வியாழன், 9 ஆகஸ்ட், 2012

ஏன்.. நடராஜன் மீதும் ஒரு வழக்கு போட்டு பார்க்கலாமே!”

முதல்வர் ஜெயலலிதா என் மீது மட்டுமா வழக்கு போட்டார்? உடன்பிறவா சகோதரியின் கணவர் மீதும்தான் போட்டார்! கோர்ட்டில் சந்திச்சா போச்சு” என்று கூறியிருக்கிறார், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது என்பதை எதிர்க்கட்சியில் உள்ளவர்களில் இருந்து, மீடியா வரை எல்லோரும் சொல்லிக் காட்டுகிறார்கள் என்ற நினைப்பிவோ, என்னவோ, மீடியாவில் இருந்து முன்னாள் மினிஸ்டர் வரை வழக்கு மேல் வழக்காக போட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறார். “என் மீது மட்டுமா வழக்கு இருக்கிறது? உங்க அத்தனை பேர் மீதும் வழக்கு இருக்கிறதே!”
தமிழக அரசு பதவிக்கு வந்ததில் இருந்து அரசியல்வாதிகள், மீடியாக்கள் மீது போடப்பட்ட எந்தவொரு வழக்கிலும், தண்டனை வழங்கப்படவில்லை என்ற நிலையில், தம்மீது போடப்பட்ட வழக்கு பற்றி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

“தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் மீது பொய் வழக்குகளைச் சுமத்தி, கைது செய்து சிறையிலே அடைத்தனர். ஏன், அவருடைய உடன் பிறவா சகோதரியின் குடும்பத்தினர் மீதும் வழக்குகளைப் போட்டு சிறையிலே அடைத்தனர்.
உடன் பிறவா சகோதரியின் கணவர் செய்தியாளர்களிடம், ‘என் மீது பொய் வழக்கு போடப்பட்டது. புகார் கொடுத்தவர்களே அதை திரும்பத் பெற்றுக் கொண்டனர்’ என்றார். ‘ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கையையும், பேச்சையும் நான்தான் எழுதிக் கொடுத்தேன்’ என்றும் பேட்டி கொடுத்தார்.
அதற்கு முதல்வரால் பதில் சொல்ல முடியவில்லை. அப்படி சொன்ன உடன் பிறவா சகோதரியின் கணவர் மீது வழக்கு தொடர முதல்வரால் முடியவில்லை. மாறாக என் மீது வழக்கு தொடுத்துள்ளார். வரட்டும் சந்திக்கத் தயார்” என்பது ஸ்டாலினின் கூற்று!
இவர் சொன்னார் என்பதற்காக, நடராஜன்மீது வழக்கு தொடர முடியுமா? அதுவும், கார்டன் வரை வந்த சசிகலா, கொடநாடு வரை சென்றுவிட்ட நிலையில்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக