்கள் அனைவரும் என்னையே பார்த்து சென்றனர். நான் அதனை சமாளித்து விட்டேன். இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. இந்த பணியில் இருந்து இன்னும் மேலே உள்ள பணிகளுக்கு வர முயற்சி எடுப்பேன்.

திண்டிவனம் திமுக வெற்றி செல்லும்: அதிமுக மனு தள்ளுபடி!

திண்டிவனம் திமுக வெற்றி செல்லும்: அதிமுக மனு தள்ளுபடி!minnambalm : திண்டிவனம் தொகுதியில் திமுக எம்எல்ஏ வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2016 சட்டமன்றத் தேர்தலில் திண்டிவனம் தொகுதியில், திமுக வேட்பாளர் சீத்தாபதி சொக்கலிங்கம், அதிமுக வேட்பாளர் எஸ்.பி. ராஜேந்திரன் உட்பட 11பேர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் சீத்தாபதி சொக்கலிங்கம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எஸ்.பி.ராஜேந்திரன் 61,778 வாக்குகள் பெற்ற நிலையில். சீத்தாபதி சொக்கலிங்கம் 61,879 வாக்குகள் பெற்று 101 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

2019 : தடம் பதித்த பெண் பத்திரிக்கையாளர்கள்

Deepa Janakiraman - savukkuonline.co : “எங்களை முன்பெல்லாம் கிராமங்களுக்குள்
அனுமதிக்க மாட்டார்கள். துரத்திவிடுவார்கள். இன்று எங்களை அவர்களே அழைக்கிறார்கள். நாங்கள் இப்போது அவர்களுக்குத் தேவைப்படுகிறோம். எங்களது ஆயுதம் எழுத்து. ஆனால் அந்த ஆயுதம் சாதாரணமாக எங்களுக்குக் கிடைக்கவில்லை. போராடிப் > பெற்றிருக்கிறோம். நாங்கள் நாற்பது பேரும் நுழையாத உத்தரபிரதேச, பீகார் கிராமங்கள் இல்லை” இப்படி சொல்லும் கவிதா தேவியின் அடையாளம்
பத்திரிகையாளர் என்பது. ‘கபர் லஹரியா’ என்றால் இந்தியப் பத்திரிகைத்துறைக்கு நன்றாகத் தெரியும். அதை விட முக்கியமாய் உத்தரபிரதேசத்தின்
அத்தனை கிராமத்தினரும் கவிதாவையும் அவர் நடத்தும் கபர் லஹரியாவின் பணியாளர்களையும் நன்கு அறிவார்கள்.  கபர் லஹரியாவைத் தூக்கி சுமப்பவர்கள் நாற்பது பேர். அத்தனை பேரும் பெண்கள். ஒடுக்கப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையின பெண்கள். அவர்களே செய்தி சேகரிக்கிறார்கள், எழுதுகிறார்கள், அச்சிடுகிறார்கள், அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள்.  உத்தரபிரதேச, பீகாரில் அறுநூறு கிராமங்களுக்கு கபர் லஹரியா கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. மாபெரும் வலைப்பின்னல் கொண்டுள்ள பத்திரிகை கபர் லஹரியா.
இன்று களத்தில் செய்தி சேகரித்து தொடர்ந்து பணி செய்யும் பெண் பத்திரிகையாளர்கள் அதிகளவில் இருக்கின்றனர். ஒரு செய்திக் கட்டுரைக்காக உயிரைப் பணயம் வைக்கும் அளவுக்கு, தயாராய் நிற்பவர்கள் இவர்கள். கொலை மிரட்டலை சந்தித்திருக்கின்றனர், செய்தி சேகரிக்கும் இடங்களில் ஓட ஓட விரட்டப்பட்டிருக்கின்றனர். ஆனாலும் துணிச்சலுடன் இவர்கள் வெளியிட்ட கட்டுரைகள் அவர்களின் அடையாளமாக மாறியிருக்கின்றன. மறுக்கப்பட்ட பலரின் குரலாக ஒலித்திருக்கின்றன.

பா ஜ க தயவால் எம்.பி. பதவி பெறவில்லை- ஜிகே வாசன் ,, (பணம் கொடுத்து வாங்கப்பட்டதாக சமுகவலையில் .)

பாரதிய ஜனதா தயவால் எம்.பி. பதவி பெறவில்லை- ஜிகே வாசன்மாலைமலர் :சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆங்கில நாளிதழ் ஒன்றில் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் கடந்த 2019-ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கடைசியாகத்தான் சென்று சேர்ந்தது. எனவே எங்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஒரே ஒரு சீட் மட்டுமே ஒதுக்கி தந்தனர். என்றாலும் நாங்கள் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி வெற்றிக்காக தமிழ்நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்தோம்.
இந்த நிலையில் பாராளுமன்ற மாநிலங்களவையில் த.மா.கா.வுக்கு ஒரு இடம் தர வேண்டும் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டே இருந்தோம். மாநிலங்களவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் மீண்டும் நாங்கள் அ.தி.மு.க.விடம் கோரிக்கை விடுத்தோம்.

செளதி முடியரசர் முகமது பின் சல்மான் மூத்த இளவரசர்களை கைது செய்வது ஏன்?


BBC :செளதி அரேபியாவின் நடைமுறையில் தலைவராக இருக்கும் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான், அந்நாட்டின் மூத்த இளவரசர்கள் சிலரை கைது செய்திருப்பது பல யூகங்களை எழுப்பியுள்ளது. சர்ச்சைகளுக்குப் புதியவரல்ல என்றாலும் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் (சுருக்கமாக எம்.பி.எஸ். என சொல்லப்படுகிறது), அரசியலின் உச்சநிலை அதிகாரத்துக்கு செல்வதற்கான தன்னுடைய லட்சியத்துக்கான இரக்கமற்ற நடவடிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். 2015ல் இளவரசராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே, பல்வேறு வகைகளில் தனது எதிர்ப்பாளர்களாக, போட்டியாளர்களாக இருப்பவர்களை மௌனமாக்கும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
இந்த முறை முகமது பின் சல்மானின் லட்சிய நோக்கத்துக்கான பயணத்தில் பலியாகி இருப்பது சௌதி அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் - அதிலும் தன்னுடைய சித்தப்பாவான முன்னாள் உள்துறை அமைச்சர் இளவரசர் அகமது பின் அப்துல் அஜீஸ், ஒன்றுவிட்ட சகோதரரும், முன்னாள் பட்டத்து இளவரசர் மற்றும் உள்துறை அமைச்சருமான முகமது பின் நயீப் (சுருக்கமாக எம்.பி.என். எனப்படுகிறார்) - ஆகியோரும் இதில் அடங்குவர். குற்றச்சாட்டு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், தேசதுரோக குற்றச்சாட்டுகளின் பேரில் விசாரிப்பதற்காக அவர்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஜாதி மறுப்பு திருமணம்... செய்து வைத்தவரையும் மணப்பெண்ணையும் கடத்திய கும்பல்..

tamil.oneindia.com :
சரவணபரத் : ஈரோடு அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தவரை ஒரு கும்பல் கடத்தி சென்றுள்ளது.. மேலும் புது மண தம்பதிகளையும் தாக்கி.. கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள கிராமம் தர்மாபுரி.. இங்கு வசித்து வருபவர் செல்வன்.. 26 வயதாகிறது.. அதே பகுதியை சேர்ந்த இளமதி என்ற 23 வயது பெண்ணை காதலித்தார்.. கல்யாணமும் செய்ய முடிவு செய்தார்... இது ஒரு கலப்பு மணம் ஆகும்! செல்வன் திராவிடர் விடுதலைக் கழகத்தில் உறுப்பினர் ஆவார்.. அதனால் அந்த அமைப்பின் தலைமைக் குழு உறுப்பினரான ஈஸ்வரன் என்பவரை அணுகி தனக்கு கல்யாணம் செய்து வைக்க கோரியுள்ளார்.
இதையடுத்து சேலத்திலுள்ள கொளத்தூர் அருகே உள்ள காவலாண்டியூர் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நேற்று கல்யாணத்தை நடத்தி வைத்துள்ளனர். ஈஸ்வரன் வீட்டிலேயே செல்வனும் இளமதியும் சாயங்காலம் 5 மணி வரை இருந்துள்ளனர். பிறகு செல்வனின் நண்பரான சரவண பரத் என்பவரை சந்திப்பதற்காக அங்கிருந்து இளமதியும், செல்வனும் சென்றனர்.

கேரளாவில் தீவிரமடையும் கரோனா: மேலும் 6 பேருக்கு உறுதி; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, தேர்வு ரத்து

six-more-coronavirus-cases-in-kerala-total-12-cm.hindutamil.in :கேரளாவில் கரோனா வைரஸால் மேலும் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 12 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளி்ல் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,500 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸ் சீனாவில் இருந்தபோது அங்கிருந்த வந்த கேரளத்தைச் சேர்ந்தவர்களுக்கு தீவிர சிகிச்சையும், மருத்துவக் கண்காணிப்பும் இருந்ததால் அவர்கள் குணமடைந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் இறுதியில் பத்தினம்திட்டாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் இத்தாலி சென்றுவிட்டு, தோஹா வழியாக கொச்சி வந்தனர். தங்களின் பயணத்தை யாரிடமும் கூறாமல் பத்தினம்திட்டா வந்துவிட்டனர்.

மத்திய பிரதேசத்தில் 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா- கமல் நாத் ஆட்சி கவிழ்கிறது

ரிசார்ட்டில் உள்ள எம்.எல்.ஏ.க்கள்மத்திய பிரதேசத்தில் 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா- கமல் நாத் ஆட்சி கவிழ்கிறதுமாலைமலர் : மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிருப்தி எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்ததால் ஆட்சி கவிழும் நிலை உருவாகி உள்ளது.
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்க
போபால்: மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் கமல் நாத், ஜோதிராதித்ய சிந்தியா இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கருத்து மோதல் தற்போது ஆட்சியை கவிழ்க்கும் வகையில் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவருடைய ஆதரவாளர்களாக கருதப்படும் 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நேற்று திடீரென கட்சி தலைமையிடம் தெரிவிக்காமல் வெளியேறினர். அவர்கள் பெங்களூரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளன