புதன், 4 நவம்பர், 2020

அர்னாப் நிச்சயம் ஒரு ஊடகவியலாளர் இல்லை ஆட்சியாளர்களுக்கான மார்க்கெட்டிங் கூலியாள் .. சமூக வலையில் ..

Arivazhagan Kaivalyam : · அர்னாப் நிச்சயம் ஒரு ஊடகவியலாளர் இல்லை, ஒரு சித்தாந்தத்தை விளம்பரப்படுத்துகிற கூலியாள், ஆட்சியாளர்களுக்கான மார்க்கெட்டிங் செய்பவர், அறத்தின் பக்கமாக எப்போதும் நிற்காத ஒரு முதலாளித்துவ அடிமை. ஆனாலும், அவருக்கு "ஊடகவியலாளர்" என்ற அட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது, அந்த அட்டைக்காகவாவது நாம், மஹாராஷ்டிரா அரசு வீடு புகுந்து அவரைக் கைது செய்ததை வன்மையாகக் கண்டித்து வைப்போம்.
கர்நாடகாவில் "கௌரி லங்கேஷ்" என்கிற பெண் ஊடகவியலாளர் அவரது வீட்டு வாசலிலேயே படுகொலை செய்யப்பட்டார், முற்போக்கு எழுத்தாளர் M.M. கலபுர்கி சுட்டுக் கொல்லப்பட்டார்.
மணிப்பூரின் இளம் ஊடகவியலாளர் "கிஷோர் சந்திர வாங்கெம், பாரதீய ஜனதா அரசையும், மோடியையும் விமர்சித்த குற்றத்துக்காக அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து சிறையில் இருக்கிறார்.
டெல்லியில் சங்கப்பரிவார் அமைப்புகளோடு சேர்ந்து கொண்டு இஸ்லாமிய சகோதரர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய கயவர்களைப் படம் பிடித்த குற்றத்துக்காக "ஷாகித் தந்ராய்", "பிரபிஜீத் சிங்" இருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள்.
கடந்த மூன்று வருடங்களில் மட்டும் 13 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள், 46 பேர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது, 27 பேர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
அப்போதெல்லாம், மூச்சைக் கூட சத்தமாக விடாமல் மௌனமாக இருந்த மோடியின் பரிவாரங்களான உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், உத்திரப் பிரதேச முதலமைச்சர், மத்திய பிரதேச முதலமைச்சர் எல்லாம் "அர்னாப் கோஸ்வாமி" க்காக உருகி உருகி டீவீட்டுகிறார்கள், குரல் கொடுக்கிறார்கள்.
"அம்னெஸ்டி இண்டெர்நேஷனல்" நடத்திய ஆய்வின் அடிப்படையில் ஊடகங்களின் மீது தாக்குதல் தொடுக்கும் உலகின் மோசமான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 13 ஆவது இடம், மொத்தம் எத்தனை நாடுகள்னு கேக்குறீங்களா? மொத்தமே 13 நாடுகள் தான்.
"ஆடு நனையுதேன்னு, கிழட்டு ஓநாய் குலுங்கிக் குலுங்கி அழுத்துச்சாம்"
 
 
Susairaj :  பொய் ஒரு அலசல்,,,,
பொய் சொல்வதும் ஒரு கலை,,,
# பொய் அதிகம் பேசும் இடம்- வியாபார மையங்களில்.
# பொய் அதிகமாக பேசுபவர்கள் திருமண புரோக்கர்கள்
# எதிரெதிரே அமர்ந்து பொய்யை நாள்கணக்கில் சுவராசியமாக பேசுபவர்கள் காதலர்கள்
# பொய் அதிகமாக பேசாதவர்கள் குழந்தைகளும், பேச முடியாதவர்களும், மனப் பிறழ் நோயாளிகளும்.
# பொய் என்று தெரியாமல் பொய்யை நிறைய பேசும் இடம் வழிபாட்டுத் தலங்கள்.
# உண்மையும் பொய்யும் கலந்து எழுதப்படுவது பத்திரிக்கைகளில்.
# உண்மையைப் பொய்யாகவும் பொய்யை உண்மையாகும் அதிகமாக விவாதிப்பது காட்சி ஊடகங்களில்.
# அரசியலின் மூலதனமே போய் தான்.
ஆனால் சமீபத்தில் நடத்திய ஒரு கணக்கெடுப்பில், தாங்கள் ஒருபோதும் பொய் பேசியதில்லை என்று அதிக சதவீத மக்கள் கூறியுள்ளனர்.
பெயர் வெளியிடாத கணக்கெடுப்புகளில் கூட நம்மில் பலர் உண்மையைக் கூறுவதில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.
பொய்யை கண்டுபிடிப்பதில் நீதிபதிகளைவிட கைதிகள் சிறந்து விளங்குகின்றனர்
`பொய் சொல்வதில் நாம் வல்லவர்கள்; பொய்யைக் கண்டுபிடிப்பதில் மிக மோசமானவர்கள்'' என்று அறிஞர் ரிச்சர்டு மேலும் கூறுகிறார்.
ஏமாற்றுப் பேர்வழிகளைக் கண்டறிவதில் நாம் சிறந்தவர்கள் என்று நினைக்கிறோம்; இரண்டு பேரை ஒரு ஆய்வகத்துக்கு அழைத்துச் சென்று ஒருவர் பொய் பேசும் விடியோவையும், இன்னொருவர் உண்மை பேசும் விடியோவையும் பார்க்கச் செய்துவிட்டு - யார் சொன்னது உண்மை, யார் சொன்னது பொய் என்று கேட்டால் - 50 சதவீதம் பேர் மட்டுமே சரியாகக் கண்டுபிடிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக