சனி, 14 மார்ச், 2020

அண்ணா அறிவாலயத்தில் பேராசிரியர் அன்பழகன் படத்தை வீரமணி தலைமையில் ஸ்டாலின் திறந்து வைத்தார்


மாலைமலர் : அண்ணா அறிவாலயத்தில் மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் படத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அண்ணா அறிவாலயத்தில் க.அன்பழகன் படத்தை முக ஸ்டாலின் திறந்து வைத்தார் க.அன்பழகன் படத்தை திறந்துவைத்த மு.க.ஸ்டாலின்
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சி 14-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மறைந்த தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தி.க. தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அன்பழகன் திருவுருவப் படத்தை திறந்து வைத்தார். பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக