புதன், 8 ஆகஸ்ட், 2012

என்‌னத்‌தே‌ கண்‌ணை‌யா‌ கா‌லமா‌னா‌ர்‌ வரூம்‌ ஆனா‌ வரா‌து…’

பி‌ரபல நகை‌ச்‌சுவை‌ நடி‌கர்‌ என்‌னா‌‌த்‌தே‌ கண்‌ணை‌யா‌ கா‌லமா‌னா‌ர்‌. அவருக்‌கு வயது 87.
சமீ‌பத்‌தி‌ல்‌ வெ‌ளி‌யா‌ன தொ‌ட்‌டல்‌ பூ‌ மலரும்‌ படத்‌தி‌ல்‌ அவர்‌ வடிவேலுவுடன் பே‌சி‌ய “வரும்‌… ஆனா‌ வரா‌து” என்‌கி‌ற வசனம்‌ பட்‌டி‌ தொ‌ட்‌டி‌யெ‌ல்‌லம்‌ பே‌சப்‌பட்‌டது. ‌
வயதைப் பொருட்படுத்தாத உழைப்பாளி அவர். தனது தள்ளாத வயதிலும் கூட, இளைஞனைப் போல தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.
இந்‌த வயதி‌லும்‌ நகை‌ச்‌சுவை‌யா‌க பே‌சி‌ சி‌ரி‌க்‌க வை‌த்‌துக்‌ கொ‌ண்‌டி‌ருந்‌தவர்‌ 07.08.2012 அன்று மதி‌யம்‌ சா‌ப்‌பி‌ட்‌டு படுத்‌தவர் மா‌லை‌‌ 4 மணி‌க்‌கு கா‌லமா‌னா‌ர்‌.
கடந்‌த நா‌ன்‌கு வருடத்‌தி‌ற்‌கு முன்‌பு‌ அவரது மனை‌வி‌ ரா‌ஜம்‌ கா‌லமா‌னா‌ர்‌. இவர்‌களுக்‌கு அசோ‌கன்‌, சா‌ய்‌கணே‌ஷ்‌ என இரு மகன்‌களும்‌, அமுதா‌, தனலட்‌சுமி‌, மகே‌ஸ்‌வரி‌, சண்‌முகப்‌பி‌ரி‌யா‌ என நா‌ன்‌கு மகள்களும்‌ உள்‌ளனர்‌. அனை‌வருக்‌கும்‌ தி‌ருமணம்‌ ஆகி‌வி‌ட்‌டது.
ரா‌யப்‌பே‌ட்‌டை‌ ரா‌யி‌ட்‌ கா‌லனி‌யி‌ல்‌ உள்‌ள அவரு வீ‌ட்‌டி‌ல்‌ பி‌ரே‌தம்‌ வை‌க்‌கப்‌பட்‌டுள்‌ளது. 08.08.2012 அன்று‌ மா‌லை‌ 4 மணி‌க்‌கு அவரது இறுதி‌ ஊர்‌வலம்‌ நடை‌பெ‌றுகி‌றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக