புதன், 23 செப்டம்பர், 2015

மம்முட்டி மீது வழக்கு...இந்துலேகா சோப்பு பாவித்தால் அழகை பெறலாம்...விளம்பரத்தால் வில்லங்கம் ...

மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ள இவர், இந்துலேகா ஒயிட் சோப்” நிறுவனத்தின் விளம்பரங்களில் தோன்றி வந்தார். இந்த விளம்பரங்களில் இந்துலேகா சோப்பை பயன்படுத்துவதால், வெள்ளையுடன் பிரகாசமான அழகை பெறலாம் என்று மம்மூட்டி விளம்பரப்படுத்துவார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், மம்மூட்டி நடித்த விளம்பரத்தைப் பார்த்து இந்துலேகா சோப்பை ஒரு வருடத்திற்கு மேலாக பயன்படுத்தியதாகவும், ஆனால், மம்மூட்டி கூறியது போல் வெள்ளையான நிறத்தை பெறவில்லை என்று கேரளாவின் வயநாடு பகுதியைச் சேர்ந்த சிற்பி கே சத்து என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மம்மூட்டிக்கும் இந்துலேகா சோப் நிறுவனத்துக்கும் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
அப்போது மம்மூட்டி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நோட்டீஸ் இன்னும் தனது மம்மூட்டிக்கு கிடைக்காத காரணத்தால் இன்னும் கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து மனு மீதான அடுத்த விசராணை வரும் அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக