வெள்ளி, 25 செப்டம்பர், 2015

உலகின் மிகவும் மாசுபட்ட நகர தர வரிசை டெல்லி பாட்னா.....

உலக வங்கி வெளியிட்டுள்ள மாசுப்பட்ட நகரங்கள் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இந்திய நகரங்கள் பிடித்து சாதனை(?) படைத்துள்ளன. வளர்ந்து வரும் நாடுகளைச் சேர்ந்த 381 நகரங்களின் காற்று மாசுப்பற்றி உலக வங்கி பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 20 இடங்களில் இடம்பெற்றுள்ள நகரங்களில் 19 நகரங்கள் தெற்காசியாவை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் இந்தியாவின் தலைநகர் டெல்லி உள்ளது. பீஜிங்கில் உள்ள காற்று மாசை விட டெல்லியில் மூன்று மடங்கு அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியைத் தொடர்ந்து பாட்னா, குவாலியர், ராய்ப்பூர் ஆகிய நகரங்கள் உள்ளன. பட்டியலில் அகமதாபாத், லக்னோ, கான்பூர், அமிர்தசரஸ் ஆகிய இந்திய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.


டெல்லியில் உள்ள காற்றில் நுண்ணிய துகள் ஆனது உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த அளவையிட 15 மடங்கு அதிகமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

66 கோடி இந்திய மக்கள் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் வாழ்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக