வியாழன், 12 மார்ச், 2020

வடமாநிலங்களில் ஓங்கி ஒலிக்கும் பெரியார் .. ... வீடியோ


வளன்பிச்சைவளன் வட மாநிலங்களில் பெரியாரிய கருத்துக்கள் எதிரொலிக்கிறது  நம்மை சூத்திரர்களாக பஞ்சமர்களாகமாற்றிய பார்பனர்கள்  முஸ்லீம்களை எதிர்க்கும் போது  நீ இந்து உன் உரிமைககளை கேட்டால் நீ இந்நு இல்லை பார்பனர்கள் வாழ முஸ்லீம்களயும் நம்மையும் சண்டையிட வைக்கிறார்கள  முஸ்லீம்களும் நாமும் சகோதர்கள்

இந்த காணொளி ஒரு OBC தலைவர் பேசியது எவ்வளவு தெளிவாக பார்பணீய தத்தின் சூழ்ச்சியை விளக்குகிறார்.
பார்பனர்கள் 1000 ஆண்டுகளாக நம்மை உரிமை அற்றவர்களாக சூத்திரர், பஞ்சம் என்றும் நீசர்கள் என்றும் நம்மை அடிமைபடுத்தினார்கள்.
மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்காக நாம் போராடிய போது பாபர் மசூதி என்று நம்மை திசை திரும்பினார்கள் இதனால் நாம் 12 கோடி வேலை வாய்ப்புகளை இழந்தோம். அந்த வேலை வாய்ப்புகளில் பார்பனர்கள் கைப்பற்றி கொண்டனர்.
அவர்கள் வசதியாக வாழ முஸ்லிம்களுக்கு எதிராக நம்மை தூண்டி விடுகின்றனர் சண்டையிடும் முஸ்லீமோ நாமோ இறந்தால் பார்ப்பனர்களுக்கு கவலை இல்லை ஏனெனில் இழப்பு அவர்களுக்கு இல்லை.
இங்கு கணக்கெடுப்பு நடத்தினார்கள். மிருகங்களை கூட கணக்கெடுத்தார்கள், நாய்களை கணக்கெடுத்தார்கள் ஆனால் OBC யை கணக்கெடுக்க வில்லை ஏன்?
OBC கணக்கெடுக்கப் பட்டால்
52% என புள்ளி விவரம் கிடைக்கும் இது OBC மக்களின் பலத்தை அவர்களுக்கு புரிய வைக்கும்.

மகாபாரதம், இராமாயணம், கீதை எதிலும் இந்து என்ற சொல் இல்லை இந்து என்ற சொல் ஹிந்தி யும் இல்லை சமஸ்கிருதமும் இல்லை, இந்து என்ற சொல் பாரசீகச் சொல் பாரசீக மொழியில் இந்துவிற்கு பொருள் திருடன்.
நாம் இந்துக்கள் இல்லை. நாம் இந்த மண்ணின் மைந்தர்கள் நாம் தான் சுவாசக்காற்று நாம் தான் ராஜாக்கள்.
முஸ்லிம்கள் இம் மண்ணில் சுயமரியாதையோடு வாழ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இம்மண்ணின் மைந்தர்கள் நம் ரத்த சொந்தங்கள். நமக்கும் முஸ்லிம் களுக்கும் இடையே நிற்கும் பார்பனர்களை தூக்கி ஏறிவோம் அண்ணன் தம்பிகளாய் நாமும் முஸ்லிம் களும் நம் உரிமைகளுக்காக போராடுவோம்.
சாதிய பார்பணீய ஒடுக்குமுறை இருக்கும் இடங்களில் பெரியார் மிகப் பெரிய அளவில் தேவைப்படுவார் என்ற நிதர்சனம் இன்று வட மாநிலங்களில் பெரியார் குரல் எதிரொலிக்கிறது. இது வரலாற்று கட்டாயம்.
50 ஆண்டு திராவிடர் இயக்க உழைப்பால் இன்று தமிழகம் இன்றும் வட மாநிலங்களில் இருக்கும் சாதிய பார்பனீய ஒடுக்கு முறையை தளர்த்தி எல்லா ஒடுக்கப் பட்ட மக்களுக்கும் கல்வி குறிப்பாக பெண் கல்வி என சமூகத்தின் உயரிய பொறுப்புகளில் ஒடுக்கப்பட்ட, பெண்கள் என தமிழகம் கும்பிடுறென் சாமி என கக்கத்தில் துண்டுடன் விளைந்து கும்பிடும் காட்சி இல்லை ஆனால் இன்றும் வட மாநிலங்களில் பார்பனர்களை வழியில் காண நேரிட்டால் அவர்கள் காலில் விழுந்து வணங்கும் பழக்கம் இருக்கிறது.
தமிழகத்தில் இந்த கொடூர சாதிய அடக்குமுறை இல்லை இதை சாதித்த பெரியாரை இன்றய இளைஞர் களும் தமிழகம் அடிப்படையில் இது எல்லாம் எல்லா காலமும் இப்படி இருந்தது போல ஒரு கருத்துருவாக்கி பெரியார் என்ன செய்தார்? என கேட்க வைப்பதும் பார்பனீயமே அவாளின் சூழ்ச்சி அறியாமல், கேள்வி கேட்கும் அவர்கள் வட மாநில நிலைமைகளை நேரில் கண்டால் தங்களை தூண்டி விடுவது யார் என்று தெரியும்.
பெரியார் விமர்சனங்களால் வளர்ந்தவர். பெரியாரியத்தின் உயிர் மூச்சு பெரியாரியத்தின் மீது வசைபாடு உள்ள வரை, அந்த வகையில் பெரியார் எதிர்பாளர்கள் தொடர்ந்து எதிர்த்து பெரியாரிய த்தை உயிர்போடு காக்க உதவுபவர்களே! தொடர்க தங்கள் வசவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக