சனி, 8 டிசம்பர், 2018

ஜெயலலிதாவுக்கு 16 ஆண்டு ஸ்டீராய்டு! -உயிர் குடித்த ஊக்க மருந்து!

judgearumugasamyநக்கீரன் :ஜெயலலிதாவின்  மருத்துவராக பணியாற்றிய டாக்டர் சிவகுமார்,
ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனில் தெரி வித்த தகவல்கள், ஜெ.வின் மரண மர்மம் குறித்த சந்தே கங்கள் சொந்தக் கட்சியினரிடமே அதிகரித்துள்ளன. சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனத்திற்கு மூன்று வாரிசுகள். டாக்டர் வெங்கடேஷ், அனுராதா, பிரபா ஆகிய சுந்தரவதனத்தின் வாரிசுகளில் பிரபாவை திருமணம் செய்தவர்தான் டாக்டர் சிவகுமார்.
அவர் கடந்த வாரம் தொலைக்காட்சியில் பேசினார். ""என் னோட திருமணம் 1991-ல் நடந்தது. எங்கள் குடும்பத் தில் அவர்கள் தலைமையில் நடந்த முதல் திருமணம் எனக்கும் பிரபாவுக்கும் நடந்த திருமணம்தான். ஜெ. மதுரையில் தங்கியிருந்தபோது ஜெ.வுக்கு கையில் சின்ன காயம் ஏற்பட்டது. நான் போய் பார்த்து ட்ரீட்மெண்ட் கொடுத்தவுடன் அந்த காயம் ஆறிவிட்டது. 2000ஆம் ஆண்டு முதல் அவர் மறைந்த 2016 வரை நான்தான் ஜெ.வின் டாக்டர்'' என்கிறார் டாக்டர் சிவகுமார். ஜெயலலிதா ஏதாவது புரொசிஜரில் இருந்தாங்கன்னா அவங்க கையை நான் பிடிச்சுக்குவேன். என் கையின் ஸ்பரிசம் அவங்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும். கடைசியில போயஸ் கார்டனிலிருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு போகும் வரை என் கையை இறுக்க பிடிச்சிக்கிட்டிருந்தாங்க. அவங்களுக்கு சுயநினைவு வரும் வரை என் கையை விடவில்லை'' என்கிறார்.

நேர்மையான அதிகாரி சுபோத்குமார் சிங்- கை திட்டமிட்டு ஏமாற்றி படுகொலை செய்த ஆர்எஸ்எஸ் கும்பல் – அதிர்ச்சி தகவல்


தீக்கதிர்.com : உத்திரபிரதேச மாநிலத்தில் மதவெறி கும்பல்களின் சூழ்ச்சிகளுக்கு எதிரான நேர்மையாக நடவடிக்கை எடுத்து வந்த காவல்துறை அதிகாரி சுபோத்குமார் சிங்கை ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் கும்பல் திட்டமிட்டு படுகொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
உத்தரப் பிரதேசம் தாத்ரியை அடுத்துள்ள பிசோதா கிராமத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி இரவு பசுவை பலி கொடுத்து அதன் இறைச்சியை முகமது இக்லாக் (58) குடும்பத்தினர் சாப்பிட்டதாக கூறி ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தள் கும்பல் முதலில் வதந்தியை பரப்பியது. அதனை தொடர்ந்து 200 பேர் கொண்ட கும்பல் இக்லாக் வீட்டுக்குள் புகுந்து அவரை அடித்தே கொன்றது. இந்த வழக்கை விசாரித்து வந்த காவல்துறை அதிகாரி சுபோத் குமார் சிங் அங்கிருந்த இறைச்சியை பரிசோதனைக்கு அனுப்பினார்.
அதில் இக்லாக் வைத்திருந்தது ஆட்டு கறி என்றும், பஜ்ரங்தள் கும்பல் திட்டமிட்டு ஒரு ராணுவவீரரின் தந்தை முகமதுஇக்லாக்கை படுகொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. இந்த விவகாரம் வெளிஉலகிற்கு தெரிய வந்தவுடன் சுபோத் குமார் சிங்கை யோகி அதித்யாநாத் அரசு இடமாற்றம் செய்தது. இந்நிலையில் புல்சந்தார் பகுதியில் சுபோத்குமார் சிங் பணியாற்றி வந்தார்.

ஆ.ராசாவுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது எந்த தலித்கட்சியும் , முற்போக்கும் குரல் எழுப்பவில்லையே?

LR Jagadheesan : நம் சமகால அரசியலில் ஒட்டுமொத்த இந்திய நிறுவனங்களும்
ஒரு தலித் ஆளுமையை ஒருசேர வேட்டையாடியது 2-ஜி விவகாரத்தில் ஆண்டிமுத்து ராசாவுக்கு நடந்தது. ஒருநாளல்ல, இருநாட்களல்ல; ஆண்டுக்கணக்கில் நீடித்த அநியாயம்.
இந்திய அரசு, அதன் அதிகாரிகள்; இந்திய அரசியல் கட்சிகள் அவற்றின் தலைவர்கள், இந்திய நீதித்துறை எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய ஊடகத்துறை இந்த நான்கும் ஒன்றோடொன்று போட்டிக்கொண்டு அரங்கேற்றிய ஒப்புவமை இல்லாத குரூரமான பொதுவாழ்வின் வேட்டை அது. இந்திய அரசியலில் இதற்குமுன்பு இப்படி ஒரு ஜாதிய உள்நோக்கம் கொண்ட அரசியல் தாக்குதல் பொதுவெளியில் யார் மீதும் நடந்ததே இல்லை.
அப்போது திமுக தலைவர் கலைஞரும் திக தலைவர் வீரமணியும் சுபவீ, திருச்சி செல்வேந்திரன் போன்றவர்களும் தான் ஆ ராசா பக்கம் உறுதியாக நின்றார்கள். பகிரங்கமாக ஆ ராசா தரப்பு வக்கீல்களாய் வாதாடினார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி சில சமயம் ஆதரித்தது. பலசமயம் எதிர்த்தது. குறிப்பாக தேர்தல் மேடைகளில். மற்ற எந்த தலித் கட்சியும் அல்லது அறிவுசீவியும் ஆ ராசாவுக்கு ஆதரவாக பொதுவெளியில் களமாடவில்லை.
ஆனால் இன்று பூவை ஜகன்மூர்த்தியார்; செ கு தமிழரசனார் போன்ற தலித் மீட்பர்களுக்காகவும் ஸ்டெர்லைட் போராட்ட விவகாரத்தில் ரஜினிகாந்த்தை தடுத்தாட்கொண்ட பா ரஞ்சித் என்கிற தலித் புரட்சியாளருக்காகவும் பகிரங்கமாக குரல் எழுப்ப மட்டும் அக்ரஹார அறிவுலகமும் அம்பேட்காரிய அறிவுலகமும் ஒன்றாய் சேர்ந்து களம் இறங்குகிறார்கள் என்றால் இதை எப்படி புரிந்துகொள்வது?

காடுவெட்டி குரு குடும்பம் ஊருக்குள் நுழையவே முடியவில்லை பாதுகாப்பு கோரும் தலைவர்கள்!

குரு குடும்பத்துக்குப் பாதுகாப்பு: வலியுறுத்தும் வன்னியர் தலைவர்கள்!மின்னம்பலம் :பாமகவின் மூத்த தலைவரும் வன்னியர் சங்கத் தலைவருமான மறைந்த காடுவெட்டி குருவின் குடும்பத்தினருக்கு மத்திய மாநில அரசுகள் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று வன்னியர் சங்கப் பிரமுகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அண்மையில் குருவின் மகள் தன் அத்தை மகன் மனோஜை திருமணம் செய்துகொண்டார். இதற்கு பாமகவினர் கடுமையான இடையூறு செய்வதாகவும் குருவின் குடும்பத்த்தினரை காடுவெட்டி கிராமத்துக்குள்ளே விடமறுக்கிறார்கள் என்றும் புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் நடந்த ஐடி விங் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,
குரு குடும்ப சர்ச்சையை பாஜக கையிலெடுக்க முயற்சி செய்கிறது’ என்று கூறியதாக மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தப் பின்னணியில் டிசம்பர் 7ஆம் தேதியன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வன்னியர் சங்க பிரமுகர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய படையாச்சியார் பேரவையின் தலைவரும், பாஜக ஓபிசி அணியின் மாநிலத் துணைத் தலைவருமான பெரோஸ் காந்தி, “காடுவெட்டி குருவின் மகளுடைய திருமணத்தை லட்சக்கணக்கானவர்கள் கூடி பாமகவும், வன்னியர் சங்கமும் முன்னின்று விழாவாக நடத்தியிருக்க வேண்டும். அவர் தனக்கு விருப்பமான திருமணம் செய்துகொண்டுவிட்டார் என்றால் கூட, வரவேற்பு நிகழ்ச்சியையாவது பிரம்மாண்டமாக பாமகவினர் நடத்திக் காட்டியிருக்க வேண்டும்.

திமுகவை நோக்கி செந்தில் பாலாஜி? தினகரன் அணி ..?

மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: திமுகவை நோக்கி செந்தில் பாலாஜி? தினகரன் அணியை வளைக்கும் ஸ்டாலின்”திருச்சியில் உள்ள மிகப் பிரபலமான ஹோட்டலுக்குக் கடந்த வாரத்தில் திமுக எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் வந்திருக்கிறார். அந்த ஹோட்டலில் ரூம் ஒன்றில் தங்கியும் இருக்கிறார். அவர் வந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான செந்தில் பாலாஜியும் அதே ஹோட்டலுக்கு வந்திருக்கிறார். ரெஸ்டாரண்டில் உட்கார்ந்து காபி குடித்தவர், யாரிடமோ நீண்ட நேரம் போனிலும் பேசியிருக்கிறார். அதன் பிறகு அன்பில் மகேஷ் தங்கியிருந்த அறைக்குப் போயிருக்கிறார். மூன்று மணிநேரத்துக்கும் மேலாக இருவரும் பேசியிருக்கிறார்கள். அதன் பிறகு செந்தில் பாலாஜி அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு கரூரில் தினகரன் அணி சார்பாக நடந்த ஜெயலலிதா நினைவு நாள் கூட்டத்தில் செந்தில் பாலாஜி பங்கேற்கவில்லை. சென்னையில் நடந்த ஜெயலலிதா நினைவு நாள் ஊர்வலத்துக்கும் வரவில்லை. வழக்கமாக, நவம்பர் இறுதி வாரத்தில் கரூரில் உள்ள ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸில் காலண்டருக்கு ஆர்டர் கொடுப்பார் செந்தில் பாலாஜி. இந்தமுறை ஆர்டர் கேட்டுப் போன பிரஸ் உரிமையாளரிடம், ‘இப்போ காலண்டர் வேண்டாம். நான் அப்புறம் சொல்றேன்’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். ஜெயலலிதா நினைவு நாளில், நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையிலும் செந்தில் பாலாஜியின் விளம்பரம் இல்லை. இப்படியாக அவரது செயல்பாடுகள் எல்லாமே கடந்த இரண்டு வாரங்களாகப் புதிராகவே இருக்கிறது.

36 பேரை அந்த ஆலை நிர்வாகம் கொன்றது... அவர் லண்டனில் மோடியை சந்தித்தார்...” - முகிலன்


nakkheeran.in - felix": சமூக செயற்பாட்டாளரும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான முகிலன் தொடர்ந்து சுற்றுசூழல் தொடர்பான பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருபவர். கூடங்குளம் அணு உலை, மேகதாது பிரச்சனை, நெடுவாசல், ஸ்டெர்லைட் ஆலை என பல பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தவர். கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தி 377 நாட்கள் சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது நியாயமற்றது, அந்நிறுவனத்திற்கு உரிய நேரம் வழங்கியிருக்க வேண்டுமென தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது. அது தொடர்பாக முகிலனிடம் பேசினோம் அதற்கு அவர் அளித்த பதில்கள்

முகேஷ் அம்பானி மகள் திருமணம் - ராஜஸ்தானில் குவிந்த பிரபலங்கள்

முகேஷ் அம்பானி மகள் திருமணம் - ராஜஸ்தானில் குவிந்த பிரபலங்கள்மாலைமலர் : பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகள் திருமண விழாவில் பங்கேற்க பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், பல்வேறு மாநில முதல் மந்திரிகள் உள்பட பலர் ராஜஸ்தானில் குவிந்துள்ளனர்.
ஜெய்ப்பூர்: இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி- நிதா அம்பானியின் மகளான இசா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பைரமாலுக்கும் வரும் 12ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இதையொட்டி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று முதல் வரும் 10-ம் தேதி வரை அன்ன சேவை என்ற பெயரில், உணவு விருந்து நடைபெகிறது. தினமும் மூன்று வேளை தலா 5 ஆயிரத்து 100 பேருக்கு விருந்து வழங்கப்படுகிறது. அவ்வப்போது அம்பானி குடும்பத்தினரும் உணவு பரிமாறி வருகின்றனர். இந்நிலையில், முகேஷ் அம்பானி மகளின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல் மந்திரிகள், அரசியல்வாதிகள் என முக்கிய விருந்தினர்கள் ராஜஸ்தானில் குவிந்துள்ளனர்.
மேலும், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனும் இந்த விழாவில் பங்கேற்க இன்று வருகை தந்துள்ளார்.
பாலிவுட் நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன், அவரது மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சன், வித்யா பாலன், சித்தார்த் ராய், ஜான் ஆபிரகாம், பிரியா ருன்சால், பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் உள்ளிட்ட பல்வேரு பிரபலங்களும் வருகை தந்துள்ளனர்.

திருமாவளவன் : பிற ஜாதி பெண்களை கட்டி அணைப்போம் கோஷமிட்ட இளைஞன் சிறுத்தைகள் அல்ல ? விடியோ


tamil.thehindu.com : அம்பேத்கர் நினைவு நாளில் மாற்று சமூகப் பெண்களைக் காதலிப்போம், கட்டிப்பிடிப்போம் என கோஷமிட்டவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல, தேர்தல் நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் மீது அபாண்டத்தை எச்.ராஜா புகுத்துகிறார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் நினைவு நாளில் அவரது படத்துக்கு மாலையிட்டு மாற்று சமூகப் பெண்களைக் காதலிப்போம், கட்டிப்பிடிப்போம், திருமணம் செய்வோம் என கொள்கை முழக்கம்போல் இளைஞர் ஒருவர் கோஷமிட்ட காணொலி வாட்ஸ் அப் வலைதளங்களில் பரவலானது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சரக்கு, மிடுக்கு பேச்சுதான் காரணம் என ராஜா ட்விட்டரில் கண்டித்திருந்தார். பலரும் இதைக் கண்டித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சிதான் காரணம் என முடிவு செய்து வேலூர் குடியாத்தத்தில் புகார் அளிக்கப்பட்டு சி.எஸ்.ஆர் பெறப்பட்டது.

"திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கு என்ன செய்தது?'

இயக்குநர் தோழர் பா.ரஞ்சித் அவர்களின் பார்வைக்கு...
"திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கு என்ன செய்தது?'
எங்கள் பெருமதிப்பிற்குறிய கவிஞர் அய்யா..
" கலிபூங்குன்றன் அவர்களின் பதில் "
முற்போக்குக் கொள்கை உடைய திரைப்பட இயக்குநர் தோழர் பா.ரஞ்சித் அவர்களின் பேட்டி ஒன்று தி எக்னாமிக் டைம்ஸ் ஏட்டில் (2018 நவம்பர்: 25 டிசம்பர்:1) வெளிவந்துள்ளது.
ஜாதி அமைப்பு முறையின் அடிவேர் வரை சென்று அலசி எடுத்திருக்கிறார். அதன் பார்ப்பன மூலத்தையும் அடையாளம் கண்டு தோலுரித்துத் தொங்க விடுகிறார். அன்றாட வாழ்க்கையில் ஜாதியின் தாக்கங்களைத் தங்குத் தடையின்றி விமர்சனக் கோடாரியால் பிளந்து தள்ளியுள்ளார்.
நாட்டில் நடைபெறும் ஜாதிய வாதம் - தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வன்முறைகள் பற்றி எல்லாம் பொறுப்புணர்ச்சியுடனும், வேதனைக் குமுறலுடனும் விளாசித் தள்ளி யுள்ளார். பாராட்டுகள்.

யார் இந்த தன்ராஜ் மாஸ்டர்?. இளையராஜாவின் ஆசிரியர்..

Fan of music இசையின் ரசிகன்;
இளை­ய­ராஜா பற்றி எழு­தும் போது நிச்­ச­ய­மாக தன்­ராஜ் மாஸ்­ட­ரைப் பற்றி குறிப்­பிட்டே ஆக­வேண்­டும்.
மைசூர் மகா­ரா­ஜா­வின் இசைக்­கு­ழு­வில் வாசித்து வந்­த­வர்­தான் இந்த தன்­ராஜ். இந்த இசைக்­கு­ழுவை வழிநடத்­தி­ய­வர் ஒரு ஜெர்­மா­னி­யர். அவர் தொடர்­பி­னால் மேற்­கத்­திய கிளா­சி­க்கல் இசை­யில் ஞானம் பெற்­றார் தன்­ராஜ். இரண்­டாம் உல­கப்­போர் வெடித்த போது இந்­தி­யா­வில் இருந்து வெளி­யே­றி­னார் அந்த ஜெர்­மா­னி­யர். (பெயர் தெரி­ய­வில்லை – யாருக்­கா­வது தெரிந்­தால் தெரி­யப்­ப­டுத்­த­வும்)
சில ஆண்­டு­கள் வேலை­யில்­லா­மல் தவித்த தன்­ராஜுக்கு ஜெமினி வாசன் ஆத­ர­வ­ளித்­தி­ருக்­கி­றார். சந்­தி­ர­லே­கா­வின் இசை­ய­மைப்­பி­லும் இவ­ருக்கு பங்கு இருந்­தி­ருக்­கி­றது. ஆனால் டைட்­டி­லில் இவர் பெயர் இடம்­பெ­ற­வில்லை. ஜெமினி வாசன் எழு­திய ஒரு தொகுப்­பில் இதை வெளி­யிட்­டி­ரு­க்கி­றார்.
சென்னை மயி­லாப்­பூர் பகு­தி­யில் லஸ் கார்­ன­ரில் உள்­ளது அந்த சாய் லாட்ஜ். அறை எண் 13-ல் இருந்து வாத்­திய இசை எப்­போ­தும் கேட்­டுக் கொண்­டி­ருக்­கும். கிடார் இசை­யும், டிரம்­சு­க­ளின் ஒலி­யும், பியா­னோ­வின் மெல்­லி­சை­யும் வந்­த­படி இருக்­கும்.
அன்­றைய கால­கட்­டத்­தில், திரை இசை வாத்­தி­யக் கலை­ஞர்­கள் பலர் சாய் லாட்­ஜின் படிக்­கட்­டு­களை ஏறி­ய­வர்­கள்­தான். அந்­தப் படிக்­கட்­டு­கள்­தான் அவர்­க­ளது இசை அறி­வின் ஆரோ­க­ண­மாக விளங்­கி­யது. அதற்கு உத்தர­வா­தம் தந்­த­வர் அந்த அறை­யின் நடு­நா­ய­க­மாக விளங்­கிய தன்­ராஜ் மாஸ்­டர்.

விவசாயிகளை அழிக்கத் துடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி!; எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டத்தில் கண்டனம்!!

sa
/nakkheeran.in - elayaraja": சேலம்
சென்னை இடையே எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை விளை நிலங்களின் ஊடாக அமைப்பதற்கு விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்திட்டம் அமைய உள்ள சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தொடர்ந்து எதிர்ப்பு நிலவுகிறது.
பத்தாயிரம் கோடி ரூபாயில் அமைய உள்ள எட்டுவழிச்சாலைத் திட்டத்தால் விவசாயமும், இயற்கை வளமும் பாதிக்கப்படும் என்பதால் உடனடியாக இத்திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி விவசாயிகள், பாமக மற்றும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இத்திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், பசுமைத் தீர்ப்பாயத்தின் அறிக்கை வரும் வரைக்கும் திட்டம் தொடர்பான யாதொரு பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது; நிலத்தில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தக்கூடாது என்றும் கறாராக உத்தரவிட்டிருந்தது.

NDTV 3 மாநிலங்களில் ஆட்சியை இழக்கும் பாஜக.. பிந்தய கருத்து கணிப்பு

tbp1kai4சட்டசபை தேர்தல்கள் 2018: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
New Delhi: 5 மாநில  தேர்தல் முடிந்துள்ள நிலையில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை இழக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் முதல் இன்று வரை  மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்  நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன. இந்த  நிலையில்,  5 மாநிலங்களில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை இழக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதுமத்தியில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. மிசோரத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என்றும், தெலங்கானாவில் ஆளும் சந்திர சேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலந்த்ஷெஹரில் ஆய்வாளரை சுட்டது ( RSS ) ராணுவ வீரர் - கைது செய்ய ஜம்மு விரைந்தது உ.பி போலீஸ் படை

கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங்
 tamil.thehindu.com :ஆர்.ஷபிமுன்னா புலந்த்ஷெரில் கலவரத்தில் ஆய்வாளர் சுபோத் குமார் சிங்கை சுட்டது ஒரு ராணுவ வீரர் எனத் தெரியவந்துள்ளது. இவரை விசாரிக்க உ.பி போலீஸாரின் சிறப்பு படை இன்று ஜம்மு விரைந்துள்ளது.
பசுவதையை காரணமாக வைத்து உ.பி.யின் புலந்த்ஷெஹரின் மஹாவ் கிராமத்தில் திங்கள்கிழமை கலவரம் நடைபெற்றது. இந்துத்துவா அமைப்புகளால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கலவரத்தில் சயானா காவல் நிலைய ஆய்வாளர் சுபோத்(47) மற்றும் கல்லூரி மாணவர் சுனித் குமார்(20) ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரத்தில் முந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவாகி உள்ளது. இத்துடன் இருவர் கொல்லப்பட்ட வழக்கிலும் சேர்த்து முதல் குற்றவாளியாக பஜ்ரங் தளத்தின் மாவட்ட அமைப்பாளர் யோகேஷ் ராஜ் பெயர் உள்ளது.

பொன் மாணிக்கவேலின் கோரிக்கைக்கு நீதி மன்றம் மறுப்பு .. அறநிலைய துறை விசாரணைக்கு தடை கிடையாது

பொன்மாணிக்கவேல் கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!மின்னம்பலம் :மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான புகார் குறித்த இந்து சமய அறநிலையத் துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற பொன்மாணிக்கவேல் கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு நேற்று (டிசம்பர் 7) விசாரணைக்கு வந்தன. அப்போது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாற்றப்பட்டது குறித்து அறநிலையத் துறை விசாரணைக் குழுவால் தங்கள் விசாரணைக்கு இடையூறு ஏற்படுவதாகவும், இந்து சமய அறநிலையத் துறை குழு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.

துரைமுருகன் -ஆ.ராசா: சாதிச் சிமிழுக்குள் அடைப்பதா?

துரைமுருகன் -ஆ.ராசா: சாதிச் சிமிழுக்குள் அடைப்பதா?மின்னம்பலம் :திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் 8-ஆரா வேலூர் மாவட்ட திமுகவின் கடை நிலை நிர்வாகிகள் இடையே பேசும்போது நாம் ஏற்கனவே குறிப்பிட்டது மாதிரி அவர்கள் துரைமுருகன் ஆதரவு நிலையிலும் தலைமை எதிர்ப்பு நிலையிலும் இருப்பது தெரிகிறது.
கலைஞர் தலைவராக இருக்கும்போது திமுகவைத் தாக்கி ராமதாஸ் அறிக்கை விட்டால், பெரும்பாலும் பதில் அறிக்கையை அதே வன்னியர் இனத்தைச் சேர்ந்த வீரபாண்டி ஆறுமுகத்திடம் இருந்து வெளியிட வைப்பார். அதே சாதி என்பது மட்டும் காரணம் அல்ல.... உமக்கு பதில் அளிக்க எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அளவிலான நபரே போதுமானவர் என்பதைக் காட்டுவதற்கான ஒரு சமிக்ஞைதான்.
இதுபற்றிக் குறிப்பிட்டு வேலூரின் சில திமுக நிர்வாகிகள் நம்மிடம் மனம் திறந்தனர். இவர்கள் துரைமுருகனின் தீவிர ஆதரவாளர்கள் என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

வீட்டுக்குள் புகுந்த வனிதா.. மீண்டும் வெளியேற்றிய போலீஸார்

போலீசார் குவிப்பு நண்பர்கள் tamil.oneindia.com - hemavandhana.: சென்னை: ஆலப்பாக்கம் வீட்டுக்குள் நுழைந்த நடிகை வனிதாவை போலீசார் வெளியேற்றினார்கள்.
ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த வீடு சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு விடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் போன செப்டம்பர் மாதம் விஜயகுமாரின் மகள் வனிதா ஷூட்டிங் நடத்த வேண்டும் என்று சொல்லி இந்த வீட்டை வாடகைக்கு எடுத்தார். ஷூட்டிங்கும் எடுத்து முடிந்துவிட்டது. ஆனால் வீட்டை அவர் காலி செய்யவில்லை.

வனிதா வீட்டிற்குள் போலீஸ் பாதுகாப்புடன் வந்தார் .. மனமுடைந்த விஜயகுமார்

விஜயகுமார்வனிதாvikatan.com - ஆ.சாந்தி கணேஷ் ``சட்டப்படி என்ன செய்யணுமோ, அதை செஞ்சுக்கிட்டிருக்கேன். இதுக்கு மேலே பேட்டி கொடுக்கவும் விருப்பமில்லை ''
சில மாதங்களுக்கு முன்னால், சென்னை ஆலப்பாக்கத்தில் இருக்கிற தன்னுடைய வீட்டில், ஷூட்டிங் நடத்துவதற்காக வந்த மகள் வனிதா, அதன் பிறகு அந்த வீட்டை விட்டு வெளியேற மறுக்கிறார் என்று காவல்துறையில் புகார் அளித்திருந்தார் நடிகர் விஜயகுமார். இதைத் தொடர்ந்து, வனிதாவையும் அவருடைய நண்பர்களையும் காவல்துறையினர் அந்த வீட்டை விட்டு வெளியேற்றினார்கள்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னால், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று, வனிதா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வனிதாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், நேற்று மறுபடியும், வனிதா ஆலப்பாக்கத்தில் இருக்கிற வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். இது தொடர்பாக நடிகர் விஜயகுமாரிடம் கருத்து கேட்டோம்.

Exit poll predictions. Average .. காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் ஆட்சி அமைக்கும்....பிந்தைய கருத்துகணிப்பின் சராசரி

Swathi K : அனைத்து ஊடங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பின்
சராசரி (Average of all Exit poll predictions)
**பிஜேபி மாபெரும் வீழ்ச்சி.. காங்கிரஸ் மாபெரும் வளர்ச்சி..
**பிஜேபி ஆட்சி நடக்கும் மூன்று மாநிலங்களிலும் தோல்வியை தழுவும்.. அந்த மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்.. ராஜஸ்தானில் மாபெரும் வெற்றி.. மத்திய பிரதேசம் & சட்டிஸ்கரில் குறைந்த தொகுதி வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி.
**தெலுங்கானாவில் TRS எளிதில் ஆட்சி அமைக்கும். மிசோரம் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது.. ஆனால் MNF (Mizo National Front) கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும்..
**ராஜஸ்தான்: காங்கிரஸ் 115, பிஜேபி 75, மற்றவர்கள் 9
**மத்திய பிரதேசம்: காங்கிரஸ் 112, பிஜேபி 107, மற்றவர்கள் 11
**சட்டிஸ்கர்: காங்கிரஸ் 43, பிஜேபி 40, மற்றவர்கள் 7
**தெலுங்கானா: TRS 65, காங்கிரஸ் 40, மற்றவர்கள் 14
**மிசோரம்: காங்கிரஸ் 16, Mizo National Front 18, மற்றவர்கள் 6
என்னோட கணிப்பு (Based on Today's exit poll results)👇🏻👇🏻👇🏻
** Exit poll கணிப்புகளை விட கண்டிப்பாக காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது..
** காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் எளிதில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.. ராஜஸ்தானில் மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி.. மற்ற இரண்டு மாநிலங்களில் 5-10 சீட் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி.. ஒருவேளை தேவைப்பட்டால் மாயாவதி ஆதரவு கிடைக்கும்.. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டிஸ்கர் மூன்றிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது..
** தெலுங்கானாவில் TRS ஆட்சி..

வெள்ளி, 7 டிசம்பர், 2018

ஜெயலலிதா மரண விசாரணை ...சசிகலாவை நேரில் விசாரிக்க சிறை அதிகாரிக்கு கடிதம்!

கதிரவன் நக்கீரன் : ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எழுந்ததை
அடுத்து தமிழக அரசால் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையம் இதுவரை 130க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி வருகிறது.
ஜெயலலிதாவுக்கு சிகிசை அளித்த டெல்லி எய்ம்ஸ், சென்னை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவெடுத்தது.

நிதின் கட்காரி மேடையில் மயங்கி விழுந்தார் .. விடியோ ..தற்போது நிலைமை சீராக உள்ளது?


Union Minister of Road Transport and Highways Nitin Gadkari fainted during a function in Maharashtra’s Ahmednagar on Friday. The 61-year-old, who suffers from diabetes, later took to Twitter to assure people that he is fine. The incident took place when he was standing with other dignitaries for the National Anthem during the convocation function of the Mahatma Phule Krishi Vidyapeeth (MPKV) Agricultural University in Ahmednagar. A video doing the rounds on Twitter shows Gadkari feeling uneasy, losing his balance and then collapsing on the dais. Maharashtra Governor C Vidyasagar Rao, who was standing next to him, and some others rushed to his side to prevent him from falling.
thenewsminute.com/

திராவிடத்தில் இரை எடுத்து , இந்துத்துவாவிற்கு முட்டை போடுகிற கள்ளக் கோழிகள்.

சாந்தி நாராயணன் : மஹாபாரதப் புனைவில் சல்லியன் என்றோர் பாத்திரம்
உண்டு.
பாண்டவர்களின் உறவினன். நகுலன் சகாதேவனுக்கு மாமன் முறையானவன்.
போர்க்காலத்தில் பாண்டவர்கள் பக்கம் இயல்பாகப் பொருந்தி வருகிறவன். பாண்டவர்களின் கூட சேர்ந்திருக்கிற ரத்தம்.
போர்காலத்து ஆயத்தங்களின் போது ஏற்பட்ட 'கம்ம்யூனிகேசன் கேப்'பினால் துரியோதனன். பக்கம் சேர்ந்துகொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டவன்.
போர் தொடர்ந்த நேரம், சல்லியன் தனது நண்பனாய் வருகிறான் என்று எண்ணி பெரும் வரவேற்பை துரியோதனன் கொடுக்க,
அதை ஏற்றுக்கொண்டு வேறு வழியின்றி கவுரவர்கள் பக்கம் நின்று கொண்டவன்.
சல்லியன் நின்றது தான் கவுரவர்கள் பக்கம். பின்னாளில் கிருஷ்ணன் கைப்பாவையாக சரியாக வேலை செய்தான்.
கெடுவாய்ப்பாக கர்ணனுக்கு தேரோட்டுகிற வேலை வந்தது சல்லியனுக்கு. சூத்திரன் கர்ணனுக்கு அரச பரம்பரை நான் தேரோட்டுவதா என்ற புழுக்கம் வேறு.
கூட இருந்தே குழி பறித்தான்,
களத்திலே தன்பக்கம் இருக்கிற கர்ணனை இகழ்ந்தும், அவன் எதிரியான அர்ஜுனனை புகழ்ந்தும் ஓயாமல் இரண்டகம் செய்தான்.
மிகச் சரியான நேரத்தில், சல்லியன் களத்திலே கர்ணனனை தனியே விட்டு பாதியிலே ஓடிப்போனான்.
கர்ணனுக்கு மனத்தளர்வை ஏற்படுத்துவது அவன் இலக்கு. அது கிருஷ்னன் சொல்லித்தந்த சூது. கர்ணன் களத்திலே சாய்ந்ததில் சல்லியன் பங்கு பெரும்பங்கு. இது பாரதம் சொன்னது.
அந்தப் புனைவைப் போலே இன்றைக்கும் சல்லியர்கள் உண்டு.
திராவிடர்கள் பக்கத்தில் இருப்பார்கள் சிலர் .
திராவிடர்கள் தங்களுக்கு தருகிற வரவேற்பில் திராவிடத்தோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்வார்கள்.
முக்கிய நேரங்களில் , அடுத்த கட்டம் நகர்கிற தருணங்களில் தங்கள் சூது வேலைகளை செய்வார்கள்.

வைகோ-திருமா ஒரே அணியில் நீடிப்பார்களா? தேர்தல் செலவுக்காக வைகோவிடம் இருந்து நாங்கள் பணம் பெற்றது உண்மைதான்

tamil.indianexpress.com வைகோவின் ஆதங்கமும், அதனையொட்டி நடைபெறும்
சிறுத்தைகளின் பாய்ச்சலும், திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தலித்துகளை வைகோ சிறுமைப்படுத்தி விட்டதாக ஒருபக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளர் வன்னியரசு குமுற, மறுபக்கம் ”தேர்தல் செலவிற்காக நாங்கள் வைகோவிடம் பணம் பெற்றது உண்மை தான். வன்னியரசு தனது பதிவை நீக்கிவிட்டார். அவரது கருத்துக்கு எதிர்கருத்தாக, தேர்தலுக்கு பணம் அளித்ததை ஏன் வைகோ கூறினார் என்பது புரியவில்லை.
அவருக்கு வன்னியரசு மீது கோபமா? என் மீது கோபமா?.. ஒருவரை விமர்சனம் செய்ய வேண்டுமானால், நேருக்கு நேர் துணிச்சலுடன் பேசுபவன் நான். யாரையும் தூண்டிவிட்டு விமர்சனம் செய்ய வைக்கும் அற்ப புத்தி எனக்கு கிடையாது” என திருமாவளவன் பாய்ந்திருக்கிறார்.

5 மாநில தேர்தல்: வாக்குக் கணிப்பு முடிவுகள்!

5 மாநில தேர்தல்: வாக்குக் கணிப்பு முடிவுகள்!
மின்னம்பலம் :ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு இன்று (டிசம்பர்7) மாலையோடு வாக்குப் பதிவு முடிந்த நிலையில்... பிரபல செய்தி நிறுவனங்களின் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
டைம்ஸ் நவ் -சி.என்.எக்ஸ்
டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம், சி.என்.எக்ஸ் இணைந்து நடத்திய வாக்குக் கணிப்புகளில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றும், ராஜஸ்தானில் காங்கிரஸ், தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக - 126, காங்கிரஸ் - 89, பகுஜன் சமாஜ் - 6 இடங்களைப் பிடிக்கலாம். சத்தீஸ்கரில் பாஜக - 46, காங்கிரஸ் - 35, பகுஜன் சமாஜ் கூட்டணி - 7, மற்றவை - 2 என்ற வகையில் தேர்தல் முடிவுகள் அமையும். தெலங்கானா மாநிலத்தில் டிஆர்எஸ் - 66, காங்கிரஸ் கூட்டணி - 37, பாஜக - 7, மற்றவை - 2 என்றும் கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக- 85, காங்கிரஸ் கூட்டணி - 105, பகுஜன் சமாஜ் கூட்டணி - 2, மற்றவை – 7 என்ற வகையில் அமையும் என்று கணித்திருக்கிறது டைம்ஸ் நவ்.
இந்தியா டுடே ஆக்சிஸ் மை இண்டியா

EXIT POLL கணிப்புகள் .5 மாநில இடைதேர்தல் .. ராஜஸ்தான் காங்கிரஸ் வசம் ! மத்தியபிரதேசம் சதிஷ்கார் இழுபறி ..

BBC : மத்திய பிரதேசம், சத்திஸ்கர், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்களின் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், முன்னணி ஊடகங்கள் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் (Exit Poll) பெரும்பான்மையானவை ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மிக நெருக்கமான போட்டி நிலவுவதாகவும் தெரிவிக்கின்றன. தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சிக்கும், சத்தீஸ்கரில் காங்கிரசுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக சில கணிப்புகள் கூறுகின்றன.
மத்தியபிரதேசம், சத்திஸ்கர், மிசோராம் ஆகிய மாநிலங்களில் நவம்பர் மாதம் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், தெலங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
வாக்குகள் எண்ணிக்கை டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறுகிறது.

வாக்குப் பதிவுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள்

மத்திய பிரதேசம்
மொத்த தொகுதிகள் - 230


செய்தி நிறுவனம் காங்கிரஸ்+ பாஜக பிற கட்சிகள் பிஎஸ்பி
இந்தியா டுடே - ஏக்சிஸ் மை இந்தியா 104-122 102-120 3-8 1-3
டைம்ஸ் நவ்-சி என் எக்ஸ் 89 126 9 6
ரிபப்ளிக் - ஜன் கி பாத் 95-115 108-128 7 -

தெலங்கானா சட்டமன்ற தேர்தல்
மொத்த தொகுதிகள் - 119
செய்தி நிறுவனம்
காங்கிரஸ் + பாஜக டிஆர்எஸ் பிற கட்சிகள்
இந்தியா டுடே - ஏக்சிஸ் மை இந்தியா 21-33 1-3 79-91 4-7
டைம்ஸ் நவ் - சி என் எக்ஸ் 37 7 66 9
ரிபப்ளிக் 38-52 - 50-65 12-21

தஞ்சை ஸ்ரீ ரவிசங்கரின் இந்துத்வா பிரசார நிகழ்வுக்கு நீதிமன்றம தடை .. தஞ்சை பெரிய கோவிலில்


tamilthehindu :தஞ்சை பெரிய கோயிலில் வாழும் கலை அமைப்பு நடத்விருந்த ஆன்மிக
நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
மேலும் அதற்காக கோயிலில் அமைக்கப்பட்டிருந்த மேடை, கூடாரங்களை அகற்ற காவல்துறை உதவ வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. பந்தல், மேடை களை அகற்றுவதை ஆட்சியர், எஸ்பி உறுதி செய்ய வேண்டும். திங்கள் கிழமை ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் தரப்பில் வழக்கறிஞர் முத்துக்கிருஷ்ணன் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு ," தஞ்சை பெரிய கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு சார்பில், இரண்டு நாட்கள் ஆன்மிக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்காக கோயில் அருகே பெரிய பந்தல் போடப்பட்டுள்ளது.

புழுங்கல் அரிசியை புறந்தள்ளும் இல்லத்தரசிகள் .. ஸ்டீம்' அரிசியால் நலிந்து வரும் தமிழக அரிசி ஆலைகள்

tamil.thehindu.com - ந.முருகவேல் : தமிழகத்தில் அரிசி உற்பத்தியில் முன்னணியில் திகழும் மாவட்டங்களில் விழுப்புரம் மாவட்டமும் ஒன்று. இங்குள்ள சின்னசேலம், கள்ளக்குறிச்சி, விக்கிரவாண்டி ஆகிய பகுதிகளில் உள்ள நவீன அரிசி ஆலைகள் மூலம் அரிசி உற்பத்தி செய்து தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. சின்னசேலத்தில் மட்டும் 60 நவீன அரிசி ஆலைகள் இயங்குகின்றன.
சம்பா பருவத்தில் மட்டும் ஒரு லட்சம் டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு, சென்னை, புதுச்சேரி, கடலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் கள்ளக்குறிச்சியில் 20 ஆலைகளும், விக்கிரவாண்டியில் 13 ஆலைகளும் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதி அரிசி உற்பத்தியில் பெரும் தொய்வு ஏற்பட்டிருப்பதாகவும், அந்தத் தொழிலையே நம்பியிருப்போர் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக சின்னசேலம் அரிசி உற்பத்தி ஆலை சங்க நிர்வாக தேவசேனாதிபதி கூறும்போது, "ஒவ்வொரு ஆண்டும் சம்பா, குறுவை ஆகிய பருவங்களில் நெல் வரத்தைக் கொண்டு தரமான அரிசிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்தோம். அண்மைக் காலமாக நீராவியினால் அவிக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்படும் அரிசிகள் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த அரிசியினால் உடல் உபாதை ஏற்படும் என்பது மக்களுக்கு புரியவில்லை.

சபரிமலைக்கு 40 தமிழக பெண்கள் கேரள போலீஸ் அறிக்கை

சபரிமலை,40 தமிழக பெண்கள்,கேரள போலீஸ்,அறிக்கை,அதிர்ச்சிthinamalar : சபரிமலை : சபரிமலைக்கு தமிழக பெண்கள் 40 பேர் ஒரு அணியாக வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து எருமேலி, நிலக்கல், பம்பையில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. ஆனால் எதிர்பார்த்த அளவு பெண்கள் வரவில்லை. ஐப்பசி மாத பூஜையில் 15 பெண்களும், சித்திரை ஆட்ட திருநாளில் ஒருவரும், மண்டல காலம் தொடங்கிய பின்னர் ஆந்திராவில் இருந்து இரண்டு பெண்களும் வந்து திரும்பி சென்றுள்ளனர். இதனால் நடந்த போராட்டங்கள் சபரிமலையை பாதிக்க செய்துள்ள நிலையில் போலீசும் போராட்டக்காரர்களும் தங்கள் நிலை பாட்டை சற்று தளர்த்தியுள்ளனர். இதனால் சன்னிதானத்தில் கூட்டம் அதிகரித்துள்ளது.

விஷ்ணுப்பிரியா கொலை வழக்கு: சிபிஐ மீது குற்றச்சாட்டு!

minnambalam : டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் முறையாக விசாரிக்கவில்லை என்று அவரது தந்தை ரவி நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
விஷ்ணுப்பிரியா கொலை வழக்கு: சிபிஐ மீது குற்றச்சாட்டு!நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டிஎஸ்பியாகப் பணியாற்றிவந்த விஷ்ணுப்பிரியா, சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்தார். இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி காவல் அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கு உயர் அதிகாரிகளின் நெருக்கடிதான் காரணம் என்ற சந்தேகங்கள் எழுந்துவந்த நிலையில், இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தத் தமிழக அரசு உத்தரவிட்டது.

தெலுங்கானா, ராஜஸ்தானில் ஓட்டுப்பதிவு துவங்கியது: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

தெலுங்கானா, ராஜஸ்தானில் ஓட்டுப்பதிவு துவங்கியது: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்புthinathanthi : தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
ஜெய்பூர், தெலுங்கானாவில் முதல்- மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு 119 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு  தொடங்கியது. மாலை 5 மணிக்கு முடிகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 13 தொகுதிகளில் மட்டும் ஓட்டுப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெறுகிறது.இங்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

வியாழன், 6 டிசம்பர், 2018

மலேசியா.. இந்தியர்கள் விசாவுக்காக 500 ரூபாய் கொடுத்து திருமணம் . 30 தாய்லாந்து பெண்கள் கைது

Police, in the ongoing crackdown on foreigners living unlawfully in the Kingdom, have arrested 10 Indian men and 24 Thai women on suspicion of involvement in a scam whereby fake marriages and false documents were used to extend the men’s stay in Thailand, the Immigration Police Bureau announced on Tuesday

வெப்துனியா: மலேசியாவில் சட்டவிரோதமாக தங்குவதற்காக போலி திருமணம் செய்து சான்றிதழ் சமர்ப்பித்த 30 இந்தியர்களும், அவரக்ளை திருமணம் செய்த 30 தாய்லாந்து பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு வியாபாரம் உள்பட பல்வேறூ பணிகளுக்கூ சென்ற ஒருசிலர் விசா முடிந்தவுடன் அதிக நாட்கள் தங்குவதற்கு தாய்லாந்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்ததாக போலி சான்றிதழ் கொடுத்து தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

திருமா பற்றி வைகோ: அதிருப்தியில் ஸ்டாலின்

திருமா பற்றி வைகோ: அதிருப்தியில் ஸ்டாலின்மின்னம்பலம் : தலித்துகளை திராவிடம் உயர்த்தியதா என்ற தத்துவ விவாதம் வைகோ-திருமாவளவன் ஆகியோர் இடையே ஒரு கசப்பான உரையாடலாக கரை தட்டி நிற்கிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து செயல்பட்ட வைகோவிற்கும் திருமாவளவனுக்கும் இடையேதான் இந்த சச்சரவு.
கடந்தவாரம் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்காணல் அளித்தார் வைகோ. அப்போது தலித்துகளை திராவிடம் எந்த நிலையில் வைத்திருக்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தபோதே பேட்டி முடியும் தருவாயில் தானாகவே அந்த பேட்டியை முடித்துக் கொண்டு எழுந்தார் வைகோ.

தமிழிசையின் கணவர் துணை வேந்தர் பதவிக்கு போட்டி .. குமரி அனந்தன் குடும்பம்னா சும்மாவா?

துணைவேந்தர் போட்டியில் தமிழிசையின் கணவர்!மின்னம்பலம் : எம்ஜிஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசையின் கணவர் சவுந்தர ராஜன் உள்ளிட்டு 41 பேர் போட்டியிடுகின்றனர்.
தமிழக மருத்துவத் துறை டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக் கழகத்திற்கான துணை வேந்தர் பதவி காலியாக உள்ளது. அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசிதழில் (அக்டேபர் 23 ஆம் தேதியிட்டது) அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பாணையில், . பதவிக்கான மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி்த் தேதியாக கடந்த 30 ஆம் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது.
மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கான தகுதிகளாக மருத்துவ பணியில் 20 ஆண்டுகள் அனுபவமும், 10 வருடம் மருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். மருத்துவ பல்கலைக்கழகத்தின் அறிவிப்பாணையைத் தொடர்ந்து இதுவரை 41 மருத்துவர்கள் மனு செய்துள்ளனர். மனு செய்தவர்களின் பட்டியலில் முக்கியமானவர்கள் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகணன் நடராஜன், முன்னாள் பதிவாளர் டாக்டர் சுதா சே‌ஷய்யன், டாக்டர் பால சுப்பிரமணியன், டாக்டர் விமலா, பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் டி.எஸ். செல்வ விநாயகம் ஆகியோர் உள்ளனர்.

2.0: வசூல் சாதனை ( கப்சா) அறிவிப்பின் பின்னணி என்ன?

2.0: வசூல் சாதனை அறிவிப்பின் பின்னணி என்ன?மின்னம்பலம் - இராமானுஜம் : ஏழு நாட்களில்
உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் 2.0 வசூல் செய்ததாக அறிவித்திருப்பதில் தமிழகத்தின் பங்கு என்ன ? நேற்று நாம் கூறியிருந்த 400 கோடி ரூபாய் சாத்தியமா என்பதை பற்றிய ஆய்வுகளுக்குள் தென்னிந்திய ஊடகங்கள் ஈடுபடவில்லை.
மீடியாக்களின் செய்தி பசியை லைகா நிறுவனம் பயன்படுத்தி கொண்டது. இந்த செய்தியை வெளியிட்ட வட இந்திய ஊடகங்கள் இந்தி பதிப்பின் மொத்த வசூலை மட்டும் குறிப்பிட்டு எழுதிவிட்டு பிற மொழிகளில் வசூலான தொகை என்ன என்பதை இதுவரை குறிப்பிடவில்லை.
என்ன காரணம் தென் மாநிலங்களில் 2.0 படத்தின் வசூல் மந்தம் என்பதுடன் யார் கொடுக்கும் வசூலையும் அவர்கள் நம்பத் தயாராக இல்லை. முதல் நாள் தமிழகத்தில் 13 கோடி மொத்த வசூல் என்கிற போது, நான்கு நாட்களில் ஐம்பது கோடி' வசூலை கடக்க முடியாது என்பது சினிமா வியாபாரம், வசூலை பற்றிய அனுபவம் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும்.
சினிமா படங்களின் வசூல் தகவல்களை வெளிப்படை தன்மையுடன் கூறுவதில் இங்கு தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களிடம் தயக்கமும் பயமும் தொடர் கதையாகி வருகிறது.
அதனை சினிமா தயாரிப்பில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களும், நடிகர்களும் தங்களுக்கு சாதகமாக கடந்த பத்தாண்டுகளாக பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

வைகோ வன்னியரசு முறுகல் தீர்ந்ததா ? தீரவில்லையா?

டிஜிட்டல் திண்ணை: திசைமாறும் வைகோ?மின்னம்பலம் : ‘ திராவிட இயக்கம் தலித்துகளுக்கு செய்தது என்ன? வன்னியரசுக்கு பதில்’ என்ற தலைப்பில் மதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த அறிக்கைதான்.
அதைப் படித்துமுடிப்பதற்குள் மீண்டும் வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியது. “இன்று தமிழகம் முழுதும் மேகதாட்டு பிரச்சினைக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
அதற்காக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்படும் நேரத்தில் மதிமுகவில் இருந்து வன்னி அரசுக்கு பதில் தெரிவித்து இப்படி ஒரு நீண்ட அறிக்கை, ‘ஈழ வாளேந்தி’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இந்த ஈழ வாளேந்தி வைகோதான் என்கிறார்கள்.
வைகோவுக்கும் வன்னியரசுக்கும் ஏற்பட்ட மன வருத்தம், அதை ஒட்டி திருமாவளவன் மீது வைகோ காட்டிய சினம் ஆகியவற்றை சுட்டிக் காட்டி இன்று மதியம் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதுபற்றி வன்னியரசு வருத்தம் தெரிவித்துவிட்டார். இதனால் கூட்டணிக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று இன்று மதியம் திருமாவளவன் இப்பிரச்சினையை முடித்து வைத்துவிட்ட நிலையில், இன்று பிற்பகல் மீண்டும் வைகோ ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

நெல் ஜெயராமனுக்கு ஸ்டாலின் புகழாஞ்சலி .. தமிழ்நாட்டின் மண் வளம் காக்க தன் வாழ்வை அர்ப்பணித்தவர்

tamil.thehindu.com/: தமிழ்நாட்டின் மண் வளம் காக்க தன் வாழ்வை அர்ப்பணித்தவர் நெல் ஜெயராமன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.
170க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட சாதனை மனிதர் ‘நெல் ஜெயராமன்’ புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை அவருடைய உயிர் பிரிந்தது. அவரது உடலுக்கு திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மாலையணிவித்து இறுதி வணக்கம் செலுத்தினார்.
பின்னர் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''மண் வளம் காக்கும் நெல் விளைச்சலைப் பெருக்கி, இயற்கை வேளாண்மை வாயிலாக புதிய விடியலை உருவாக்கி வந்த ‘நெல்’ இரா.ஜெயராமன் இன்றைய விடியலுக்கு முன்பாகவே இறந்துவிட்டார் என்ற துயரச்  செய்தி அறிந்து வேதனையடைகிறேன்.

மேகதாது அணை திட்டத்துக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது

தினத்தந்தி :தமிழக சட்டசபையில் மேகதாது அணை திட்டத்துக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது என சபாநாயகர் அறிவித்தார்.
சென்னை, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க, தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அனைத்துக்கட்சி எம்எல்ஏ-க்கள் தலைமை செயலகம் வருகை தந்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தனித் தீர்மானத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார்.
 முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
 ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிகிறேன மேகதாதுவில் அணை கட்ட நீர்வள ஆணையம் அனுமதி தந்தது அனைவரையும் கொதிப்படைய வைத்துள்ளது. தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும்  என கேட்டு கொண்டார்.

30 பெண்களுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோவாக பதிவு செய்தேன்’ கைதான தொழில் அதிபர் பரபரப்பு வாக்குமூலம்

‘30 பெண்களுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோவாக பதிவு செய்தேன்’
கைதான தொழில் அதிபர் பரபரப்பு வாக்குமூலம்தினத்தந்தி :ரகசிய கேமராக்கள் பொருத்தியதாக கைதான தொழில் அதிபர், 30 பெண்களுடன் உல்லாசமாக இருந்ததுடன், அந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
 ஆலந்தூர், சென்னை ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான தங்கும் விடுதியை குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த சம்பத்ராஜ் என்ற சஞ்சீவி (வயது 48) நடத்தி வந்தார். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், கடந்த 10 ஆண்டுகளாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் தொழில் செய்து வந்தார். அவருடைய விடுதியில் 6 பெண்கள் தங்கி இருந்தனர். விடுதியிலேயே சம்பத்ராஜ் தனது கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்தையும் நடத்தி வந்தார்.

ஜெயலலிதா சமாதியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி 2-ம் ஆண்டு நினைவு தினம்

2-ம் ஆண்டு நினைவு தினம்:
ஜெயலலிதா சமாதியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலிதினத்தந்தி :ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, அவரது சமாதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 2-வது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஜெயலலிதாவின் நினைவை போற்றும் வகையில் வழிநெடுகிலும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்துவதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க.வின் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து அமைதி பேரணி தொடங்கினர்.

கர்நாடகம் தள்ளி வைத்த தரமற்ற சைக்கிளை தமிழக அரசு வழங்கி மோசடி ,,

இலவச சைக்கிள்களில் கர்நாடக அரசின் லோகோ!மின்னம்பலம் : ‘தமிழக அரசின் இலவச சைக்கிள் திட்டத்தில் வழங்கப்படுகிற சைக்கிள்களில் எப்படி கர்நாடக அரசின் லோகோ வந்தது? இந்த விஷயத்தில்கூட கவனமாக இருக்க மாட்டீர்களா?’ என்று நேற்று (டிசம்பர் 5) நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி தொடர்ந்த பொதுநல மனுவில், பள்ளி மாணவர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்காக விழுப்புரம் மாவட்ட மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தைச் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் வழங்கிய சைக்கிளில் கர்நாடக அரசின் முத்திரையுடன் கூடிய சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.

துரைமுருகன் திறந்த கதவை மூடிய ஸ்டாலின்

துரைமுருகன் திறந்த கதவை மூடிய ஸ்டாலின்மின்னம்பலம் : திமுகவில் என்னதான் நடக்கிறது? - மினி தொடர் - 6 - ஆரா கூட்டணி குறித்த விவாதங்களை துரைமுருகன் பேட்டியின் மூலமாகத் தூண்டிவிட்டுவிட்டு, அதன்பின் எல்லா பழியையும் ஊடகங்கள் மீதே தூக்கிப் போடுகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். அண்ணா அறிவாலயத்தில் தன்னை சந்தித்த திருமாவளவனோடும் வைகோவும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்திக்காமல் ’தனித்து’ செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், “திமுக கூட்டணி பற்றி விளம்பரம் கொடுத்த ஊடகங்களுக்கு நன்றி” என்று சொன்னாரே தவிர, துரைமுருகனின் பேட்டிக்கு நேரடியான எந்தக் கருத்தும் சொல்லவில்லை.
கலைஞர் தேவைப்பட்டால் ஆங்கில ஏடான, ‘தி இந்து’வே சொல்லியிருக்கிறது என்பார். தேவையில்லை என்றால் நம்மைப் பற்றி மவுன்ட் ரோடு மகாவிஷ்ணு காட்டியிருக்கும் வயிற்றெரிச்சலைப் பாரீர் என்பார். இப்படித்தான் ஸ்டாலினும்.

அண்ணல் அம்பேத்கர் தூக்கத்திலேயே இறந்துவிட்டதைப் போல் ஒரு நாடகத்தை ..?


சவிதா - அண்ணல் அம்பேத்கார்
Arul Mozhi : டாக்டர் அம்பேத்கர் மரணம் இயற்கையா? செயற்கையா?
06.12.1956 அன்று டில்லி அலிப்பூர் சாலையிலுள்ள இல்லத்தில் மறைவுற்று, 07.12.1956 அன்று பம்பாய் தாதரில் உள்ள இராஜகிருகா இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு, தாதர் மயான பூமியில் புத்த பிக்குகள் பவுத்த முறைபடி திரிசரணங் கூறிட இலட்சோபலட்சம் மக்கள் கதறியழுதிட பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் உடல் எரியூட்டப்பட்டபோது எழும்பிய தீச்சுவாலையினோடு மக்கள் மனதில் காட்டுத் தீயெனக் கிளம்பிய கேள்வியிது... "டாக்டர் அம்பேத்கர் மரணம் இயற்கையா? செயற்கையா?
தந்தை பெரியார் விடுதலையில் எழுதினார். "இந்த உலகில் மூவாயிரம் ஆண்டுகளில் நான்கு உத்தமச் சீலர்கள் தோன்றினார்கள்; அவர்கள் புத்தர், ஏசு, முகம்மது நபி, டாக்டர் அம்பேத்கர். பாவிகள் அவரைக் கொன்றுவிட்டார்கள்" என்று உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டினார். உள்ளத்தில் உள்ளதை ஒளிக்காமல் பேசும் பெரியார் ஈ.வெ. ராமசாமி.
அம்பேத்கர் இறந்த பதினோராம் நாள் அம்பேத்கரின் தொண்டர்கள் தில்லியில் கூட்டிய மாபெரும் கூட்டத்தின் வாயிலாக அம்பேத்கர் எத்தகைய சூழ்நிலையில் இறந்தார் என்பது குறித்து அரசு முழுமையாகப் புலனாய்வு செய்ய வேண்டும் என்று கோரினார்கள். அவர்கள் ஒரு தூதுக் குழுவாகச் சென்று பிரதமர் நேரு, உள்துறை அமைச்சர் பந்த், குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் ஆகியோரைச் சந்தித்து, அம்பேத்கரின் இறப்பு குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று கோரினர்.

எந்திரன் 2,0 உண்மையான வசூல் கடும் அதிர்ச்சி .. secret news Report

ரெக்கார்ட் ப்ரேக்கு , சாதனைன்னு ஒரு பக்கம் ரஜினி ரசிகர்கள் கதையா விடறாங்க ..ஆனா ரியாலிட்டி வேறவால்ல இருக்கு .

மன்னார் மனிதப்புதைகுழி:கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் எண்ணிக்கை 230 .. புலிகள் மர்ம மௌனம்?

George RC :'அடக்குமுறைச் சிங்களத்தை' திட்டித் தீர்க்கிற தமிழ்த் தேசியம்... நவதுவாரங்களையும் மூடிக் கொண்டிருப்பதன் காரணம் தான் என்ன? முள்ளிவாய்க்காலைப் பற்றி ஒப்பாரி வைக்கும் புலிக் கூட்டம் வாலைச்சுருட்டி வாயைப் பொத்தி இருப்பதன் காரணம் என்ன? வெளியே வந்த ஊகங்களின்படி இது புலிகள் போட்டுத் தள்ளிய மாற்று இயக்கத்தினர் என்ற செய்தி உண்மையாயிருக்கும் என்பதாலா?
அன்பரசன் எத்திராஜன்"BBC :  இலங்கையில் வட மேற்கு நகரான மன்னாரில்
பெரும் கல்லறை ஒன்றில் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் இந்தாண்டு தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்பு போர் மண்டலமாக இருந்த இடத்தில் உள்ள கல்லறையில் 230க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் இதுபோன்று வேறொரு இடத்தில் 90 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டது.
2009ஆம் ஆண்டு முடிந்த இலங்கை போரில் குறைந்தது 20,000 பேர் காணாமல் போயிருக்கலாம் என மனித உரிமை குழுக்கள் தெரிவிக்கின்றன. இலங்கை துருப்புகள் மற்றும் புலிகளுக்கு எதிராக நடந்த 26 ஆண்டுகால போரில் குறைந்தது லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட இடத்தை விரிவாக தோண்ட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராணுவத்தில் ஹிந்தி வெறியர்கள் அட்டகாசம் .. ஹிந்தி பேசாத மாநில ராணுவத்தினருக்கு தொல்லைகள் அவமானம்..

வினவு :M Sathyanarayanan : நான் புதிதாக இராணுவத்தில் இணைந்து உள்ளேன், இங்கே அனைவரும் communication செய்ய ஹிந்தி கட்டாயம், ஹிந்தி தெரியாமல் தமிழர்கள் நாங்கள் படும் வேதனைகள் , அவமானங்கள் எல்லாம் கொஞ்சம் நஞ்சம் இல்லை, ஹிந்தி மட்டும் தெரிந்து இருந்தால் நாங்கள் தான் இங்கே ராஜா, ஹிந்தி தெரியாததால் ஏதே அடிமைகள்

இப்படி ஒரு ட்விட்டைப் பார்த்தால் ஒரு தேசபக்தி கொண்டவர் எப்படி எதிர்வினையாற்றுவார்? கொதித்துப் போவார். என்ன அநியாயம், ஹிந்தி படிக்க விடாமல் தனது மக்களை துன்பப்படுத்தி அவர்கள் வெளி மாநிலங்களுக்கு (அதுவும் இராணுவத்தில்) பணி செய்யும்போது அவமானம் அடைய வைத்த திராவிட திம்மிகள் விளங்குவார்களா? என்று கொதித்திருக்க வேண்டும்.

ஆனால், நடந்தது நேரெதிர். மேற்படி ட்விட்டைப் போட்டவர் ஒரு சங்கி. சமீப காலமாக எப்படியாவது செயற்கை மழையையாவது வரவழைத்து தாமரையை தமிழகத்தில் மலரச் செய்தே தீருவது என்று சங்கிகள் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறார்கள். தமிழர்களோ, அப்படி மலர்ந்த தாமரையை கூலிக்கு ஆள் விட்டாவது பிடுங்கி எரிந்தே தீருவோம் என எதிர் கங்கணம் கட்டிக் கொண்டு காத்திருக்கின்றனர்.
”செயற்கை மழை”யின் ஒரு வகைமாதிரி தான் மேற்படி ட்வீட். இதற்கு மக்கள் ஆற்றியுள்ள எதிர்வினைகளை தொகுத்திருக்கிறோம்.
”மூனு மாசத்துல இந்தி கத்துக்கலாம்…முடியலனா மூடிட்டு வேலைய ரிசைன் பன்னிரு” என்கிறார் பூணூல் பொறுக்கி.
பூணூல் பொறுக்கி மூனு மாசத்துல இந்தி கத்துக்கலாம்...முடியலனா மூடிட்டு வேலைய ரிசைன் பன்னிரு

கார்த்திகை செல்வனின் நரித்தனம் .. தலித் மக்களை தடுமாற வைக்க கடும் முயற்சி !


Devi Somasundaram : தலித் மக்களின் வளர்ச்சியை திராவிட அரசியல் ஆதரிக்கலயா என்ற கார்த்திகை செல்வனின் கேள்வி எந்த அடிப்படையில் வைக்க படுகிறது...தலித் மக்கள் மீதான ஆதரவில் இருந்தா ? .அப்படி என்றால் திராவிட இயக்க தோன்றலுக்கு முன் தலித் மக்கள் அதிகார படுத்த பட்டு இருந்தனரா ? .
தலித் மக்களின் அதிகாரம் என்பதை திராவிட அரசியல் ஆரம்பிப்பதற்கு முன் யார் பேசியது.? .
தஞ்சை பகுதி பிள்ளைமார் சாதி மக்கள் கூடி கருணானிதிக்கு ஓட்டு போட்டா பறை பள்ளி எல்லாம் நமக்கு சமமா வந்து உட்காருவான் அதனால திமுகவுக்கு ஓட்டு போட கூடாதுன்னு பேசியதை பற்றி கார்த்திகை செல்வன் ஒரு ஆர்டிகில் தயார் செய்வாரா ? .
தஞ்சை மாவட்ட பகுதியில் பி ஜேபியை வளர்த்தது பார்ப்பனர்கலோ, கள்ளரோ, மறவரோ இல்லை..அதை செய்தது பிள்ளைமார் சாதிதான் என்பதை கார்த்திகை செல்வன் ஒரு இண்டர்வியுவா எடுக்க தயாரா ? .
கும்பிடுறேன் சாமின்னு கைய கட்டி நிக்க வச்சது திராவிட அரசியல் வந்த பின் தான் உடைந்தது என்பதை கார்த்திகை செல்வன் பேச தயாரா....தஞ்சை மாவட்ட பெளர்ணமி கூட்டங்களில் இனி பறையர்களை கட்டி வைத்து அடிக்க முடியாது என்ற நிலை உருவானது கருணானிதியால் தான்னு பேசும் பிள்ளை மார் சமுகத்தை பற்றி ஒரு டாக்குமென்றி எடுப்பாரா கார்த்திகை செல்வன். .
யார் தலித் எதிரின்னு கார்த்திகை செல்வன் கண்ணாடி முன் நின்று கேட்க்கட்டும்...
இன்னிக்கு வைகோ கிட்ட கேள்வி எழுப்பினதும் கார்த்திகை செல்வனின் நரித்தனம் பலருக்கு புரிகிறது..

புதன், 5 டிசம்பர், 2018

வைகோ :நான் ஆபத்தானவன்! தலித்’ குறித்து வைகோ பேட்டி! குமுறும் சிறுத்தைகள்


தனியார் தொலைக்காட்சியில் ’தலித்கள்’ குறித்த வைகோவின் பேட்டிக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எங்கள் வீட்டிலும் தலித்கள் வேலை பார்க்கிறார்கள் என்று வைகோ கூறியது, அவரது மனதில் உள்ள ஆதிக்க உளவியலைக் காட்டுகிறது என்று சாடியுள்ளார் தான் ஆபத்தானவன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், உரசிப் பார்த்தால் தீப்பிடிப்பேன் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்ற மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

விஜய் மல்லைய்வின் கில்லாடி திட்டம் .. முதலை மட்டும்தான் தருவாராம் .. முதலை கண்ணீர் நாடகம்

100 சதவீத தொகையையும் தந்து விடுகிறேன், தயவு செய்து வாங்கிக்
கொள்ளுங்கள் என்று வங்கிகளுக்கு மல்லையா கோரிக்கை.
தினத்தந்தி :லண்டன், இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா,
லண்டனில் இருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இது தொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில்  நடைபெற்று வருகிறது. விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பை வரும் 10 ஆம் தேதி அளிக்கப்படும் என  நீதிபதி எம்மா ஆர்புத்நாட் தெரிவித்துள்ளார்.
இதனால், விஜய் மல்லையாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ள சூழலில், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை முழுவதும் தந்து விடுவதாகவும், தயவு செய்து வங்கிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.