சட்டசபை தேர்தல்கள் 2018: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
New Delhi: 5 மாநில தேர்தல் முடிந்துள்ள நிலையில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை இழக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் முதல் இன்று வரை மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன. இந்த நிலையில், 5 மாநிலங்களில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பாஜக ஆட்சியை இழக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதுமத்தியில் ஆளும் பாஜகவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. மிசோரத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என்றும், தெலங்கானாவில் ஆளும் சந்திர சேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தானில்
199 இடங்களில் தேர்தல் முடிந்துள்ளது. மெஜாரிட்டிக்கு 100 இடங்கள் தேவை.
இங்கு காங்கிரஸ் 110 இடங்களில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது. பாஜக 78
இடங்களில் வெல்லலாம். இதனை 12 நிறுவனங்கள் கணித்திருக்கின்றன.தெலங்கானாவில் சந்திர சேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புள்ளன. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் அக்கட்சி 67 இடங்களை கைப்பற்றக்கூடும். சந்திரபாபு நாயுடு - காங்கிரஸ் கூட்டணிக்கு 39 இடங்கள் வரை கிடைக்கலாம். பாஜக 5 இடங்களில் வெல்ல வாய்ப்பிருக்கிறது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக