திங்கள், 12 டிசம்பர், 2022

யாழ் - சென்னை விமான சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்! திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி...

hirunews.lk :  யாழ் - சென்னை விமான சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!
ஏறக்குறைய மூன்று வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான நேரடி விமான சேவையை இன்று காலை முதல் மீண்டும் ஆரம்பமானது.
அதற்கமைய, சென்னையிலிருந்து புறப்பட்ட எலையன்ஸ் ஏர் விமானம், இன்று முற்பகல் 11.30க்கு யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்பட்ட யாழ் விமான நிலையத்திலிருந்து கடந்த 2019 அக்டோபரில் பரீட்சார்த்தமாக விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.
பின்னர் அதே ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட யாழ். - சென்னை விமான சேவை, 2020 மார்ச் வரை முன்னெடுக்கப்பட்டது.
கொவிட்19 தொற்றுநோய்  பரவலையடுத்து, இருநாடுகளும் தமது விமான நிலையங்களையும் எல்லைகளையும் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


இதனையடுத்து, குறித்த விமான சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்திநிலையில், இடைநிறுத்தப்பட்டிருந்த குறித்த விமான சேவை எலையன்ஸ் ஏர் விமானத்தின் வருகையுடன் மீண்டும் ஆரம்பமானது
குறித்த விமானம் இன்று மதியம் மீண்டும் சென்னை நோக்கிப் புறப்படவுள்ளது.

திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய தினங்களில் விமான சேவைகள் இடம்பெறவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக