புதன், 14 டிசம்பர், 2022

தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்!

 மாலைமலர் : உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கம், வறுமை ஒழிப்பு, கிராமப்புற கடன் திட்டத்துறையும் உதயநிதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த பெரியசாமி ஊரக வளர்ச்சி, ஊராட்சி ஒன்றியங்கள் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வீட்டு வசதித்துறை அமைச்சராக இருக்கும் முத்துசாமிக்கு நகர்ப்புற திட்டமிடல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த பெரிய கருப்பன் கூட்டுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ராஜகண்ணப்பனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையுடன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும் ஒதுக்கீடு. அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு சீர்மரபினர் நலத்துறை, கதர், கிராமம் தொழில் வாரியத்துறைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் சேகர்பாபு வசம் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜவுளி மற்றும் கைத்தறித்துறை இலாகா மட்டும் அமைச்சர் காந்தி வசம் உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையுடன் கூடுதலாக சிஎம்டிஏவும் அமைச்சர் சேகர்பாபு வசம் ஓப்படைக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஓய்வூதியம், புள்ளியியல் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இளைஞர் நலன், விளையாட்டுத்துறை வைத்திருந்த மெய்யநாதன் சுற்றுச்சூழல்துறை அமைச்சராக நீடிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக