வியாழன், 5 நவம்பர், 2020
அமெரிக்காவில் முதல் திருநங்கை எம்.பி.,யாக சாரா தேர்வு
dhinamalar :வாஷிங்டன்: அமெரிக்க தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட
திருநங்கையான சாரா மெக்ப்ரைட் வெற்றி பெற்று எம்.பி., ஆனதன் மூலம்,
அமெரிக்க வரலாற்றில் எம்.பி.,யான முதல் திருநங்கை என்ற சாதனையை
படைத்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நேற்று
அதிகாலை 5.30 மணிக்கு துவங்கியது. வெற்றி நிலவரங்கள் வெளியாகி வரும்
நிலையில், ஜோ பிடனின் கை, சற்று ஓங்கி உள்ளது. இந்நிலையில், அமெரிக்க
வரலாற்றில் சாரா மெக்பைட்(30) என்ற திருநங்கை எம்.பி.,யாக தேர்வாகி முதல்
திருநங்கை எம்.பி., என்ற சாதனையை படைத்துள்ளார்.>ஜனநாயக
கட்சி சார்பில் போட்டியிட்ட சாரா மெக்பைட், குடியரசு கட்சியை சேர்ந்த
ஸ்டீவ் வாஷிங்டனை தோற்கடித்தார். , முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின்
நிர்வாக பணியாளராக, சாரா பணியாற்றி உள்ளார். மேலும், ஓர்பால் ஈர்ப்பு
வக்கீல் குழுவின் மனித உரிமைகள் பிரசார பத்திரிகை செயலாளராகவும் உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக