சனி, 17 டிசம்பர், 2022

அவரும் பெண்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணியிருக்கார்..கே.ராஜனை விளாசிய பயில்வான் ரங்கநாதன்!

tamil.filmibeat.com -   Jaya Devi  :  சென்னை : தயாரிப்பாளர் கே ராஜன் குறித்து மோசமான கருத்துக்களை பயில்வான் ரங்கநாதன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன், காமெடி நடிகரான பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சொந்தமாக யூட்யூப் சேனல் வைத்திருக்கும் இவர், பல யூட்யூப் சேனல்களிலும் பேட்டி அளித்து வருகிறார்.
இசைவெளியீட்டுவிழாவில் சண்டை
கட்சிக்காரன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே ராஜன் ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து பேசினார். அப்போது, அங்கு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அமர்ந்திருந்த பயில்வான் ரங்கநாதன், ஜிஎஸ்டியை பற்றி பேசி தயாரிப்பாளர் வீட்டிற்கு ரெய்டு வரவைத்துடுவீர்கள் போல என கேட்டு கே. ராஜனை வம்புக்கு இழுத்தார்.
மாமா பயலே
ஆரம்பத்தில் பொறுமையாக பதிலளித்துக் கொண்டிருந்த ராஜன் ஒரு கட்டத்தில், பொறுமையை இழந்து நீ கேள்வி கேட்டு பதில் சொல்வதற்கான மேடை இது இல்லை என்றார். தொடர்ந்து பயில்வான் பேசிக்கொண்டே இருந்தால் வாக்குவாதம் முற்றி இருவரும் வாடா போடா என பேசிக் கொண்டார்கள். அதிலும் குறிப்பாக ராஜன், போடா மாமா பயலே, தாய் மார்கள் பற்றி தரக்குறைவாக பேசுற, எப்போதும் பெட்ரூம் பத்தி பேசும் எச்சப்பயல் என பயில்வான் ரங்கநாதனை கடுமையாக திட்டினார்.ங

நேரடியாக விவாதிக்க தயாரா?
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பயில்வான் ரங்கநாதன், நான் தயாரிப்பாளர் ராஜனுடன் நேரடியாக விவாதிக்க தயாராக இருக்கிறேன் அவர் என்னுடன் விவாதிப்பாரா என அவருக்கு சவால் விடுத்தார். மேலும், நான் அவரை வம்பு இழுக்க அந்த இசைவெளியீட்டு விழாவிற்கு போகவில்லை, ஜிஎஸ்டி பற்றி பேசினார் அதைத்தான் ஏன் என்று கேட்டேன். இசை வெளியீட்டு விழாவில் எதற்கு அரசியல் என்றார்.

அட்ஜஸ்ட்மென்ட் பண்ணி இருக்கிறார்
தொடர்ந்து பேசிய பயில்வான், கே.ராஜன் பெண்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணியிருக்கார். இதை நான் சொல்லவில்லை, அவரே யூடியூபில் பேட்டியில், நான் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணியிருக்கேன், அதற்கு காசும் கொடுத்து இருக்கேன் என்று கூறியிருக்கிறார். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நீங்கள் யூ டியூபில் பார்த்துக்கொள்ளுங்கள். அது மட்டுமில்லாமல் அவர் ஹோட்டலில் தான் தங்கி வருகிறார். அது குறித்து கேட்டால் வீட்டில் மிகவும் சத்தமாக இருக்கிறது அதனால் நான் தனியாக ஹோட்டலில் இருக்கிறேன் என கூறுகிறார். இது எல்லாம் நம்புவது மாதிரியா இருக்கு என்றார் பயில்வான்.
அருவா வைத்து இருக்கிறேன்
நான் எந்தவிதமான தவறான தகவல்களையும் மக்களிடம் சொன்னது இல்லை, எனக்கு தெரிந்த உண்மையைத்தான் சொல்லுகிறேன். இதற்காக தனக்கு மிரட்டல்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. என் பாதுகாப்புக்காகத்தான் அருவா வைத்து இருக்கிறேன் என்று சொன்னேன் என்று அந்த செய்தியாளர் சந்திப்பில் பயில்வான் ரங்கநாதன் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக