வியாழன், 24 செப்டம்பர், 2015

வியாபம் முறைகேடு : 40 இடங்களில் சி.பி.ஐ.ஆய்வு!

மத்திய பிரதேச மாநில நுழைவுத் தேர்வு வாரியமான வியாபத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கி 2013ஆம் ஆண்டு வரை மிகப்பெரிய முறைகேடுகள் நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அரசு வேலை பெறவும், கல்லூரிகளில் உரிய படிப்பு பெறவும் ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் வியாபத்தில் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மத்திய பிரதேச கவர்னர் ராம்நரேஷ் யாதவ், முன்னாள் அமைச்சர்கள், முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் மற்றும் ஏராளமான உயர் அதிகாரிகளுக்கு இந்த ஊழலில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சி.பி.ஐ. அதிரடி ஆய்வை மேற்கொண்டுள்ளது. போபால், இந்தூர், உஜான், ஜபபல்புர், லக்னோ ஆகிய 40 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்த ஆய்வில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக