சனி, 11 ஆகஸ்ட், 2012

மமதா பானர்ஜியை கேள்வி கேட்ட விவசாயிக்கு சிறை

பொதுக்கூட்டத்தில் மமதா பானர்ஜியை எதிர்த்து கேள்வி கேட்ட விவசாயிக்கு சிறைவாசம்

கொல்கத்தா: தம்மை எதிர்த்து யாரெல்லாம் கேள்வி கேட்கிறார்களோ அவர்களையெல்லாம் மாவோயிஸ்டுகளாக - மார்க்சிஸ்டுகளாக பார்க்கும் மனநிலை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு அதிகமாகிவிட்டது போல...
மாவோயிஸ்டுகள் ஆதிக்கமுள்ள பகுதியாக இருந்த மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் பேல்பஹாரி என்ற இடத்தில் கடந்த புதன்கிழமையன்று மமதா பானர்ஜி பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய மமதா பானர்ஜி சும்மா இருக்கவில்லை. அங்கு கூடியிருந்த விவசாயிகளிடம் என்னிடம் ஏதாவது கேள்வி கேட்க வேண்டுமானால் கேளுங்கள் என்று கூறியிருந்திருக்கிறார்.

இதையடுத்து அந்தக் கூட்டத்தில் இருந்த சிலாதித்யா செளத்ரி என்ற விவசாயி, நீங்க ஆட்சிக்கு வந்து விவசாயிகளுக்காக என்ன செஞ்சீங்க... விவசாயிகளிடம் பணம் இல்லாமல் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.. சும்மா வெறும் வாக்குறுதி மட்டும் கொடுத்து பிரயோஜனமில்லை என்று எகிறியிருக்கிறார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத மமதா பானர்ஜி ஆத்திரத்தின் உச்சத்துக்குப் போய்விட்டதுடன் அவரை மாவோயிஸ்ட் என்ற் முத்திரை குத்தி கோபமாக பேசியிருக்கிறார். அப்புறம் என்ன காவல்துறை அவரை சுற்றி வளைத்து அமுக்கியிருக்கின்றனர். அப்போது அவரிடம் சில கேள்விகளைக் கேட்டுவிட்டுப் போயும்விட்டது போலீஸ். ஆனால் என்னட நடந்ததோ? எங்கிருந்து உத்தரவு வந்ததோ? நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அந்த விவசாயியை முதலமைச்சரின் கூட்டத்தில் இடையூறு செய்த குற்றத்துக்காக தூக்கி உள்ளே வைத்துவிட்டார்கள்...
ஆகா...மமதாவுக்கு இவ்வளவு பொறுமையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக