வெள்ளி, 6 நவம்பர், 2020

இந்தியா விமானங்களுக்கு தடை விதித்த சீனா.. இந்தியர்கள் சீனா வரவும் தற்காலிமாக தடை

Velmurugan P  /tamil.oneindia.com  : பெய்ஜிங்: இந்தியர்கள் சீனாவிற்குள் நுழைவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சீனா முடிவு எடுத்துள்ளது சீன வழங்கிய செல்லுபடியாகும் விசாக்கள் அல்லது குடியிருப்பு அனுமதி வைத்திருக்கும் இந்தியர்கள் யாரும் தற்காலிகமாக சீனா செல்ல முடியாது. கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகமாக உள்ளதால், அதனை காரணம் காட்டி இந்தியாவில் இருந்து செல்லும் அனைத்து விமானங்களையும் சீனா நிறுத்தியுள்ளது. அத்துடன் இந்தியாவில் வசிப்போர் சீனாவிற்குள் நுழைவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சீனா முடிவு செய்துள்ளது. இதன்படி இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டினர், சீனாவிற்கு செல்ல விசா வைத்திருந்தாலும் வருவதற்கு தடை விதித்துள்ளது.
சீனா வர தடை இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில். "இந்தியாவில் உள்ள சீன தூதரகம் / துணைத் தூதரகங்கள் இந்தியாவில் வசிக்கும் சீனர்களை தவிர மற்றவர்கள் விசா அல்லது குடியிருப்பு அனுமதிகளை வைத்திருந்தாலும், அவர்களுக்கு சீனா வர அனுமதி அளிக்கப்படாது

அவசர உதவிக்கு வரலாம் அவசர உதவிக்கு வரலாம் எனினும் தூதகரகம் சேவை, மரியாதை மற்றும் சி விசாக்களை வைத்திருக்கும் வெளிநாட்டினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. . அவசரகால அல்லது மனிதாபிமான தேவைகளைக் கொண்ட வெளிநாட்டினர் சீனாவுக்கு வருகை தரலாம். விசா விண்ணப்பத்தை இந்தியாவில் உள்ள சீன தூதரகம் / தூதரகங்களுக்கு சமர்ப்பிக்கலாம். நவம்பர் 3ம் தேதிக்கு பிறகு வழங்கப்பட்ட விசாக்கள் வைத்திருப்பவர்கள் சீனா வர எந்த தடையும் இல்லை

 சீன வெளியுறவு அமைச்சகம் இந்த இடைநீக்கம் தற்போதைய கொரோனா தொற்றுநோயைக் கையாள்வதற்கான தற்காலிக நடவடிக்கை "தற்போதைய தொற்றுநோய்க்கு ஏற்ப நாங்கள் சரியான நேரத்தில் மேலும் மாற்றங்களையும் அறிவிப்புகளையும் வெளியிடுவோம்" என்று சீன வெளியுறவு அமைச்சம் அறிக்கையில் கூறியுள்ளது.,

விசா வாங்கி போகலாம் தற்போதுள்ள விசாக்களை மட்டுமே தற்காலிகமாக நிறுத்தி வைக்க மட்டுமே சீன முடிவு செய்துள்ளது. இனிமேல் விசா வாங்கி சீன வர எந்ததடையும் இல்லை. "இந்த நடவடிக்கை இந்தியாவை மட்டும் குறிப்பிட்டு சீன செய்யவில்லையாம். இதே போன்ற நடவடிக்கைகள் வேறு பல நாடுகளிலும் அறிவிக்கப்பட்டுள்ளன. உலகமே கொரோனாவில் இருந்து மீள வழி தெரியாமல் உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு வராமல் தடுக்க சீனா இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக