புதன், 14 டிசம்பர், 2022

"பீரியட்ஸ்" சார்.. கெஞ்சிய மாணவி.. லீக் ஆன ஆடியோ..பாஜக நிர்வாகி காலேஜுக்கு ஆவேசமாக வந்த அதிகாரிகள்

மாதவிடாய் என்று சொல்லும் மாணவி

tamil.oneindia.com  -  Noorul Ahamed Jahaber Ali  :  நாகப்பட்டினம்: பாஜக மாவட்ட தலைவருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியின் நாகை மாவட்ட தலைவராக இருப்பவர் கார்த்திகேயன். இவருக்கு சொந்தமாக புத்தூர் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இதில் பாஜக மாவட்ட தலைவர் கார்த்திகேயனின் மனைவி திருமலர் ராணி செயலாளராக உள்ளார். இந்த நர்சிங் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
ஆசிரியர் சதீஷ்
அதே கல்லூரியில் நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதிஷ் என்பவர் உடற்கூறியியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவர், மாணவிகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆசிரியர் சதீஷ் கல்லூரி மாணவியிடம் பேசும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவ மாணவிகள் பேச தடை
இருபாலர் பயிலும் நர்சிங் கல்லூரியில் மாணவர்களும் மாணவிகளும் பேசிக்கொள்ள கூடாது என்ற விதி உள்ள நிலையில் ஆண்களிடம் பேசும் மாணவிகளை ஆசிரியர் சதிஷ் தனியாக அழைத்து கண்டித்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி ஆசிரியர் சதிஷ் மாணவி ஒருவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வீட்டிற்கு கண்டிக்க அழைத்து உள்ளார்.

வெளியான செல்போன் உரையாடல்
அதற்கு அந்த மாணவி நான் கல்லூரிக்கு வருகிறேன் சார் என்று கூறியும் ஆசிரியர் சதீஷ் வீட்டிற்கு அழைத்து கட்டாயபடுத்துவதும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலமுறை மாணவி கெஞ்சியும் ஆசிரியர் சதீஷ் விடாமல் வரமாட்டியா? நான் பார்த்துக் கொள்கிறேன்.. என மிரட்டும் தொனியில் பேசுகிறார்.
மாதவிடாய் என்று சொல்லும் மாணவி
அதற்கு அந்த மாணவி மன்னிப்பு கேட்டு இனி எந்த தவறும் நடக்காது, என் மீது எந்த புகாரும் வராது என்று கூறுகிறார். உன் மீது அதிக புகார் வருவதால் எச்சரிக்கவே நான் வீட்டுக்கு வர சொல்கிறேன் என்று ஆசிரியர் சதீஷ் அழைக்கிறார். தனக்கு மாதவிடாயாக இருப்பதால் வலி அதிகம் உள்ளதாகவும், உங்களிடம் இதை எப்படி சொல்வது என்றும் கூறி மாணவி கெஞ்சுகிறார்.

தகாத பேச்சு
அதையும் பொருட்படுத்தாத ஆசிரியர் சதீஷ் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி தகாத முறையில் பேசுகிறார். அதற்கு மாணவி தன்னிடம் பணம் இல்லை என்றும், பேருந்தில் வர முடியாது எனவும் கூறுகிறார். அதற்கு ஆசிரியர் சதீஷ் நான் பைக்கை எடுத்து வரட்டுமா? என்று தெரிவித்தார். அதற்கு மாணவி வேண்டாம் என்று சொல்லவே, ஏன் என்று ஆசிரியர் சதீஷ் கேட்கிறார்.

கெஞ்சிய மாணவி
தனக்கு விருப்பம் இல்லை என்று மாணவி சொல்லியும் மீண்டும் அவர் மிரட்டினார். இதனை தொடர்ந்து மீண்டும் தொலைபேசியில் மாணவிக்கு தொடர்புகொண்ட ஆசிரியர் சதீஷ், எங்கு இருக்கிறாய் என்று கேட்க மாணவி நான் கிளம்பவில்லை. நான் வரவில்லை என்று சொல்கிறார். ஆசிரியர் சதீஷ் ஏன் என்று கேட்டு மீண்டும் அவருக்கு தொல்லை கொடுக்கவே, கல்லூரியில் பேசிக்கொள்ளலாம், வீட்டில் வேண்டாம் என தழுதழுத்த குரலில் பேசுகிறார்.

கைது செய்த போலீஸ்
இந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து இன்று ஆசிரியர் சதீஷை போலீசார் கைது செய்து உள்ளார்கள். கைது செய்யப்பட்ட ஆசிரியர் சதீஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

The police have arrested a teacher who sexually harassed a student in a nursing college owned by the BJP district president.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக