சனி, 8 டிசம்பர், 2018

முகேஷ் அம்பானி மகள் திருமணம் - ராஜஸ்தானில் குவிந்த பிரபலங்கள்

முகேஷ் அம்பானி மகள் திருமணம் - ராஜஸ்தானில் குவிந்த பிரபலங்கள்மாலைமலர் : பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகள் திருமண விழாவில் பங்கேற்க பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், பல்வேறு மாநில முதல் மந்திரிகள் உள்பட பலர் ராஜஸ்தானில் குவிந்துள்ளனர்.
ஜெய்ப்பூர்: இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி- நிதா அம்பானியின் மகளான இசா அம்பானிக்கும், தொழிலதிபர் ஆனந்த் பைரமாலுக்கும் வரும் 12ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது. இதையொட்டி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நேற்று முதல் வரும் 10-ம் தேதி வரை அன்ன சேவை என்ற பெயரில், உணவு விருந்து நடைபெகிறது. தினமும் மூன்று வேளை தலா 5 ஆயிரத்து 100 பேருக்கு விருந்து வழங்கப்படுகிறது. அவ்வப்போது அம்பானி குடும்பத்தினரும் உணவு பரிமாறி வருகின்றனர். இந்நிலையில், முகேஷ் அம்பானி மகளின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல் மந்திரிகள், அரசியல்வாதிகள் என முக்கிய விருந்தினர்கள் ராஜஸ்தானில் குவிந்துள்ளனர்.
மேலும், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனும் இந்த விழாவில் பங்கேற்க இன்று வருகை தந்துள்ளார்.
பாலிவுட் நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன், அவரது மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சன், வித்யா பாலன், சித்தார்த் ராய், ஜான் ஆபிரகாம், பிரியா ருன்சால், பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் உள்ளிட்ட பல்வேரு பிரபலங்களும் வருகை தந்துள்ளனர்.
இதேபோல், கிரிக்கெட் வீரர்களான சச்சின் தெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி தெண்டுல்கர், தோனி மனைவி சாக்‌ஷி சிங் மற்றும் அவரது மகள் ஷீவா, ஜாகிர் கான் உள்ளிட்ட பலரும் வந்துள்ளனர்.

மேலும், மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், உபி முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ், மத்திய மந்திரி ஜெயந்த் சின்ஹா உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குவிந்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக