வியாழன், 15 டிசம்பர், 2022

கருப்பை தொழிற்சாலை.. உடலுறவு இல்லாமல் குழந்தை.. குழந்தைகளை பிடித்தது போல டிசைன் செய்ய முடியுமாம்

 tamil.oneindia.com -  Vigneshkumar  :  லண்டன்: இந்த நவீன டிஜிட்டல் யுகத்தில் குழந்தையின்மை பிரச்சினை அதிகரித்து வரும் சூழலில், பிரிட்டனில் குழந்தைகளை ஆண்- பெண் இல்லாமலேயே உருவாக்கக் கூடிய ஆய்வகத்தை உருவாக்கியுள்ளது.
மாறி வரும் வாழ்க்கை முறை, உணவு, அவ்வளவு ஏன் கால நிலை உள்ளிட்டவை காரணமாகக் கருத்தரித்தல் பிரச்சினை உலகெங்கும் அதிகரித்தே வருகிறது. இதனால் சில உலக நாடுகளில் மக்கள் தொகை சரியும் அபாயமும் கூட உள்ளது.
கருத்தரித்தல் பிரச்சினைக்கு உலகெங்கும் உள்ள சிகிச்சை முறைகள் உள்ளன. இந்தச் சூழலில் பிரிட்டன் நாட்டில் உள்ள ஒரு ஆய்வகம் அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டது. குழந்தைகளை டிசைன் செய்யவும் முடியும் என்கிறது இந்த ஆய்வகம்.
இரவல் குழந்தை..ஏக்கத்தில் சைக்கோவான கிருத்திகா! கூடவே இருந்த குமாரு! தடதட திண்டுக்கல்..போலீஸ் ஆக்சன்இரவல் குழந்தை..ஏக்கத்தில் சைக்கோவான கிருத்திகா! கூடவே இருந்த குமாரு! தடதட திண்டுக்கல்..போலீஸ் ஆக்சன்

வாடகைத் தாய்
இந்த விஷயத்தை விரிவாகப் பார்க்கும் முன்பு, ஒரு சின்ன ஹிஸ்டரி. கடந்த 1978ஆம் ஆண்டில் பிரிட்டனில் ஐவிஎப் தொழில்நுட்பம் மூலம் பிறந்த முதல் குழந்தையானார் லூயிஸ் பிரவுன்! ஐபிஎப் என்றால் இன்-விட்ரோ கருத்தரித்தல் என்று அர்த்தமாகும். அதாவது ஆணின் விந்து மற்றும் பெண்ணின் கருமுட்டை அவர்களின் உடலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு அவை ஆய்வகத்தில் வைத்து ஒன்று சேர்க்கப்படும். அதன் பிறகு இந்த கருவுற்று இருக்கும் முட்டை தாய் அல்லது வேறு பெண்ணின் (வாடகைத் தாய்) கர்ப்பப்பையில் செலுத்தப்படும். 10 மாதங்களுக்குப் பிறகு வழக்கம் போல குழந்தை பிறக்கும்.

டிசைன் செய்ய முடியும்
இந்த தொழில்நுட்பத்தில் குழந்தைக்காக ஆண் பெண் உடலுறவு கொள்ளத் தேவையில்லை என்றாலும் கூட பெண்ணின் கர்ப்பப் பையில் தான் குழந்தை வளர வேண்டியுள்ளது. இதனிடையே ​​உலகின் முதல் 'செயற்கை கருப்பை ஆய்வகம் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இது வெற்றிகரமாக அமைந்தால் படத்தில் வருவதைப் போலப் பெற்றோரால் குழந்தையின் குணாதிசயங்களை (கண் நிறம், உயரம் மற்றும் வலிமை) கூட தொழில்நுட்ப உதவியால் தேர்வு செய்ய முடியுமாம். ஜீன் எடிட்டிங் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் நம்மால் இதைச் செய்ய முடிகிறது.

ஆரோக்கியமான குழந்தைகள்
ECTOLIFE என்ற இந்த கருப்பை ஆய்வகத்தை ஹாஷெம் அல்-கைலி என்ற ஆய்வாளர் உருவாக்கியுள்ளார்.. இதன் மூலம் கருவுறுதலில் சிக்கல் உள்ள தம்பதிகளால் கூட தங்கள் விருப்பம் போலக் குழந்தையைப் பெற்றெடுத்துக் கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக இந்த துறையில் நடந்த ஆய்வுகளை அடிப்படையாக வைத்தே இந்த கருப்பை ஆய்வகத்தை அவர் உருவாக்கியுள்ளார். பெண்களுக்குக் கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்படும் துன்பங்களைக் குறைக்கவும் உயிரிழப்புகளைத் தவிர்க்கவுமே அவர் இதை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் பூமியில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியமானதாக இருப்பதை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

எப்போது செயல்பாட்டிற்கு வரும்
இது தொடர்பாக ஹாஷெம் அல்-கைலி மேலும் கூறுகையில், "இது உண்மையில் நெறிமுறை வழிகாட்டுதல்களைப் பொறுத்தது. இப்போது ​​மனித கருக்கள் கருக்களை நம்மால் 14 நாட்களுக்கு மேல் வைத்திருக்க முடியாது. நெறிமுறை (ethical) காரணங்களால் 14 நாட்களில் அந்த கருக்களை நாம் அழித்துவிட வேண்டும். இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், அடுத்த சில ஆண்டுகளில் எனது ஆய்வகம் மூலம் குழந்தைகளை உற்பத்தி செய்யலாம். தொடக்கத்தில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மக்களுக்குத் தயக்கம் இருந்தாலும் 5 ஆண்டுகளில் அதுவும் சரியாகும்" என்று அவர் தெரிவித்தார்.

எப்படி இயங்கும்
இந்த EctoLife ஆய்வகத்தில் எந்தவொரு தொற்று பாதிப்பும் இல்லாமல் கருவை வளர்த்தெடுக்க முடியும். இங்கிருக்கும் செயற்கை பாட்கள் தாயின் கருப்பையில் இருக்கும் அதே சூழலை உருவாக்கித் தரும். ஒரு கட்டிடத்தில் இப்படி ஆண்டுக்கு 30,000 குழந்தைகளைக் கருப்பை பாட்களில் வளர்க்க முடியும். இந்த ஆய்வகத்தில் உள்ள டிஜிட்டல் திரையில் குழந்தைகளின் வளர்ச்சி குறித்த தகவல்கள் உடனடியாக அப்டேட் செய்யப்படும். இதைப் பெற்றோர் தங்கள் மொபைல் செயலி வழியாகவும் கூட பார்க்க முடியும். மேலும் பெற்றோர் விருப்பப்பட்டால் சாத்தியமான மரபணு பிரச்சினைகளையும் கண்டறிய முடியும்.

பிடித்த தேதியில் குழந்தை பெற்றெடுக்கலாம்
குழந்தைகள் வளரும் இந்த பாட்களில் இரண்டு முக்கிய குழாய்கள் இருக்கும். தாயின் கருப்பையில் குழந்தைகளைச் சுற்றியுள்ள அம்னோடிக் திரவம் போல ஒரு குழாய் செயல்படும். மற்றொரு குழாய் குழந்தைகளின் கழிவுப் பொருட்களை அகற்றும். 10 மாதங்கள் குழந்தை முழுமையாக வளர்ந்த பிறகு, பெற்றோர் விரும்பும் நாளில் நேரத்தில் ஒரு பட்டனை அழுத்தி குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

World is gearing up for the first artificial womb facility: Can babies created completely in labs.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக