வெள்ளி, 13 மார்ச், 2020

சாம்பார் பொடி வீட்டில் செய்வீர் .. கலப்படம் தவிர்ப்பீர் ..

Subashini Thf : மணக்க மணக்க சாம்பார் சுவையாக இருக்க வேண்டுமென்றால் சாம்பார் பொடி வீட்டிலே தயாரித்து பயன்படுத்தினால் தான் எனக்கு நன்றாக இருக்கும்.
 இத்தனை ஆண்டுகளில் நான் சாம்பார் வைப்பதற்கு மட்டும் வீட்டில் சொந்தமாக நானே தயாரிக்கும் சாம்பார் பொடியைத் தான் பயன்படுத்துவதை விரும்புகிறேன். ஒரு வகையில் அம்மாவின் ரெசிப்பி.. அப்படியே மனதில் இருப்பதால் இன்றும் தொடர்கின்றது.. இன்றைக்கு மீண்டும் சாம்பார் பொடி தயாரிப்பு.. அடுத்த சில மாத பயன்பாட்டிற்குத் தயார்..
செய்முறை:
1 கப் கடலைப்பருப்பு
1/4 கப் உளுந்து
1/4 கப் துவரம் பருப்பு
1 கப் மல்லி
1/2 கப் சீரகம்
2 தேக்கரண்டி வெந்தயம்
15 காய்ந்த மிளகாய்
2 சிறிய கரண்டி மஞ்சள் பொடி / உலர்ந்த மஞ்சள்


மேலுள்ள அனைத்து பொருட்களையில் அடுப்பில் ஒரு நோன்ஸ்டிக் பேன் வைத்து, அதில் எண்ணெய் விடாமல் மிதமான சூட்டில் 5-7 நிமிடம் வறுத்து ஆறவிடவும். பின்னர் மிக்ஸியில் அனைத்தையும் போட்டு அரைத்து 1 மணி நேரம் சூடு காய்ந்து வரும் வரை வைத்து விட்டு பின்னர் ஒரு மூடியுள்ள பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
2 பேருக்கான அளவில் ஒவ்வொரு முறை சாம்பார் செய்யும் போதும் 3 கரண்டி இந்த சாம்பார் பொடியை தாளித்து சேர்ப்பதற்கு கடைசி 10 நிமிடத்திற்கு முன் சாம்பாரில் போட்டு நன்கு கலந்து விட்டு கொதிக்கவிட்டு சாம்பாரை இறக்கி விடவும். மணக்கும் சுவையான சாம்பார் நிச்சயம் ..உறுதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக