வியாழன், 6 டிசம்பர், 2018

கார்த்திகை செல்வனின் நரித்தனம் .. தலித் மக்களை தடுமாற வைக்க கடும் முயற்சி !


Devi Somasundaram : தலித் மக்களின் வளர்ச்சியை திராவிட அரசியல் ஆதரிக்கலயா என்ற கார்த்திகை செல்வனின் கேள்வி எந்த அடிப்படையில் வைக்க படுகிறது...தலித் மக்கள் மீதான ஆதரவில் இருந்தா ? .அப்படி என்றால் திராவிட இயக்க தோன்றலுக்கு முன் தலித் மக்கள் அதிகார படுத்த பட்டு இருந்தனரா ? .
தலித் மக்களின் அதிகாரம் என்பதை திராவிட அரசியல் ஆரம்பிப்பதற்கு முன் யார் பேசியது.? .
தஞ்சை பகுதி பிள்ளைமார் சாதி மக்கள் கூடி கருணானிதிக்கு ஓட்டு போட்டா பறை பள்ளி எல்லாம் நமக்கு சமமா வந்து உட்காருவான் அதனால திமுகவுக்கு ஓட்டு போட கூடாதுன்னு பேசியதை பற்றி கார்த்திகை செல்வன் ஒரு ஆர்டிகில் தயார் செய்வாரா ? .
தஞ்சை மாவட்ட பகுதியில் பி ஜேபியை வளர்த்தது பார்ப்பனர்கலோ, கள்ளரோ, மறவரோ இல்லை..அதை செய்தது பிள்ளைமார் சாதிதான் என்பதை கார்த்திகை செல்வன் ஒரு இண்டர்வியுவா எடுக்க தயாரா ? .
கும்பிடுறேன் சாமின்னு கைய கட்டி நிக்க வச்சது திராவிட அரசியல் வந்த பின் தான் உடைந்தது என்பதை கார்த்திகை செல்வன் பேச தயாரா....தஞ்சை மாவட்ட பெளர்ணமி கூட்டங்களில் இனி பறையர்களை கட்டி வைத்து அடிக்க முடியாது என்ற நிலை உருவானது கருணானிதியால் தான்னு பேசும் பிள்ளை மார் சமுகத்தை பற்றி ஒரு டாக்குமென்றி எடுப்பாரா கார்த்திகை செல்வன். .
யார் தலித் எதிரின்னு கார்த்திகை செல்வன் கண்ணாடி முன் நின்று கேட்க்கட்டும்...
இன்னிக்கு வைகோ கிட்ட கேள்வி எழுப்பினதும் கார்த்திகை செல்வனின் நரித்தனம் பலருக்கு புரிகிறது..

ஆனால் திருமாவிடம் அவர் திருமாவை தலித் தலைவர் என்ற வட்டத்திற்குள் கேள்வி கேட்ட போதே நான் நண்பர்களிடம் இதை கூறினேன்..ஆரம்பத்துலயே அந்த நரிய களை எடுங்கன்னு ..அப்ப அது பலருக்கு புரியல.
1957 ல் இருந்து இன்று வரை ஆன மத்திய அமைச்சரவையில் மூன்று தலித் அமைச்சரை தந்தது திமுக மட்டும் தான். .ஆ.ராசா மூன்று முறை அமைச்சர்...அதிமுகவில் இருந்து ஒருவர் கூட கிடையாது...
சத்தியவாணி அம்மா 6 மாதம் அமைச்சரா இருந்தார்....அதிமுகவை கேள்வி கேட்க ஏன் முடிவதில்லை...பாமக கூட இரண்டு தலித் அமைச்சர்களை தந்துள்ளது ..அதை கூட அதிமுக செய்யவில்லை.
திமுக மாவட்ட செயலர்.
முக்குலத்தோர் 14 , கொங்கு வேளாளர் 8, வன்னியர் 8, நாயுடு 6, இஸ்லாமியர்கள் 4, முதலியார் 3 தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 2, பிள்ளைமார் 2, மீனவர் 2, ரெட்டியார் 2,, உடையார் 2, செட்டியார் 1, யாதவர் 1, நாடார் 2, நாடார், கவுடா 1, முடிதிருத்துவோர் 1, முத்தரையர் 1..
எஸ் சி எஸ் டி .11% வருகின்றனர்....இத்தனைக்கும் பட்டியலின மக்கள் அதிமுகவில் தான் அதிக உறுப்பினர்..திமுகவில் தலித் உறுப்பினர் மிக குறைவு ..தலித் அல்லாதோர் ஓட்டு போட்டு தான் இந்த நிர்வாகிகள் தேர்வானது என்பதை கார்த்திகை செல்வன் பேசுவாரா ? ..
#தேவி.
@கார்த்திகைசெல்வ்ன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக