ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

5 மாதத்தில் 15 கோடி பயணிகளை இழந்தது ரயில்வே வீழ்ச்சி

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், முதல் ஐந்து மாதங்களில், மொத்த ரயில் பயணிகளின் எண்ணிக்கையில், 15 கோடிகுறைந்துள்ளதை அறிந்து ரயில்வே துறை அமைச்சகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. கட்டணம் ஏற்றப்படாத நிலையில், ரயில் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது குறித்து, ரயில்வே இணை அமைச்சர்மனோஜ் சின்கா கவலை தெரிவித்துள்ளார்.கடந்த 15ம் தேதி, ரயில்வே பொது மேலாளர்கள் கூட்டம், டில்லியில் நடந்தது. அப்போது, நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில், ரயில் பயணிகளின் மொத்த பயண எண்ணிக்கை, 342.5 கோடி என்றும், முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், இந்த எண்ணிக்கை, 357.5 கோடியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த விகிதம் தொடர்ந்தால், நடப்பு நிதியாண்டின் முடிவில், ரயில்வேத் துறை, ஐந்து சதவீத ரயில் பயணிகளை இழக்கும் வாய்ப்புள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த நிதியாண்டிலும், அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், 19 கோடி ரயில் பயணிகளை, ரயில்வேத் துறை இழந்துள்ளது. வட இந்தியாவில் மக்களுக்காக அரசு இலவசமாக ரயிலை நடத்துகின்றது. இன்று ரயில்வே துறை சிறிதாவது லாபத்தில் இயங்குகின்றது என்றால் அது தென் இந்திய பயணிகளால் மட்டுமே . கோவை சென்னைக்கு என்று ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தாலும் கிடைப்பதில்லை. ஏன்? ரயில்வே துறையில் புற்றுநோயைபோல் ஊழல் பல்கி பெருகி உள்ளது. இவற்றை சரி செய்தாலே இந்த துறை பல மடங்கு லாபம் சம்பாதிக்கும். குறிப்பாக மேல் நிலையில் உள்ள மலையாளிகளை நீக்கினாலே அந்த துறை சரியாகிவிடும்.

இத்தகவல், கூட்டத்தில் கலந்து கொண்ட, ரயில்வேத் துறை இணையமைச்சர் மனோஜ் சின்காவுக்கு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'ரயில்கள், வழக்கம் போல, முழு கொள்ளளவுடன் இயங்குகின்றன. ஆனால், பயணிகள் எண்ணிக்கை மட்டும் குறைவது ஏன்?' என, மனோஜ் சின்கா கேள்வி எழுப்பி உள்ளார்.

ரயில்வே பொது மேலாளர்கள் கூட்டத்தின் தொடர்ச்சியாக, ரயில்வே வாரிய தலைவர் ஏ.கே.மிட்டல், அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில், பயணிகள் எண்ணிக்கை குறைவதற்கான காரணத்தை கண்டறியுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ரூ.1 லட்சம் கோடி:
ரயில்வே சிறப்பு பாதுகாப்பு நிதியாக, மத்திய நிதியமைச்சகத்திடம், ஒரு லட்சம் கோடி ரூபாய் கேட்க, மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு முடிவு செய்துள்ளார். கடந்த 2001ல், ரயில்வே அமைச்சராக, நிதிஷ் குமார் பதவி வகித்தபோது, சிறப்பு பாதுகாப்பு நிதியாக, 17 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அந்த நிதி, ரயில்வே சிக்னல்கள், தண்டவாளங்கள் புதுப்பித்தல் போன்ற தேவைகளுக்காக செலவிடப்பட்டது.

இந்நிலையில், ரயில்வேத் துறைக்கு, சிறப்பு பாதுகாப்பு நிதியாக, ஒரு லட்சம் கோடி ரூபாய் கேட்க, தற்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு முடிவு செய்துள்ளார். விபத்தில்லாத ரயில் பயணத் திட்டத்தை செயல்படுத்த, இந்த நிதி, கோரப்படவுள்ளது. இதை, ரயில்வே வாரிய தலைவர் ஏ.கே.மிட்டல் உறுதி செய்துள்ளார்.

ரயில்வே அமைச்சகம், கேட்கவுள்ள நிதியில், ஆளில்லா லெவல் கிராசிங்குகளை நீக்க, 40 ஆயிரம் கோடி ரூபாய், ரயில் மேம்பாலங்கள், கீழ் பாலங்கள் கட்ட, 40 ஆயிரம் கோடி ரூபாய், தற்போதைய பாலங்களை வலுப்படுத்த, 5,000 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.

ஏன் இந்த தடுமாற்றம்?
ரயில்வே பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து, மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ரயில் கட்டணம் குறைவாக இருந்தால், பயணிகள் எண்ணிக்கை குறையாது என்ற, ரயில்வே வாரிய நம்பிக்கைக்கு மாறாக, உண்மை நிலவரம் உள்ளது. புறநகர் மற்றும் குறைந்த துார ரயில் போக்குவரத்து பிரிவில் தான், பயணிகள் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

பயணிகள், வசதி குறைவான ரயில் பயணத்தை விட, சாலை போக்குவரத்தையே அதிகம் விரும்புகின்றனர். காத்திருந்து, குறைந்த கட்டணம் செலுத்தி, ரயிலில் செல்வதை விட, கூடுதல் கட்டணம் தந்து, சாலை வாகனங்களில் விரைவாக செல்வதையே, பயணிகள் சிறந்ததாக கருதுகின்றனர்.
இதற்கு, ரயில்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிவதும், அவைகள் சரியான நேரத்துக்கு வராததும்தான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. டிக்கெட் வாங்குவதிலிருந்து, ரயில் பயணம் முடிவது வரை, பகீரத பிரயாத்தனமாக உள்ளது. நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்க வேண்டும்; டிக்கெட் தரும் இயந்திரங்கள் நிறுவப்பட்டாலும், பல, வேலை செய்வதில்லை; அப்படியே வேலை செய்தாலும், சரியான சில்லரை தரவேண்டும்; இயந்திரம், மீதி பணத்தை தராமல் போவதும் உண்டு.

கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் வசதி, பலருக்கு பயனின்றி இருக்கிறது. காரணம், பல பயணிகளிடம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு இருப்பதில்லை. பல பயணிகள், டிக்கெட் வாங்காமல் பயணிப்பதும், வருவாய் இழப்புக்கு காரணம். ரயில்வேத் துறையில், 5,000 டிக்கெட் பரிசோதகர்கள் நியமிக்கப்படாமல், காலியிடங்கள் அப்படியே இருக்கின்றன.

டிக்கெட் பரிசோதகர்கள், ரிசர்வ் செய்யப்பட்ட மற்றும் 'ஏசி' பெட்டிகளில் மட்டும் சோதனை செய்வதோடு நிறுத்திக் கொள்கின்றனர். ரிசர்வ் செய்யாத பெட்டிகளில், அவர்கள், சோதனை நடத்துவதில்லை. இவ்வாறு அந்த மூத்த அதிகாரி தெரிவித்தார் தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக