சனி, 8 டிசம்பர், 2018

யார் இந்த தன்ராஜ் மாஸ்டர்?. இளையராஜாவின் ஆசிரியர்..

Fan of music இசையின் ரசிகன்;
இளை­ய­ராஜா பற்றி எழு­தும் போது நிச்­ச­ய­மாக தன்­ராஜ் மாஸ்­ட­ரைப் பற்றி குறிப்­பிட்டே ஆக­வேண்­டும்.
மைசூர் மகா­ரா­ஜா­வின் இசைக்­கு­ழு­வில் வாசித்து வந்­த­வர்­தான் இந்த தன்­ராஜ். இந்த இசைக்­கு­ழுவை வழிநடத்­தி­ய­வர் ஒரு ஜெர்­மா­னி­யர். அவர் தொடர்­பி­னால் மேற்­கத்­திய கிளா­சி­க்கல் இசை­யில் ஞானம் பெற்­றார் தன்­ராஜ். இரண்­டாம் உல­கப்­போர் வெடித்த போது இந்­தி­யா­வில் இருந்து வெளி­யே­றி­னார் அந்த ஜெர்­மா­னி­யர். (பெயர் தெரி­ய­வில்லை – யாருக்­கா­வது தெரிந்­தால் தெரி­யப்­ப­டுத்­த­வும்)
சில ஆண்­டு­கள் வேலை­யில்­லா­மல் தவித்த தன்­ராஜுக்கு ஜெமினி வாசன் ஆத­ர­வ­ளித்­தி­ருக்­கி­றார். சந்­தி­ர­லே­கா­வின் இசை­ய­மைப்­பி­லும் இவ­ருக்கு பங்கு இருந்­தி­ருக்­கி­றது. ஆனால் டைட்­டி­லில் இவர் பெயர் இடம்­பெ­ற­வில்லை. ஜெமினி வாசன் எழு­திய ஒரு தொகுப்­பில் இதை வெளி­யிட்­டி­ரு­க்கி­றார்.
சென்னை மயி­லாப்­பூர் பகு­தி­யில் லஸ் கார்­ன­ரில் உள்­ளது அந்த சாய் லாட்ஜ். அறை எண் 13-ல் இருந்து வாத்­திய இசை எப்­போ­தும் கேட்­டுக் கொண்­டி­ருக்­கும். கிடார் இசை­யும், டிரம்­சு­க­ளின் ஒலி­யும், பியா­னோ­வின் மெல்­லி­சை­யும் வந்­த­படி இருக்­கும்.
அன்­றைய கால­கட்­டத்­தில், திரை இசை வாத்­தி­யக் கலை­ஞர்­கள் பலர் சாய் லாட்­ஜின் படிக்­கட்­டு­களை ஏறி­ய­வர்­கள்­தான். அந்­தப் படிக்­கட்­டு­கள்­தான் அவர்­க­ளது இசை அறி­வின் ஆரோ­க­ண­மாக விளங்­கி­யது. அதற்கு உத்தர­வா­தம் தந்­த­வர் அந்த அறை­யின் நடு­நா­ய­க­மாக விளங்­கிய தன்­ராஜ் மாஸ்­டர்.

இளை­ய­ராஜா – முதல் படத்­தி­லேயே தனித்­து­வம் மிக்க இசைச் சேர்ப்­பு­களை செய்­த­வர் என்ற பெருமை அடை­வ­தற்­கும், வாத்­தி­யங்­களை “அரேஞ்ச்” செய்­வ­தில் வல்­ல­வர் என்று பெயர் பெறு­வ­தற்­கும், எல்லா வாத்­தி­யங்­க­ளை­யும் வாசிக்­கத் தெரிந்த இசை­ய­மைப்­பா­ளர் என்று பெயர் பெறு­வ­தற்­கும் இந்த தன்­ராஜ் மாஸ்­ட­ரும் ஒரு முக்­கிய கார­ணம்.
எம்.எஸ்.வி. பாடல்­க­ளின் மெட்­டுக்­க­ளில் அண்­ணன் பாவ­லர் வர­த­ரா­ஜன் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின்
பிரசா­ரப் பாடல்­களை பாட, அவ­ருக்கு பின்­னணி ஆர்­மோ­னி­யம் வாசித்­தும், கிரா­மி­யப்­பா­டல்­களை வாய்­விட்­டுப் பாடி மகிழ்ந்­தும் தன்­னு­டைய இசை ரச­னை­களை வளர்த்­துக் கொண்­டி­ருந்த இளை­ய­ரா­ஜா­விற்கு ஒரு மேற்­கத்­திய இசை பரி­மா­ணத்தை தன்­ராஜ் மாஸ்­டர் அளித்­துக் கொண்­டி­ருந்­தார்.
இத­னால் சாய் லாட்ஜ் அறை எண் 13-க்கு பீதோ­வ­னும், மோசார்­டும், பாஹ்­கும், மேண்­டல்­ச­னும், பிராம்­சும், சைக்­காவ்ஸ்­கி­யும் அடிக்­கடி வந்து போனார்­கள்.
இளை­ய­ராஜா எழு­திய “சங்­கீ­தக் கன­வு­கள்” புத்­த­கத்­தில் இதைப் பற்றி எழு­தி­யி­ருப்­பது…
“வாரத்­தில் இரண்டு நாள், இரண்டு மணி நேரம் பயிற்சி பெற சேர்ந்­தி­ருந்த நான், தின­மும் வரு­கி­றேன் என்­றேன். சரி வா என்­றார். வரு­மா­னம் இல்­லாத நிலை­யில் இருந்த என்­னி­டம் அவர் பணமே வாங்­கலே. பியானோ கற்­றுக்­கொள்­வ­தற்­காக நான் அவ­ரி­டம் சேர்ந்­தேன். இசை­யின் அடிப்­படை நுணுக்­கங்­களை கற்­றுத்­தந்­தார். எனக்­கி­ருந்த ஆர்­வத்­தைக் கண்ட அவர், அதைக் கற்­றுக்­கொள், இதைக் கற்­றுக்­கொள் என்று கொஞ்­சம் கொஞ்­ச­மாக எல்­லா­வற்­றை­யும் கற்­றுத்­தந்­தார்.”
தன்­ராஜ் மாஸ்­டர்­தான் ராசையா என்ற பெயரை ராஜா என்று மாற்றி அழைத்­த­வர். (பின்­னா­ளில் ராஜா என்ற பெயரை இளை­ய­ராஜா என்று மாற்­றி­ய­வர் 'அன்­னக்­கிளி' பட தயா­ரிப்­பா­ளர் பஞ்சு அரு­ணா­ச­லம், ராஜா என்று ஏற்­க­னவே ஒரு இசை­ய­மைப்­பா­ளர் இருந்­த­தால்) தன்­ராஜ் மாஸ்­ட­ரி­டம் இசை பயின்று வந்த காலத்­தில்­தான் ஜி.கே. வெங்­க­டேஷி­ட­மி­ருந்து தன்­ராஜ் மாஸ்­ட­ருக்கு ஒரு அழைப்பு வந்­தது தன் இசைக்­கு­ழு­வில் ஒரு பாட­லுக்கு “ஆர்­கன்” வாத்­தி­யத்தை வாசிக்க. தன்­ராஜ் மாஸ்­டர் தனக்கு உத­வி­யாக இளை­ய­ரா­ஜாவை அழைத்­துச் சென்­றார்.
(ஜி.கே.வி – எம்.எஸ்.வி அவர்­க­ளி­டம் உத­வி­யா­ள­ராக பணி­பு­ரிந்­த­வர். ''நெஞ்­சில் ஓர் ஆல­யம்'' படத்­து­டன் தனி­யாக பிரிந்து இசை­ய­மைப்­பா­ள­ராக ஆன­வர். அதி­க­மான கன்­ன­டப்­ப­டங்­க­ளுக்கு இசை­ய­மைத்­துக் கொண்­டி­ருந்­த­வர்.)
தன்­ராஜ் மாஸ்­டர் ஜி.கே.வியிடம் இளை­ய­ரா­ஜாவை அறி­மு­கப்­ப­டுத்­திய போது தன் மாண­வன் என்று மட்­டுமே அறி­மு­கப்­ப­டுத்­தா­மல் மியூ­சிக் டைரக்­டர் என்­றும் அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார். அதன்­பின் இளை­ய­ரா­ஜா­வி­டம் இது பற்றி சொன்ன போது, உன்னை என் மாண­வன் என்­று­தான் அறி­மு­கப்­ப­டுத்த நினைத்­தேன். ஆனால் என்னை அறி­யா­மல் அப்­படி சொல்­லி­விட்­டேன் என்­றா­ராம்....!!


 Master Dhanraj is a famous and renowned music teacher in Madras (now Chennai). He is well known as the guru of greats such as Maestro Ilaiyaraaja,[1] Mozart of Madras A. R. Rahman,[1][2] veteran Chennai-based music teacher Mr.A.Abdul Sattar (who was the guru of music director Harris Jayaraj, D.Imman, S.Thaman, S.J.Suriya)and has won the Best Teacher Award from Trinity College London for the past 25 consecutive years,
popular Indian film music director Vidyasagar,[3] popular Malayalam music director Shyam and so many notable musicians in South India. Ilaiyaraaja (Previously called as Raasayya) joined Dhanraj Master as a student to learn musical instruments[4] and the master renamed and called him as just "Raaja". He is famous for teaching Western classical music.[5] Chennai, Thiruvanmiyur, U.vE.cA Library (Near Kalashetra) has his Tamil book ‘இசை விதி -> 180 degree -> பிரம்ம மேள பிரமாணம்’ – தஞ்சை தன்ராஜ் – 'icai vithi ->180 degree -> Bhramma Mela Pramanan' by Thanjai Dhanraj ( Music Law -> 180 degree -> Divine Raga system).

1 கருத்து: