வியாழன், 12 மார்ச், 2020

பஞ்சாபில் இந்திக்கு மரண அடி! இனி பஞ்சாபியே பயிற்று மொழி .. இந்திக்கு இடமில்லை.. பஞ்சாம் அரசு சட்டம் .. வீடியோ


வளன்பிச்சைவளன் : · திராவிடர் இயக்க வழிகாட்டுதலில் இந்திய மாநிலங்கள்  பஞ்சாபியே இனி பயிற்று மொழி இந்திக்கு இடமில்லை  தேசியினங்களின் எழுச்சி இனி வரலாற்று கட்டாயம்
தமிழகம் இந்தி திணிப்பை எதிர்த்து இந்தி இங்கு கட்டாய பயிற்று மொழி இல்லை என அறிவித்து ஏறத்தாழ 50 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று இந்திய மாநிலங்கள் இந்தி மொழி திணிப்பினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை உணர துவங்கி உள்ளன. தங்கள் தாய் மொழி அழிவிற்கு இந்தி திணிப்பு தான் காரணம் என உணர துவங்கிய மாநிலங்கள் தங்கள் மாநிலம், தங்கள் தேசிய இனத்தின் பாரம்பரிய மொழிகளை காக்க முனைப்பு காட்டுகின்றன.
கர்நாடகம் தனது மொழியான கன்னடத்தை மீட்க பள்ளிகளில் கன்னடம் கட்டாய படமாக்கப் பட்டது அதைத் தொடர்ந்து அண்மையில் சிவசேனா ஆளும் மராட்டியத்தில் மராட்டிய மொழி கட்டாய பயிற்று மொழி ஆக்கப் பட்டது. அதன் ராஜ்தாக்கரே இனி மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து பாடுபடப் போவதாக வும் அரசியலில் மதத்தை கலந்தது தவறு என்றும் வெளிப் படையாகப் பேசினார்.

இன்று பஞ்சாபி உலக அளவில் 150 நாடுகளில் பேசப்பட்டாலும் அடுத்த 50 ஆண்டுகளில் அழியும் அபாயத்தில் இருப்பதாக ஐ. நா மன்றம் அறிவித்ததை தொடர்ந்து, பஞ்சாபி அழிய காரணம் இந்தி திணிப்பே எனக் கண்டு ஒன்று முதல் பத்து வகுப்பு வரை பள்ளிகளில், தனியார் பள்ளி உட்பட பஞ்சாபி யே பயிற்று மொழி என பிரதான எதிர் கட்சிகள் துணையோடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. நீதிமன்றம், அரசு அலுவலகங்களில் பஞ்சாபி க்கு முன்னுரிமை என அறிவித்துள்ளது.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என ஆளும் பஜக அரசு செயல்பட்டு வரும் நிலையில் இன்று தேசிய இனங்கள் விழிப்படைய துவங்கி உள்ளன, இது மற்ற தேசிய இனங்களையும் விழிப் படையச் செய்யும். இது வரலாற்று கட்டாயம். தேசிய இனங்களின் கூட்டரசு ஒன்றியம் என இந்தியா மாற்றப் படுவதற்கான சூழலை பஜக உருவாக்கி வருகிறது. உண்மையான உரிமை பெற்ற சுதந்திர தேசிய இனங்களின் கூட்டமைப்பு ஒன்றியமாக மாறு வதற்கான சிமிக்கைகள் தொடங்கிவிட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக