வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

யார் ஆட்சிக்கு வந்தாலும் நல்லா கவனிக்கும் கிரானைட் கொள்ளையர்

 Two Buildings Major Granite Company Sealed கிரானைட் கொள்ளையர்களும் அரசியல்வாதிகளும்.. பாவம், இவுங்க ரொம்ப நல்லவங்க!

மதுரை & கிருஷ்ணகிரி: மதுரை மாவட்டத்தைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கிரானைட் குவாரிகளில் வருவாய்த் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் nநல்லா
தமிழகத்தில் கிரானைட் குவாரிகளில் பயங்கர மோசடிகள் நடப்பதும், அதற்கு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் துணையாக இருப்பதும் அனைவருக்கும் தெரியும்.
ஆனால், இவர்கள் மீது திமுக அரசோ, அதிமுக அரசோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. காரணம், யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை இந்த கிரானைட் கும்பல் நல்ல முறையில் கவனித்துவிடுவதே.

அதே போல ஆளும் கட்சி தோற்று எதிர்க் கட்சியாகிவிட்டாலும் கூட அவர்களையும் கூட இந்த கும்பல்கள் கவனித்துவிடுவதுண்டு. இதனால் இந்த பிராடுகள் மீது நடவடிக்கை கோரி திமுகவோ, அதிமுகவோ இதுவரை குரலே எழுப்பியதில்லை.
லோக்கல் கவுன்சிலர், ஒன்றியச் செயலாளரில் ஆரம்பித்து மேல்மட்டம் வரை கிரானைட் கும்பல்களின் பணம் பாய்கிறது. அதே போல அதிகாரிகளையும் இவர்கள் கவனிப்பது உண்டு. இதனால், அவர்களும் அமைதி காத்து வருகின்றனர்.
ஆனால், சகாயம் மதுரை கலெக்டரான பிறகு தான் இந்த விவகாரத்தை கையில் எடுத்து ஆய்வு செய்ய ஆரம்பித்தார். இதனால் அவரை இந்த கிரானைட் லாபி தான் இடமாற்றம் செய்ய வைத்தது என்ற குற்றச்சாட்டும் உண்டு. குறிப்பாக மகா பிராடு பிஆர்பி கிரானைட் உரிமையாளர் தான் சகாயத்தின் டிரான்ஸ்பருக்கே காரணம் என்போரும் உண்டு.
டிரான்ஸ்பர் ஆகிப் போனாலும் சகாயம் விடவில்லை. இந்த கிரானைட் மோசடி குறித்து தான் சேகரித்த அனைத்துத் தகவல்களையும் மாநில அரசிடம் ஒப்படைத்துவிட்டார். அந்த அறிக்கை வெளியிலும் லீக் ஆகிவிட்டது.
இதனால் இனியும் இந்த விஷயத்தில் அமைதி காக்க முடியாத நிலையில் மத்திய, மாநில அரசுகள் உள்ளன.
இது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று யாராவது நீதிமன்றத்தை நாடி, அதற்கு நீதிமன்றமும் அனுமதி தந்துவிட்டால் விவகாரம் கையை விட்டுப் போய்விடும் என்ற அச்சம் காரணமாக, குவாரிகளில் சோதனை.. சீல் வைப்பு என தமிழக அரசு 'நடவடிக்கைகளில்' இறங்கியுள்ளது என்கிறார்கள்.
அதாவது சகாயம் இதைக் கண்டுபிடித்து சொல்லாதவரை மதுரை மாவட்டத்தில் உள்ள 'ரொம்ப நல்ல' அரசியல்வாதிகளுக்கும், இதுவரை கலெக்டர்களாக இருந்தவர்களுக்கும், பிற அதிகாரிகளுக்கும் இந்த கிரானைட் மோசடி நடப்பதே தெரியாது என்பது போன்ற ஒரு பிரம்மையை உருவாக்க முயல்கின்றனர். இது தான் உண்மையிலேயே மாபெரும் மோசடி.
மேலும் இந்த விவகாரத்தில் திமுக தலைகளை மாட்டிவிட்டு விவகாரத்தையே திசை திருப்பலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி முன்ஜாமீன் கோரியுள்ளது இதற்கு ஒரு உதாரணம்.
(அதாவது கீழவளவு பகுதியில் ஒலிம்பஸ் என்ற குவாரி நிறுவனம் கிரானைட் கற்களை வெட்டி எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்த இடத்தின் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் திருட்டுத்தனமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து இருப்பதாக, கிராம நிர்வாக அதிகாரி புகார் அளித்துள்ளார். ஒலிம்பஸ் குவாரி நிறுவனத்துடன் துரை தயாநிதிக்கு தொடர்புண்டு என்று கீழவளவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.)
எது எப்படியோ அரசியல்வாதிகள்-அதிகாரிகளின் முழு ஆதரவுடன் நடந்து வந்த தமிழகத்தின் மாபெரும் மோசடியை சகாயம் என்ற தனி மனிதர் எந்த அதிகாரத்துக்கும் அஞ்சாயம் வெளியே கொண்டு வந்துள்ளார்.
ரெட்டி சகோதரர்கள் கர்நாடக-ஆந்திர மாநில சுரங்கங்களை ஸ்வாகா செய்து கோடிக்கணக்கில் லாபம் அடித்த விவகாரம் சிபிஐ வசம் போய் எதியூரப்பா வரை பலரும் சிக்கலில் மாட்டியது நினைவுகூறத்தக்கது.
அதே நிலைமை தமிழகத்திலும் ஏற்பட்டால் தான் இந்த விவகாரத்தில் நடந்துள்ள முழு அளவிலான ஊழல் வெளியே வரும். இதுவரை சொல்லப்படும் கணக்கின்படி தமிழகத்துக்கு இந்த கிரானைட் கும்பலால் ரூ. 1.2 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.
இப்போது மதுரை தவிர கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிரானைட் குவாரி உரிமையாளர்கள் மோசடி செய்து வருவதை கண்டுபிடித்துவிட்டார்களாம்.
இதையடுத்து கடந்த 3 நாட்களாக இந்த மாவட்டத்தில் உள்ள 123 கிரானைட் குவாரிகளில் மாவட்ட ஆட்சியர் சி.என்.மகேஸ்வரன் உத்தரவின் பேரில், சார்-ஆட்சியர் நிலையில் உள்ள அதிகாரிகள், 5 வருவாய் வட்டங்களில் உள்ள வட்டாட்சியர்கள் உள்பட வருவாய்த் துறை அதிகாரிகள் கிரானைட் குவாரிகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக