புதன், 8 ஆகஸ்ட், 2012

அத்வானி கருத்தை எதிர்த்து போராடுங்கள் சோனியா காந்தி ஆத்திரம்

 Sonia Loses Cool Over Advani S Remark அத்வானி பேச்சால் கொதித்தெழுந்த சோனியா: லோக்சபாவில் ரகளையோ ரகளை

டெல்லி: கோடிக்கணக்கில் பணத்தை செல்வு செய்து வாக்குகள் பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்டவிரோதமானது என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி லோக்சபாவில் தெரிவித்தார். அவரது கருத்தைக் கேட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கொதித்தெழுந்துவிட்டார்.
நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத் தொடர் இன்று துவங்கியவுடனேயே இரு அவைகளிலும் அஸ்ஸாம் வன்முறை குறித்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து இரு அவைகளும் நண்பகல் 12 மணி் வரை ஒத்தி வைக்கப்பட்டன.
மீண்டும் அவைகள் கூடியவுடன் லோக்சபாவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி அஸ்ஸாம் வன்முறை குறித்த விவதாதத்தை துவக்கினார்.
அப்போது அவர் கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து வாக்குகளைப் பெற்று இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே சட்டவிரோதமானது என்றார். இதைக் கேட்டவுடன் அவையில் இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆத்திரம் அடைந்தார். அத்வானியின் கருத்தை எதிர்த்து போராடுங்கள் என்று அவர் தனது கூட்டணி கட்சி எம்.பி.களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து அத்வானி எப்படி மத்திய அரசை சட்டவிரோதமானது என்று கூறலாம் என்று ஆளுங்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். தான் கூறிய வாபஸ் பெறுமாறு அத்வானியை சபாநாயகர் மீரா குமார் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து அத்வானி தனது கருத்தை வாபஸ் பெற்றார். அப்படியும் ஆளுங்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக