சனி, 26 செப்டம்பர், 2015

லாட்டரி மார்ட்டின் வீட்டில் 1000 கோடி பறிமுதல்! தாவூத் இப்ராகிமுக்கு ரூ.5,000 கோடி கடத்தலா?

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவிலும், சிலிகுரியிலும் தமிழகத்தைச் சேர்ந்த லாட்டரி ஏஜெண்டு மார்ட்டினுக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்களில் சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கு 11 டிராலி பேக்குகளில் கட்டுகட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. கொல்கத்தாவிலும், சிலிகுரியிலும் மொத்தம் ரூ.1000 கோடி பணம் சிக்கியது.
இதைத் தொடர்ந்து லாட்டரி ஏஜெண்டு மார்ட்டினுக்கு நெருக்கமானவரான தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.நாகராஜன் என்பவரை சி.பி.ஐ. அதிகாரிகள் பிடித்துச் சென்று விசாரித்து வருகிறார்கள்.
நாகராஜனின் ஏஜெண்டுகளான பேட்ரிக், அலெக்சாண்டர் ஆகியோர் பெயரில் கொல்கத்தாவில் வீடுகள் வாடகைக்கு எடுத்துள்ளனர். சோதனை நடப்பதற்கு சற்றுமுன் இருவரும் தப்பி விட்டனர்.

டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவின் கன்னத்தில் காயம் வந்தது எப்படி? 9 பக்க கடிதத்தில் 2 பக்கம் மட்டுமே விஷ்ணுபிரியாவின் கையெழுத்து

என் மகள் எழுதிய 9 பக்க கடிதத்தை எங்களிடம் காண்பித்தனர். அதில் 2 பக்கம் மட்டுமே என்னுடைய மகள் விஷ்ணுபிரியாவின் கையெழுத்து. மற்ற பக்கங்கள் யார்? எழுதியது
கடலூர்: தனது மகள் விஷ்ணுபிரியாவின் கன்னத்தில் காயம் வந்தது எப்படி என்று அவரது தந்தை ரவி சந்தேகம் கிளப்பி உள்ளார். தற்கொலை செய்து கொண்டால் கன்னத்தில் எப்படி காயம் ஏற்படும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தலித் பெண் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா (27). கடந்த 18 ஆம் தேதி மாலையில் திருச்செங்கோட்டில் அவர் தங்கியிருந்த குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையில் உயர் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து விஷ்ணுபிரியாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று அவரது பெற்றோரும், எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், சி.பி.சி.ஐ-டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதேபோல முதல்வர் ஜெயலலிதாவும், சி.பி.சி.ஐ.டி. விசாரணையே போதுமானது என்று அறிவித்தார்.

எழுத்தாளர் ஸ்ரீதேவி மேடையில் அமரக்கூடாது ..சாமியார் அட்டகாசம்...அப்துல்கலாமின் புத்தக வெளியீட்டு விழாவில் அவமதிப்பு!


திருச்சூர் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் கடைசி புத்த்கத்தின்
மலையாள மொழியாக்கம் இன்று கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள சாகித்ய அகாடமி அரங்கில் வெளியிடபடுவதாக அறிவிக்கபட்டு இருந்தது. இந்த புத்தகத்தை ஸ்ரீதேவி எஸ்.கர்தா என்ற பெண் எழுத்தாளர் மொழியாக்கம் செய்திருந்தார். நிகழ்ச்சிக்கு சுவாமி பிரமாவிகாரி தாஸ் இதற்கு தலைமையேற்பதாக அறிவிக்கப்பட்டது.  ஆனால் இந்த நிகழ்ச்சி திடீர் என ஒத்திவைக்கப்ட்டது. காரணம் ஸ்ரீதேவிக்கு விழாவில் பங்கேற்க புத்தக வெளியீட்டாளர்கள் அனுமதி மறுத்துவிட்டனராம். இதற்கு, சாமியார் தன்னுடன் ஒரு பெண் மேடையில் அமர கூடாது என்று கூறியதே காரணம் என்று ஸ்ரீதேவி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.  இதை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எழுத்தாளர் ஸ்ரீதேவி மறுத்து விட்டார்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

ராமதாஸ் :சுங்க சாவடி வருவாயை தணிக்கை செய்யவேண்டும். வழிப்பறி கொள்ளை போன்று...

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளின் வருவாயை தணிக்கை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''விரைவான, பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்குடன் வாஜ்பாய் பிரதமராக இருக்கும்போது, தங்க நாற்கர சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி சென்னை - கன்னியாகுமரி, சென்னை - பெங்களூரு உள்ளிட்ட சாலைகள் 4 வழிச்சாலைகளாக மாற்றப்பட்டன.
தமிழகத்தில் மொத்தம் 40 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சுங்கக்கட்டணம் பல முறை உயர்த்தப்பட்டதால், பயணத்துக்கான செலவை விட, சுங்கக் கட்டணத்துக்கான செலவு அதிகரித்து விட்டது.

உலகின் மிகவும் மாசுபட்ட நகர தர வரிசை டெல்லி பாட்னா.....

உலக வங்கி வெளியிட்டுள்ள மாசுப்பட்ட நகரங்கள் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இந்திய நகரங்கள் பிடித்து சாதனை(?) படைத்துள்ளன. வளர்ந்து வரும் நாடுகளைச் சேர்ந்த 381 நகரங்களின் காற்று மாசுப்பற்றி உலக வங்கி பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 20 இடங்களில் இடம்பெற்றுள்ள நகரங்களில் 19 நகரங்கள் தெற்காசியாவை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் இந்தியாவின் தலைநகர் டெல்லி உள்ளது. பீஜிங்கில் உள்ள காற்று மாசை விட டெல்லியில் மூன்று மடங்கு அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியைத் தொடர்ந்து பாட்னா, குவாலியர், ராய்ப்பூர் ஆகிய நகரங்கள் உள்ளன. பட்டியலில் அகமதாபாத், லக்னோ, கான்பூர், அமிர்தசரஸ் ஆகிய இந்திய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.

கொங்கு எக்ஸ்பிரஸ் மத்திய பிரதேசத்தில் கொள்ளையர்களால்......

டெல்லி-கோவை இடையே இயங்கும், கொங்கு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளிடம் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில். நள்ளிரவு நேரத்தில், மத்திய பிரதேச மாநிலம் இடார்சி சந்திப்பு அருகே போலா பத்தார் ரயில் நிலையத்தை நெருங்கியபோது, அடர்ந்த வனப்பகுதியில் மறைந்திருந்த ஒரு கொள்ளை கும்பல், ரயில் மீது சரமாரியாக கற்களை வீசியது. சட..சட என சத்தம் கேட்டதால், ரயில் இன்ஜின் டிரைவர், ரயிலின் வேகத்தை குறைத்து நிறுத்தியுள்ளார்.  இதை பயன்படுத்திய அந்த கும்பல், ரெயிலில் தாவி ஏறியது. பின்னர், ரயிலில், தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணித்த பயணிகளிடம் நகை, பணத்தை தருமாறு மிரட்டி தங்க நகைகள், செல்போன்கள், ரொக்கப்பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அந்த கும்பல் இருட்டில் தப்பி ஓடிவிட்டது.

டாஸ்மாக்கை பாதுகாக்க உறுதி பூண்டுள்ள தமிழக அரசும் காவல்துறையும்......

தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை: பேரவையில் அமைச்சர் திட்டவட்டம் ரவுடிகள் அராஜகம், கள்ளச்சாராயம் பெருகுவதுடன் அரசு கஜானாவும் காலியாகும் என்பதால் மதுவிலக்கு சாத்தியமில்லாமல் உள்ளது என்று சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
குடித்து மட்டையான தந்தை
மிழக அரசின் நிறுவனங்களுள் ஒவ்வொரு ஆண்டும் அசாத்தியமான வளர்ச்சியைச் சாதித்துவரும் ஒரே நிறுவனம் டாஸ்மாக்தான். 2002-03-ம் ஆண்டுகளில் 2,828 கோடி ரூபாயாக இருந்த டாஸ்மாக்கின் வருமானம் 2014-15-ம் ஆண்டுகளில் 26,295 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இந்த ஆண்டு 30,000 கோடி ரூபாயை இலக்கு வைத்து டாஸ்மாக் அதிகாரிகளும் மாவட்ட கலெக்டர்களும் ‘உழைத்து’ வருவதாகச் செய்திகள் வருகின்றன. தமிழக மக்களில் ஆகப் பெரும்பான்மையினரைக் குடிகாரர்களாக்கி, அந்த எச்சில் காசில் வயிறு வளர்க்கிறது தமிழக அரசு குடிப்பழக்கத்தின் விபரீதம் : வீட்டுற்குக் கூட்டிப் போகவேண்டிய தந்தை குடிபோதையில் மேட்டூர் பேருந்து நிலையத்திலேயே மயங்கிச் சரிந்துவிட, என்னவென்று புரியாமல் பச்சிளம் குழந்தை முழிக்க, அதனின் அக்க பயத்தில் வீறிட்டு அழும் இக்கொடுமைக்கு இந்த அரசு பதில் சொல்லியே தீர வேண்டும்.

கனிமொழி :விஷ்ணு பிரியா காவல்துறையில் பணியாற்றி வந்த தலித்......

பெண்களுக்காகபாராளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் உரிமைக்குரல் எழுப்பிக்கொண்டே இருப்பேன்’’, என்று கனிமொழி எம்.பி. தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பெண்களின் நிலை கடந்த சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள், தமிழகத்தில் பெண்களின் நிலை எவ்வளவு மோசமானதாக மாறி வருகிறது? என்பதற்கு உதாரணங்களாக இருக்கின்றன. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு போலீஸ்டி.எஸ்.பி. ஆக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியாவின் மரணச்செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இளைய வயதுக்காரர் எவரது மரணமுமே வருத்தத்தை தரக்கூடியதுதான். அதேநேரம், விஷ்ணு பிரியா காவல்துறையில் பணியாற்றி வந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரி எனும் போது வருத்தம் அதிகமாகிறது.

Subhas Chandra Bose in Nazi Germany! Sisir K. Majumdar

 It was probably in Germany that Subhas Chandra Bose (1897-1945) was first known as ‘Netaji’, which literally means ‘leader of leaders’ (‘Führer’ is the equivalent German expression). The period of his stay in Germany was from April 1941 to February 1943. These 'Berlin Years' of Netaji are still a riddle for most of his objective and biased biographers. It is still a puzzle how a self-respecting and dynamic personality could put up for two long years with an inhuman fascist clique which desperately tried to submerge the whole of humanity in rivers of blood. But it is beyond any shadow of doubt that he was solely and unequivocally guided by one desire– the liberation of his mother India from the cruel clutches of British colonialism.
Germany and India: The prime idea which motivated Netaji was to explore all possible means for achieving the cherished goal of India’s independence. It seems that he had adopted the concept that the ‘enemy’s enemy is your friend’. He looked at Nazi Germany solely from that perspective. It followed the approach taken by Indian revolutionaries towards German during the First World War. However, the Germany of the Second World War was very different, even with respect to India. After the defeat of Germany in the First World war, the ambition of Germany was to bring about a global redistribution of colonies with the goal of establishing German supremacy on the world stage. Vis-à-vis India, a plan was hatched to form an ‘Afghan Army’ to invade India after the possible defeat of the Soviet Union in order to snatch ‘the jewel of the British Empire’.

நேரு உளவு பார்த்ததற்காக சோனியா,ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்! நேதாஜியின் பேரன்.

கோல்கட்டா,: ''நேதாஜி சுபாஷ்சந்திர போசின் உறவினர்களை உளவு பார்க்க, முன்னாள் பிரதமர் நேரு உத்தரவிட்டதற்காக, காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவர் மகன் ராகுலும் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என, நேதாஜியின் பேரன்களில் ஒருவரான சந்திரகுமார் போஸ் வலியுறுத்தி உள்ளார்.64 ஆவணங்கள்திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, மேற்கு வங்க
நேதாஜியின் பேரனான சந்திர குமார் போஸ், பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:இந்திய அரசு கூறுவது போல, 1945 ஆகஸ்ட் 18ல், தைவானில் நடைபெற்ற விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை; அதன் பிறகு பல
ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்து உள்ளார். எனினும், அவரால் இந்தியா வர முடியாத நிலை இருந்துள்ளது.என் தந்தை அமியாநாத் போசை, அப்போதைய அரசு உளவு பார்த்து வந்துள்ளது.  நேதாஜியின் ஹிட்லர்  தொடர்பு  உலகமக்களுக்கு  விபரமாக தெரிய வரும்போது  யார் யாரெல்லாம் நாகரிக உலகத்திடம் பாவமன்னிப்பு  கேட்க போகிறார்களோ தெரியவில்லை?

சரவணன் மீனாட்சி செந்தில் கைது! ஒரு டெலிவிஷன் சிரியல் ஷூட்டிங்காக இருக்குமோ?


One Video showing RJ Senthil getting arrested by Policemen is getting Viral all over Social Media. Although the Police in this Video look like they are imposters, we are not sure since there was no official news. It looks like a scene in the TV Series.
The cops in the video are wearing different colour shoes and are not in formals so there is more probability that it is at the shooting spot.
ரேடியோ மிச்சியில் ‘நீங்க நான் ராஜாசார்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகிய செந்தில், பிறகு சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் சரவணனாக அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார். தற்போது படங்களிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அவர் வேலை பார்க்கும் ரேடியோ மிர்ச்சி அலுவலகத்தில் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை. இச்சம்பவத்தால் திரையுலகில் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்

வியாழன், 24 செப்டம்பர், 2015

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் பிராமணர்களே முதலிடம் ! அரபி மொழியில் கம்பனி பெயர்களை....

மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் முதலாளிகள் பட்டியலில் பிராமணர்களே முன்னணியில் உள்ளார்கள். ஆனால் தங்கள் நிறுவனங்களின் பெயர்களை அராபியப் பெயர்களாக வைத்துக்கொண்டு இரட்டை வேடம் போட்டு வருகிறார்கள்.
இந்தியாவில் மாட்டுக் கறி ஏற்றுமதி செய்து வரும் பிரபலமான 6 கம்பெனிகளில் 4 ன் உரிமையாளர்கள் இந்துக்கள்.
மாட்டுக் கறி ஏற்றுமதியில் உலகிலேயே முதலிடத்தை பெறுவது பிரேசில். அடுத்த இடத்துக்கு வருகிறது இந்தியா. ஆஸ்திரேலியா, அமெரிக்க, இங்கிலாந்து என்று அடுத்தடுத்து வருகின்றன.
இனி இந்தியாவிலிருந்து மாட்டுக் கறி ஏற்றுமதி செய்யும் முன்னணி நிறுவனங்களின் பெயர் பட்டியலைப் பார்ப்போம்.
1. அல் கபீர் நிறுவனம் :
உரிமையாளர்கள் : திரு.சதீஷ் மற்றும் திரு.அதுல் சபர்வால் உரிமையாளர்கள்.
Al-Kabeer Exports Pvt. Ltd.
Its owner name: Mr. Shatish & Mr. Atul Sabharwal
Add: 92, Jolly makers, Chembur Mumbai 400021
2) அரேபியன் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம்
உரிமையாளர் : திரு.சுனில் கபூர்.

லெக்கின்ஸ் கட்டுரை: குமுதம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம்!

சென்னை: லெக்கின்ஸ் குறித்த கட்டுரை வெளியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழ் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, ஆன்லைன் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 'லெக்கின்ஸ் ஆபாசம் - எல்லைமீறும் இளசுகள்' என்ற தலைப்பில் குமுதம் ரிப்போர்ட்டர் வார இதழ் வெளியிட்ட அட்டைப்பட கட்டுரையில், லெக்கின்ஸ் அணிந்த பெண்களை ஆபாச கோணத்தில் படம் பிடித்து போட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.  இந்நிலையில், பெண் பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், ஆன்லைனில் கையெழுத்து இயக்கம் தொடங்கி, குமுதம் மன்னிப்பு கேட்க வலியுறுத்திவருகிறார். நேற்று தொடங்கப்பட்ட ஆன்லைன் இயக்கத்தில் இன்று நண்பகல் நிலவரப்படி ஏறத்தாழ ஐயாயிரம் பேர் கையெழுத்திட்டிருந்தனர். குமுதம் பாணியிலேயே கேட்கிறோம்: முதலைச்சர் ஜெயலலிதா மீது குமுதம்  ஆபாச குற்ற சாட்டு வைக்கிறதா?  

விஷ்ணு பிரியாவின் தோழி டி.எஸ்.பி மகேஸ்வரி புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி

நாமக்கல்: தற்கொலை செய்து கொண்ட தலித் டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவின் தோழியும், கீழக்கரை டி.எஸ்.பி.யுமான மகேஸ்வரி, புதுச்சேரியில் உள்ள, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயரதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக அவர் மருத்துவ விடுப்பில் சென்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டி.எஸ்.பி.,யாக இருந்த விஷ்ணுபிரியா, கடந்த18ம் தேதி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஷ்ணு பிரியாவின் தற்கொலை குறித்து, அவரது தோழியும், ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி டி.எஸ்.பி.,யுமான மகேஸ்வரி, காவல் துறை அதிகாரிகள் மீது, சரமாரியாக குற்றஞ்சாட்டினார்.

அசல் ஆபாச குமுதம் போன்ற பத்திரிகைகள் பெண்களின் ஆடைகள் பற்றி ....

தமிழகத்தில் இருந்து வாரம் இருமுறை வெளியாகும் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில், பெண்கள் லெக்கின்ஸ் அணிவது தொடர்பாக வெளியான கட்டுரைக்கும், அதில் இடம்பெற்ற புகைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெண்ணியவாதிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பத்திரிகைக்கு எதிராக ஆன்லைன் பிரச்சாரம் ஒன்றை அவர்கள் துவக்கியுள்ளனர்.
'லெக்கின்ஸ் ஆபாசம் - எல்லைமீறும் இளசுகள்' என்ற தலைப்பில் குமுதம் ரிப்போர்டர் பத்திரிகையில் அண்மையில் ஒரு கட்டுரை வெளியானது. அக்கட்டுரையில் லெக்கின்ஸ் அணிந்த பெண்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. சம்பந்தப்பட்ட பெண்களின் முகம் மறைக்கப்பட்டிருந்தாலும் அந்தப் புகைப்படங்கள் அவர்களுக்கு தெரியாமலேயே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இது மிகப் பெரிய குற்றம் என்பதே பெண்ணியவாதிகளின் வாதம்.
அக்கட்டுரைக்கு, பெண்ணியவாதிகள் மட்டுமல்லாமல் மற்ற பெண்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.யார் யார் என்னென்ன உடை உடுத்த வேண்டும் என்பது அவர்களின் தனிப்பட்ட மனித உரிமை. கலாசார காவலர்கள் என்று தங்களை தாங்களே எண்ணி கொள்பவர்கள் பேசாமல் முழுதும் போர்த்த சவுதிக்கு போய்விட தானே? 

வியாபம் முறைகேடு : 40 இடங்களில் சி.பி.ஐ.ஆய்வு!

மத்திய பிரதேச மாநில நுழைவுத் தேர்வு வாரியமான வியாபத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கி 2013ஆம் ஆண்டு வரை மிகப்பெரிய முறைகேடுகள் நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அரசு வேலை பெறவும், கல்லூரிகளில் உரிய படிப்பு பெறவும் ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் வியாபத்தில் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மத்திய பிரதேச கவர்னர் ராம்நரேஷ் யாதவ், முன்னாள் அமைச்சர்கள், முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் மற்றும் ஏராளமான உயர் அதிகாரிகளுக்கு இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சி.பி.ஐ. அதிரடி ஆய்வை மேற்கொண்டுள்ளது. போபால், இந்தூர், உஜான், ஜபபல்புர், லக்னோ ஆகிய 40 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்த ஆய்வில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.webdunia.com

நீதிபதிகள் செய்து கொண்டிருப்பது அதிகார துஷ்பிரயோகம். நீதிமன்ற அவமதிப்பு என்பது அதிமுக ரவுடி கையில் சிக்கிய ஆயுதம் அல்ல?

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரும் அ.தி.மு.க வழக்குரைஞர்களும் நடத்திய அவமதிப்புகள் எழுதி மாளாதவை. இது தொடர்பாக பார் கவுன்சில் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை விமரிசிப்பவர்கள் மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிவித்தார். இப்படி ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதையும், தலைவர் பதவியைத் தனது தொழிலை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்வதையும் கவுன்சில் ஆதரிக்கிறதா?
ரு அசாதாரணமான சூழல் தமிழக நீதித்துறையில் நிலவுகிறது. இதை பேசிச் சரி செய்யும் பொறுப்பில் உள்ள பார் கவுன்சில், அவ்வாறு செய்யாமல் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்துவது போல வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை என்று நீதிபதிகளின் ஆணையை அமல்படுத்தும் ஊழியர் போல நடந்து கொள்வது சரியா?
மதுரை வழக்குரைஞர் சங்கத் தலைவர் மற்றும் செயலருக்கு எதிரான ஒரு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மெக்காவில் கூட்ட நெரிசல்: 717 ஹஜ் பயணிகள் பலி 500 பேர் காயம்

சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 717 ஹஜ் பயணிகள் பலி ,மேலும் 500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மெக்கா மசூதிக்கு வெளியே இச்சம்பவம் நடைபெற்றதாக சவுதி அரேபிய டிவி உறுதி செய்துள்ளது.இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கானவர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இன்று (செப்.,24) பக்ரீத் என்பதால் அதிகமானவர்கள் வழிபாடு நடத்த மெக்கா நகரில் குவிந்தனர். அதிகமானவர்கள் ஒரே நேரத்தில் மினாவில் சாத்தான் மீது கல் எறியும் நிகழ்வில் பங்கேற்றனர். இந்நேரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி சுமார் 350 பேர் உயிரிழந்துள்ளனர்.500 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் 4 ஆயிரம் பேரும், பல வாகனங்களும் ஈடுபட்டுள்ளன .

சுபாஸ் சந்திர போஸ் ஒரு நாசி போர் குற்றவாளி? .....நேரு உண்மையில் நேதாஜியை காப்பாற்றினார்....


நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் விமான விபத்தில் மரணமாக வில்லை.அந்த விபத்து சம்பவம் நடந்ததா இல்லையா என்ற வாதப்பிரதி வாதங்கள் ஒரு புறம் இருக்க இப்படித்தான் நடந்திருக்கும் என்று பலராலும் யூகிக்கப்படும் தியரி ஒன்று உலவுகிறது, அது நேதாஜிக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை.
என்னதான் சுதந்திரம் அவசியம் என்றாலும் அவர் ஹிட்லரோடு மிகவும் அன்னியோன்னியமாக உறவாடி உதவி கேட்டமை
நாகரிக உலகில் யாராலும் மன்னிக்க முடியாத ஒரு போர் குற்றம் ஆகும்.
இன்றும் கூட பழைய நாசிகளை உலக நாடுகள் வேட்டை ஆடிக்கொண்டுதான் இருக்கின்றன. ஹிட்லரின் நாசிப்படையினரின் கொடிய போர்குற்றம் இழைத்ததாக நூரம்பெர்க் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான பழைய நாசிப்படையினர் இன்றும் கூட வேறு வேறு
பெயர்களில் வேறு வேறு நாடுகளில் பயந்து பயந்துதான் வாழ்கிறார்கள்.
நேதாஜி அவர்கள் நாசிப்படையில் இணையவில்லை என்றாலும் அவர்களிடம் ராணுவ உதவி கேட்டமையானது சாதாரண குற்றம் அல்ல. ஹிட்லரின் மனித குலவிரோத நடவடிக்கைகள் எல்லாம் நேதாஜிக்கு மிகவும் நன்றாகவே தெரியும். அவர் அதை பொருட்படுத்தவில்லை.
நல்ல காலம் ஹிட்லர் நேதாஜிக்கு கடைசியில் கைவிரித்து விட்டார். இந்தியர்களை இன்னும் பல ஆண்டுகள் பிரிட்டிஷாரே ஆளவேண்டும் என்ற கொள்கையை நேதாஜியிடம் கூறி அவரை பக்குவமாக சகல வசதிகளும் செய்து கொடுத்து ஒரு நீர்மூழ்கி கப்பல் மூலம் ஜப்பானுக்கு அனுப்பி வைத்தார். ஹிட்லர் நினைத்தால் நேதாஜியை என்னவும் செய்திருக்க முடியும் ஆனால் செய்யவில்லை.
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அடுத்ததாக செய்த விடயம்  ஹிட்லர் கொடுத்த நீர்முழ்கி கப்பலில் ஜப்பான் சென்றார். அங்கு அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.  https://www.quora.com/What-is-the-story-behind-the-swastika-Hindu-symbol-Is-its-resemblance-to-the-Nazi-symbol-just-a-coincidence

புதன், 23 செப்டம்பர், 2015

வேறு ஜாதி பையனை காதலித்ததால் பேத்தியை கொன்ற ஊர் நாட்டமை! ஆண்டிபாளையம்...

கடலூர் மாவட்டம் சோழதரம் அருகே உள்ள ஆண்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருடைய 3–வது மகள் ரமணிதேவி (வயது 19).
இவர் காட்டுமன்னார் கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 2–ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் மதுரை மாவட்டம் தம்பியார் பட்டியை சேர்ந்த மருத நாயகம் (19) என்பவர் படித்து வந்தார்.
ரமணிதேவியும், மருத நாயகமும் காதலித்து வந்தனர். இந்த விஷயம் ரமணிதேவி வீட்டிற்கு தெரியவந்தது. பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரமணிதேவியின் தாத்தா வீராசாமி (வயது 66) ஊர் நாட்டாமையாக இருந்து வந்தார். அவரும் ரமணிதேவியை கண்டித்தார்.
கடந்த ஆகஸ்டு மாதம் 15–ந்தேதி கல்லூரிக்கு சென்ற ரமணிதேவி வீட்டிற்கு வரவில்லை. காதலன் ஊருக்கு சென்று விட்டார்.

ஜப்பான்:செயற்கை சிறுநீரகம் பன்றி எலி சோதனைகள் வெற்றி!

ஜப்பானில் விஞ்ஞானிகள் உருவாக்கிய சேர்க்கை சிறுநீரகம் எலி மற்றும் பன்றியிடம் செய்யப்பட்ட சோதனை வெற்றியடைந்தது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உடல் பாகங்கள் தட்டுப்பாடு உள்ளதால் மனிதர்களின் உறுப்புகள் ஆய்வகத்தில் வைத்து விஞ்ஞானிகளால் தயாரிக்கப்படுகிறது. அது போன்று சிறுநீரகங்கள் உருவாக்கும் முயற்சியில் ஜப்பானில் டோக்கியோவில் உள்ள ஜி.கே மருந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் தக்ஷி யோகோ தலைமையிலான குழு செயற்கை சிறுநீரகம் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஜெயலலிதா கலைஞருக்கு சவால்: நீதிமன்ற பாதுகாப்பு வழக்கில் தி.மு.க., இணைய தயாரா?

'சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை பாதுகாப்பு தொடர்பான வழக்கில், தி.மு.க., இணைய தயாரா?'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, முதல்வர் ஜெயலலிதா சவால் விடுத்துள்ளார்.சட்டசபையில் நேற்று, காவல்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதம்: />தி.மு.க., - வேலு: 'உயர் நீதிமன்ற பாதுகாப்பில், மாநில போலீசார் மீது நம்பிக்கை இல்லை' என, தலைமை நீதிபதி கூறியுள்ளார்.இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது: தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அப்படி எதுவும் கூறவில்லை. அவர் கூறியதாக, சில பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தவறானது. 'தமிழை, உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும்; 'மெட்ராஸ் உயர் நீதிமன்றம்' என்ற பெயரை, 'சென்னை உயர் நீதிமன்றம்' என, மாற்ற வேண்டும்' என்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை பிடித்தபடி, வாயில் கறுப்புத் துணி கட்டி, வழக்கறிஞர் தமிழ்செல்வன் தலைமையில், 12 வழக்கறிஞர்கள், சென்னை உயர் நீதிமன்ற முதல் அமர்வில், இம்மாதம், 14ம் தேதி போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது, நீதிமன்ற பதிவாளர் கொடுத்த புகாரில், கைது செய்யப்பட்டு உள்ளனர்.சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படை அல்லது அதற்கு இணையான பாதுகாப்பு அளிப்பது குறித்து பதில் தரும்படி, தமிழக உள்துறை செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.  போலீசுக்கே பாதுகாப்பு இல்ல .. இதுல எங்க இருந்து போலீஸ் நமக்கு தர்றது

வியாபம் ஊழல்: பார்ப்பன கிரிமினல்தனம்! (பகுதி – 2) சாதனா முதலைமைச்சரின் மனைவி .....

யோகேஷ் உப்ரித்எம்.பி.பி.எஸ். மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான (எம்.டி., எம்.எஸ்.) நுழைவுத் தேர்வுகளில் மோசடிகள் செய்து, இலட்சக்கணக்கில் இலஞ்சம் கொடுத்த மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சீட்டுகளை ஒதுக்கிக் கொடுப்பது வியாபம் ஊழலில் கேந்திரமான புள்ளியாக இருந்திருக்கிறது. இந்த நுழைவுத் தேர்வு மோசடிகள், முன்னாபாய் ஸ்டைல், ஆள்மாறாட்டம், ரயில் இன்ஜின்-பெட்டி முறை, விடைத்தாள்களைத் திருத்துவது – என நான்கு வழிகளில் நடைபெற்றிருப்பதைக் கடந்த இதழிலேயே குறிப்பிட்டிருந்தோம். தனியார் மருத்துவக் கல்லூரி அதிபர்கள் நடத்திய ஊழலைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக, சௌஹான் அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்து கோடி ரூபாய் லஞ்சமாக அளிக்கப்பட்டதை வாக்குமூலமாக அளித்திருக்கும் யோகேஷ் உப்ரித் மருத்துவ நுழைவுத் தேர்வு வினாத்தாட்கள் இடைத்தரகர்களுக்குக் கசியவிடப்படும். அவர்கள் அதனைப் “புதிர்களை விடுவிப்பவர்களிடம்” எடுத்துச் செல்வார்கள். நுழைவுத் தேர்வு வினாக்களுக்கு அவர்கள் கூறும் பதில்கள் “வாஸ் ரெக்கார்டரில்” பதிவு செயப்பட்டு, அவை இலஞ்சம் கொடுத்த மாணவர்களுக்கு அளிக்கப்படும் – இதுதான் முன்னாபாய் ஸ்டைல்.

இந்தியா ஆதரிக்காது? நேபாளின் புதிய அரசியல் சட்டம் குறித்து நேபாள ஊடகங்கள் இந்தியா மீது பாய்ச்சல்!


நேபாளத்தில் புதிய அரசியல் சட்டத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பை அடுத்து பிரதமர், சுஷில் கொய்ராலா, ஐநா பொதுச்சபையில் உரை நிகழ்த்த வைத்திருந்த திட்டத்தை ரத்து செய்திருக்கிறார். கடந்த சில வாரங்களாக நேபாளத்தில் தெற்குப் பகுதி சமவெளிப் பிரதேசங்களில் வெடித்த வன்முறை கலந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
நேபாளத்தின் அண்டை நாடான இந்தியா இந்த நெருக்கடி குறித்து தனது கவலைகளை வெளியிட்டு, நேபாள அரசியல் தலைவர்கள் கருத்தொற்றுமையை எட்டவேண்டும் என்று கோரியிருக்கிறது.
நேபாள மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் இந்த சமவெளிப் பகுதியில் வாழ்கின்றனர்.

தமிழை வழக்காடும் மொழியாக அறிவிப்பதில் தவறு இல்லை: மார்க்கண்டேய கட்ஜூ

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாக தமிழை கொண்டு வருவது நியாயமானது தான் என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டுவர வேண்டும் என்ற வழக்குரைஞர்களின் போராட்டம் நியாயமானது தான். தமிழ் போன்ற உயரிய மொழியை வழக்காடுவது பலர் தரப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தமிழை வழக்காடும் மொழியாக அறிவிப்பது எந்த தவறும் இல்லை என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார் nakkheeran.in

மம்முட்டி மீது வழக்கு...இந்துலேகா சோப்பு பாவித்தால் அழகை பெறலாம்...விளம்பரத்தால் வில்லங்கம் ...

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ள இவர், இந்துலேகா ஒயிட் சோப்” நிறுவனத்தின் விளம்பரங்களில் தோன்றி வந்தார். இந்த விளம்பரங்களில் இந்துலேகா சோப்பை பயன்படுத்துவதால், வெள்ளையுடன் பிரகாசமான அழகை பெறலாம் என்று மம்மூட்டி விளம்பரப்படுத்துவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், மம்மூட்டி நடித்த விளம்பரத்தைப் பார்த்து இந்துலேகா சோப்பை ஒரு வருடத்திற்கு மேலாக பயன்படுத்தியதாகவும், ஆனால், மம்மூட்டி கூறியது போல் வெள்ளையான நிறத்தை பெறவில்லை என்று கேரளாவின் வயநாடு பகுதியைச் சேர்ந்த சிற்பி கே சத்து என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மம்மூட்டிக்கும் இந்துலேகா சோப் நிறுவனத்துக்கும் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

Vasan eye care 2009-ம் ஆண்டு 16 கோடியில் இருந்து இன்று 500 கோடி......

கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமானதா? 2002-ம் ஆண்டில் ‘வாசன் ஐ கேர்’ என்ற பெயரில் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் கண் மருத்துவமனைகள் வரிசையாகத் தொடங்கப்பட்டன. . அதன்பிறகு, 2008-ம் ஆண்டு வரை எந்த வளர்ச்சியும் இல்லாத நிறுவனமாகத்தான் வாசன் கண் மருத்துவமனை இருந்தது. ஆனால், 2008-க்குப் பிறகு அந்த நிறுவனம் வேகமாக வளரத் தொடங்கியது. 2009-ம் ஆண்டு அதன் முதலீடு 16 கோடியில் இருந்து இன்று 500 கோடியைத் தாண்டி விட்டது என்று சொல்லப்படுகிறது.

 வாசன் ஐ கேர்... பின்னணியில் கார்த்தி சிதம்பரமா?‘கண்’ முறைகேடு - சிதம்பரத்துக்கு சிக்கல்!“என் நேர்மையை சந்தேகிப்பதற்குப் பதில் என் நெஞ்சில் குத்துங்கள்” - நாடாளுமன்றத்தில் மக்களவையில் நின்று உருக்கமாகப் பேசினார் அன்றைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.  2012-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி,  நாடாளுமன்ற மக்களவை எதிர்க் கட்சித் தலைவராக இருந்த அருண் ஜெட்லி, ‘ஏர்செல்-மேக்ஸிஸ்’ விவகாரத்தில் ப.சிதம்பரத்தைக் குற்றம்சாட்டிப் பேசினார். அப்போது பதிலளித்துப் பேசிய ப.சிதம்பரம், உருக்கமாக உதிர்த்த வார்த்தைகள்தான் இவை.

நரபலி பழனிசாமியிடம் குழைந்து குழைந்து காவலர்கள்: நீங்க எவ்வளவோ செஞ்சிருக்கீங்க ..சகாயம் குடைச்சல் தாங்க முடியல்ல சார் ...

அய்யா வாங்க... பார்த்து வாங்க!”
பி.ஆர்.பி-யிடம் போலீஸார் காட்டிய கரிசனம்கிரானைட் குவாரியில் நரபலி கொடுத்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு வராமல் தட்டிக்கழித்துவந்த பி.ஆர்.பி. ஒரு வழியாக, கடந்த 17-ம் தேதி அதாவது, விநாயகர் சதுர்த்தி அன்று கீழவளவு காவல் நிலையத்துக்கு வந்தார். அன்றைய தினம், கீழவளவு காவல் நிலையம் தலைகீழாக மாறியிருந்தது. மெயின்ரோடு மறிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. காவல் நிலையம் நன்றாக சுத்தம் செய்யப்பட்டு புதுப்பொலிவோடு இருந்தது. எல்லாம் பி.ஆர்.பி. விசாரணைக்கு வருகிறார் என்பதால்தான். பகல் 12 மணியளவில், தனது வழக்கறிஞர்கள் மற்றும் உறவினர்கள் புடைசூழ பி.ஆர்.பி. வந்தார். அங்கு அவருக்கு போலீஸ் அதிகாரிகள் கொடுத்த வரவேற்பையும், மரியாதையையும், கரிசனத்தையும் கண்டு அங்கிருந்த அனைவரும் திகைத்துப்போனார்கள்.

கிரானைட் குவாரியில் நரபலி கொடுத்தது உண்மை! ஆதாரம் சிக்கியது...

மதுரை :
கிரானைட் குவாரியில் நரபலி புகாரில் தோண்டிய இடத்தில் கடைசியாக எடுக்கப்பட்ட 2 எலும்புக்கூடுகள், முக்கிய தடயமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவைகள் வழக்கமான முறையின்றி அவசரமாக புதைக்கப்பட்டிருப்பது போல தெரிவதால், விசாரணை சூடு பிடித்துள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே கிரானைட் குவாரிக்காக மனநலம் பாதித்தோரை நரபலி கொடுத்து, சின்னமலம்பட்டி மணிமுத்தாறு பகுதியில் புதைத்ததாக சேவற்கொடியோன் என்பவர் புகார் தெரிவித்தார்.  இதனை தொடர்ந்து விசாரணை அதிகாரி சகாயம் முன்னிலையில் கடந்த 13 ஆம் தேதி தோண்டப்பட்டதில், 4 உடல்களின் எலும்புக்கூடுகள் சிக்கின. இதன்பேரில் பிஆர்பி கிரானைட் நிறுவன உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி, மேலாளர் அய்யப்பன், ஊழியர் ஜோதிபாசு, ஜேசிபி டிரைவர் பரமசிவம் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நரபலி கொடுத்துவிட்டு பிணத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி ஆழத்தில் புதைத்திருக்கலாம் என்றும், எனவே ஏற்கனவே தோண்டிய இடத்தில் இன்னும் ஆழமாக தோண்டினால் மேலும் ஆதாரங்கள் கிடைக்கும் எனவும் சகாயம் கூறியதன் அடிப்படையில் 12 அடி ஆழம் வரை தோண்டும் பணி கடந்த 18 ஆம் தேதி துவங்கி நேற்று (செப்.21) வரை நடைபெற்றது. இதுவரை 8 எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன.

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

தமிழில் இணைய இதழ்கள் வெற்றி பெற்றுள்ளன! புள்ளிவிபரம்..கீற்று ..

இணைய இதழை தினம் எத்தனை பேர் வாசிக்கிறார்கள், எந்தெந்த நாடுகளில் வாசிக்கிறார்கள் என்ற விவரத்தை அறிய முடியும். உதாரணமாக கீற்று இணைய தளத்தை 79 நாடுகளில் வாசிக்கிறார்கள் என்ற விவரம் எங்களுக்குத் தெரியும். அது மட்டுமல்ல, எவ்வளவு நேரம் இணையத்தில் இருந்தார்கள், எத்தனை பக்கங்கள் வாசித்தார்கள், எத்தனை பேர் மீண்டும் மீண்டும் இணைய தளத்துக்கு வருகிறார்கள், ஒரு குறிப்பிட்ட பக்கத்தை எத்தனை பேர் வாசித்தார்கள், எந்தப் பக்கத்தை வாசகர்கள் அதிகம் விரும்பி படிக்கிறார்கள், இந்தியாவில் இருந்து எத்தனை பேர், அமெரிக்காவில் இருந்து எத்தனை பேர், எந்த சர்வீஸ் ப்ரோவைடரில் (BSNL, Airtel போன்றவை) இருந்து எத்தனை பேர் போன்ற துல்லியமான புள்ளி விவரங்களை இணைய இதழ் நடத்துபவர்களால் பெற முடியும். இவ்வளவு ஏன்? தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவேடார் நாட்டில் கீற்றுக்கு ஒரு வாசகர் இருக்கிறார் என்ற விவரம் கூட எங்களுக்குத் தெரியும். அங்கே இருக்கும் தமிழர்களில் இவர் மட்டுமே அரசியல் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவராக இருக்கலாம்.

சென்னை ஐஐடி-யில் ஆந்திர மாணவர் தற்கொலை! Telugu student commits suicide in IIT Chennai.


23 வயதான ஐஐடி-மெட்ராஸ் மாணவர் என்.நாகேந்திர குமார் ரெட்டி தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த என்.நாகேந்திர குமார் ரெட்டி, எம்.டெக் 2-ம் ஆண்டு மாணவராவார். இவர் தனது சொந்த ஊருக்குச் சென்று திரும்பிய பிறகு இந்த துயரமான முடிவைத் தேடிக் கொண்டுள்ளார். மணப்பாக்கத்தில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தின் நிதியுதவியில் இவர் ஐஐடி-யில் படித்து வந்தார். கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது பெற்றோரை பார்க்க சொந்த ஊருக்குச் சென்றார். இந்நிலையில் நேற்று சென்னை திரும்பிய இவர் தனது விடுதி அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனையடுத்து இவரது சகமாணவர்களுக்கு சந்தேகம் வர நாகேந்திர குமார் தங்கியிருந்த அறையின் ஜன்னல் வழியாக பார்த்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.

பரணிமணி:உள்கட்சி ஜனநாயகம் பற்றிப்பேச வைகோவுக்கு அருகதையில்லை.

காலை, மாலை, இரவு என தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றுபவர் வைகோ : பரணிமணி பரபரப்பு குற்றச்சாட்டு மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கரூர் மாவட்ட செயலாளர் பரணிமணி, கரூரில் செய்தி யாளர்களிடம் பேசியபோது வைகோ மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். 
அவர், ‘’காலை, மாலை, இரவு என தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றுபவர் வைகோ. கூட்டணி பற்றி அறிவித்ததில் இருந்தே மதிமுகவில் சலசலப்பு நீடித்து வருகிறது. ஜூன் -1ல் திமுக உடன் கூட்டணி என மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அறிவித்தார் வைகோ. செப்டம்பர் -2ல் அதிமுக, திமுக உடன் கூட்டு இல்லை என வைகோ அறிவித்தார். மதிமுக தலைமையை தொண்டர்கள் இனிமேலும் நம்ப தயாராக இல்லை. திமுகவில் நிலவும் உள்கட்சி ஜனநாயகம் பற்றிப்பேச வைகோவுக்கு அருகதையில்லை. மதிமுக தலைமையை சந்திக்க நிர்வாகிகளுக்கு அனுமதி கிடைப்பதில்லை. பஞ்சு - நெருப்பு போல மதிமுக தலைமை நிர்வாகிகளுக்கு இடையிலான தொடர்புள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் கரூர் மாவட்டத்தில் தான் உதயமானது. என்னை நீக்கியது மூலம் மதிமுகவின் அழிவுகாலம் கரூரிலேயே தொடங்கியுள்ளது’’ என்று கூறினார் nakkheeran,in

ஜெயலலிதா: ஸ்டாலினின் பேஸ்புக்கில் வெளியாகும் தகவல்கள் எல்லாம் அவருடையதுதானா?

காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவதாத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மு.க. ஸ்டாலினின் பேஸ்புக்கில் வெளியாகும் தகவல்கள் எல்லாம் அவருடையதுதானா என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அவர் கூறுகையில், சட்டம் ஒழுங்கு நிலைமை பற்றியும், காவல் துறையினர் செயல்பாடு பற்றியும் எதிர்மறை கருத்துகளை சில சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கே எடுத்துக் கூறினார்கள். இதைப் பற்றி சிந்திக்கும் போது, ஃபிரான்ங் ஹெர்பர்ட் என்ற அமெரிக்க அரசியல்வாதி தெரிவித்த கருத்துகள் தான் என் நினைவுக்கு வருகின்றன. “The purpose of argument, is to change the nature of truth” என்றார். அதாவது விவாதத்தின் குறிக்கோள் உண்மை நிலையை மாற்றுவதே ஆகும் என்பதாகும். அந்த அடிப்படையிலேயே உண்மையை திரித்து விடலாம், உண்மையை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து உண்மைக்கு மாறான விமர்சனங்களை சிலர் தங்களது பேச்சுகள் மூலமாகவும், சிலர் அறிக்கைகள் மூலமாகவும், சிலர் முகநூல் பதிவுகள் மூலமாகவும் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

நேதாஜி தன் மரண செய்தியைக் கேட்டு சிரித்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் ஆசம்கர் மாவட்டம், முபாரக்பூர் வட்டம், டக்கோவா கிராமம். இங்கேதான் இருக்கிறார் சைபுத்தீன் என்கிற நிஜாமுதீன். அவர் வைத்திருக்கும் பழைய பர்மா பாஸ்போர்ட்டின்படி இப்போது அவருக்கு வயது 115.
சுபாஷ் சந்திர போஸின் மெய்க்காவலர்களில் ஒருவர். போஸ் சம்பந்தமான ஆவணங்களை மம்தா பானர்ஜி அரசு வெளியிட்டது நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கியிருக்கும் சூழலில், நிஜாமுதீன் பகிர்ந்துகொள்ளும் செய்திகள் போஸ் தொடர்பான மர்ம முடிச்சுகளை மேலும் அவிழ்க்கின்றன.
கேள்வி – சுபாஷ் சந்திர போஸிடம் நீங்கள் பணியில் சேர்ந்தது எப்படி?
எம் தந்தை சிங்கப்பூரில் பிழைக்கப்போனவர். சிங்கப்பூரை அப்போது ஆண்ட பிரிட்டிஷ் அரசு பல இளைஞர்களை பலவந்தமாகத் தன் படையில் சேர்த்தது.

சிட்டகாங் துறைமுகத்தில் கப்பல் container ரில் போலி இந்திய கரன்சிகள் பிடிபட்டது ..பாகிஸ்தானில் இருந்து துபாய் வழியாக...

Five detained after Customs seizes huge amount of Indian rupees in container at Chittagong port
பங்களாதேஷின் தென்பகுதித் துறைமுகமான சிட்டகாங்கில் ஒரு கப்பலிலிருந்து போலி இந்திய ரூபாய் நோட்டுகள் பெருமளவு கைப்பற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு உளவுத் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். ஐக்கிய அரபு எமிரேட்டுகளிலிருந்து வந்த இந்தக் கப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கள்ளநோட்டுகள் மிக உயர்ந்த தரத்தில் இருந்ததாக அவர்கள் கூறினர். இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் அச்சிடப்பட்ட பல லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள இந்தியப் போலி ரூபாய் நோட்டுகள் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இந்தியாவுக்குள் புழக்கத்துக்கு விடப்படுகின்றன என்பதை இந்தியாவின் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை நிறுவனம் விசாரித்து வருகிறது.bbc.tamil.com

திங்கள், 21 செப்டம்பர், 2015

ஸ்டாலின்:மதுவிலக்கு நிச்சயம்...திமுக சொல்வதை செய்யும் என்று மக்களுக்கு தெரியும்! நமக்கு நாமே.....


தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்  "நமக்கு நாமே" பயணத்தை தொடங்கி இன்று கன்னி யாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு நடைபயணமாகச் சென்று அனைத்து தரப்பட்ட மக்களையும் சந்தித்தார். நமக்கு நாமே’ தொடக்க நிகழ்ச்சியாக அய்யன் திருவள்ளுவர் சிலை, காமராஜர் மணி மண்டபம், காந்தி மண்டபம், பேரறிஞர் அண்ணா சிலை ஆகிய இடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். அங்கு சுற்றுலா பயணிகள், கடைகாரர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆகியோருடன் கலந்துரையாடல் நடத்தினார்.குறிப்பாக மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மகளிர்கள் பங்கேற்று, "திமுக ஆட்சியில் கிடைத்த எந்த நலத்திட்டமும் தற்போது கிடைக்கப் பெறவில்லை. நியாய விலைக் கடையில் கூட எந்த பொருளும் முறையாக வழங்குவதில்லை. பேருந்து வசதிகள் இல்லை. இருக்கின்ற பேருந்துகளும் பராமரிப்பு இல்லை" என்று சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, "இந்த நிலை மாற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தனர். "நீங்கள் விரும்பும் மாற்றத்தை நாம் அனைவரும் சேர்ந்து தான் ஏற்படுத்த முடியும். அதற்காகத் தான் "நமக்கு நாமே" பயணம் என்றும்’’ மு.க.ஸ்டாலின்  விளக்கினார். 

ராமதாஸ்: சோமாலியா போலீஸைவிட மோசமான நிலையில் தமிழக காவல்துறை!

ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையானதாக போற்றப்பட்ட தமிழக காவல்துறை இப்போது சோமாலியா நாட்டு காவல்துறையைவிட மோசமான நிலைக்கு சென்றுவிட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக காவல்துறை மோசமான நிலைக்கு சென்றுவிட்டதாகக் கூறி அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நாளை நடைபெறவிருக்கிறது. இதற்கு ஜெயலலிதா பதிலளிக்க வேண்டும் என்பதற்காக கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற வேண்டிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் 6 மாதம் தாமதமாக இப்போது நடைபெறவுள்ளது. இதில் காட்டிய ஆர்வத்தை காவல்துறையை மேம்படுத்துவதில் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அட்டாக் பாண்டி இன்று மும்பையில் கைது! வழக்கில் அழகிரி ஸ்டாலின் பெயர்கள் சேர்க்கப்படுமா? பொட்டு சுரேஷ் கொலை வழக்கு....

பொட்டு சுரேஷ் கொலைவழக்கில் இரண்டரை ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த மதுரை சேர்ந்த அட்டாக் பாண்டி இன்று மும்பையில் கைது செய்யப்பட்டார். மு.க.அழகிரியின் நண்பரான பொட்டு சுரேஷ்,கடந்த 2013ம் ஆண்டு அழகிரி வீட்டருகே உள்ள சாலையிலேயே வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது உடலில் 37 வெட்டுக் காயங்கள் இருந்தன. கொலையாளிகளைப் பிடிக்க மாநகர காவல் துணை ஆணையர் சமந்த்ரோஹன் ராஜேந்திரா தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கொலை நடந்த 2-வது நாளில், அட்டாக் பாண்டியின் ஆதரவாளர்கள் 7 பேர் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

மோடி:விவசாயிகள் தற்கொலைகள் குறைந்து வருகின்றன! இதுவுல பெருமை வேற.....

06-farmer-suicideர்நாடகத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் தீவிரமடைந்து கொண்டிருந்த நேரத்தில்தான், மோடி ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் குறைந்து வருகின்றன என்று கடந்த ஜூலையில் மத்திய விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் ஆரவாரமாக அறிவித்துக் கொண்டிருந்தார். விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளுக்கு கடன் சுமையோ, விவசாயப் பிரச்சினைகளோ காரணமல்ல; காதல் விவகாரம், குடும்பப் பிரச்சினைகள், நோகள், ஆண்மையின்மை, போதை மருந்து, குடிப்பழக்கம், வரதட்சிணை முதலான தனிப்பட்ட விசயங்கள்தான் காரணம் என்று தேசிய குற்றப்பதிவு ஆணையகத்தின் புள்ளிவிவரங்களை எடுத்துக் காட்டி, வாய்க்கொழுப்பேறி இந்த அமைச்சர் வக்கிரமாகப் பேசியுள்ளார். தற்கொலைகள் மேலும் குறைந்துள்ளதால் நாம  செவ்வாய் கிரகத்துக்கு மட்டுமல்ல அப்பிடியே வியாழன்  சுக்கிரன் நெப்டியூன் போன்ற கிரகங்களுக்கும் ராக்கெட்டுக்களை அனுப்புவோம்.. அதுமட்டுமல்ல அம்பானியையும் அதானியையும் பில்கேட்டை விட பணக்காரராக்குவோம்ல...

Alif ; இஸ்லாத்திற்கு எதிரான படமல்ல, இஸ்லாமிய பெண்களுக்கு ஆதராவன படம்


கேரளாவில் 2015 பிப்ரவரி மாதம் வெளியான மலையாளப் படத்தை நேற்று இரவு DVD யில் பார்த்தேன்.
maxresdefault
‘முகமது நபியிடம் ஒருவர் கேட்டார், நான் வாழ்க்கையில் அதிகம் மதிக்கப்பட வேண்டியது யாரை? அதற்கு நபிகள் நாயகம் தாயை என்றார். ழூன்று முறை கேட்டபோதும் தாயை தான் என்றார். நான்காவது முறை தான் தந்தையை என்றார்’ இப்படியான பின்னணி குரலோடு துவங்கிறது படம்.
‘தலாக்’ என்கிற திருமண முறிவால் பாதிக்கப்படுகிற பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை முஸ்லிம் தாய்மார்களைக் குறித்துக் கனிவோடும், துணிவோடும் பேசுகிறது படம்.
கொள்ளுப் பாட்டி, பாட்டி, அம்மா, பேத்தி என்று நான்கு தலைமுறை பெண்களோடு அவர்களின் துயரங்களோடு நம்மையும் பங்குபெறச் செய்திருக்கிறார் இயக்குநர்

விஷ்ணுப்பிரியாவின் இறுதி கடிதத்தின் பல பக்கங்களை காணவில்லை! இது கொலை அல்லது தூண்டப்பட்ட தற்கொலை!

திருச்செங்கோட்டில் தற்கொலை செய்து கொண்ட, டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா கடிதத்தின் அனைத்து பக்கங்களையும் வெளியிடாமல், குறிப்பிட்ட சில பக்கங்களை மட்டுமே போலீசார் வெளியிட்டுள்ளதால், தற்கொலைக்கான காரணங்களை மூடிமறைக்க முற்பட்டுள்ளதாக, சர்ச்சை எழுந்துள்ளது.சேலம் மாவட்டம், ஓமலுாரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ். ஜூன், 23ல், திருச்செங்கோட்டில் கடத்தப்பட்டு, பள்ளிப்பாளையம் அருகே தண்டவாளத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.இந்த கொலையின் பரபரப்பு முடிவுக்கு வரும் முன், வழக்கின் விசாரணை அதிகாரியான, திருச்செங்கோடு டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா, 18ம் தேதி, முகாம் அலுவலகத்தில் உள்ள வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலைக்கு முன், விஷ்ணுபிரியா, 10 பக்க கடிதம் எழுதியிருந்ததாக, முதலில் தகவல் வெளியானது. ஆனால், பத்திரிகையாளர்களுக்கு, ஒன்பது பக்க கடிதத்தை மட்டுமே, இரு பாகங்களாகபோலீசார் வழங்கினர்.      பல பக்க கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து இருப்பது சந்தேகம் கொடுக்கிறது..........மேலும் கடிதத்தில் இதை அரசியல் ஆக்க கூடாது .....அந்த gokul ராஜ் வழக்கோடு இதை சம்பந்த படுத்த கூடாது என்று எழுதி இருபதாக சொல்ல படுவது நம்பும் படியாக இல்லை ......விட்டால் இன்னும் காவல் துறைக்கு அதிக ஊதியம் வழங்க 7 வது pay commision அமுல் படுத்துங்கள் என்று எழுதி இருபதாக கூட சொல்ல்வார்கள் ...........தற்கொலைக்கு முயன்றவர் எதோ பெரிய பொது கூட்டத்தில் பேசுவதற்கு உரை தயாரித்து இருபதாக சொல்ல்வது மிக பலத்த சந்தேகம் கொடுக்கிறது

கிரீமி லேயர் ஏன் கூடாது? விகிதாச்சாரப் பங்கீடு ஏன் வேண்டும்? இராமியா.

ஜெகஜீவன்ராம் அவர்கள் தொடர் வண்டித் (Railway) துறை அமைச்சராக இருந்த போது, உயர்நிலைப் பணிகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களை 18% இடம் பெற வைத்து விட வேண்டும் என்று கடுமையாக முயன்றார். தனது அதிகாரம் முழுவதையும் பயன்படுத்தத் தயங்கவில்லை. ஆனால் பார்ப்பன ஆதிக்க வர்க்கம் அவருக்கு எதிராக நுட்பமான சதிகளைச் செய்தது. பார்ப்பனர்களைப் பொருத்த மட்டில் வளர்ந்த பிரிவினர், வளராத பிரிவினர் என்பதை விட, நிர்வாகத்தில் தங்கள் சதிச் செயல்களைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் இருந்தால் தான், தங்களுடைய அதிகாரப் பிடிப்பு தளராமல் இருக்கும் என்று நினைத்தனர் / நினைக்கின்றனர். (ஒருவேளை திறமைசாலிகள் தேர்ந்து எடுக்கபபட்டாலும் அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்காமல் காயடிக்க விடுவதிலும் பார்ப்பனர்கள் வல்லவர்கள்.) ஆகவே ஜெகஜீவன்ராமின் சமூக நீதி உணர்வையும் அதைச் செயல்படுத்த முனையும் அவரது நிர்வாகத் திறமையையும் வீணடிக்க, தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களில் உள்ள திறமைசாலிகளை, வேண்டும் என்றே புறக்கணித்து விட்டு, அவர்களில் உள்ள அப்பாவிகளை (naive) உயர் நிலைகளில் அமர்த்தி, அவர்களுக்குத் திறமை இல்லை என்று ஜெகஜீவன்ராமிடம் பொய் வெளிச்சம் போட்டுக் காண்பித்து, அவரைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினர். ஜெகஜீவன்ராமின் அவ்வளவு கடுமையான முயற்சியாலும், அப்பாவிகளை பணிக்கு எடுத்துக் கொண்ட பார்ப்பனர்களின் 'கருணை' மிகுந்த உள்ளத்தால் தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களைப் பணிக்கு எடுத்துக் கொண்ட நிலையிலும் அவர்களது எண்ணிக்கை 10% கூட எட்டவில்லை. அதற்குள் ஜெகஜீவன்ராமைக் களைக்க வைத்து விட்டார்கள். (நிர்வாகத் திறனுக்குப் பெயர் பெற்ற ஜெகஜீவன்ராமையே களைக்க வைத்த பார்ப்பன ஆதிக்க வர்க்கத்தின் எதிர்மறை வலிமையை நாம் கணக்கில் எடுததுக் கொள்ளாமல் இருக்கக் கூடாது)
வளர்ந்த பிரிவினர் (creamy layer) என்பது பார்ப்பன அதிகார வர்க்கத்தால் இந்திய வெகுமக்களுக்கு எதிராகத் திணிக்கப்பட்ட கருத்து ஆகும். உச்ச நீதிமன்றம் இதைச் செய்வதற்கு முன்பேயே, பார்ப்பன ஆதிக்க வர்க்கம் இதை மறைமுகமாக, இன்னும் நுட்பமாகச் செயல்படுத்திக் கொண்டுதான் இருந்தது.

விஷ்ணுப்பிரியாவின் இறுதி சடங்கில் அதிமுகவும் பாமகவும் பங்கேற்காதது ஏன்?


நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பியாக கடந்த 7 மாதமாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுப்பிரியா(27). நேற்று முன்தினம் வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே அவரது உடல் சொந்தவூரான கடலூரை அடுத்த கொண்டூருக்கு கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை 10.50 மணிக்கு விஷ்ணுப்பிரியாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. 12. 30 மணிக்கு தென்பென்னை ஆற்றக்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. விஷ்ணுப்பிரியாவின் இறுதிச்சடங்கில் கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள், திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்றனர். அதிமுக மற்றும் பாமகவினர் மட்டும் பங்கேற்கவில்லை

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட மகன்..அமெரிக்காவில் வழக்கை சந்திக்கும் இந்திய தம்பதிகள்

A California couple is currently in the midst of a legal battle over their autistic son, whom neighbors blame for lowering the value of their Silicon Valley homes.A lawsuit filed by the neighbors of Vidyut Gopal and Parul Agrawal
ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட மகனின் நடவடிக்கையால் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய தம்பதிகளின் நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டுள்ளனர். கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் வித்யுத் கோபால்- பாருள் அகர்வால் தம்பதியரின் மகன் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டுள்ளான். இவன் பக்கத்து வீடுகளில் வசிக்கும் குழந்தைகளின் தலை முடியை இழுப்பது, கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், இது பொதுமக்களுக்கு தொல்லை தருவதாக இருப்பதால் நடவடிக்கை எடுக்கும்படி கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனால் மற்றவர்கள் தாக்கப்படவோ அல்லது பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி கோபால்- பாருள் அகர்வால் தம்பதியருக்கு உத்தரவிட்டார். இதனால் அவர்கள் 7 ஆண்டுகாளாக வசித்துவந்த வீட்டை காலி செய்யும் நிலை ஏற்பட்டது. இந்த வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை விசாரனைக்கு வரும் நிலையில், இந்த விவாகரம் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. அவர்களில் பலர் கோபால்- பாருள் அகர்வால் தம்பதியருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் maalaimalar.com

5 மாதத்தில் 15 கோடி பயணிகளை இழந்தது ரயில்வே வீழ்ச்சி

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், முதல் ஐந்து மாதங்களில், மொத்த ரயில் பயணிகளின் எண்ணிக்கையில், 15 கோடிகுறைந்துள்ளதை அறிந்து ரயில்வே துறை அமைச்சகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. கட்டணம் ஏற்றப்படாத நிலையில், ரயில் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது குறித்து, ரயில்வே இணை அமைச்சர்மனோஜ் சின்கா கவலை தெரிவித்துள்ளார்.கடந்த 15ம் தேதி, ரயில்வே பொது மேலாளர்கள் கூட்டம், டில்லியில் நடந்தது. அப்போது, நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில், ரயில் பயணிகளின் மொத்த பயண எண்ணிக்கை, 342.5 கோடி என்றும், முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், இந்த எண்ணிக்கை, 357.5 கோடியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த விகிதம் தொடர்ந்தால், நடப்பு நிதியாண்டின் முடிவில், ரயில்வேத் துறை, ஐந்து சதவீத ரயில் பயணிகளை இழக்கும் வாய்ப்புள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த நிதியாண்டிலும், அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், 19 கோடி ரயில் பயணிகளை, ரயில்வேத் துறை இழந்துள்ளது. வட இந்தியாவில் மக்களுக்காக அரசு இலவசமாக ரயிலை நடத்துகின்றது. இன்று ரயில்வே துறை சிறிதாவது லாபத்தில் இயங்குகின்றது என்றால் அது தென் இந்திய பயணிகளால் மட்டுமே . கோவை சென்னைக்கு என்று ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தாலும் கிடைப்பதில்லை. ஏன்? ரயில்வே துறையில் புற்றுநோயைபோல் ஊழல் பல்கி பெருகி உள்ளது. இவற்றை சரி செய்தாலே இந்த துறை பல மடங்கு லாபம் சம்பாதிக்கும். குறிப்பாக மேல் நிலையில் உள்ள மலையாளிகளை நீக்கினாலே அந்த துறை சரியாகிவிடும்.

தனுஷின் படத்துக்கு நோ சொன்ன வித்யா பாலன்! நஷ்டம் யாருக்கு?

எதிர்நீச்சல், காக்கிச் சட்டை என்ற இரு படங்களின் வெற்றியால் இயக்குனர் துரை செந்தில்குமாருக்கு கிடைத்த பரிசு, தனுஷை இயக்கும் வாய்ப்பு. இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் தான் அவரது அடுத்த பட வாய்ப்பு இருக்கிறது. எனவே முடிந்த அளவிற்கு பெரிய படமாக இந்த படத்தை எடுக்க முடிவு செய்து முதல் முயற்சியாக பாலிவுட் ஹீரோயின் வித்யா பாலன் வீட்டு கதவை தட்டியிருக்கிறார் துரை செந்தில்குமார். கோலிவுட் கைவிரித்ததால், பாலிவுட்டில் தஞ்சம் புகுந்து கூடு கட்டிய வித்யாபாலன் இன்று அந்த கூட்டை மாளிகையாகவே மாற்றிவிட்டார். அவரை சமரசம் செய்து மீண்டும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவர பலரும் எடுத்த முயற்சிகள் வீணாகிப்போக, தன் கதையின் மீது கொண்ட நம்பிக்கையுடன் சென்ற துரை செந்தில்குமாரும் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். ‘கால்ஷீட்ல பிரச்சனைப்பா. அவங்க குடுக்குற தேதி செட் ஆகல, நாம என்ன பண்ண முடியும்’ என்று வித்யா பாலன் கமிட் ஆகாததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. nakkheeran.in

உபியில் முதியவரின் டைப் மெஷினை அடித்து நொறுக்கிய போலீஸ் சஸ்பென்ட்....

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அஞ்சல் நிலையத்தின் வாசலில் கடந்த 35 வருடங்களாக ஒரே ஒரு டைப் ரைட்டரை வைத்துக் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு இந்தியில் தட்டச்சு செய்து கொடுப்பதன் மூலம் வரும் 50 ரூபாயை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார் 65 வயது முதியவரான குமார். நேற்று காலை அவரது வாழ்வில் புயலாகப் புகுந்தார் ஒரு அடாவடி காவலர். தினமும் 10 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து உடல்நோக உழைக்கும் குமாரை அந்த இடத்தை விட்டு காலி செய்ய சொன்னார் அந்த அடாவடி சப்-இன்ஸ்பெக்டர். அதற்கு அந்த முதியவர் எதிர்த்து கேள்வி கேட்கவே ஆவேசமடைந்த அவர் அவரது ஒரே வாழ்வாதாரமாக இருந்த டைப் ரைட்டரை பைத்தியம் பிடித்தவர் போல் சுக்கு நூறாக உடைத்தார். இந்த காட்சிகளை உள்ளூர் நிருபர்கள் படம் பிடித்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவியது.

தொடர்கதையாகும் அரசு அதிகாரிகள் தற்கொலைகள்... ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை : அதிமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை அவரிடம் திருச்செங்கோட்டில் பெண் டி.எஸ்.பி. தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி வந்ததில் இருந்து அரசு அதிகாரிகள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டார். கிரானைட் முறைகேடு புகாரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை. நரபலி புகாரில் தோண்ட தோண்ட எலும்புக் கூடுகள் கிடைத்து வருகிறது.