வெள்ளி, 13 மார்ச், 2020

கொரானா கொஞ்சம் அசட்டையாக இருந்தாலும் மனித குலம் பூண்டோடு அழிய வாய்ப்புண்டு.

https://experience.arcgis.com/experience/685d0ace521648f8a5beeeee1b9125cd?fbclid=IwAR3DcLpgFq7P_9QAQFZ6JyyAa_Ja-SWW7bbY1cXSC3R0Jsl1Su0EX4U7UqU 

Karthikeyan Fastura : கொரானா வைரஸ் பற்றி மருந்து கண்டுபிடிக்காத வரை நாம் பயந்து தான் ஆக வேண்டும். நேற்று ஒரு முட்டாள்தனமான பதிவை படித்தேன். சார்ஸ், ப்ளேக் நோய் வந்த போதெல்லாம் இந்தளவிற்கு பீதி இல்லையாம். ஆனால் இதைவிட இழப்பு இருந்ததாம். இந்த பீதிக்கு காரணம் முகநூல், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தான் காரணமாம். முட்டாளிலும் கேடு கெட்ட முட்டாள்தனமானது
கொரோனா வைரஸ் முன்பிருந்த வைரஸை காட்டிலும் மோசமானது. அடையாளம் காணவே மூன்று வாரம் ஆகும். இப்படித்தான் வைரஸ் இருக்கும் என்று ஒரு வடிவத்தில் சொல்லமுடியவில்லை. ஒவ்வொரு முறையும் ஒரு புது வடிவம் எடுக்கிறது. அதனால் அதை ஆண்ட்டிடோட் மருந்துகளால் அவற்றை சிறை வைக்க முடியவில்லை. இருந்தபோதும் முன்பை விட வேகமாக பரவாமல் இருக்க காரணம் சமூக வலைத்தளங்கள் ஏற்படுத்திய அச்சமும், மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் ஏற்கனவே நடந்த உயிர்கொல்லிகளினால் கிடைத்த பாடமும் தான். கொஞ்சம் அசட்டையாக இருந்தாலும் மனித குலம் பூண்டோடு அழிய வாய்ப்புண்டு. 
காரணம் மருந்துகள் இல்லை. வைரஸ் பரவுவது மிக எளிதாக இருக்கிறது.
வைரஸில் மட்டும் தான் Compound Effect என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
இன்று மெதுவாக வளரும்போதே தடுத்துவிட வேண்டும்.

2,4,8,16,32,64,128,256 என்று வளரும்போது சிறிய எண்ணைக்கையாக தோன்றும். இதோ இன்று 132000ஐ தொட்டுவிட்டது. ஒவ்வொரு நாளும் 5000,6000,7000 என்று புதிய கேஸ்கள் வருகிறது. இது பத்துலட்சத்தை தொட வெகுநாட்கள் எடுத்துக்கொள்ளாது. அதற்கடுத்து கோடி. அதற்கடுத்து உலக நாடுகளின் சுகாதாரதுறை செயலிழந்து போகும். அந்த Tipping Pointஐ தொட்டுவிட்டால் அதன் பிறகு என்ன செய்தாலும் தடுக்க முடியாது. மருந்தே கண்டுபிடித்தாலும் பெரும் அழிவை நிகழ்த்திவிட்டு தான் ஓயும். அரசுகள் எடுக்கும் இந்த முன்னெச்சரிக்கை என்பது மனிதகுல அழிவை காக்க. போர்கள் நடக்காமலேயே மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தி விடும்.
ஆகவே பயந்து தான் ஆகவேண்டும். இதோ இந்த
படத்தை பாருங்கள் ஒவ்வொருநாளும் எவ்வளவு வளர்கிறது எத்தனை நாடுகளுக்கு பரவி இருக்கிறது. அங்கு எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். அப்போது தான் இதன் தீவிரம் புரியும்
லிங்க் கமெண்ட்டில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக