சனி, 14 மார்ச், 2020

புலிகள் தமிழ் தேசிய இராணுவத்தை வேட்டையாடிய போது பயிற்சி முகாம்களில் பிடிபட்டுக் கிடந்த அப்பாவிகளையும் கருணை காட்டாது கொன்று வீசினார்கள்.

Thilipkumaar Ganeshan : இன்று நண்பரொருவரின் தந்தையைச் சந்தித்து உரையாடக் கிடைத்தது.
உரையாடலின்போது ஒரு முக்கியமான விடயத்தைப் பேசினார்.
வட கிழக்கு மாகாண சபை காலத்தில்
இந்திய இராணுவ அனுசரணையுடன் இயங்கிய தமிழ்த் தேசிய இராணுவத்தில் மட்டக்களப்பு இளைஞர்கள் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட விடயம்.
மட்டக்களப்பிலிருந்த பல முகாம்களில் கட்டாயப் பயிற்சிக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இழுத்துச் செல்லப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டனர். தப்பி ஓட நினைத்தோர் கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டதுடன் கொலையும் செய்யப்பட்டனர். இவர்களில் பலர் அப்பாவிகள்.
பின்னர்
புலிகள் தமிழ் தேசிய இராணுவத்தை வேட்டையாடிய போது பயிற்சி முகாம்களில் பிடிபட்டுக் கிடந்த அப்பாவிகளையும் கருணை காட்டாது கொன்று வீசினார்கள்.
மட்டக்களப்பின் காடுகள், கரைகள், குளங்கள் தோறும் தமிழ் இளைஞர்களின் உடலங்கள் அழுகியும், புழுத்தும் கிடந்த வரலாற்றை நினைவு கூர்ந்தார்.
மந்தைகள் போன்று பிடித்து பயிற்சி கொடுக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பவும் முடியாது, செயற்படவும் முடியாது நின்ற மட்டக்களப்பு இளைஞர்கள் புலிகளாலும் கேள்வி கணக்கின்றி கொல்லப்பட்ட கதைகள் ஏராளம்.
நண்பரின் தந்தையும் இவ்வாறு வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்லப்பட்டு அங்கிருந்து தப்பி வந்த ஒருவர்.
அவரிடம் இறுதியாக ஒரு கேள்வி கேட்டேன்.
மட்டக்களப்பில் வலுக்கட்டாயமாக துரத்திப் பிடிக்கப்பட்டு ஆயுதங்களைத் திணித்து படையினைக் கட்டி நமது இளைஞர்களைப் புலிகளிடம் பலி கொடுத்திருக்கிறார்கள் தானே?
மட்டக்களப்பில் செய்தது போல் தீவிரமாக,
வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இத்தகைய கட்டாய ஆட்சேர்ப்பினை தமிழ்த் தேசிய இராணுவதினர் செய்தார்களா?
இதே போன்ற அழிவுகள் அங்கேயும் பெருமளவு பதிவாகி உள்ளனவா?
இந்தக் கேள்விக்கு அவரிடம் பதிலில்லை.
பதிலிருக்கும் நண்பர்கள் பகிர்ந்துகொள்ளுங்கள் .

வி. சபேசன்  :  யாழ்ப்பாணத்திலும் தமிழ்த் தேசி இராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பு நடந்தது....

Thilipkumaar Ganeshan   :  விபரமாக எழுத முடியுமா? மட்டக்களப்பில் வகை தொகை இல்லாமல் கொல்லப்பட்டது போன்று அங்கும் நடந்ததா? அல்லது மன்னிப்பு வழங்கினார்களா?...

 Kalai Marx   :  யாழ்ப்பாணத்திலும் யாரையும் உயிரோடு விடவில்லை....

 Thilipkumaar Ganeshan  :   வரதன் அண்ணாவின் பின்னூட்டம் பாருங்கள். பிரதான முகாம்கள் கிழக்கில் இயங்கியதாக எழுதியுள்ளார்....

 Kalai Marx  :   தவறு. யாழ்ப்பாணத்திலும் முகாம்கள் இருந்தன. ஆனால் மட்டக்களப்பில் நேரடி மோதல் நடந்த மாதிரி யாழ்ப்பாணத்தில் நடக்கவில்லை. அது மட்டுமே வித்தியாசம். யாழ்ப்பாணத்தில் புலிகள் வந்தவுடன் சரணடைந்து விட்டனர். அதற்குப் பிறகும் அவர்களை கொன்று விட்டனர்...

 Kalai Marx  :இருப்பினும் யாழ்ப்பாணத்தை விட, மட்டக்களப்பில் கொல்லப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் தான்...

Santhirapalan Saminathar   : ஆம் கட்டாய ஆட்சேர்ப்பில் வடக்கிலும் மேற்கொண்டார்கள்.என்னை மூன்று தரம் பிடித்தார்கள்.நான் ஒருவாறு சுழித்து தப்பினேன்.புலி இதை செய்திருந்தால் தப்பி இருக்கவே முடியாது...

 Thilipkumaar Ganeshan  : r புலிகள் தாக்கி அழிக்கும் போது எத்தகைய நடைமுறையை அங்கே பின்பற்றினார்கள் என்று சொல்ல முடியுமா?...

வரதன் கிருஸ்ணா   :  கிழக்கில் நடந்தது போல வடக்கில் நடக்கவில்லை" மண்டையன் அதற்கு சாட்சி ".. வகை தொகையின்றி இளைஞர்கள் பிடித்து செல்லப்பட்டு வலுக்கட்டாயமாக பயிற்சி அளிக்கப்பட்டது கிழக்கில்தான் அதிகம் அதற்கு பொறுப்பாக இருந்தவர் மண்டையன் என்று அழைக்கப்பட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள்தான் வடக்கில் பிடித்து செல்லப்பட்டவர்கள் குறிப்பிட்ட கொஞ்சப்பேர் மட்டும்தான், பிரதான பயிற்சி முகாம்கள் அனைத்தும் கிழக்கில்தான் இருந்தன..
Kalai Marx  : ஆம். யாழ்ப்பாணத்திலும் இதே கதை நடந்தது....

Arun Ambalavanar  :வடக்கிலும் நடந்தது. கிழக்கில் அதிகமாக நடந்திருக்கவேண்டும்... Thee Pan புலிகளும் ஏனைய இயக்கங்களும் கிழக்கை பகடைக்காயட்டம்தான் பயன்படுத்தி இருக்கிறார்களே...

 Hemachandra Kumarasamy Iyer  :திருகோணமலையிலும் இது நடந்தது.. வசதி உள்ளவர்களின் பிள்ளைகள் சிபார்ஸ்னால் தப்பி விட்டார்கள். TNA Tamil National Army.. இவர்கள் ஈபிடிபி,ஈண்டில்ப்,டெலோ, புலட் என்ற இயக்கத்தினரால் எமது சிறுவர்கள் இந்திய இராணுவத்தின் உதவியுடன் பிடிக்க பட்டார்கள்.. ஒப்பந்தம் முடிவடைந்து செல்வாக்குள்ளவர்கள், புலிக்கு பயந்து கப்பலில் போய்விடடார்கள்.. மற்றைய அனைவரையும் புலி வேட்டையாடி கொண்டு குவித்தது..
 எமது இளஞைர்கள்
1.இலங்கை இராணுவம்
2.இந்திய இராணுவம்
 3.புலி இயக்கம்
4.புலி இல்லாத அணைந்து இயக்கங்களினாலும் கொண்டு குவிக்க பட்டனர்கள்..
இது இன விடுதலை போராட்டமா?? அல்லது.. இன அழிப்பு போராட்டாமா?? கடைசி யுத்தத்திற்கு முன்னர் எங்களது குழந்தைகளை( 18 வயதுக்கு உட்பட்டவர்கள்) அழித்தது இந்த இயக்கங்கள் தான்..
இப்போது இதை ஆயுதம் இல்லாமல் TNA தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்கின்றது.. எமது இனத்தை தூர நோக்கு சிந்தனை இல்லாமல், சுயநலத்திற்காக பலிகொடுக்கின்றது.. TNA எம்பி மார்களில் பெருன்பான்மையோரின் குடும்பங்கள் கடலுக்கு அப்பால்தான் வசதியாக வாழுகின்றனர்கள்....

 Vijayaretthna Edwin  : வன்னியில் நடை பெற்றது. நானும் நண்பனும் பிடிபட்டு தப்பியது, சுவாரஸ்யமான விடயமொன்றும் உண்டு...

Jeevan Prasad  :  பெண்களின் தலைமுடியை பொப் கட்டி வெட்டி அடிமைப்படுத்திய கொடுமைகளை யாரும் பகிரங்கமாக பேசுவதே இல்லை. ஒன்று அவர்களை அடையாளம் காண. இரண்டாவது ஓடினால் இராணுவத்திடம் பிடிபட!...

Vijayaretthna Edwin  : இந்திய இராணுவ கால TNA க்கு சேர்க்கப்பட்ட பயலுகளுக்கு முதல் வேல மொட்ட போடுவதுதான்...

 Kulanthaivel Navaneethan   : ஆம். எனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது. இதை முன்னரும் பல தடவைகள் எழுதியுள்ளேன். எங்கள் வீட்டுக்கு அருகில்த்தான் பிரதான பயிற்சிமுகாம் ஒன்று இருந்தது. கட்டாயமாக பயிற்சியளிக்கப்பட்ட பலர் பின்னர் புலிகளால் வேட்டையாடப்பட்டனர். சரண்டைந்தவர்கள் கூட பின்னர் சுடப்பட்டனர். புன்னைச்சோலையில்த்தான் மிகப்பெரும் கொலைக்களம் அரங்கேறியது....

Thilipkumaar Ganeshan : களுவன்கேணி இராணுவ முகாம் இருக்கும் அதே இடத்தில் ஒரு பெரிய பயிற்சி முகாம் அமைக்கப்பட்டிருந்ததாக சொன்னார்....

 Kulanthaivel Navaneethan :  தேவபுரம் அரிசி ஆலையில் பிரதான பயிற்சி முகாம் இருந்தது. அதற்கான சூட்டுப்பயிற்சிக்களம் எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தது. அப்போது எங்கள் பகுதியில் குடியிருப்புக்கள் குறைவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக