செவ்வாய், 22 செப்டம்பர், 2015

பரணிமணி:உள்கட்சி ஜனநாயகம் பற்றிப்பேச வைகோவுக்கு அருகதையில்லை.

காலை, மாலை, இரவு என தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றுபவர் வைகோ : பரணிமணி பரபரப்பு குற்றச்சாட்டு மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கரூர் மாவட்ட செயலாளர் பரணிமணி, கரூரில் செய்தி யாளர்களிடம் பேசியபோது வைகோ மீது பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். 
அவர், ‘’காலை, மாலை, இரவு என தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றுபவர் வைகோ. கூட்டணி பற்றி அறிவித்ததில் இருந்தே மதிமுகவில் சலசலப்பு நீடித்து வருகிறது. ஜூன் -1ல் திமுக உடன் கூட்டணி என மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அறிவித்தார் வைகோ. செப்டம்பர் -2ல் அதிமுக, திமுக உடன் கூட்டு இல்லை என வைகோ அறிவித்தார். மதிமுக தலைமையை தொண்டர்கள் இனிமேலும் நம்ப தயாராக இல்லை. திமுகவில் நிலவும் உள்கட்சி ஜனநாயகம் பற்றிப்பேச வைகோவுக்கு அருகதையில்லை. மதிமுக தலைமையை சந்திக்க நிர்வாகிகளுக்கு அனுமதி கிடைப்பதில்லை. பஞ்சு - நெருப்பு போல மதிமுக தலைமை நிர்வாகிகளுக்கு இடையிலான தொடர்புள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் கரூர் மாவட்டத்தில் தான் உதயமானது. என்னை நீக்கியது மூலம் மதிமுகவின் அழிவுகாலம் கரூரிலேயே தொடங்கியுள்ளது’’ என்று கூறினார் nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக