புதன், 23 செப்டம்பர், 2015

ஜெயலலிதா கலைஞருக்கு சவால்: நீதிமன்ற பாதுகாப்பு வழக்கில் தி.மு.க., இணைய தயாரா?

'சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை பாதுகாப்பு தொடர்பான வழக்கில், தி.மு.க., இணைய தயாரா?'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, முதல்வர் ஜெயலலிதா சவால் விடுத்துள்ளார்.சட்டசபையில் நேற்று, காவல்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதம்: />தி.மு.க., - வேலு: 'உயர் நீதிமன்ற பாதுகாப்பில், மாநில போலீசார் மீது நம்பிக்கை இல்லை' என, தலைமை நீதிபதி கூறியுள்ளார்.இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது: தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அப்படி எதுவும் கூறவில்லை. அவர் கூறியதாக, சில பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தவறானது. 'தமிழை, உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும்; 'மெட்ராஸ் உயர் நீதிமன்றம்' என்ற பெயரை, 'சென்னை உயர் நீதிமன்றம்' என, மாற்ற வேண்டும்' என்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை பிடித்தபடி, வாயில் கறுப்புத் துணி கட்டி, வழக்கறிஞர் தமிழ்செல்வன் தலைமையில், 12 வழக்கறிஞர்கள், சென்னை உயர் நீதிமன்ற முதல் அமர்வில், இம்மாதம், 14ம் தேதி போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது, நீதிமன்ற பதிவாளர் கொடுத்த புகாரில், கைது செய்யப்பட்டு உள்ளனர்.சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படை அல்லது அதற்கு இணையான பாதுகாப்பு அளிப்பது குறித்து பதில் தரும்படி, தமிழக உள்துறை செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.  போலீசுக்கே பாதுகாப்பு இல்ல .. இதுல எங்க இருந்து போலீஸ் நமக்கு தர்றது


இந்த வழக்கின் விசாரணை, 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதைத் தவிர, எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. டில்லி நீதிமன்ற வளாகத்தில், 2009ல் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்தே, நீதிமன்ற வளாகங்களுக்கு, மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிப்பது பற்றி யோசிக்கப்படுகிறது.

நம்பிக்கை இருந்ததா?

தி.மு.க., ஆட்சியின் போது, சட்ட கல்லுாரிக்குள் நடந்த மோதலில், இரு பிரிவு மாணவர்கள் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதை, தடுக்க காவல் துறைக்கு அறிவுறுத்தல் வரவில்லை. அதனால், போலீசார் வேடிக்கை பார்த்தனர். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு, சுப்பிரமணியன் சாமி வந்த போது, அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது; நீதிமன்ற காவல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது. போலீசார் நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சில், நீதிபதி உட்பட, பலர் காயமடைந்தனர். இச்சம்பவத்தை தொடர்ந்து, உயர் நீதிமன்றத்துக்கு, மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் பாதுகாப்பு அளிப்பது குறித்து, அப்போதைய உள்துறை செயலருக்கு, நீதிமன்றம் கடிதம் அனுப்பியது. அப்படியெனில், தி.மு.க., ஆட்சியில், தமிழக காவல் துறை மீது, நீதிமன்றம் நம்பிக்கை இழந்து இருந்ததா?

தயாரா?

தி.மு.க., ஆட்சியில் நடந்த மோதலால், வழக்கறிஞர்களுக்கும், போலீசுக்கும் இடையே சுமூக போக்கு நிலவவில்லை. அதை, அ.தி.மு.க., அரசு தற்போது சரி செய்து வருகிறது. சென்னை உயர் நீதின்றத்துக்கு, 575 போலீசார்; உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு, 157 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.உயர் நீதிமன்ற பாதுகாப்பு தொடர்பாக, தி.மு.க.,வுக்கு உண்மையில் அக்கறை இருக்குமானால், அதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில், தன்னை ஒரு வழக்குதாரராக சேர்த்துக் கொள்ள முன் வருமா? இதை, கருணாநிதிக்கு சவாலாக விடுக்கிறேன்.ஆனால், கருணாநிதியோ அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, 'தமிழக காவல்துறை மீது, நீதிமன்றம் நம்பிக்கை இழந்து விட்டது' என, கூறுகிறார்.இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக