சனி, 26 செப்டம்பர், 2015

டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவின் கன்னத்தில் காயம் வந்தது எப்படி? 9 பக்க கடிதத்தில் 2 பக்கம் மட்டுமே விஷ்ணுபிரியாவின் கையெழுத்து

என் மகள் எழுதிய 9 பக்க கடிதத்தை எங்களிடம் காண்பித்தனர். அதில் 2 பக்கம் மட்டுமே என்னுடைய மகள் விஷ்ணுபிரியாவின் கையெழுத்து. மற்ற பக்கங்கள் யார்? எழுதியது
கடலூர்: தனது மகள் விஷ்ணுபிரியாவின் கன்னத்தில் காயம் வந்தது எப்படி என்று அவரது தந்தை ரவி சந்தேகம் கிளப்பி உள்ளார். தற்கொலை செய்து கொண்டால் கன்னத்தில் எப்படி காயம் ஏற்படும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தலித் பெண் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா (27). கடந்த 18 ஆம் தேதி மாலையில் திருச்செங்கோட்டில் அவர் தங்கியிருந்த குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையில் உயர் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து விஷ்ணுபிரியாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று அவரது பெற்றோரும், எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், சி.பி.சி.ஐ-டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதேபோல முதல்வர் ஜெயலலிதாவும், சி.பி.சி.ஐ.டி. விசாரணையே போதுமானது என்று அறிவித்தார். இதை தொடர்ந்து தமிழக அரசின் உத்தரவுபடி சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் கடலூர் மாவட்டம் கோண்டூரில் உள்ள விஷ்ணுபிரியாவின் பெற்றோரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவருடைய தாய் கலைச்செல்வி, தங்கை திவ்யா ஆகிய 2 பேரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று மதியம் 2 மணி அளவில் விஷ்ணுபிரியாவின் வீட்டுக்கு சேலத்தில் இருந்து பெயர் முகவரி இல்லாத ஒரு மர்ம கடிதம் வந்துள்ளது. அதில் எழுதப்பட்டிருந்தவை அதிர்ச்சிகரமான தகவலாகும். கோகுல்ராஜின் கொலை வழக்கில் தொடர்புடையவர் தான் விஷ்ணுபிரியாவை கொலை செய்துள்ளார். விஷ்ணுபிரியாவை பாலியல் பலாத்காரம் செய்து, தூக்கில் தொங்கவிட்டு இருக்க வேண்டும். மறுபிரேத பரிசோதனை செய்து வழக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யுங்கள்" என்று அதில் எழுதப்பட்டுள்ளது
விஷ்ணு பிரியாவின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த கடிதத்தை செய்தியாளர்களிடம் காண்பித்த விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, ''என் மகளின் சாவை கொச்சைப்படுத்த வேண்டாம் என்றார். உயர் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாகவே தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், அரசியல்வாதிகளின் நெருக்கடியும் இருந்துள்ளது என்று கூறினார்
என் மகள் இறந்துகிடந்த அறையில் சிறிய நாற்காலி மட்டுமே இருந்தது. அப்படி இருக்கும்போது 11 அடி உயர மேற்கூரையில் எப்படி அவரால் தூக்கு மாட்டிக்கொள்ள முடியும். இதுபோன்ற பல்வேறு சந்தேகங்கள் விஷ்ணுபிரியாவில்சாவில் உள்ளது.
இதுதவிர என் மகள் எழுதிய 9 பக்க கடிதத்தை எங்களிடம் காண்பித்தனர். அதில் 2 பக்கம் மட்டுமே என்னுடைய மகள் விஷ்ணுபிரியாவின் கையெழுத்து. மற்ற பக்கங்கள் யார்? எழுதியது என்று தெரியவில்லை என்று கூறினோம். என்னிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினால் கூடுதல் விவரங்களை தெரிவிப்பேன். மேலும், அங்குள்ள ஒரு அரசியல்வாதியின் ரத்த உறவுகளிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த வேண்டும்" என்றும் கூறியுள்ளார்

Read more at://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக