சனி, 17 டிசம்பர், 2022

டெல்லியில் 5ம் வகுப்பு மாணவியை மாடியிலிருந்து தள்ளி விட்ட ஆசிரியை!

மாலை மலர் : புதுடெல்லி:  டெல்லியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியை ஒருவர் முதல் மாடியிலிருந்து தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி வந்தனா. இவர் வழக்கம்போல் வகுப்பறையில் இருந்துள்ளார்.
அப்போது ஆசிரியர் கீதா தேஷ்வால் வந்தனாவை கத்தரிக்கோலால் தாக்கியுள்ளார். பின்னர் அவர் மாணவியை முதல் மாடியிலிருந்து கீழே வீசியுள்ளார். இதில் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது மாணவியின் உடல்நிலை சீராக உள்ளது. இதனையடுத்து, ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மாணவி போலீசாரிடம் தெரிவிக்கையில், ஆசிரியர் என்னை கத்தரிக்கோலால் தாக்கினார். அவர் (ஆசிரியர்) என் தலைமுடியை பிடித்து இழுத்து மாடியில் இருந்து என்னை கீழே வீசினார். நான் எந்த தவறும் செய்யவில்லை. என கண்ணீர்மல்க தெரிவித்தார்.

டெல்லி மத்திய பகுதி துணை ஆணையர் ஸ்வேதா சவுகான் இந்த வழக்கை குழு அமைத்து விசாரித்து வருகிறார்.
இந்நிலையில், மாணவியை கீழே தள்ளிய விவகாரத்தில் ஆசிரியையை கைதுசெய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக