புதன், 8 ஆகஸ்ட், 2012

பாலாவின் பரதேசி... 90 நாளில் படப்பிடிப்பு ஓவர்...

சென்னை: யாரும் எதிர்ப்பாராத திட்டமிடல், விறுவிறு வேகத்துடன் தனது அடுத்த படத்தை முடித்துவிட்டார் இயக்குநர் பாலா. படத்தின் பெயர் நாம் முதலில் சொன்னது போல பரதேசிதான்.
சேது, நந்தா, பிதாமகன், நான்கடவுள், அவன் இவனுக்குப் பிறகு பாலா எழுதி இயக்கும் படம் இந்த பரதேசி. இந்தப் படத்தின் தயாரிப்பும் பாலாதான்!
1930-களில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் நாஞ்சில் நாடனுடன் இந்த முறை கூட்டணி அமைத்துள்ளார் பாலா.
கதாநாயகனாக அதர்வாமுரளி மற்றும் கதாநாயகிகளாக வேதிகா தன்ஷிகா நடித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாலூர், மானாமதுரை மற்றும் கேரள மாநிலம் மூணார், தலையார், தேனி மாவட்ட கண்ணக்கரை வனப்பகுதிகளில் இடைவிடாது நடந்தது.
சரியாக 90 நாட்களில் படப்பிடிப்பு முடந்துவிட்டது.

இயக்குனர்பாலா இசை அமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார், ஒளிப்பதிவாளர் செழியன், எழுத்தாளர் நாஞ்சில்நாடன், படத்தொகுப்பாளர் கிஷோர் ஆகியோருடன் என புதிய கூட்டணியில் களம் கண்டுள்ளார் பாலா.
செப்டம்பர் 19 -ம் தேதி லண்டனில் இசை மற்றும் முன்னோட்டக் காட்சிகளை வெளியிடுகிறார் பாலா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக