செவ்வாய், 10 மார்ச், 2020

Karthikeyan Fastura : 19நாளில் கிட்டத்தட்ட 22%க்கு அனைத்து உலக பங்குசந்தைகளும் விழுந்திருக்கிறது.

சர்வதேச மார்க்கெட் நேற்று ஒரே நாளில் மட்டும் மிக மோசமான சரிவை
கண்டுள்ளது. இதுவரை 3% என்று விழுந்து கொண்டிருந்த பங்குச் சந்தைகள்
நேற்று ஒரேநாளில் 6 சதவீதம் என்று மிகப்பெரிய சரிவை கண்டு வருகிறது. காரணம் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இத்தாலியில் மட்டும் ஒரே நாளில் 125 பேர் இறந்திருக்கிறார்கள். கமாடிட்டி சந்தையும் மிக மோசமான சரிவை ஒரேநாளில் தொட்டதால் மார்க்கெட்டில் டெய்லி டிரேடிங் பல மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளது. குருடாயில் சந்தையில் ஒரேநாளில் 25% விழுந்துவிட்டது. இதுபோன்ற இதற்கு முன்பு நடந்ததில்லை. குருடாயில் இந்திய ரூபாய் மதிப்பில் ஆயிரம் ரூபாய்க்கும் மேலே குறைந்து 2450 என்ற நிலையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு ஈடாக நாளை பெட்ரோல் விலை குறையுமானால் 52 ரூபாய்க்கு வரவேண்டும்.
Feb19க்கு பிறகு 19நாளில் கிட்டத்தட்ட 22%க்கு உலகில் உள்ள அனைத்து பங்குசந்தைகளும் விழுந்திருக்கிறது. பல ட்ரில்லியன் டாலர்கள் காலி. இது போன்ற நிலை இதற்கு முன்பு உலகப் போரின் போது தான் நடந்தது. அமெரிக்க ரஷ்ய பனிப்போர் கூட இந்த அளவிற்கு சேதாரத்தை கொண்டுவரவில்லை. இதோடு முடிந்தால் பரவாயில்லை. இனிமேல் தான் பெரிய பெரிய சரிவுகள் இருக்கும் போல தெரிகிறது.

நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள் முதலீடு செய்வதற்கு இது சரியான சமயமா என்று. சரியான சமயம்தான். ஆனால் இன்னும் சந்தையின் வீழ்ச்சி பாதி தான் நடந்திருக்கிறது. புயல் முழுதாக கடந்தபிறகு தான் சேதாரம் தெரியும்.
பங்குச் சந்தையில் நிகழும் இந்த வீழ்ச்சியில் ஒட்டுமொத்த பங்கு சந்தையும் விழுந்தாலும், மீண்டு எழும்போது ஒட்டுமொத்த பங்கு சந்தையும் எழுந்து விடுவதில்லை. அதனதன் சந்தைக்கு ஏற்ப, அடிப்படை கட்டுமானத்திற்கு ஏற்ப, தொழில் நுட்பத்திற்கு ஏற்ப வளர்ச்சி விகிதம் ஒவ்வொன்றுக்கும் மாறுபடும்.
அதனால் எந்த நிறுவன பங்கானது விரைவில் மீளும், மீடியமாக வளரும், மெதுவாக வளரும், அல்லது மீண்டு எழுவதற்கு வாய்ப்பே இல்லை என்று புரிந்து கொள்வது அவசியம். பங்குச்சந்தையில் நிகழும் வீழ்ச்சி எல்லா சந்தைகளையும் பாதிக்கவே செய்யும். அதில் மியூச்சுவல் ஃபண்ட், வங்கி முதலீடுகள் விதிவிலக்கல்ல. இதில் மிக குறைவான வீழ்ச்சி காப்பீடு திட்டங்களில் மட்டுமே இருக்கும். ஏனென்றால் அவர்கள் அவர்களிடம் சேரும் முதலீட்டிற்கும் காப்பீடு எடுத்து வைத்திருப்பார்கள்.
சென்னையில் வரும் மார்ச் பதினைந்தாம் தேதி இன்வெஸ்ட்மெண்ட் ஒர்க் ஷாப் நடத்த இருக்கிறோம். இதில் கலந்து கொள்ளும் போது உங்களுக்கு மிகத் தெளிவான புரிதல் கிடைக்கும், சரியான முதலீட்டின் மூலமாக பல லட்சங்களை பொருளீட்ட முடியும், பல லட்சங்கள் விரயமாவது தடுக்க முடியும், பல மணி நேர வேலை பளு குறைக்கமுடியும் என்பதில் 100% கேரன்டி கொடுப்பேன். இது உங்களது நீண்டகால முதலீடு, குறுகிய கால முதலீடு, மாதாந்திர முதலீட்டு, தினசரி முதலீடு என்று எல்லாவற்றிலும் ஒரு தெளிவை கொண்டு வந்து கொடுக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக பணத்தை கொண்டு பணம் செய்வது ஒரு நுணுக்கமான உளவியல் இருக்கிறது. அந்த மைண்ட் செட் இருப்பவர்கள் தான் தொடர்ந்து இதில் வெற்றி பெறுகிறார்கள். அது ஒருநாளில் வந்துவிடாது, சில தொடர் பயிற்சியினால் மட்டுமே அதை அடைய முடியும். இது பற்றியும் கண்டிப்பாக பார்ப்போம்.
அதிகபட்சம் 25 பேர் மட்டுமே. விருப்பமுள்ளவர்கள் 9036782332 என்ற எண்ணை தொடர்பு கொண்டு இதற்கான கட்டணத்தை செலுத்தி கலந்து கொள்ளுங்கள். இந்த சிறிய கட்டணம் உங்களுக்கு செலவல்ல. முதலீட்டிற்கான முதலீடு. பல ஆண்டுகள், பல லட்சங்களை செலவழித்து நாம் கற்ற கல்வி கொண்டு வராததை சில மணித்துளிகள் மட்டுமே கொண்ட இது போன்ற ஒரு பட்டறை கொண்டுவந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக