வியாழன், 6 டிசம்பர், 2018

வைகோ வன்னியரசு முறுகல் தீர்ந்ததா ? தீரவில்லையா?

டிஜிட்டல் திண்ணை: திசைமாறும் வைகோ?மின்னம்பலம் : ‘ திராவிட இயக்கம் தலித்துகளுக்கு செய்தது என்ன? வன்னியரசுக்கு பதில்’ என்ற தலைப்பில் மதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த அறிக்கைதான்.
அதைப் படித்துமுடிப்பதற்குள் மீண்டும் வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பியது. “இன்று தமிழகம் முழுதும் மேகதாட்டு பிரச்சினைக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
அதற்காக சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்படும் நேரத்தில் மதிமுகவில் இருந்து வன்னி அரசுக்கு பதில் தெரிவித்து இப்படி ஒரு நீண்ட அறிக்கை, ‘ஈழ வாளேந்தி’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இந்த ஈழ வாளேந்தி வைகோதான் என்கிறார்கள்.
வைகோவுக்கும் வன்னியரசுக்கும் ஏற்பட்ட மன வருத்தம், அதை ஒட்டி திருமாவளவன் மீது வைகோ காட்டிய சினம் ஆகியவற்றை சுட்டிக் காட்டி இன்று மதியம் மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதுபற்றி வன்னியரசு வருத்தம் தெரிவித்துவிட்டார். இதனால் கூட்டணிக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று இன்று மதியம் திருமாவளவன் இப்பிரச்சினையை முடித்து வைத்துவிட்ட நிலையில், இன்று பிற்பகல் மீண்டும் வைகோ ஆரம்பித்து வைத்திருக்கிறார்.


சட்டமன்றம் புறப்படும் நிலையில் இந்த அறிக்கையைப் படித்ததும் ஸ்டாலின் , ‘ஏன் வைகோ இப்படி மீண்டும் மீண்டும் அதை விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு என்ன ஆயிற்று?’ என்று கேட்டிருக்கிறார். திருமாவளவனிடமும் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
திருச்சியில் வைகோவுடன் ரவிக்குமார் பேசியதையும் அதன்பின் வன்னியரசிடம் தான் கண்டித்ததையும் திருமா விளக்கியிருக்கிறார். வன்னியரசு வைகோவுக்கு போன் செய்து பார்த்தும் அவரது உதவியாளர் பிரசாந்த் தான் எடுத்திருக்கிறார். ஆனால் வைகோ பேச வில்லை. இதனால் அவரிடமே வருத்தம் தெரிவித்து விட்டிருக்கிறார் வன்னியரசு.

இந்த நிலையில் வைகோ மீண்டும் இப்பிரச்னையை கிளப்புவதன் மூலம் கூட்டணிக்குள் ஏதேனும் குழப்பம் ஏற்படுத்த முயல்கிறாரோ என்று சந்தேகப்படுகிறாராம் ஸ்டாலின். ஏற்கனவே அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான தொழிலதிபர் மூலமாக வைகோவுடன் எடப்பாடி பேசிவருவதாகவும் ஸ்டாலினுக்கு தகவல்கள் கிடைத்த நிலையில் இந்த சந்தேகம் அதிகரித்திருக்கிறதாம்” என்று சொல்லிவிட்டு ஆஃப் லைனில் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக