வியாழன், 9 ஆகஸ்ட், 2012

இரண்டு குழந்தைகளை தத்தெடுத்தார் ஹன்ஸிகா!

தனது வெகுளித்தனமான சிரிப்பாலும், நடிப்பினாலும் பல ரசிகர்களின் மனதைக் கொள்ளைக் கொண்ட ஹன்ஸிகா மோத்வானி .இதுவரை 20 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்  
இன்று தனது 21-வது வயதில் காலெடுத்து வைக்கிறார். சமூகத்தின் மீது அக்கறை கொண்டு, இயலாதவர்களுக்கு உதவ்ய்ம் மனப்பான்மை ஹன்ஸிகா மோத்வானிக்கு இயல்பாகவே அமைந்த ஒன்று. தனது இந்த பிறந்தநாளை முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றவேண்டும் என்று இரண்டு குழந்தைகளை தத்தெடுத்துள்ளார் ஹன்ஸிகா மோத்வானி.சில தமிழ் நடிகைகள் ஏற்கனவே இதுபோன்ற நல்ல செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவர்களின் வரிசையில் ஹன்சிகா மோத்வானியும் இப்போது சேர்ந்திருக்கிறார். திரையுலக நடிகர், நடிகைகளும் ஹன்ஸிகாவின் ரசிகர்களும் ஹன்ஸிகா மோத்வானியின்&ட்விட்டர் பக்கத்தில் இடைவிடாது வாழ்த்து தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர். ஹன்ஸிகாவும் அவர்களுக்கு தவறாது தனது நன்றியை சொல்லிக்கொண்டிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக