சனி, 8 டிசம்பர், 2018

ஜெயலலிதாவுக்கு 16 ஆண்டு ஸ்டீராய்டு! -உயிர் குடித்த ஊக்க மருந்து!

judgearumugasamyநக்கீரன் :ஜெயலலிதாவின்  மருத்துவராக பணியாற்றிய டாக்டர் சிவகுமார்,
ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனில் தெரி வித்த தகவல்கள், ஜெ.வின் மரண மர்மம் குறித்த சந்தே கங்கள் சொந்தக் கட்சியினரிடமே அதிகரித்துள்ளன. சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனத்திற்கு மூன்று வாரிசுகள். டாக்டர் வெங்கடேஷ், அனுராதா, பிரபா ஆகிய சுந்தரவதனத்தின் வாரிசுகளில் பிரபாவை திருமணம் செய்தவர்தான் டாக்டர் சிவகுமார்.
அவர் கடந்த வாரம் தொலைக்காட்சியில் பேசினார். ""என் னோட திருமணம் 1991-ல் நடந்தது. எங்கள் குடும்பத் தில் அவர்கள் தலைமையில் நடந்த முதல் திருமணம் எனக்கும் பிரபாவுக்கும் நடந்த திருமணம்தான். ஜெ. மதுரையில் தங்கியிருந்தபோது ஜெ.வுக்கு கையில் சின்ன காயம் ஏற்பட்டது. நான் போய் பார்த்து ட்ரீட்மெண்ட் கொடுத்தவுடன் அந்த காயம் ஆறிவிட்டது. 2000ஆம் ஆண்டு முதல் அவர் மறைந்த 2016 வரை நான்தான் ஜெ.வின் டாக்டர்'' என்கிறார் டாக்டர் சிவகுமார். ஜெயலலிதா ஏதாவது புரொசிஜரில் இருந்தாங்கன்னா அவங்க கையை நான் பிடிச்சுக்குவேன். என் கையின் ஸ்பரிசம் அவங்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுக்கும். கடைசியில போயஸ் கார்டனிலிருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு போகும் வரை என் கையை இறுக்க பிடிச்சிக்கிட்டிருந்தாங்க. அவங்களுக்கு சுயநினைவு வரும் வரை என் கையை விடவில்லை'' என்கிறார்.
ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனில் ஜெ.வுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் பற்றி ஐந்து முறை ஆஜராகி விளக்கம் சொன்ன சிவகுமார், ""போயஸ் கார்டனிலிருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்வரை ஜெ.வுக்கு சுயநினைவு வரவில்லை. அப்பல்லோ மருத்துவமனையில்தான் ஜெ.வுக்கு சுயநினைவு வந்தது'' என தெரிவித்தார். ஆனால் ஜெ.வுடன் அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆம்புலன்சில்  வந்த சசிகலா, ""ஜெ.வுக்கு அப்பல்லோ மருத் துவமனைக்கு செல்லும் மூன் றடி சாலையான கிரீம்ஸ் சாலையில்தான் சுய நினைவு வந்தது. "நான் எங்கு இருக்கிறேன்' என கேட்டார்'' என அவர் தாக்கல் செய்த பிரமாண வாக்கு மூலத்தில் சொல்லியிருக்கிறார். ஜெ.வை அப்பல்லோ மருத் துவமனைக்கு கொண்டு சென்ற ஆண் நர்ஸ் சாட்சி யமளிக்கும் போது, ""போயஸ் கார்டனிலிருந்து அப்பல்லோ செல்லும் வரை ஜெ. முக்கியும் முனகியும் பினாத்தியபடியும் வந்தார்'' என்றார்.

"சசிகலாவும் டாக்டர் சிவகுமா ரும் சொல்வதை வைத்து பார்த்தால் ஜெ.வுக்கு சுயநினைவு இல்லை. சுயநினைவு இல்லாதவர் எப்படி பேச முடியும்' என கேட்டார் நீதிபதி ஆறுமுகசாமி. "டாக்டர் சிவகுமாரின் வாக்குமூலத்தின்படி சுயநினைவே இல்லாமல் இருந்த ஜெ., எப்படி அதே சிவகுமாரின் கைகளை பிடித் துக் கொண்டு வந்திருக்க முடியும்' என சிவகுமார் அளித்த பேட்டியை யும் அவர் ஆறுமுகசாமி கமிஷனில் அளித்த வாக்குமூலத்தையும் ஒப்பிட்டு கேள்வி எழுப்புகிறார்கள் அ.தி.மு.க.வினரே.

இதுமட்டுமல்ல ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷனில் டாக்டர் சிவகுமார் அளித்த சாட்சியம் பல முரண்பாடுகளை கொண்டதாக இருக்கிறது. ஜெ.வுக்கு இதயத்தின் இடதுபகுதியான வென்ட்ரிக் கிள் எனப்படும் பகுதியில் பிரச்சினை இருந்தது. ஒருவிதமான அடைப்பு போன்று அந்த இதய பகுதியில் இருந்ததால் ஜெ.வுக்கு அடிக்கடி உடல் சோர்வு ஏற்பட் டது. ஜெ.வால் நடக்க முடியவில்லை. தொடர்ந்து மூச்சுவிட முடியாது என அடுக்கிக் கொண்டே போனார் டாக்டர் சிவகுமார். இதை கேட்டு அதிர்ந்து போன நீதிபதி ஆறுமுகசாமி, ""நீங்கள்தான் ஜெ.வின் பெர்சனல் டாக்டர் என்கிறீர்கள். அவரை நல்ல இதய டாக்டரிடம் அழைத்து சென்றிருக்கலாம் அல்லவா?'' என கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு பதிலளித்த டாக்டர் சிவகுமார், ""நான் ஜெ.வுக்கு ஏற்பட்ட இதய கோளாறினால் தான் ஜெ. கஷ்டப்படுகிறார் என தெரிந்து கொள்ள இதய சிகிச்சை மருத்துவர் இல்லை. நான் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்'' என பதில் சொல்லியிருக்கிறார். "ஜெ.வை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்திருக்கலாமே' என நீதிபதி கேட்டதற்கு "ஆஸ்பத்திரிக்கு போக வேண்டாம்னு மேடம் சொல்லிட்டாங்க' என இறந்து போன ஜெ. தான் அவரது உடல்நிலை கெட்டு போகக் காரணம்'' என்றார் என்கிறது ஆணைய வட்டாரம்.

ஜெ. தனது நோய்க்காக போயஸ் கார்டனிலேயே மருத்துவமனையை உருவாக்கி 22 டாக்டர்களை வரவழைத்து சிகிச்சை எடுத்து அதை குறிப்பெழுதி வைத் தது பற்றி டாக்டர் சிவகுமார் கூறியதை யடுத்து, ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க முடிவெடுத்தது.

dr.sivakumarஜெ.வுக்கு தோல் நோய்க்காக 1998-லிருந்து சிகிச்சை அளித்து வந்த டாக்டர் ரவிச்சந்திரனைத் தொடர்ந்து, பிரபல தோல் நோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் பார்வதி பத்மநாபன் சாட்சியமளித்தார். ""ஜெ. தனக்கு பேப்பர் மற்றும் அதில் அச்சடிக்கப்பட்ட மையால் ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதைச் சொன்னார். "அப்படி யானால் இந்த தோல் ஒவ்வாமையைப் போக்க நான் ஸ்டீராய்டு மருந்துகளை தருகிறேன். ஸ்டீராய்டு (ஊக்க) மருந்துகள் மிகவும் ஆபத்தானவை. இதை சர்க்கரை நோயாளி யான நீங்கள் உபயோகப்படுத்தக் கூடாது. இந்த ஸ்டீராய்டு மருந்துகள் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இதை நீண்ட நாட்கள் உபயோகித் தால் உடல் எலும்புகள் வலுவிழக்கும். இரத்த அழுத்தம் ஏற்படும்' என நான் சொன்னேன். அப்பொழுது ஜெ., "நான் ஏற்கனவே இந்த ஸ்டீராய்டை உபயோ கப்படுத்தி பார்த்திருக் கிறேன்' என பதில் சொன்னார். நான் ஒரு வார காலத்திற்கு ஸ்டீராய்டு மருந்துகளை ஜெ.வுக்கு கொடுத்தேன். அத்துடன் ஜெ.வுக்கு கொடுத்த ஸ்டீராய்டு மருந்தின் அளவையும் குறைத்தேன். ஜெ.வின் தோல் நோய் சுகமானது'' என டாக்டர் பார்வதி சாட்சியமளித்துள்ளார்.

ஜெ.வுக்கு நெருக்கமானவர்கள் "ஸ்டீராய்டு எனப்படும் மெல்ல கொல்லும் ஊக்க மருந்து விஷத்தை நீண்டகாலமாகவே தனதாக்கிக் கொண்டார்' என்கிறார்கள். ""பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவரான டாக்டர் சிவகுமார் மதுரையில் காயம்பட்ட ஜெ.வுக்கு விரைந்து காயம் ஆற்றும் மருந்தைப் பயன்படுத்தினார். அந்தக் காயம் ஆறியபிறகு விரைந்து வேலை செய்யும் ஸ்டீராய்டு மருந்துகளுக்கு பழகிப் போனார். 16 ஆண்டுகள் ஸ்டீராய்டு அனுபவம் இருந்த தால்தான் டாக்டர் பார்வதியிடம் ஸ்டீராய்டை பற்றி முன்பே தெரியும் என ஜெ.வே சொன்னார். 2016-ல் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலும் ஜெ. செக்கப் செய்து கொண்டார்'' என்கிறார்கள்.

""இந்த விஷயம் டாக்டர் சிவகுமாருக்கு நன்றாக தெரியும். அதனால்தான் 2011ஆம் ஆண்டு ஜெ.விடம் சசிகலா உறவினர்கள் ஆட்சியை கைப்பற்றி நடராஜனை முதல்வராக்க முயற்சித்தார்கள் என உளவுத்துறை தலைவர் ராமானுஜம் ஒப்படைத்த டேப்பில் டாக்டர் சிவகுமார் ஜெ.வின் உடல்நிலை பற்றியும் அவரது ஸ்டீராய்டு உபயோகத்தைப் பற்றியும் ஜெ.வின் ஆயுள் பற்றியும் பேசியிருந்தார். இது ஜெ.வை கோபமடைய செய்தது. சசிகலாவுடன் சேர்ந்து சிவகுமாரையும் 2011-ல் போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றினார் ஜெ. மீண்டும் குன்ஹா தீர்ப்பளிக்கும் போதும் சிறையிலிருந்து வெளிவரும் போதும் ஜெ.வுடன் டாக்டர் சிவகுமார் ஒட்டிக் கொண்டார். ஆனால் ஜெ. அவரை கண்டுகொள்ளவில்லை'' என்கிறார் சசிகலாவின் பேச்சை டேப் செய்த ஒரு உளவுத்துறை அதிகாரி.
இதற்கிடையே ஜெ.வின் உடல்நிலை பற்றி ஜெ.வின் நினைவு நாளையொட்டி மீடியாக்களில் சசி குடும்பத்தினர் பேசி வருவது ஓ.பி.எஸ். வட்டாரத்தை டென்ஷனாக்கியுள்ளது

-தாமோதரன் பிரகாஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக