வியாழன், 9 ஆகஸ்ட், 2012

ஆண்பாவம், மன்மதலீலை ஆகிய 9 படங்கள் மீண்டும்

ஆண்பாவம், மன்மதலீலை, தில்லுமுல்லு ஆகிய படங்கள் மீண்டும் தயாராகிறது தமிழ் திரையுலகில் 1980களில் கலக்கிய ஹிட் படங்களை மீண்டும் தயாரிக்கும் முயற்சிகள் துவங்கியுள்ளன.தில்லுமுல்லு, மன்மத லீலை, சட்டம் ஒரு இருட்டறை, அக்னிநட்சத்திரம், சகலகலா வல்லன், ஆண்பாவம், புதியபாதை, அமைதிப்படை, இன்று போய் நாளை வா ஆகிய 9 படங்கள் மீண்டும் தயாராகின்றன.
மன்மத லீலை, சகலகலா வல்லன் படங்கள் கமல் நடித்தவை. தில்லுமுல்லு ரஜினியின் படம், சட்டம் ஒரு இருட்டறை விஜயகாந்த் நடிப்பில் வந்தது. அக்னி நட்சத்திரம் பிரபு, கார்த்திக்கும், ஆண்பாவம் படத்தில் பாண்டியராஜன், பாண்டியனும் இணைந்து நடித்து இருந்தனர். புதிய பாதையில் பார்த்திபனும், அமைதிப்படையில் சத்யராஜும் நடித்து இருந்தனர். இன்று போய் நாளை வா படத்தில் பாக்யராஜ் நடித்து இருந்தார்.இப்படங்களுக்கான நடிகர், நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. முன்னணி நடிகர்களிடம் இப்படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக