சனி, 17 டிசம்பர், 2022
கால்நடைகளுக்கு தடுப்பூசி- ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
அதில் தமிழ்நாட்டிற்கு, தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் (கோமாரி நோய் மற்றும் கன்றுவீச்சு நோய்) கடந்த செப்டம்பர் மாதம் வழங்க வேண்டிய தடுப்பூசி இதுநாள் வரையில் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதைத் தடுத்திடவும், அவற்றின் நோய் எதிர்ப்புச் சக்தியினைப் பராமரித்திடவும், இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பைத் தடுத்திடவும், தமிழ்நாடு அரசு கோரியுள்ள 90 லட்சம் தடுப் பூசிகளை விரைந்து வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தமது கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.
முரசொலி தலையங்கம் : "35 ஆண்டுகளாகக் கிடப்பில் கிடக்கும் இலங்கைத் தமிழர்களுக்கான உரிமை": நிறைவேற்றுவாரா ரணில்?
கலைஞர் செய்திகள் - லெனின் : இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் படி தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்படும், அந்த மாகாணம் உரிமை பெற்ற மாகாணமாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.
முரசொலி தலையங்கம் (17-12-2022) இலங்கைத் தமிழர்க்கு அதிகாரம்!
“எதிர்வரும் சுதந்திர தின விழாவிற்குள் தமிழர் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” என்று இலங்கை ஜனாதிபதி ரணில் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்: 21-ந்தேதி முதல் வழங்கப்படுகிறது!
மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் 60 வயதிற்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் டிசம்பர் 2022 (அரையாண்டிற்கு ஒரு முறை) வரை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
தற்பொழுது அடுத்த அரையாண்டிற்கு ஜனவரி 2023 முதல் ஜூன் 2023 வரை பயன்படுத்தக் கூடிய ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை 40 மையங்களில் வருகிற 21-ந்தேதி முதல் ஜனவரி 31-ந்தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும். அதன் பின்னர் பிப்ரவரி 1-ந்தேதி முதல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் வழங்கப்படும்.
இலங்கை கொழும்பு மயானத்தில் காருக்குள் சித்ரவதை- உயிரிழந்த ; தொழிலதிபர் தினேஷுக்கு நடந்தது என்ன
கொழும்பு தேசிய மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
கொழும்பு – பிளவர் வீதியைச் சேர்ந்த 51 வயதான முன்னணி வர்த்தகரே தினேஷ் சாஃப்டர்.
உயிரிழந்த நபர், தனது காருக்குள் உடல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.
அவரும் பெண்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணியிருக்கார்..கே.ராஜனை விளாசிய பயில்வான் ரங்கநாதன்!
சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன், காமெடி நடிகரான பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சொந்தமாக யூட்யூப் சேனல் வைத்திருக்கும் இவர், பல யூட்யூப் சேனல்களிலும் பேட்டி அளித்து வருகிறார்.
இசைவெளியீட்டுவிழாவில் சண்டை
கட்சிக்காரன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே ராஜன் ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து பேசினார். அப்போது, அங்கு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அமர்ந்திருந்த பயில்வான் ரங்கநாதன், ஜிஎஸ்டியை பற்றி பேசி தயாரிப்பாளர் வீட்டிற்கு ரெய்டு வரவைத்துடுவீர்கள் போல என கேட்டு கே. ராஜனை வம்புக்கு இழுத்தார்.
மாமா பயலே
பிரதமர் மோடி ஹிட்லரின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட ஆர்எஸ்எஸ்.,காரர்: பாக்., அமைச்சர் பிலாவல் பூட்டோ பேச்சு
நியூயார்க்கில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.
பயங்கரவாத பிரச்னை மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்வது குறித்த இந்தக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நியூயார்க் சென்றுள்ளார்.
நேற்றைய (டிச.,15) கூட்டத்தில் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் பிலாவல் புட்டோ பேசுகையில், ஜம்மு - காஷ்மீர் விவகாரம் குறித்து குறிப்பிட்டார்.
டெல்லியில் 5ம் வகுப்பு மாணவியை மாடியிலிருந்து தள்ளி விட்ட ஆசிரியை!
அப்போது ஆசிரியர் கீதா தேஷ்வால் வந்தனாவை கத்தரிக்கோலால் தாக்கியுள்ளார். பின்னர் அவர் மாணவியை முதல் மாடியிலிருந்து கீழே வீசியுள்ளார். இதில் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது மாணவியின் உடல்நிலை சீராக உள்ளது. இதனையடுத்து, ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசினா.. சும்மா சும்மா வருவயா!" மூதாட்டியிடம் அடாவடி பேச்சு! அத்துமீறிய நடத்துநர் மீது நடவடிக்கை
tamil.oneindia.com - Vigneshkumar : தஞ்சை: தமிழகத்தில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ள நிலையில், மூதாட்டி ஒருவரிடம் நடத்துநர் தரக்குறைவாகப் பேசிய வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திமுக பல்வேறு வாக்குறுதிகளை முன்வைத்து பிரசாரம் செய்தது. அதில் குறிப்பாகப் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பேருந்து பயணம் அறிவித்திருந்தது.
அதன்படி தேர்தலில் வென்று ஆட்சியை அமைத்த உடன் முதல் உத்தரவாகப் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
குஜராத்தில் காங்கிரஸ் வாக்குகளை பிரித்து பாஜகவை வெற்றி பேரவைத்த ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களில் வென்றது. சுமார் 13 சதவீத வாக்குகளை பெற்ற ஆம் ஆத்மி கட்சி பல தொகுதிகளில் காங்கிரசின் வெற்றிவாய்ப்பை பறித்துள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதற்கு ஆம் ஆத்மி தான் முக்கிய காரணம் என கூறி உள்ளார். அவர் மேலும் கூறியதாவது:-
வெள்ளி, 16 டிசம்பர், 2022
India Today : இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடம்! திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த மற்றுமொரு மணிமகுடம்
கலைஞர் செய்திகள் - லெனின் : தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த மற்றொரு மகுடம்.. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடம்: India Today தகவல்!
இந்தியாவில் ஒட்டு மொத்த மாநிலங்களின் செயல்பாட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக இந்தியா டுடே ஆங்கில வார இதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் இந்தியாவின் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு அனைத்திலும் வளர்ச்சி பெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இருளில் இருந்த தமிழ்நாட்டை மீட்டு வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தி.மு.க அரசின் இந்த ஒன்றரை ஆண்டுகளில், கொரோனா காலத்தில் ரூ.4000 நிதியுதவி, பெட்ரோல் விலை குறைப்பு, பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை, விவசாயத்துக்கு தனி பட்ஜெட், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், இலவச மின்சார திட்டம், மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை என அனைத்து மக்களுக்கான திட்டங்களை பார்த்து பார்த்து செயல்படுத்தி வருகிறது.
இந்தியா மீது போர் தொடுக்க சீனா தயாராகிறது! உண்மையை மறைக்கும் ஒன்றிய அரசு! ராகுல் காந்தி எச்சரிக்கை
tamil.oneindia.com - Vigneshkumar : ஜெய்ப்பூர்: எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், சீனா சத்தமின்றி போருக்குத் தயாராகி வருவதாக ராகுல் காந்தி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே எல்லையில் சுமுகமான உறவு இல்லை. இந்தியப் பகுதிகளில் சீனா ராணுவம் அத்துமீறி நுழைந்து, அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இதன் காரணமாக எல்லையில் இரு தரப்பிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை. அதிலும் 2020இல் எல்லையில் ஏற்பட்ட கல்வான் மோதலுக்குப் பிறகு இந்தியா- சீனாவுக்கும் இடையேயான உறவு மேலும் மோசமானது.
கோவை தொழிற்பூங்காவுக்கு பயிரிடப்படாத ..விவசாயிகள் மனமுவந்து கொடுக்கும் தரிசு நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும்- அரசு அறிவிப்பு
மாலை மலர் ல்: சென்னை: தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டங்களில் தமிழ்நாடு தொழில்வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் அரசு ஒரு தொழிற் பூங்காவை நிறுவ முடிவு எடுத்தது.
கோவை மாவட்டத்தை பொருளாதாரத்தில் மேம்பட்ட மாவட்டமாக தொடர்ந்து தக்க வைக்கவும், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும், தொழிற் பூங்காவை அமைக்க 3862 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டு, (அரசு ஆணை எண் 202, தொழில் மு.ஊ (ம) வர்த்தகத் (எ.ஐ.இ.1) துறை நாள் 10.10.2022) அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.
கடுமையாக எச்சரித்த முதல்வர் : மன்னிப்பு கேட்ட அமைச்சர் மெய்யானாதன்
minnambalam.com - Aara : தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு சிறப்புத் திட்ட செயலாக்கம், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு ஆகிய துறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறையை ஏற்கனவே அமைச்சர் மெய்யநாதன் வைத்திருந்தார். இப்போது மெய்யநாதனிடம் சுற்றுச் சூழல், மாசுக்கட்டுப்பாடு ஆகிய துறைகள் உள்ளன.
இந்த நிலையில் தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில் மெய்யநாதனின் அமைச்சர் பதவி தப்பியதே பெரிய விஷயம் என்றும் அவர் முதல்வரின் கடுமையான எச்சரிக்கைக்குப் பின்னரே அமைச்சரவையில் நீடிக்கிறார் என்றும் கோட்டை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வருகின்றன.
என்ன ஏதென முழுமையாக விசாரணை செய்தோம்…
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் ஜப்பானுக்கு வழக்கப்படுகிறது?
BBC Tamil : கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் மீண்டும் பரபரப்பை தோற்றுவித்திருக்கிறது.
இலங்கை வர்த்தக சபையின் பொருளாதார மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கிழக்கு கொள்கலன் முனையத்தை ஜப்பானுக்கு வழங்கியுள்ளதாகவும், அதனை ஜப்பான் நிராகரித்தால் வேறு நாடுகளுக்கு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
கிழக்கு கொள்கலன் முனையம் மற்றும் கொழும்பு இலகு ரயில் திட்டம் என்பனவற்றை மீண்டும் ஜப்பானுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் அரசல் புரவலாக தகவல்கள் வெளியாகின.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா : நாட்டை விட்டு வெளியேறத் துடிக்கும் இலங்கையர்கள்!
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் எதிர்காலம் குறித்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இளைஞர்கள் குழு ஒன்று அண்மையில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எமது பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதை அனைவரும் அறிவோம். இது ஒரு பெரிய நெருக்கடி. நாம் இதிலிருந்து மீள வேண்டும். அப்போதுதான் நாம் பழைய வாழ்க்கை முறைக்குத் திரும்ப முடியும். ஆனால், நாம் இந்த நிலையில் இப்படியே இருக்கப் போகிறோமா? அல்லது இதிலிருந்து மீளப் போகிறோமா என்பதே முதல் கேள்வியாகும்.
ஸ்டேன் சாமிக்கு எதிராக ஹேக்கர்கள் சதி; அதிர்ச்சியில் சமூக செயற்பாட்டாளர்கள்!
ஜார்கண்ட் மாநிலத்தில் ஆதிவாசிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காகவும், அவர்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும், மக்களோடு மக்களாக இணைந்து களப் போராட்டமாகவும், நீதிமன்றத்தின் மூலம் சட்டப் போராட்டமாகவும் செயல்பட்டு வந்த போராளிதான் பாதிரியார் ஸ்டேன் சாமி.
பீகாரில் விஷ சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு
எதிர்க்கட்சிகள் நிதிஷ்குமார் அரசுக்கு எதிராக சட்டசபையில் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.
பாட்னா: பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
பீகாரில் ஏற்கனவே மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. இதற்கிடையே, நேற்று முன்தினம் சரன் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதியில் விஷ சாராயம் குடித்த 21 பேர் இறந்தனர்.
இந்நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மேலும் சிலர் இறந்ததால் பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
நடமாடும் மயானம்’ - ஒரு மணி நேரத்தில் சாம்பல் தருகிறோம்…’ – இருப்பிடம் நோக்கி வரும் வண்டி.. ஈரோடு
நக்கீரன் ; கிராமம் முதல் நகரம் வரை இன்றளவும் இறந்தவர்கள் உடலைப் புதைக்க அல்லது எரியூட்ட சுடுகாடு பிரச்சனை என்பது தொடர்ந்து நீடித்தே வருகிறது.
குறிப்பிட்ட சமூகத்தினர் மற்றொரு சமூகத்தினர் உடலை அடக்கம் செய்ய அனுமதிப்பதில்லை என்ற போராட்டமும் தொடரத்தான் செய்கிறது.
எங்கள் ஊரில் சுடுகாடே இல்லையென்றும், மயானத்திற்கு இறந்தவர் உடலைக் கொண்டு செல்ல வழியே இல்லை என்றும், செத்தும் கூட நிம்மதி இல்லங்க என பல்வேறு அமைப்பினர் போராடுவதும் தொடர்கிறது.
வியாழன், 15 டிசம்பர், 2022
தமிழின் முதல் தர கவிஞர் கண்ணதாசனா? பாரதியா? பட்டுகோட்டையா? வாலியா? பாரதிதாசனா......
ராதா மனோகர் : இலங்கை இடது சாரிகள் மற்றும் முற்போக்குவாதிகளுக்கு ஒரு கவிதையை உதாரணமாக காட்டும் தேவை ஏற்படும் போதெல்லாம் பாரதியின் கவிதை வரிகளை மட்டுமே எடுத்து முன்வைப்பார்கள்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாரதியை குறிப்பிடுவது (உ ம் பாலச்சந்தர் மணிரத்தினம் கமல் வகையறாக்கள்) பார்ப்பனர்களின் வழக்கம்
அது அவர்களின் இரத்த பாசம் அதை தவறென்று கூறவும் இல்லை
ஆனால் இலங்கை இந்திய இடதுசாரிகளுக்கு பாரதியை தவிர வேறு எந்த புலவரும் ஞாபகத்தில் வருவதில்லையே ஏன்?
பாரதி தாசன் கண்ணதாசன் வாலி பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் உடுமலை நாராயண கவி .மருதகாசி புலமை பித்தன் பிறைசூடன் கவிஞர் கா மு ஷெரிப் கவிஞர் காமராசன் கவிஞர் இன்குலாம் கவிஞர் அப்துல் ரஹ்மான் கவிஞர் சுரதா இன்னும் எவ்வளவோ மாபெரும் கவிஞர்கள் இருந்தாலும் ,
பாரதியாரை இடதுசாரிகள் குறிப்பிடுவது ஒரு தற்செயலான நிகழ்வல்ல.
இலங்கை இடது சாரிகளுக்கு தமிழக பார்ப்பனரை குளிர செய்ய பாரதி லேகியம் தேவை!
Durai Ilamurugan : தமிழ் நாட்டின் நிலையும் அதேதான்
Kalai Selvi : மாயவநாதன் குமா பாலசுப்ரமணியம் கூட
Durai Ilamurugan : ஆயினும் நீங்கள் கூறிய கவிஞர்களில் பாரதிதாசன் தவிர மற்றவர்கள் பாரதியோடு ஒப்பிடக் கூடியவர்கள் அல்ல.
பாரதியின் கவிதாவிலாசம் மேன்மையானது என்பதில் ஐயமில்லை
ஆனால் இடது சாரிகள் அவரை எந்த வித விமர்சனமும் இல்லாமல் புகழ்வது தான் இடிக்கிறது.
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு கிடைத்த அடுத்த வெற்றி
அ.தி.மு.க ஆட்சியின் போது நரிக்குறவர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் பட்டா, சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கையைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் காலத்தை எடப்பாடி பழனிசாமியின் அரசு கடத்தியது.
பின்னர் ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு பழங்குடியின மக்களின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றிக் கொடுத்து வருகிறது. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவே நரிக்குறவர், பழங்குடியினர் என விளிம்புநிலை மக்களின் கோரிக்கையை தேடிச் சென்று நிறைவேற்றிக் கொடுத்து வருகிறார்.
விடுதியில் பாலியல் தொந்தரவு: கம்பு, கட்டைகள் கொண்டு வார்டனை சரமாறியாக தாக்கிய மாணவிகள்...!
தினத்தந்தி : பெங்களூரு, கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் காட்டேரி என்ற கிராமத்தில் அரசு பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த விடுதியில் தலைமை வார்டனாக பணியாற்றிவரும் ஆனந்தசன்ய மூர்த்தி என்பவர் அவ்வபோது மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்த மாணவிகள் ஆத்திரத்தில் கம்பு, கட்டைகள் உள்ளிட்டவைகளால் கொண்டுஅவரை சரமாறியாக தாக்கினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற போலீசாரை மாணவிகள் உள்ளே விட மறுத்தனர். விடுதியின் கதவை பூட்டிக்கொண்ட மாணவிகள், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வார்டனை அடித்து துவைத்து எடுத்தனர். நீண்ட நேரம் போராடி வார்டனை மீட்ட போலீசார் பாலியல் தொந்தரவு குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருப்பை தொழிற்சாலை.. உடலுறவு இல்லாமல் குழந்தை.. குழந்தைகளை பிடித்தது போல டிசைன் செய்ய முடியுமாம்
tamil.oneindia.com - Vigneshkumar : லண்டன்: இந்த நவீன டிஜிட்டல் யுகத்தில் குழந்தையின்மை பிரச்சினை அதிகரித்து வரும் சூழலில், பிரிட்டனில் குழந்தைகளை ஆண்- பெண் இல்லாமலேயே உருவாக்கக் கூடிய ஆய்வகத்தை உருவாக்கியுள்ளது.
மாறி வரும் வாழ்க்கை முறை, உணவு, அவ்வளவு ஏன் கால நிலை உள்ளிட்டவை காரணமாகக் கருத்தரித்தல் பிரச்சினை உலகெங்கும் அதிகரித்தே வருகிறது. இதனால் சில உலக நாடுகளில் மக்கள் தொகை சரியும் அபாயமும் கூட உள்ளது.
கருத்தரித்தல் பிரச்சினைக்கு உலகெங்கும் உள்ள சிகிச்சை முறைகள் உள்ளன. இந்தச் சூழலில் பிரிட்டன் நாட்டில் உள்ள ஒரு ஆய்வகம் அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டது. குழந்தைகளை டிசைன் செய்யவும் முடியும் என்கிறது இந்த ஆய்வகம்.
இரவல் குழந்தை..ஏக்கத்தில் சைக்கோவான கிருத்திகா! கூடவே இருந்த குமாரு! தடதட திண்டுக்கல்..போலீஸ் ஆக்சன்இரவல் குழந்தை..ஏக்கத்தில் சைக்கோவான கிருத்திகா! கூடவே இருந்த குமாரு! தடதட திண்டுக்கல்..போலீஸ் ஆக்சன்
கருக்கலைப்பு மாத்திரைகள் பயன்படுத்திய இளம் பெண்களின் உடல்நிலை பாதிப்பு: மருந்து கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை
Maalaimalar : திருப்பூர்: திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் 5லட்சம் பேர் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேர் என 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
பெரும்பாலான தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்களிலும் மற்ற தொழிலாளர்கள் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட பல்லடம், அவிநாசி உள்பட பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் வீரபாண்டி, பலவஞ்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் தங்கியிருந்து பணிக்கு சென்று வரும் தமிழகம் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண்கள் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.
தொடர்ந்து பெண் தொழிலாளர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவே அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் இது குறித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தினர்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அனைத்துக்கட்சிகளையும் அழைக்கிறார்
கொழும்பு, இலங்கையில் பெரும்பான்மையாக வாழும் சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே திட்டமிட்டு உள்ளார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில்,
அதற்கு முன் இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதற்காக அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றை நேற்று முன்தினம் அவர் நடத்தினார்.
2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்- தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியான தகவல்
மாலை மலர் : புதுடெல்லி: கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையாக பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நீக்கப்பட்டன. புதிதாக ரூ.500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
ஆனால் சமீப காலமாக புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகள் எண்ணிகை வெகுவாக குறைந்து விட்டது.
இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை கடந்த 2 ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி அச்சடிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வெளியான தகவல்கள் பின்வருமாறு:-
31.3.2020-க்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடிக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வெளியானது.
2016-17 ல் 354.2 கோடி 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டது. 2017-18 ல் 11.15 கோடி நோட்டுகளும், 2018-19 ல் 4.66 கோடி நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டது.
கட்டாரிடம் லஞ்சம் பெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பெண் தலைவர் கைது Vice President Eva Kaili ! வெளிநாட்டு தொழிலாளா்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்
மத்திய வளைகுடா நாடுகளில் ஒன்றான கட்டாரில் வெளிநாட்டு தொழிலாளா்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்த விவகாரத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பு தங்களுக்கு ஆதரவான அரசில் முடிவுகளை எடுப்பதற்கு கட்டார் பணபலத்தை பயன்படுத்தி வருவதாக நீண்ட காலமாகவே குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
ஆனால் கட்டார் அரசு இதை திட்டவட்டமாக மறுக்கிறது. இந்த நிலையில் கட்டார் நாட்டிடம் லஞ்சம் பெற்றதாக கூறி ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பெண் தலைவரான எவா காயிலியை பெல்ஜியம் போலீசார் கைது செய்தனர். எவா காயிலி உள்பட 4 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது சட்டவிரோத பண பரிவா்த்தனை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் - நூற்றாண்டு கடந்த திராவிட இயக்கத்தின் நாளைய நம்பிக்கை!
ராதா மனோகர் : அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் - நூற்றாண்டு கடந்த திராவிட இயக்கத்தின் ஒரு முக்கியமான நிகழ்வாக இந்த நிகழ்வை கருதுகிறேன்.
தெற்காசிய அரசியல் பொதுவெளியில் திராவிட இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் உலக அரசியல் கோட்பாடு சரித்திரத்தில் ஒரு அழுத்தமான பொன்னேடு ஆகும்.
மக்கள் நலன் சார்ந்த கோட்பாடு ஒரு அரசியல் கட்சியாக பரிணாம வளர்ச்சி அடைவதே மிக பெரிய சாதனையாகும்.
தெற்காசியாவில் ஜனநாயக விழுமியங்களை முன்னெடுத்த இயக்கங்களாகட்டுடம் மார்க்சிய விழுமியங்களை முன்னேடுத்த இயக்கங்களாகட்டும் திராவிட கோட்பாட்டு இயக்கம் பெற்ற வெற்றியை பெறவில்லை.
இந்த பின்னணியை புறந்தள்ளி விட்டு திராவிட இயக்கத்தின் இன்றைய வளர்ச்சியை பற்றி பேசமுடியாது.
கோட்பாட்டு அரசியலை முன்னெடுத்த ஒரு இயக்கம் அரசியல் கட்சியாக பரிணமித்து இமாலய வெற்றியையும் பெற்றது என்பது திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒரு காவிய சாதனையாகும்.
தேர்தல் அரசியலில் ஈடுபடும் ஒரு கட்சி சித்தாந்த கோட்பாட்டையும் கூடுமானவரை கைவிடாமல் .
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திராவிட கோட்பாட்டை சமூக மட்டத்தில் எடுத்து சென்ற ஒரு பெருமை மிக வரலாற்று சாதனை கண்முன்னே தெரியும் ஒரு அதிசயம் என்றுதான் கூறவேண்டும்.
புதன், 14 டிசம்பர், 2022
"பீரியட்ஸ்" சார்.. கெஞ்சிய மாணவி.. லீக் ஆன ஆடியோ..பாஜக நிர்வாகி காலேஜுக்கு ஆவேசமாக வந்த அதிகாரிகள்
tamil.oneindia.com - Noorul Ahamed Jahaber Ali : நாகப்பட்டினம்: பாஜக மாவட்ட தலைவருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியின் நாகை மாவட்ட தலைவராக இருப்பவர் கார்த்திகேயன். இவருக்கு சொந்தமாக புத்தூர் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இதில் பாஜக மாவட்ட தலைவர் கார்த்திகேயனின் மனைவி திருமலர் ராணி செயலாளராக உள்ளார். இந்த நர்சிங் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
ஆசிரியர் சதீஷ்
அதே கல்லூரியில் நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதிஷ் என்பவர் உடற்கூறியியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவர், மாணவிகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
புஷ்பாவும், காந்தாராவும் பாலிவுட்டின் அழிவுக்கு காரணமா?
News18 தமிழ் : சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு இந்திய திரை நட்சத்திரங்களான அனுராக் காஷ்யப், வருண் தவான், கரண் ஜோகர், நடிகர் கார்த்தி, துல்கர் சல்மான், ஸ்ரீநிதி ஷெட்டி, பூஜா ஹெக்டே ஆகியோர் கலந்து கொண்டு இந்த ஆண்டு வெளியான படங்கள் குறித்த தங்கள் பார்வையை வெளிப்படுத்தினர்.
அப்போது பேசிய அனுராக் காஷ்யப் காந்தாரா, புஷ்பா, கேஜிஎஃப் 2 போன்ற பிரம்மாண்ட படங்களைப் பார்த்து அதே போன்று மிகப் பெரிய பொருட்செலவில் உருவாக்க திட்டமிடுவது நம்மை அழிவை நோக்கி அழைத்து செல்லும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அனுராக் காஷ்யப்பின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. தி காஷ்மீர் ஃபைல்ஸ் பட இயக்குநர் அனுராக் காஷ்யப் பேசியதைப் பகிர்ந்து, பாலிவுட்டின் முக்கிய இயக்குநர் இப்படிப் பேசியிருப்பதற்கு நான் உடன்படவில்லை. உங்களது கருத்து என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்!
மாலைமலர் : உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கம், வறுமை ஒழிப்பு, கிராமப்புற கடன் திட்டத்துறையும் உதயநிதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த பெரியசாமி ஊரக வளர்ச்சி, ஊராட்சி ஒன்றியங்கள் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வீட்டு வசதித்துறை அமைச்சராக இருக்கும் முத்துசாமிக்கு நகர்ப்புற திட்டமிடல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
50 நகரங்களில் 5ஜி சேவை, குஜராத்தில் மட்டும் 33 இடங்கள்... பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு
maalaimalar.com : புதுடெல்லி: இந்தியாவில் 14 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக இன்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள 50 நகரங்களில் 33 நகரங்கள் குஜராத்தில் உள்ளன.
இந்த பட்டியலில் மகாராஷ்டிராவில் இருந்து 3 நகரங்களும், மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து தலா 2 நகரங்களும் அடங்கும். மேலும்,
டெல்லி, தமிழ்நாட்டில் சென்னை, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், ஹரியானா, அசாம், கேரளா, பீகார் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் தலா ஒரு நகரத்தில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அக்டோபர் 1ம் தேதி 5ஜி சேவை தொடங்கபட்டது. நவம்பர் 26 நிலவரப்படி, 14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின் எனும் நான்'... அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்!
Kalaignar Seithigal - Lenin : தமிழ்நாடு . தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக இன்று பதவியேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அதோடு கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்தப் பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹைலைட்டே 'ஒற்றை செங்கல்' புரட்சிதான். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அவரின் 'ஒற்றை செங்கல்' புரட்சிதான் பொதுமக்கள் மத்தியில் பெரிய வரவேற்றை பெற்றது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு: அமைச்சர் கீதாஜீவன் உள்பட 5 பேர் விடுதலை
கடந்த 2017-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக என்.பெரியசாமி உயிரிழந்தார்.
எனினும் என்.பெரியசாமி குடும்பத்தினர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது.
தூத்துக்குடி: தமிழகத்தில் 1996-2001-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக அப்போதைய மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி இருந்தார்.
அதன்பின்னர் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், 2002-ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக ரூ.2 கோடியே 31 லட்சத்து 87 ஆயிரம் சொத்து சேர்த்ததாக என்.பெரியசாமி மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் என்.பெரியசாமி, அவரது மனைவி எபனேசர் அம்மாள், இவர்களது மகளும் அப்போதைய மாவட்ட ஊராட்சி தலைவரும், தற்போதைய அமைச்சருமான கீதாஜீவன், அவரது கணவர் ஜீவன்ஜேக்கப், கீதாஜீவனின் அண்ணன் ராஜா, தம்பியும் தற்போதைய மாநகராட்சி மேயருமான ஜெகன்பெரியசாமி ஆகிய 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கீதாஜீவன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு- அமைச்சர் பதவி தப்புமா?
tamil.oneindia.com - Mathivanan Maran : சென்னை: தமிழக அமைச்சர் கீதா ஜீவன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி எம்.எல்.ஏவாக இருந்தவர் தற்போதைய அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை என்.பெரியசாமி. அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ2.31 லட்சம் ரூபாய் சொத்து குவித்தார் என்பது வழக்கு. அப்போது பஞ்சாயத்து தலைவராக இருந்த கீதா ஜீவனும் வழக்கில் சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நீதிபதி குருமூர்த்தி தலைமையிலான பெஞ்ச் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு, வரதட்சணை கேட்டதால் மணமகள் தற்கொலை .. தெலுங்கானா
Kalaignar Seithigal - KL Reshma : இந்தியா தெலுங்கானா திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு, வரதட்சணை கேட்டு மன ரீதியாக துன்புறுத்தல் கொடுத்த மணமகனால், மணமகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் நவிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவளி (22) என்ற இளம்பெண். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
காங்கோவில் நிலச்சரிவு- 120 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல்
மாலைமலர் : கின்ஷாசா: காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் தலைநகர் கின்ஷாசாவில் கனமழையால் மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் வீடுகள் மற்றும் சாலைகள் தண்ணீரால் சூழப்பட்டன.
சாலையில் மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டது
குறித்து காங்கோ அரசு செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் ட்விட்டரில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இதனால் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலை 4 நாட்களுக்கு மூடப்படும் என்று அந்நாட்டு பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 120 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
செவ்வாய், 13 டிசம்பர், 2022
பாரதி ,விவேகானந்தர் காந்தி மீது பார்ப்பனியம் கட்டமைத்திருக்கிற புனித பிம்பம் .
Meena Somu : தமிழகமெங்கும் பௌத்த, சமண சிலைகள் கிடைக்கின்றன. சங்க காலத்திலும் சங்க காலத்திற்கு முன்பும் தமிழர்களுக்கு மதம் இருந்ததாக எந்த ஆதாரங்களும் இல்லை. சங்க கால தமிழன் இயற்கையோடு இயைந்த வாழ்வியலை போற்றியிருக்கிறான்.
ஆனால் சங்கம் மறுவிய காலத்தில், பெரும்பாலான இலக்கிய நூல்கள் பௌத்த நூல்களாகவும் சமண நூல்களாகவும் உள்ளன.
ஆனால் இன்றைய தமிழனுக்கு... வைதீக- சைவ- பார்ப்பன தெய்வங்களும் இந்துமதமும் தன்னுடைய மதமாகவும், பௌத்த சமண மதங்களும் அது போதிக்கும் நெறிகள் அன்னியமாகவும் இருப்பதற்கான காரணம் என்ன ?
பார்ப்பனியம், எல்லாவற்றையும் தன்வயப்படுத்தி( assimilated) கபகளீகரம் செய்து உருமாறி நிற்கும். பார்ப்பனியம் குறித்த எச்சரிக்கை இல்லாத அரசியல், பண்பாடு, பொருளாதாரம் எதுவுமே சமத்துவத்திற்கானதல்ல.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதல் துறை.. அமைச்சரவை மாற்றம்
மின்னம்பலம் - Aara : கேபினட் மாற்றம்: அமைச்சர் பிடிஆருக்கு கூடுதல் துறை!
தமிழக அமைச்சரவையில் நாளை (டிசம்பர் 14) உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பதவியேற்க இருக்கும் நிலையில் மற்ற சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு பலமாகிக் கொண்டே இருக்கிறது.
இந்த வகையில் ஏற்கனவே மின்னம்பலம் செய்தியில், அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் இருந்துவரும் கூட்டுறவுத் துறை, அமைச்சர் பெரியகருப்பனிடம் கொடுக்கப்பட இருக்கிறது என்றும் அதேபோல பெரியகருப்பன் வசம் இருக்கும் ஊரக வளர்ச்சித்துறை பெரியசாமியிடம் மாற்றி தரப்பட இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
தாத்தா கலைஞர் வழியில் 45 வயதில் பதவிக்கு வரும் உதயநிதி- ஒரு செங்கல்லை கையில் ஏந்திய பிரசார பீரங்கி!
மாலைமலர் : சென்னை தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான இவர் நாளை அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
கிண்டி கவர்னர் மாளிகையில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதன் மூலம் தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை 34 ஆகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் சேர்த்து கணக்கிட்டால் தமிழக அமைச்சரவையின் எண்ணிக்கை 35 ஆகும்.
கவர்னர் மாளிகையில் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தலைமைச் செயலகம் வரும் உதயநிதி ஸ்டாலின் தனது துறையின் பொறுப்புகளை ஏற்க உள்ளார். அவருக்கு இளைஞர் நலம்- சிறப்பு திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்படும் என தெரிகிறது.
உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை கோட்டையில் 2-வது மாடியில் பெரிய அறை தயார் செய்யப்பட்டு வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவியேற்கிறாா் உதயநிதி ஸ்டாலின்: ஆளுநா் மாளிகை அறிவிப்பு...
தினமணி : தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மகனும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பேரவைத் தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக புதன்கிழமை (டிச. 14) பதவியேற்கவுள்ளாா்.
ஆளுநா் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழி ஏற்பையும் ஆளுநா் ஆா்.என்.ரவி செய்து வைக்கவுள்ளாா்.
இதற்கான அறிவிப்பை ஆளுநரின் செயலா் ஆனந்த் ராவ் விஷ்ணு பாட்டீல் திங்கள்கிழமை வெளியிட்டாா்.
அறிவிப்பு விவரம்: அமைச்சரவையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் உதயநிதி ஸ்டாலினை இணைத்துக் கொள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது பரிந்துரையை வழங்கியுள்ளாா். இந்தப் பரிந்துரையை ஆளுநா் ஆா்.என்.ரவி ஏற்றுக் கொண்டுள்ளாா்.
திங்கள், 12 டிசம்பர், 2022
மேயர் ப்ரியா காரில் தொங்கியபடி சென்றது வருத்தம் அளிக்கிறது- ஜெயக்குமார்
Kandasamy Mariyappan ·நான் வலதுசாரிகளை விரும்புவதற்கு ஒரு காரணம் உண்டு.!
நாம் எதை மக்களிடம் கொண்டு செல்ல விரும்புகிறோமோ அதனை அவர்கள் நமக்காக செய்து விடுவார்கள்.!
80களுக்கு பிறகு பெரியாரை மறந்துவிட்ட நமக்கு பெரியாரை நினைவுபடுத்தி, இன்றைய இளைஞர்களையும் பெரியாரை படிக்க வைத்த பெருமை வலதூசாரிகள்.!
அதே போன்று, இளம் வயதிலேயே மேயராக பதவியேற்று, எப்படி மக்கள் பணியை செய்ய போகிறார் என்று எண்ணும்பொழுது...
வலதுசாரி நண்பர்கள் அவரது பணியை எளிதாக்கிவிட்டனர்.!
திருமதி. பிரியாவே இந்த புகழை (Limelight) எண்ணி பார்த்திருக்க மாட்டார்.!
ராஜேந்திர பாலாஜியுடன் சமரசம்: வழக்குகள் வாபஸ்!
முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகள் இன்று (டிசம்பர் 12) வாபஸ் பெறப்பட்டன.
அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, தனியார் நிறுவனங்களின் பால் தரம் குறைந்துள்ளது என்றும்,
இது குடிக்கும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வரும் என்றும் பேட்டி அளித்திருந்தார்.
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஹட்சன் அக்ரோ, விஜய் டைரிஸ், டோட்லோ உள்ளிட்ட நிறுவனங்கள் தலா ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு 2017 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன.
யாழ் - சென்னை விமான சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்! திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி...
hirunews.lk : யாழ் - சென்னை விமான சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!
ஏறக்குறைய மூன்று வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான நேரடி விமான சேவையை இன்று காலை முதல் மீண்டும் ஆரம்பமானது.
அதற்கமைய, சென்னையிலிருந்து புறப்பட்ட எலையன்ஸ் ஏர் விமானம், இன்று முற்பகல் 11.30க்கு யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்ட யாழ் விமான நிலையத்திலிருந்து கடந்த 2019 அக்டோபரில் பரீட்சார்த்தமாக விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.
பின்னர் அதே ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட யாழ். - சென்னை விமான சேவை, 2020 மார்ச் வரை முன்னெடுக்கப்பட்டது.
கொவிட்19 தொற்றுநோய் பரவலையடுத்து, இருநாடுகளும் தமது விமான நிலையங்களையும் எல்லைகளையும் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சிறுபான்மையின மாணவர்களின் உதவித்தொகை நிறுத்தம்! மதவெறுப்பு அரசியலின் உச்சம்
குறிப்பாக சிறுபான்மையினர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த கல்வி உதவித்தொகையை நிறுத்தும் நடவடிகையில் ஈடுபட்டு வருகிறது.
அதன் ஒருபடியாக, 2022-2023ஆம் ஆண்டு முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு திடீரென ரத்து செய்தது.
ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3000 கன அடி தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
மாலைமலர் : பூந்தமல்லி வங்ககடலில் உருவான மாண்டஸ்புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. புயல் கரையை கடந்த பின்னரும் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 3645 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். மழை காரணமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து ஏரியில் இருந்து கடந்த 9-ந்தேதி முதல் வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது.
ஞாயிறு, 11 டிசம்பர், 2022
நடிகை சமந்தாவால் நடக்க கூட முடியாது?...மயோசைட்டிஸ் (Mayositis) நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் போட்டோவையும் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.
இந்நிலையில், சமந்தாவின் உடல்நிலை குறித்து பிரபல நடிகை பியா பாஜ்பாய் மனம் திறந்து பேசியுள்ளார்.
மயோசிடிஸ் பாதிப்பில் சமந்தா
கோலிவுட், டோலிவுட் என ரவுண்ட் அடித்து வந்த சமந்தா, தற்போது பான் இந்தியா நடிகையாக கலக்கி வருகிறார். சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான யசோதா திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்திருந்தது. முன்னதாக சமந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஒருகட்டத்தில் சமந்தாவே அதுகுறித்து மனம் திறந்தார்.
பாரதியார்: தன்னை விடுதலை செய்யும்படி பணிவோடு வேண்டி பிரிட்டிஷ் ஆளுநர் பென்ட்லன்டுக்கு எழுதிய கடிதம் – பின்னணி என்ன? - BBC News தமிழ்
ஆனால், எல்லா வரலாற்று மனிதர்களின் வாழ்விலும் அவர்களது எழுச்சியான பக்கங்களைப் போலவே, சங்கடமான பக்கங்களும் இருக்கும்.
பூண்டி ஏரியில் 10,000 கன அடி உபரி நீர் திறப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை poondi-lake-547200
தொடர்ந்து பெய்யும் மழையால் உபரிநீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
ஏரிக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறப்பும் உயர்த்தப்பட்டது.
தமிழகத்தில் மாண்டஸ் புயலை தொடர்ந்து சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்யும் மழையால் உபரிநீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. ஏரிக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறப்பும் உயர்த்தப்பட்டது. இதன் எதிரொலியால், கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் உள்ள 80 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் காரில் தொங்கியபடி பயணித்த மேயர் பிரியா:... வீடியோ
tamil.indianexpress.com : ஸ்டாலின் கான்வாய்; காரில் தொங்கியபடி பயணித்த மேயர் பிரியா: வைரல் வீடியோ
சென்னையில் புயல் பாதித்த இடங்களை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தபோது,
அவரது காரில் தொங்கியபடி சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் பேடி உள்ளிட்டோர் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை இரவு மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது.
மழையினால் ஒரு சில இடங்களில் மரங்கள் வீழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது. கடலோர பகுதிகளில் வீடுகள் பாதிக்கப்பட்டன.