ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

தொடர்கதையாகும் அரசு அதிகாரிகள் தற்கொலைகள்... ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை : அதிமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை அவரிடம் திருச்செங்கோட்டில் பெண் டி.எஸ்.பி. தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி வந்ததில் இருந்து அரசு அதிகாரிகள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டார். கிரானைட் முறைகேடு புகாரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை. நரபலி புகாரில் தோண்ட தோண்ட எலும்புக் கூடுகள் கிடைத்து வருகிறது. இன்னும் என்னென்ன வரப்போகிறதோ தெரியவில்லை. ஆகையால்தான் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகி வருகின்றனர். நீதிமன்றம் பலமுறை அ.தி.மு.க. ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டியுள்ளது. கண்டித்துள்ளது. ஆகையால்தான் அ.தி.மு.க. ஆட்சி செயல்படாத ஆட்சி என சொல்கிறோம். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்

Read more at: //tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக