வியாழன், 5 நவம்பர், 2020

உலகை ஒரு நாள் இஸ்லாம் ஆளும்.... கோஷமிடும் இஸ்லாமியவாதிகள்

 R
ishvin Ismath
: · இதர மதங்களைப் போல இஸ்லாமும் ஒரு சாதாரண மதம் தானே, அதற்குரிய மரியாதையை உலகம் ஏன் அதற்கு கொடுப்பதில்லை? இஸ்லாம் என்பது கிறிஸ்தவத்தைப் போல, இந்து மதம் போல ஒரு சாதாரண மதம் அல்ல. இஸ்லாம் என்பது ஒரு கடும்போக்கு சர்வாதிகார அடக்குமுறை அரசியல் சித்தாந்தம் ஆகும். இஸ்லாத்துடைய முக்கிய நோக்கம் உலக மக்களுக்கு இஸ்லாம் பற்றி போதனை செய்து, எல்லோரையும் இஸ்லாமியர்களாக மாற்றுவது மட்டுமல்ல, அதே நேரத்தில், முழு உலகத்தையும் ஒரு இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டு வருவதாகும். அதாவது அலெக்சாண்டர் த கிரேட் ஆசைப்பட்டது போல, உலகம் முழுவதையும் ஒரு ஆட்சியின் கீழ் கொண்டு வருவது தான் இஸ்லாத்தின் முக்கிய நோக்கம். இஸ்லாத்தில் மத சடங்குகள், வணக்க வழிபாடுகள் போன்றவையும் இருக்கின்றன என்பது உண்மை தான். ஆனால், அதையெல்லாம் தாண்டி, உலகம் முழுவதற்கும் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமுலுக்கு கொண்டுவருவது தான் இஸ்லாமியவாதிகளின் பிரதானமான நோக்கம் ஆகும். ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வானுல் முஸ்லிமீன், அல்கைதா, போகொஹராம், அல்சபாப் உட்பட உலகளாவிய இஸ்லாமிய இயக்கங்களில் கணிசமான எண்ணிக்கையிலானவை இந்த நோக்கத்திற்காக செயற்படுபவை ஆகும். இலக்கை அடைவதற்கான அவற்றின் பாதையில் சிறு சிறு வேறுபாடுகள் காணப்படலாம், சில இஸ்லாமிய இயக்கங்கள் மிக நீண்டகால திட்டத்துடனும், இன்னும் சில குறுகிய கால திட்டத்துடனும் களத்தில் உள்ளன என்பதே அந்த வேறுபாட்டில் பிரதானமானது ஆகும்.
இதனை அறிய நீங்கள் சர்வதேச செய்திகளை கவனித்துப் பார்க்கவேண்டும். இஸ்லாமிய அமைப்புக்களின் நேரடி அல்லது மறைமுக வழிகாட்டலில் முஸ்லிம்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் செய்யும் பொழுது என்ன விதமாக கோசமிடுவார்கள் என்று கவனித்துப்பாருங்கள். முக்கியமாக ஐரோப்பாவிலும், மேற்கத்திய நாடுகளிலும் கோஷங்கள் போட்டுக்கொண்டு செல்லும் முஸ்லிம்களின் கைகளில் இருக்கும் பதாதைகளை கவனித்துப் பார்த்தால்:
"இஸ்லாம் ஒரு நாள் உலகை ஆட்சி செய்யும்"
"அமெரிக்காவிற்கு மரணம்"
"முஸ்லிம்கள் உலகை ஒரு நாள் ஆளுவார்கள்"
"எங்களுக்கு ஜனநாயகம் தேவையில்லை, வெறும் இஸ்லாம் தான் வேண்டும்."
"இஸ்லாத்தை கேவலப்படுத்தியவர்களை கொல்லுங்கள்"
“இஸ்லாம் தான் ஒரே தீர்வு”
போன்றவைகளை தெளிவாக நீங்கள் காணமுடியும்.
ஒரு மதத்தை பின் பற்றுபவனுக்கு, அதாவது முஸ்லிமுக்கு, தன் மதத்தை விமர்சிப்பவனை கொல்லவேண்டும் என்ற வெறி எங்கேயிருந்து வருகிறது? இஸ்லாத்தை விமர்சிப்பவன் கொல்லப்படவேண்டும் என்று முஸ்லிம் துடிக்கிறான்? மேலே கேள்வி எழுப்பியது போல இஸ்லாம் என்பது ஒரு மதமாக மட்டும் இருந்திருக்குமேயானால், இப்படியெல்லாம் அதனை பின்பற்றுகின்றவன் சிந்திப்பானா?
இதர மார்க்கங்களின் மக்களுக்கு இப்படியெல்லாம் வெறி பிடிப்பதில்லையே, அது ஏன்? கிறிஸ்தவத்தை விமர்சித்தால், இயேசுவை விமர்சித்தால், இழிவு படுத்தினால் அப்படி விமர்சிப்பவரகளை, கேவலமாக பேசுபவரகளை கொலை செய்ய வேண்டும் என்ற உணர்வு அல்லது எண்ணம் ஏன் ஒரு கிறிஸ்தவனுக்கு வருவதில்லை? அதற்காக கிறிஸ்தவர்கள் ஏன் ஆர்ப்பாட்டம் செய்து வன்முறையில் ஈடுபடுவதில்லை? உலகை கிறிஸ்தவம்தான் ஆள வேண்டும் என்று கோசமிடுவதில்லை? இஸ்லாத்தின் ஸ்தாபகரை கேலிச்சித்திரம் வரைந்த அதே பிரஞ்சுப் பத்திரிக்கை, கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டிலேயே இயேசுநாதரையும் கேவலமாக கேலிச்சித்திரம் வரைந்து இருக்கின்றது. அதற்காக கிறிஸ்தவர்கள் செய்தது என்ன என்று தெரியுமா? 13 வழக்குகளை பதிவு செய்து இருக்கின்றார்கள். ஆனால் இஸ்லாமியர்கள் முதல் நடவடிக்கையாக செய்ததோ அந்தப் பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்து 12 பேரை கொலை செய்தது, அந்தக் கொலைகளின் தொடர்ச்சி இன்று வரை அந்த நாட்டில் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.
வேறு எந்த மதத்தவரும் இப்படியாக செய்யாத பொழுது, தாம் மிகச் சிறுபான்மையாக, குடியேறிகளாக வாழும் நாட்டில் கூட இப்படியாக நடந்துக்கொள்ளும் படி முஸ்லிம்கள் மட்டுமே தூண்டப்படுவது எதனால்?
இதிலிருந்து நம்மால் அறிந்துகொள்ள முடியுமாக இருப்பது என்னவென்றால், இஸ்லாம் ஒரு மதம் மட்டுமல்ல, அது ஒரு மதம் பிடித்த பயங்கரமான அரசியல் யானை, தனக்கு முன்பு எது வந்தாலும் அந்த யானை மிதித்துப்போட்டு கொன்று நாசமாக்கிவிடும். அந்த மதம் பிடித்த யானையின் குட்டிகள் தான் "உலகை ஒரு நாள் இஸ்லாம் ஆளும்" என்றுச் சொல்லி கோஷமிடும் அந்த இஸ்லாமியவாதிகள்.
ஆக, இஸ்லாம் ஒரு மதம் மட்டும் தான் என்று எண்ணுவது தவறு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக