வியாழன், 12 மார்ச், 2020

அடுத்த பத்தாண்டுகளுக்கு நாடு ஒரு சதவீதம் கூட வளர்வதற்கான வாய்ப்புகளே இல்லை.. Karthikeyan Fastura

Karthikeyan Fastura : Banknifty 2000 புள்ளிகள் வீழ்ச்சி. Nifty 900 புள்ளிகள் வீழ்ந்து
10,000 என்ற ஐந்து இலக்கத்தை உடைத்து 9500க்கு கீழே விழுந்துள்ளது.
அம்பானியின் சொத்து மதிப்பில் இந்த மூன்று மாதத்தில் மூன்றில் ஒரு பங்கு காலி. அண்ணன் இப்போது ஆசியாவின் நம்பர் ஒன் என்ற பெயரை எல்லாம் இழந்துவிட்டார். இன்னும் கொஞ்சம் விழுந்தால் வாங்கின கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் போகும்.
அதானிக்கும் இதே நிலை தான் இன்று ஒருநாள் மட்டும் 12% வீழ்ச்சி. இந்த வருடத்தில் வீழ்ந்தது மட்டும் 31%. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு சொத்து.
எல்லா பங்குகளும் பொதுவாக விழுந்து கொண்டு தான் வருகிறது. ஆனால் எந்த நிறுவனம் நியாயமாக நடந்து கொள்கிறதோ அவை தாக்குபிடிக்கின்றன. இதுவரையான வீழ்ச்சி 15%க்குள் இருக்கிறது. எவையெல்லாம் லாபி செய்து வளர்ந்தனவோ அவையெல்லாம் 30% தாண்டி விழுந்து கொண்டு வருகிறது.
என் கவலையெல்லாம் இவனுங்க வாங்கின கடனை திருப்பி தரலேனா வங்கிகள் தான் மீண்டும் உதை வாங்கும். அதனால் தான் பேங்க்நிப்டி இவ்வளவு மோசமாக விழுந்துள்ளது. ஏற்கனவே பொதுத் துறை வங்கிகள் அனைத்தும் சல்லி சல்லியா உடைச்சு வைத்திருக்கிறது அரசு.
இந்திய பொருளாதாரம், தொழில்துறை, நிர்வாகம் அனைத்தும் மிக மோசமான காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று பார்த்தால் இப்போ தான் CAA, NRC என்று தேவையில்லாத ஆணிகளை பிடுங்கிக்கொண்டு வருகிறார்கள்.
மொத்தத்தில் ஆளும் பிஜேபி அரசு செமத்தியாக மாட்டிக்கொண்டார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வராதது ஒருவகையில் அதற்கு நல்லதே. இல்லையென்றால் இன்று அவர்கள் தான் பழியை சுமந்திருக்க வேண்டும். Just Escape.
நியாயமா பார்த்தா..இந்நேரம் டீக்கடைகாரர் இப்போதான் டிவி முன்னாடி வந்து மக்களுக்கு நம்பிக்கையும் ஆறுதலும் கொடுத்து அரசாங்கம் செய்து வரும் பொருளாதார, நிர்வாக நடவடிக்கைகள் என்னென்ன என்று கூற வேண்டும். ஆனால் அவரிடம் இருந்து இன்னும் எந்த அறிக்கையும் வரவில்லை. அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்று புரியவுமில்லை.
இனிமேல் தான் மிகப் பெரிய சமூக, பொருளாதார, நிர்வாக, சட்டம் ஒழுங்கு சிக்கல்கள் எல்லாம் பெரிதாக வர இருக்கிறது. துரிதமாக வேலை செய்யவில்லையென்றால் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த நாடு ஒரு சதவீதம் கூட வளர்வதற்கான வாய்ப்புகளே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக