வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

சாதனைக்கு பின்னணியில் வேதனை சீனாக்காரன் சீக்ரெட்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபீஜிங்: பண பலம், படை பலம், அதிகாரம் என உலகத்துக்கே ‘அண்ணன்’ அமெரிக்கா. விளையாட்டில் அதிலும் குறிப்பாக ஒலிம்பிக்கில் அவருக்கும் ‘பெரியண்ணன்’ சீனாதான். வல்லரசுகள்கூட பம்மிப் பம்மி முன்னேறும் சூழ்நிலையில், துவக்கத்தில் இருந்தே பதக்க பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது சீனா. மாற்றான்தோட்ட மல்லிகையான சீனாவுக்கு முதலில் வாழ்த்துக்கள். அதே நேரம், இந்த சாதனைக்காக சீனா எடுக்கும் அசுர முயற்சி வியப்பைவிட அதிர்ச்சியையே தருகிறது. 5, 6 வயதிலேயே விளையாட்டு பயிற்சியை ஆரம்பித்து விடுகின்றனர். ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெற்றி பெற உடல் ரப்பர் போல வளைய வேண்டும். அதற்காக,  பிஞ்சுக் குழந்தையின் முழங்காலில் பயிற்சியாளர் ஏறி நிற்க, வலி பொறுக்க முடியாமல் அவள் அலறுகிறாள். நானின் நகரில் உள்ள பயிற்சிக் கூடத்தில்தான் இக்காட்சி. பயிற்சி என்ற பெயரில் குழந்தைகளை பாடாய் படுத்தும் காட்சிகள் இணையதளங்களில் வெளியாகியிருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக