புதன், 14 டிசம்பர், 2022

கீதாஜீவன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு- அமைச்சர் பதவி தப்புமா?

Image result for கீதாஜீவன்

tamil.oneindia.com  -  Mathivanan Maran  :  சென்னை: தமிழக அமைச்சர் கீதா ஜீவன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி எம்.எல்.ஏவாக இருந்தவர் தற்போதைய அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை என்.பெரியசாமி. அவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ2.31 லட்சம் ரூபாய் சொத்து குவித்தார் என்பது வழக்கு. அப்போது பஞ்சாயத்து தலைவராக இருந்த கீதா ஜீவனும் வழக்கில் சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நீதிபதி குருமூர்த்தி தலைமையிலான பெஞ்ச் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.


முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் அவரது மகனும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் இன்று இணைகிறார். சென்னையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதனால் ஒட்டுமொத்த திமுகவும் உற்சாகத்தில் இருக்கிறது.

பெரிய “இவன்” மாதிரி.. அண்ணாமலை மண்டையில ஏறல! தூத்துக்குடி பாஷையில் கொந்தளித்த அமைச்சர் கீதா ஜீவன் பெரிய “இவன்” மாதிரி.. அண்ணாமலை மண்டையில ஏறல! தூத்துக்குடி பாஷையில் கொந்தளித்த அமைச்சர் கீதா ஜீவன்

இந்த நிலையில்தான் இன்று கீதா ஜீவன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அமைச்சராக உள்ள கீதா ஜீவன், தூத்துக்குடி மேயராக உள்ள அவரது சகோதரர் ஜெகன் பெரியசாமி ஆகியோரது அரசியல் எதிர்காலத்தை இன்றைய தீர்ப்பு தீர்மானிக்க உள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் கீதா ஜீவனுக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட்டு, 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால் அவரது எம்.எல்.ஏ. பதவி பறிபோகும். இதனால் அமைச்சர் பதவியையும் இழக்க நேரிடும். உதயநிதி ஸ்டாலின், அமைச்சராகும் நாளில் இப்படி நடந்துவிடக் கூடாது என்கிற பதற்றத்தில் இருக்கின்றனர் திமுக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக