செவ்வாய், 22 செப்டம்பர், 2015

ஜெயலலிதா: ஸ்டாலினின் பேஸ்புக்கில் வெளியாகும் தகவல்கள் எல்லாம் அவருடையதுதானா?

காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவதாத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மு.க. ஸ்டாலினின் பேஸ்புக்கில் வெளியாகும் தகவல்கள் எல்லாம் அவருடையதுதானா என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து அவர் கூறுகையில், சட்டம் ஒழுங்கு நிலைமை பற்றியும், காவல் துறையினர் செயல்பாடு பற்றியும் எதிர்மறை கருத்துகளை சில சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கே எடுத்துக் கூறினார்கள். இதைப் பற்றி சிந்திக்கும் போது, ஃபிரான்ங் ஹெர்பர்ட் என்ற அமெரிக்க அரசியல்வாதி தெரிவித்த கருத்துகள் தான் என் நினைவுக்கு வருகின்றன. “The purpose of argument, is to change the nature of truth” என்றார். அதாவது விவாதத்தின் குறிக்கோள் உண்மை நிலையை மாற்றுவதே ஆகும் என்பதாகும். அந்த அடிப்படையிலேயே உண்மையை திரித்து விடலாம், உண்மையை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து உண்மைக்கு மாறான விமர்சனங்களை சிலர் தங்களது பேச்சுகள் மூலமாகவும், சிலர் அறிக்கைகள் மூலமாகவும், சிலர் முகநூல் பதிவுகள் மூலமாகவும் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.
திமுக சட்டமன்றக் குழு தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து பொத்தாம் பொதுவாக சில கருத்துகளை பதிவு செய்துள்ளார். அவை உண்மையிலேயே அவரது கருத்துகள் தானா என்பதை, அவர் விளக்கிட வேண்டியது அவசியமாகும். ஏனெனில், கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது மு.க.ஸ்டாலின் அவரது முகநூல் பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ஆனால், திமுகவின் தலைமைக் கழகம் அதற்கு மறுப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் இணைய தளத்தை பராமரிக்கின்ற சில தோழர்கள் வெளியிட்டுள்ளனர் என்றும், இந்த வாழ்த்துச் செய்தி மு.க.ஸ்டாலினின் விருப்பப்படி ஆனதில்லை என்றும் தெரிவித்து ஒரு விளக்கத்தை அளித்தது. சட்டம் ஒழுங்கு பற்றி ஸ்டாலின் முகநூலில் வெளி வந்த பதிவுகளும் மற்றவர்களுடைய கருத்துகள் தானோ என்னவோ? என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்  puthiyathalaimurai.tv/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக