அந்தவகையில் 8 கோடியே 50 லட்சம் பேர் முன்கூட்டியே தங்கள்
வாக்கை செலுத்தினர். அதைப்போல் தேர்தல் நாளன்று இதுவரை இல்லாத அளவுக்கு
அதிக எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை நடத்தப்பட்ட பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் ஜோ பிடன் முன்னிலையில் இருந்து வருகிறார்.
தேர்தலுக்கு
இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் நடத்தப்பட்ட என்பிசி நியூஸ் நடத்திய
புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், டிரம்பைவிட ஜோ
பிடன் 10 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். தேசிய அளவில்
நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் டிரம்புக்கு ஆதரவாக 42 சதவீதம் பேரும், ஜோ
பிடனுக்கு ஆதரவாக 52 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இரு
கட்சிகளுக்கும் மாற்றி மாற்றி வாக்களிக்கும் மக்கள் அதிகம் கொண்ட அரிசோனா,
புளோரிடா, ஜார்ஜியா, அயோவா, மைனே, மிச்சிகன், மினசோட்டா, வட கரோலினா,
புதிய ஹாம்ப்ஷயர், நெவாடா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய 12
மாநிலங்களில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த மாநிலங்களில் நடத்தப்பட்ட
கருத்துக்கணிப்பில் டிரம்புக்கு ஆதரவாக 45 சதவீத வாக்காளர்களும், ஜோ
பிடனுக்கு ஆதரவாக 51 சதவீத வாக்காளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் இந்த மாநிலங்களில் ஜோ பிடன் 6 புள்ளிகள் வித்தியாசத்தில்
முன்னிலையில் உள்ளார்.
தபால் மூலமாகவோ அல்லது
நேரில் முன்கூட்டியே வாக்களித்த வாக்காளர்களிடையே பிடனுக்கு அதிக ஆதரவு
இருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன. அதேசமயம், இன்னும்
வாக்களிக்காத வாக்காளர்களிடையே டிரம்புக்கு அதிக ஆதரவு இருப்பதாக
தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக