புதன், 4 நவம்பர், 2020

ஆர்.கே.சுரேஷ் சினிமாக்காரர்களை வலைவீசி பாஜகவுக்கு ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறார். சினிமாவை விட அதிகம் சம்பாதிக்க...

Krishna Kuma
r  : · ஆர்.கே.சுரேஷின் அப்பா ஓர் ஒருபடத் தயாரிப்பாளர். அவர் தயாரித்த படம்தான் ஜெய்சங்கர் நடித்த கடைசிப்படம் என்று நினைக்கிறேன். சென்னைக்கு வந்து படங்களில் நடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார் சுரேஷ். ‘புதுப்பேட்டை’யில் விஜய்சேதுபதி மட்டுமல்ல, சுரேஷும்கூட துணைநடிகர்தான். சேதுபதிக்கும், சுரேஷுக்கும் அப்போது துளிர்த்த நட்பு ‘நடுவுலே கொஞ்சம் பக்கத்தை காணோம்’, ‘சூது கவ்வும்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?’ ஆகிய படங்களின் வணிக உறவுக்கும் உதவியது. ‘தர்மதுரை’ படத்தின் தயாரிப்பாளரும் சுரேஷ்தான். இடையில் இருவருக்கும் பணவிஷயத்தில் முட்டிக்கொண்டதும் உண்டு. தயாரிப்பு, வினியோகம், பைனான்ஸ் என்று வகையாக செட்டிலான சுரேஷுக்கு நடிப்பு ஆசை முற்றிலுமாக போய்விடவில்லை. ’தாரை தப்பட்டை’யில் தொடங்கி டஜன் படங்களுக்கு மேலாக நடித்துவிட்டார். இதில் அவர் ஹீரோவாக நடித்த ‘பில்லா பாண்டி’யும் அடக்கம்.
சில பேரின் தற்கொலைக்கே கூட காரணமான அந்த சர்ச்சைக்குரிய மதுரை பைனான்ஸியரின் முரட்டு அன்புக்கு உரியவர் இவர் என்று இண்டஸ்ட்ரியில் பேச்சு உண்டு. சுரேஷ் மனசு வைத்தால் போதும், சினிமாவில் எதுவும் செய்யலாம் என்கிற நம்பிக்கை பலருக்கு இருந்தது.
போதாக்குறைக்கு ஜாதிய பின்புலம். ஜாதி தொடர்பான நடவடிக்கைகளில் மீசையை முறுக்கிக்கொண்டு தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். அந்த மிதப்பில்தான் விஜய்யின் ‘சர்கார்’ படத்துக்கு போட்டியாக தான் ஹீரோவாக நடித்த ‘பில்லா பாண்டி’யை ரிலீஸ் செய்து கெத்து காட்டினார். மதுரையில் ‘பில்லா பாண்டி’தான் ஹிட்டு என்று காட்ட ஏகப்பட்ட வித்தைகளையும் நிகழ்த்தினார்.
பணம் எங்கெல்லாம் புழங்குகிறதோ அங்கெல்லாம் தான் இருக்க வேண்டும் என்பது சுரேஷின் கோட்பாடு. அவ்வகையில் சினிமா, ஜாதிக்குப் பிறகு அரசியல் அவரை ஈர்த்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.
’நாம் தமிழர்’ ஆக சீமானுடன் இணைந்துப் பயணித்தார். சுரேஷின் அண்ணனுக்கு கடந்த சட்டமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பும் கிடைத்தது. வெறும் நாலாயிரம் ஓட்டோ என்னவோ வாங்கி டெபாசிட் இழந்தார்.
நாம் தமிழர் கட்சி வற்றிப்போன நிலையில், மறைமுக சங்கியாக வயிற்றை காயப்போட்டுக் கொண்டு இருப்பதைவிட நேரடி சங்கியாகி விட்டால் இன்னமும் வளம் கொழிக்கலாமென பாஜகவில் இணைந்தார்.
கட்சியில் சேரும்போதே நிறைய சினிமாக்காரர்களை பாஜகவில் இணைப்பேன் என்று உறுதிமொழி கொடுத்துவிட்டே இணைந்தார்.
அவ்வகையில்தான் கடந்த ஓராண்டாக சினிமாவில் பெரும் கடனில் இருப்பவர்களைக் குறிவைத்து வலைவீசி பாஜகவுக்கு ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறார். பாஜகவில் சினிமா நட்சத்திரங்களை அதிகளவில் சேர்ப்பதற்கு பெரிய பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
சினிமாவில் சம்பாதிப்பதைவிட பாஜகவில் அதிகம் சம்பாதிக்கலாம் என்கிற நப்பாசையிலேயே சினிமாவில் ஓரங்கட்டப்பட்ட ஓட்டை, உடைசல்கள் தொடர்ந்து சேர்ந்துக் கொண்டிருக்கின்றன.
சுரேஷையே உப்புமா நடிகராகதான் மக்களுக்குத் தெரியும் என்பதால், சுரேஷ் கட்சியில் சேர்க்கும் ஆட்களும் உப்புமாவாகவே இருப்பது இயல்புதானே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக