சனி, 7 நவம்பர், 2020

அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றி - 273 முன்னிலை.. Joe Biden Wins US Presidency With 273 Electoral College Votes

Vox on Twitter: "Joe Biden is projected to win the 2020 Election. Decision  Desk called the state of Pennsylvania for Joe Biden early on Friday, giving  him giving him 273 electoral votes —

BBC  :அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெறுவதற்கான தேர்தல் சபை வாக்குகளை பெற்றுள்ளார். பெரும்பான்மைக்கு தேவையான 270 வாக்குகளின் பலத்தை கடந்து அவருக்கு 273 தேர்தல் சபை வாக்குகள் இருப்பதாக பிபிசி கணித்துள்ளது.

 தேர்தலில் நானே வென்றேன் - ட்விட்டர் பதிவு மூலம் உரிமை கோரும் டிரம்ப். அமெரிக்க தேர்தலில் நானே அதிக அளவில் வென்றேன் என்ற ஒற்றை வரியை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் டொனால்ட் டிரம்ப். முன்னதாக, மற்றொரு பதவில் தனது வழக்கறிஞர்கள் அமெரிக்க நேரப்படி காலை 11.3 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார் டிரம்ப். பிறகு அந்த பதிவை நீக்கி விட்டு, மிகப்பெரிய செய்தியாளர் சந்திப்பு நடக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.

பென்சில்வேனியா மாகாணத்தில் கிட்டத்தட்ட வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உள்ளது. அந்த மாகாணத்தில் ஜோ பைடனுக்கு சாதகமாக முடிவுகள் வந்தால், அவர் அமெரிக்க அதிபராவது கிட்டத்தட்ட உறுதியாகி விடும்.

இந்த நிலையில், டிரம்ப் தரப்பு நடத்தவிருக்கும் செய்தியாளர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

டிரம்ப் தரப்பின் செய்தியாளர் சந்திப்பு, இன்னும் சில நிமிடங்களில்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தரப்பு, இன்னும் சில நிமிடங்களில் பென்சில்வேனியாவில் செய்தியாளர்களை சந்திக்கப் போகிறது. இந்த தகவலை டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது வழக்கறிஞர்கள் செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்கள் என்று முதலில் கூறியிருந்த டிரம்ப், அந்த ட்விட்டர் பதிவை நீக்கினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக